Saturday, February 20, 2010

கூஸ் கூஸ் (Couscous) உப்புமா




தேவையான பொருட்கள்:



கூஸ்கூஸ் - 1 கப்
வெங்காயம் - ‍ பாதி
குடமிளகாய் - பாதி
பூண்டு - 2 பல்
கரம் மசாலா -1/2 டீஸ்பூன்
மஞ்சள் -சிறிது
மிளகு பவுடர் -1/2 டீஸ்பூன்
பட்டர் -1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிது
தண்ணீர் - 2 கப்
எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்
உப்பு

சட்டியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், குடமிளகாய் வதக்கவும்.

பின்னர் பொடியாக வெட்டிய பூண்டு, கரம் மசாலா, மஞ்சள், உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.

இதனுடன் கூஸ் கூஸ் சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும்.

வேறு சட்டியில் 2 கப் தண்ணீரை சுடவைக்கவும். சுடு தண்ணீரை சிறிது சிறிதாக கூஸ் கூஸ் கலவையில் விட்டு கிளறவும்.
தண்ணீர் முழுவதும் வற்றியதும் பட்டர் சேர்க்கவும். பின்னர் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.இறுதியில் கொத்தமல்லி தழை சேர்த்து சூடாக பரிமாறவும்.



குறிப்பு:கூஸ்கூஸ் ரவை போன்று இருக்கும். இதில் பொங்கல் செய்தால் சுவையாக இருக்கும். பொங்கலுக்கு இஸ்ரேலி கூஸ்கூஸ் தான் சுவையாக இருக்கும்.

Friday, February 19, 2010

வெந்தயம் வெங்காயம் குழம்பு



தேவையான பொருட்கள்:




பெரிய வெங்காயம் - 3
காய்ந்த மிளகாய் - ‍ 8
பூண்டு ‍ - 4 பல்
புளி - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி பவுடர் -1 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சின்ன சீரகம் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்பூ -1 1/2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் -1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் -சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தழை -விரும்பினால்

வெங்காயத்தை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். சட்டியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.சிறிது நேரத்தில் நீளவாக்கில் வெட்டிய பூண்டு, கறிவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம் மெல்லிய brown நிறமாகும் வரை வதக்கவும். பிறகு தட்டில் பேப்பர் டவலை போட்டு வதங்கிய வெங்காயத்தை அதில் பரவி விடவும்.


வெந்தயத்தை வெறும் சட்டியில் போட்டு ஓரளவு சூடாகும் வரை வறுத்து வைத்துக் கொள்ளவும்.

வேறு சட்டியில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் போட்டு நிறம் மாறும் வரை வறுத்து, இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து 1 நிமிடம் கழித்து இறக்கவும். இதனுடன் மல்லி தூள், மஞ்சள், மிளகு, சின்ன சீரகம் சேர்த்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் மிக்ஸியில் நன்கு அரைத்து( 2 முறை அரைத்துக் கொள்ளவும்) வடி தட்டில் வடித்து தண்ணீரை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சட்டியை அடுப்பில் வைத்து, இந்த அரைத்த தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். இதனுடன் புளி, உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போனதும் வதக்கிய வெங்காயம் சேர்த்து, நன்கு கொதித்து, எண்ணெய் மிதக்க ஆரம்பித்தவுடன் வெந்தயம் போட்டு 2 நிமிடங்களின் பிறகு இறக்கவும்.
விரும்பினால் கொத்தம‌ல்லி தழை சேர்க்கவும்.



ரைஸ், புட்டு, இடியப்பம், cous cous உப்பு மா இவற்றுக்கு ஏற்ற பக்க உணவு.

French Toast




தேவையான பொருட்கள்:


முட்டை - 2
பால் - 1/2 கப்
சீனி - 3 டேபிள்ஸ்பூன்
சினமன் பௌடர் - 1/4 டீஸ்பூன்
ஜாதிக்காய் பௌடர் - 1/4 டீஸ்பூன்

அலங்கரிக்க:
ஸ்ட்ராபெரி/ வாழைப்பழம்
தேன்/மேபிள் சிரப்

செய்முறை:
முட்டையை அடித்து ஊற்றி எக் பீட்டரால் நுரை வரும் வரை நன்கு அடிக்கவும். பிறகு பால், சீனி, சினமன் பொடி, ஜாதிக்காய் பொடி போட்டு நன்கு அடிக்கவும்.இந்த கலவையை ஒரு கோப்பையில் ஊற்றவும்.


பிரெட் ஸ்லைசை இதனுள் ஊறப்போடவும்.


அடுப்பில் பான்/தோசைக்கல் வைத்து சூடானதும் பட்டர் போட்டு உருகியது பிரெட் சேர்க்கவும் .
பிரெட்டை மரக்கரண்டி/ ஸ்பாட்டுலாவால் நன்கு அமர்த்தவும். இப்படி செய்தால் டோஸ்ட் மிகவும்
கிறிஸ்பியாகவும், சுவையாகவும் இருக்கும்.



பிரெட்டை திருப்பி போட்டு நல்ல பொன்னிறமானதும் இறக்கி, பழங்கள், தேன்/சிரப் விட்டு பரிமாறவும்.
இது குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உணவு.

Wednesday, February 17, 2010


Chocolate cake


மைதா மா - 1 கப் ( 8 oz)
சீனி - 1 கப் ( 8 oz)
முட்டை - 5
பட்டர் (salted) - 1 கப் ( 8 oz)
வனிலா - 11/2 டீஸ்பூன்
பேக்கிங் பௌடர் - 1 டேபிள் ஸ்பூன்
சாக்லேட் பௌடர் - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 2 டேபிள் ஸ்பூன்

முட்டை, பட்டர் இரண்டும் ரூம் டெம்பரேச்சரில் ( room temperature) இருக்க வேண்டும்.

ஐசிங் செய்ய:

சாக்லேட் பௌடர் - 3 டேபிள் ஸ்பூன்
பொடித்த சீனி - 1/4 to 1/2 கப்
பட்டர் - 1/2 to 1 கப்

செய்முறை:

முட்டையின் வெள்ளைக்கரு தனியாக, மஞ்சள் கரு தனியாக பிரித்து வைக்கவும்.
வெள்ளை கருவை நன்கு நுரைக்கும் வரை அடிக்கவும்.
மா, பேக்கிங் பௌடர் இரண்டையும் 3 தரம்
சலித்து வைக்கவும்.
அவனை 360 டிகிரி க்கு முற்சூடு செய்யவும்.

அறை வெப்பநிலையில் இருக்கும்
பட்டர், சீனி இரண்டையும் நன்கு அடிக்கவும்.

பிறகு, முட்டை மஞ்சள் கருவை ஒவ்வொன்றாக சேர்த்து அடிக்கவும்.

அடித்து வைத்துள்ள முட்டை வெள்ளை கருவை சிறிது, சிறிதாக சேர்த்து அடிக்கவும்.
இப்போது மாவை சிறிது, சிறிதாக சேர்த்து, மரக் கரண்டியால் ஒரே பக்கமாக கலக்கவும்.
வனிலா சேர்க்கவும்.
பாலில் சாக்லேட் பௌடர் கலந்து, சிறிது, சிறிதாக ஊற்றி கேக்கினுள் கலக்கவும்.

ட்ரேயில் ஊற்றி 30-40 நிமிடங்கள் பேக் செய்யவும்.
ஐசிங் செய்ய தேவையான பொருட்களை ஒன்றாக போட்டு நன்கு அடிக்கவும். கேக்கை நன்கு ஆற விடவும்.

கேக்கை இரண்டு லேயராக வெட்டி, ஒரு லேயரில் ஐசிங் பூசி மற்ற லேயரை மேலே வைக்கவும்.

மற்ற லேயருக்கும் ஐசிங் பூசவும்.




Patties


தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
சிக்கின் - 1 கப்(8 oz)
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
சின்ன சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் - பொறிப்பதற்கு

மாவு தயாரிக்க:
மைதா மா - 2 கப்
நீர் - 1/2 கப்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்

மாவை சட்டியில் எடுத்து, பட்டர் , உப்பு போட்டு நன்கு பிசையவும். பின்பு தண்ணீரை சிறிது, சிறிதாக விட்டு சப்பாத்தி மா பதத்திற்கு குழைத்து மூடியால் மூடி 2 மணி நேரம் வைக்கவும்.

சிக்கினை சுத்தம் செய்து, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் சேர்த்து தண்ணீர் விட்டு அவிக்கவும். உருளைக்கிழங்கை தண்ணீர் விட்டு நன்கு அவித்து, தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.

சிக்கினை தண்ணீர் நன்கு வற்றும் வரை அவிக்க வேண்டும்.

உருளைக்கிழங்கை சிறிய, சிறிய துண்டுகளாக மசித்து வைக்கவும். சிக்கினை எலும்பினை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

சட்டியில் எண்ணெய் விட்டு, கடுகு போட்டு வெடித்ததும், சீரகம், பட்டை போட்டு சிவந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

பிறகு கிழங்கு, சிக்கினை போட்டு கிளறி விடவும்.

மிளகாய்த்தூள், உப்பு போட்டு கிளறி, 1/2 கப் தண்ணீர் விட்டு, குழம்பு மிகவும் திக்காக வரும் வரை அடுப்பில் வைத்து கிளறி இறக்கவும்.

இப்போது மாவினை எடுத்து, மரப்பலகையில் வைத்து மாத்தூவி உருட்டவும்.
ஓரத்தில் சிறிது இடம் விட்டு கறியை வைக்கவும்.ஓரத்தில- விடுபட்ட மாவை எடுத்து கறியை மூடவும்.

ஒரு டின் அல்லது டம்ளரால் அழுத்தி வெட்டவும். அப்படியே அரை சந்திரன்(semi circle shape) போன்ற வடிவம் கிடைக்கும்.

இப்போது கறி வெளியே வராமல் சீல் பண்ண வேண்டும். ஒரு முள்ளுக்கரண்டி(fork) எடுத்து ஓரங்களின் மீது மெதுவாக அழுத்தவும்.


எல்லாவற்றையும் செய்து மா தூவிய தட்டில் வைக்கவும். அப்போது தான் எடுக்கும் போது பிய்ந்து விடாமல் வரும்.

சட்டியில் எண்ணெய் விட்டு சூடானது, பாட்டீஸ்களை போட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்பு:
சிக்கன் சேர்க்காமல் உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி சேர்த்தும் செய்யலாம்.