Thursday, May 6, 2010

சந்தியா

முன் பகுதி படிக்க இங்கே செல்லுங்கள்...
சந்தியா 1
சந்தியா 2
இந்தச் சம்பவம் நடந்து 2 வாரங்களின் பின் தேவகி ஒரு நாள் சந்தியாவை கடை வீதியில் பார்த்ததாக கூறினாள். தேவகியும் சந்தியாவும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனர் . எங்கள் வீட்டிற்கு 2, 3 தடவைகள் வந்து போனாள். வரும்போதெல்லாம் கைகளை மறைக்கும்படி ஆடை அணிந்தே வந்தாள்.


அன்று ஞாயிற்றுக் கிழமை. சந்தியாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவள் அழுவது தெளிவாக கேட்டது. தேவகியை உடனே வருமாறு சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள். நாங்கள் அவள் சொன்ன விலாசத்திற்குப் போனோம். முன்பு அவள் தோழியின் வீடு என்று சொன்ன அதே வீடு தான்.

நாங்கள் குழப்பத்துடன் உள்ளே போனோம். உள்ளே சந்தியா அழுது கொண்டிருந்தாள். பக்கத்தில் இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகள் சந்தியாவின் கைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவள் கைகளைப் பார்த்து நாங்கள் அதிர்ந்து போனோம். கைகள் முழுவதும் காயங்கள், தழும்புகள். அவள் எப்போதும் கைகளை மூடி ஆடை அணிவதன் காரணம் புரிந்தது.

உள்ளே இருந்து ஒரு தடியனை போலீஸ் அதிகாரிகள் கைகளில் விலங்கிட்டு தள்ளிக் கொண்டு போனார்கள். அவன் தான் சந்தியாவின் கணவனாம். இவளைக் கொடுமைப் படுத்துவதே அவன் முழு நேரத் தொழில் போல் இருந்தது. சந்தியாவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மனசு கனத்துப் போய் இருந்தது. அவளின் கலங்கிய கண்கள் என் மனதை என்னவோ செய்தது.

சந்தியாவின் பெற்றோர்கள் போரினால் இறந்து போய் விட்டார்கள். அவளுக்கு ஆதரவு என்று சொல்ல தேவகியை விட்டால் யாரும் இல்லை. தேவகி அடிக்கடி சந்தியாவை போய் பார்த்து விட்டு வந்தாள். நான் போகவில்லை. ஏனோ ஒரு வித தயக்கம். தேவகியிடம் சந்தியாவைப் பற்றி அடிக்கடி விசாரித்துக் கொண்டேன்.

இச்சம்பவம் நடந்து 2 மாதங்களின் பின்னர் நான் சந்தியாவை பார்க்கப் போனேன். அவள் முகம் தெளிவாக இருந்தது. கணவரிடம் இருந்து வந்த விவாகரத்து நோட்டீஸை காட்டினாள். நான் அவளின் கைகளை ஆதரவுடன் பிடித்துக் கொண்டேன். இனி காலமெல்லாம் நான் துணையாக இருப்பேன் என்று சொன்னேன். முதன் முறையாக சந்தியாவின் முகத்தில் சிரிப்பை பார்த்தேன். இனி காலமெல்லாம் அவள் சிரிப்பை நான் ரசிக்கப் போகிறேன்.

முற்றும்.

18 comments:

  1. very nice end of the story vanathy!! good!!

    ReplyDelete
  2. நல்லா இருக்கு..உண்மை சம்பவம் என்று எழுதி இருந்திங்க...உண்மையில் கடைசியில் சந்தியா வாழ்வில் இப்படி நல்லவிதமாக நடந்து இருந்தால் மிகவும் சந்தோசம்...சந்தோசத்துடன் சந்தியா வாழ்க....

    ReplyDelete
  3. //இனி காலமெல்லாம் நான் துணையாக இருப்பேன் என்று சொன்னேன். முதன் முறையாக சந்தியாவின் முகத்தில் சிரிப்பை பார்த்தேன்.//

    நல்ல டுவிஸ்ட்.. எதிர் பார்காதது இது.

    ReplyDelete
  4. Wowwww.. Superrrrrrrrr.. Ending..

    kalakkitteenga.. vanathy.. :)

    ReplyDelete
  5. ந‌ல்லா முடித்துவிட்டீர்க‌ள் வான‌தி..

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  7. //இனி காலமெல்லாம் அவள் சிரிப்பை நான் ரசிக்கப் போகிறேன்//

    அழகான முடிவு... சூப்பர் வானதி

    ReplyDelete
  8. மேனகா, மிக்க நன்றி.
    எல்கே, மிக்க நன்றி.
    கீதா ஆச்சல், இதில் நிறைய என் கற்பனை. கொஞ்சம் உண்மை.
    நன்றி.
    ஜெய்லானி, கருத்துக்கு மிக்க நன்றி.
    ஆனந்தி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
    மகி, மிக்க நன்றி.
    குமார், மிக்க நன்றி.
    நாடோடி, நன்றி.
    அம்மு, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
    அப்பாவி தங்கமணி, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. நல்ல முடிவு. உண்மையாக இருந்தால் இன்னும் சந்தோஷம்.

    ReplyDelete
  10. இந்த முடிவை நான் எதிர்பார்க்கலை,தேவகி தான் சந்தியா சந்தியா என்று இருப்பதாக காட்டிவிட்டு வாழ்க்கை கொடுத்தது நல்ல திருப்பம்.

    ReplyDelete
  11. செல்வி அக்கா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ஆசியா அக்கா, தொடர்ந்து வந்து பின்னூட்டம் கொடுப்பதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  12. இன்னமும் சஸ்பென்ஸ் எதிர்பார்த்தேன் வானதி :)) ஏதோ திகில் கதைன்னு நினைத்து.. ஓக்கை முறைக்காதீங்கோ.. ஓடிடறேன்.. :))

    ReplyDelete
  13. அய்யய்யொ தொடர்கதையும் சீக்கிரமா முடிச்சுட்டீங்க ...

    நல்லா எழுதுறீங்க உங்களுக்கு கதை எழுத நன்றாக வருகிறது அடிக்கடி இதுபோல் தொடர்கதைகள் சின்னதா இருந்தாலும் பரவாயில்லை எழுதுங்க... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. நல்ல முடிவு... பாருங்க ஆம்புள பசங்க எம்புட்டு நல்லவங்களா இருக்காங்க...

    ReplyDelete
  15. சந்து, நான் க்ரைம், மர்ம நாவல் எழுத வில்லையே. எழுதவும் வராது.
    மிக்க நன்றி.

    வசந்த், மிக்க நன்றி. தொடர்கதை எழுதுவது கொஞ்சம் கஷ்டமான வேலை. முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!