Saturday, May 22, 2010

விருது!

நானும் விருது வாங்கி விட்டேன். எனக்கு ஜெய்லானி கொடுத்த விருது. மிக மிக நன்றி, ஜெய்லானி.




எல்லோரும் கப் கேக் எடுத்து சாப்பிடுங்கோ. பிரியாணி செய்து கொண்டு வருகிறேன். அடடா... பிரியாணி என்று சொன்னதும் யாரையுமே காணவில்லை. சரி போங்கள் உங்களுக்கு குடுத்து வைத்தது அவ்வளவு தான்.

மக்களே! இந்தாங்கள் பிரியாணி. எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா. இது நம்ம ஆசியா அக்காவின் பிரியாணி. அவங்களுக்கு தெரியாமல் சுட்டு விட்டேன். கெதியா சாப்பிடுங்கோ. அக்கா...வராப் போல் இருக்கு.

Wednesday, May 19, 2010

தேடுதல் வேட்டை

" கௌசல்யா, எங்கே இருக்கே? "

" அப்பா, என்னத்தை காணவில்லை? " - இது வாசுவின் 5 வயது மகன்.

ம்ம்... இந்த பொடியனுக்கே இவ்வளவு நக்கல். ( வாசு மனதிற்குள் நினைத்துக் கொண்டான் )

" இல்லை செல்லம். இதிலை இப்பதான் ஒரு முக்கியமான மெயில் வைத்தேன் காணவில்லை. "

" நல்லா தேடிப்பாருங்கப்பா. "

" ம்ம்ம்... கௌஸ் எங்கே போய் தொலைஞ்சே? "

கௌசல்யா : ஆகா! ஆரம்பித்து விட்டார். எத்தனை தடவை சொல்றது கௌஸ் என்று கூப்பிட வேண்டாம்.

வாசு: பெயர் வைப்பது கூப்பிடத்தானே.

கௌசல்யா : எங்கப்பா எனக்கு கௌசல்யா என்று எவ்வளவு அழகா பெயர் சூட்டினார். கௌஸ் கேட்கவே வாந்தி வருது.

கௌஸ் இதிலை இப்ப தான் ஒரு மெயில் வைச்சேன். எங்கே தூக்கி கடாசினாய்?

என்ன மெயில்? நான் எடுக்கவே இல்லை.

வாசு: இந்த வீட்டிலை தான் இப்படிப்பட்ட அதிசயம் எல்லாம் நடக்கும். இப்போஇங்கே ஒரு முக்கியமான கடிதம் வைச்சேன். அதற்குள் மாயமாக மறைந்து விட்டது. அதை தேடாவிட்டால் என் மண்டையே பிளந்துவிடும்.

கௌசல்யா : நான் போகணும். வேலை இருக்கு. நல்லா தேடிப் பாருங்க.

வாசு: ம்ம்.. எல்லாம் என் நேரம். கௌஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணக் கூடாதா?

கௌசல்யா : சரி நான் தேடுறேன். நீங்கள் போய் டீ போடுங்க. அப்படியே உங்கள் மகனையும் குளிக்க வைத்து, சாப்பாடு குடுத்து, ஸ்கூலுக்கு ரெடி பண்ணுங்க. அப்படியே உங்க சாப்பாடு, லன்ஞ் எல்லாமே எடுத்து வைங்க......

வாசு : ஏதோ தெரியாமல் சொல்லிப் போட்டேன். அதற்கு இவ்வளவு தண்டனையா? நீ போ தாயி.

வாசு: கௌஸ், நீ தான் எங்கேயோ தொலைத்து விட்டாய். உனக்குத் தான் ஒரு பேப்பர் கண்டால் கை துறுதுறுக்குமே . எந்தக் குப்பையில் கிடக்குதோ தெரியவில்லை?

கௌசல்யா : அதோ அங்கே டைனிங் டேபிள் ஓரமா உங்கள் குப்பை எல்லாம் குவித்து வைச்சிருக்கிறீங்க அதிலை கிளறிப் பாருங்க.

வாசு : வேலைக்கு லேட்டாச்சு. வந்து வச்சுக்கிறேன் கச்சேரியை. எதற்கும் ஒருக்கா மேலே பார்க்கணும்(மனதிற்குள் ).

கௌசல்யா : என்ன ஐயாவின் சவுண்டையே காணவில்லை?

வாசு : ஹி ஹி.. நான் தான் மேலே கம்யூட்டர் மேசையில் வைச்சுட்டு வீடு முழுக்க தேடி.....ஸாரி, கௌஸ்.

***********


வாசு : கௌஸ், இங்கே இதிலை ஒரு பிறந்த நாள் வாழ்த்து அட்டை இருந்திச்சே எங்கே?

கௌசல்யா : எப்ப வந்திச்சு?

வாசு : எங்கள் மகன் பிறந்தபோது கோவிந்தா மாமா அனுப்பினாரே அந்த அட்டை.

கௌசல்யா : அதாவது 5 வருடத்துக்கு முந்தி வந்த கார்டா?

வாசு : ம்ம்ம்ம்..

கௌசல்யா : கிழிஞ்சுது போ!

வாசு : கௌஸ், தேடி வை. நான் வேலையால் வரும் போது இங்கே இருக்கணும். சரியா?

கௌசல்யா : அதெப்படி நீங்கள் சேர்த்து வைக்கும் கடிதங்கள், கார்டுகளில் ( குப்பை ) ஒன்று காணாமல் போனாலும் கரெக்டா கண்டு பிடிக்கிறீங்க?

வாசு : என்ன நக்கலா?

கௌசல்யா : நேரம் கிடைச்சா பார்க்கிறேன். அதற்காக வேலையால் வரும் போது கட்டாயம் கிடைச்சுடும் என்று நம்பிகையோடு வரவேண்டாம்.

மணி காலை 10:30. வாசு அலுவலகத்திலிருந்து கௌசல்யாவை கூப்பிட்டான்.

வாசு: கௌஸ், என்ன வாழ்த்து அட்டை கிடைச்சுதா?

கௌசல்யா : இன்னும் நான் தேடவே இல்லை. வேலை இருக்கு.

மீண்டும் 12 மணி, 3 மணிக்கு மீண்டும் தொலை பேசியில் அழைத்து விசாரித்தான்.

மகன் : அம்மா , ஓ அப்பா தேடும் வாழ்த்து அட்டையை நான் தான் வெட்டி, இந்த டைகரை மட்டும் எடுத்து வைச்சுட்டேன்.

கௌசல்யா : அடப் பாவி ( மனதிற்குள் ). சரி அதை இப்படிக் குடு செல்லம். அப்பா வந்தால் இன்று கச்சேரி தான்.

மாலை வேலையால் வந்தான் வாசு.

வாசு : கௌஸ், என்ன கிடைச்சுதா?

கௌசல்யா : ம்ம்ம்.. இந்தாங்க.

வாசு : யார் இதை வெட்டியது?

கௌசல்யா : உங்கள் மகன்.


வாசு: எல்லாம் என் நேரம் ( கோபமாக உள்ளே போனான் ).

வாசு எப்பவும் இப்படித்தான் பொருட்கள் காணாமல் போனால் வீட்டில் இருப்பவர்களை ஒரு வழி பண்ணி விடுவான். திரும்ப அந்தப் பொருள் கிடைக்கும் வரை கௌசல்யாவுடன் பேச மாட்டான். பொருள் மீண்டும் கிடைத்தாலும் அது காணாமல் போகும் போது எப்படி இருந்திச்சோ அப்படியே இருக்க வேண்டும் என்று அலப்பறை பண்ணுவான். கௌசல்யாவுக்கு திருமணமான புதிதில் கஷ்டமாக இருந்தது. அவளும் வீடு முழுக்கத் தேடி உதவி செய்வாள். இப்ப அவளுக்கு தேட நேரமோ பொறுமையோ இருப்பதில்லை.

வாசு 2 நாட்கள் பேசாமல் மௌனம் காத்தான். ஆனால் கௌசல்யா தான் எல்லா வேலைகளும் செய்ய வேண்டும். ரோஷம் வந்தாலும் இப்படி அரைகுறையாகவே வரும் . கௌசல்யாவும் பேசாமல் இருந்து விடுவாள்.

மூன்றாம் நாள்

வாசு : கௌஸ் செல்லம், ஒரு டீ குடிக்க வேணும் போல இருக்குடா....

கௌசல்யா : ஐயாவின் கோபம் என்ன ஆச்சு?

வாசு : ம்ம்... அது போயே போச்சு. இனிமேல் அப்படி நடந்து கொள்ள மாட்டேன். சத்தியம்.

அரை மணி நேரம் கடந்த பின்.

வாசு : கௌஸ், இங்கே இப்போது போஸ்ட் ஆபிஸிலிருந்து கொண்டு வந்த ஸ்டாம்ஸ் வைச்சேனே எங்கே???

வாசு மாறவே மாட்டான் என்று கௌசல்யாவுக்கு எப்போதோ தெரிந்த ரகசியம்.

Monday, May 17, 2010

ஜிம்

ஜிம் எனப்படும் உடற்பயிற்சி செய்யும் இடங்களில் எனக்கு எப்போது ஒரு காதல். இதை படித்து விட்டு நான் ஏதோ ஜிம்மே கதியாக இருக்கும் ஆள் என்று நினைக்க வேண்டாம்.

ஜிம்களை பார்க்கும் போது என் மனதில் எழும் கேள்விகள் பல. அதில் ஒன்று, ஏன் எல்லா உடற்பயிற்சி நிலையங்களிலும் கண்ணாடியால் ஆன சுவர்களை அமைக்கின்றார்கள். வெளியே இருந்து உள்ளே உடற்பயிற்சி செய்பவர்களை பார்க்க கண் கோடி வேண்டும். ஒரு அழகிய ஆங்கில படத்தை slow motion இல் பார்ப்பது போல ஒரு பரவசம். ஆண்களும், பெண்களும் பாட்டு கேட்டு கொண்டோ, பேப்பர் படித்துக் கொண்டோ ட்ரெட்மில்லிலும், வேறு பெயர் தெரியாத உபகரணங்களிலும் கருமமே கண்ணாக இருப்பார்கள்.
கண்ணாடி சுவர் வழியாக தெரியும் இந்த காட்சியை பார்த்தாவது சில, பல ஜென்மங்கள் மெம்பர் ஆகி விடுவார்கள் என்ற நப்பாசையாக கூட இருக்கலாம். என்ன சொன்னாலும் இப்படி கண்ணாடிச் சுவரின் அப்பால் இருந்து உடற்பயிற்சி செய்வது ஒரு கவிதை தான். இது சொன்னால் புரியாது அனுபவித்தால் தான் விளங்கும்.

********************


என் உறவினரின் மகன், 10 வயது பொடியன். சிறு வயதிலே ஒபிஸிட்டி பிரச்சினை. குழந்தையாக இருக்கும் போது கொழுக், மொழுக் என்று இருந்தான். பெற்றோரும் எங்கள் பிள்ளை போல யாரால் பிள்ளை வளர்க்க முடியும் என்று கொண்டாடிக் கொண்டிருந்தனர். மருத்துவர் சொன்னார் வெயிட் குறைக்காவிட்டால் பெரிய பிரச்சினைகள் வர வாய்ப்புகள் அதிகம் என்று. சிறுவர்களுக்கான ஜிம்மில் பொடியன் சேர்க்கப்பட்டான். ஒரு பெரிய பையுடன் அவன் போகும் அழகே தனி தான்.

ஒரு நாள் அந்த பொடியனுக்கும், வேறு ஒருவருக்கும் நடந்த உரையாடல் பின்வருமாறு.

நபர் : ஏன்டா பொடியா அந்த பையில் என்ன இருக்கு?

பொடியன் : ஏன் கேட்கிறீங்கள் மாமா?

நபர் : இல்லை உன் சைஸிற்கும் அந்த பைக்கும் பொருத்தம் இல்லையே?

பொடியனின் அம்மா : அதெல்லாம் பொருத்தம் பார்த்து தான் வாங்கியது. நீ உன் வேலையை போய் பார்.

நபர் : நீயும் உன் மகனை ஜிம்முக்கு எவ்வளவு நாட்களாக அனுப்புகிறாய் அவன் உடம்பு குறையவே இல்லை ஏன் என்று யோசித்து பார்த்தாயா?
பொ.அம்மா : நீ என்னடா சொல்ல வருகின்றாய்?

(அந்த நபர் பொடியனின் பையை வலுக்கட்டாயமாக வாங்கி, அப்படியே கவிழ்த்து கொட்டுகின்றார். அதில் நொறுக்கு தீனிகள் நிறைய வெளியே வருகின்றது.)

நபர் : இப்ப விளங்குதா?
பொ.அம்மா : அடப்பாவி( டென்ஷனுடன் மகனை முறைக்கின்றார்)

சாப்பிட வேண்டிய வயதில் அவனின் நிலைமையை பார்க்க எனக்கு கவலையே வந்தது.