வெங்காயம் - 1
தக்காளி - 1
காலிஃப்ளவர் - பாதி
பூண்டு - 2 பல்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளாகாய் - 2
மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
உப்பு
எலுமிச்சம் சாறு - சிறிதளவு
காலிஃப்ளவரை சுத்தம் செய்து வைக்கவும்.
பேக்கிங் ட்ரேயில் காலிஃப்ளவரை பரப்பி விடவும்.
சட்டியில் எண்ணெய் விட்டு, மஞ்சள், உப்பு சேர்க்கவும். லேசாக சூடானதும் காலிஃபளவரின் தலையில் ( உங்கள் தலையில் அல்ல ) ஊற்றவும்.
385 ஃபரனைட் முற்சூடு செய்யப்பட்ட அவனில், 30 நிமிடங்கள் பேக் பண்ணவும்.
வேறு சட்டியில் பொடியாக நறுக்கிய வெங்காயம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், பச்சை மிளாகாய், பூண்டு, தக்காளி சேர்க்கவும்.
பின்னர் கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும் காலிஃப்ளவரை சேர்த்து கிளறவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறி, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
குறிப்பு.
இது All recipes என்ற தளத்தில் வெளிவந்த குறிப்பு. ஆனால், இதை சமைச்சவர்கள் பெரும்பாலனவர்கள் ஒரே ட்ரை ஆக இருக்கு என்று புகார் தெரிவித்திருந்த படியால் நான் சிறிது மாற்றங்களுடன் செய்தேன்.
மிளகாய்த் தூள் சேர்ப்பதும் என் ஐடியா தான்.
காலிஃப்ளவரை பேக் செய்த பின்னர் அப்படியே சாப்பிட்டால் கூட மிகவும் சுவையாக இருக்கும். எங்க வீட்டில் பேக் செய்து வைத்து விட்டு, திரும்பி பார்ப்பதற்குள் கிட்டத்தட்ட ட்ரே காலியாகி விட்டது.
ஆசியா அக்கா கொடுத்த விருது. மிக்க நன்றி.