Saturday, February 20, 2010

கூஸ் கூஸ் (Couscous) உப்புமா




தேவையான பொருட்கள்:



கூஸ்கூஸ் - 1 கப்
வெங்காயம் - ‍ பாதி
குடமிளகாய் - பாதி
பூண்டு - 2 பல்
கரம் மசாலா -1/2 டீஸ்பூன்
மஞ்சள் -சிறிது
மிளகு பவுடர் -1/2 டீஸ்பூன்
பட்டர் -1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிது
தண்ணீர் - 2 கப்
எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்
உப்பு

சட்டியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், குடமிளகாய் வதக்கவும்.

பின்னர் பொடியாக வெட்டிய பூண்டு, கரம் மசாலா, மஞ்சள், உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.

இதனுடன் கூஸ் கூஸ் சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும்.

வேறு சட்டியில் 2 கப் தண்ணீரை சுடவைக்கவும். சுடு தண்ணீரை சிறிது சிறிதாக கூஸ் கூஸ் கலவையில் விட்டு கிளறவும்.
தண்ணீர் முழுவதும் வற்றியதும் பட்டர் சேர்க்கவும். பின்னர் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.இறுதியில் கொத்தமல்லி தழை சேர்த்து சூடாக பரிமாறவும்.



குறிப்பு:கூஸ்கூஸ் ரவை போன்று இருக்கும். இதில் பொங்கல் செய்தால் சுவையாக இருக்கும். பொங்கலுக்கு இஸ்ரேலி கூஸ்கூஸ் தான் சுவையாக இருக்கும்.

9 comments:

  1. ரொம்போ புதுசா இருக்கு வானதி.. இதுவரைக்கும் கேள்விப்பட்டதில்ல.. கடையில தேடிப் பாக்கறேன்..

    ReplyDelete
  2. சந்தனா, எல்லா சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும். மிகவும் சுவையாக இருக்கும்.

    ReplyDelete
  3. நானும் இப்போதான் வானதி கூஸ்-கூஸ் பற்றி கேள்விப்படறேன்.. கடைகள்ல இதுவரை கவனிச்சதில்லை. அடுத்த முறை போகும்போது பார்க்கிறேன்.

    கலர்புல்லா ப்ரெசண்ட் பண்ணிருக்கிங்க..சூப்பர்!

    ReplyDelete
  4. குஸ்குஸ் வறுத்துச் சமைக்கும் முறை எனக்குப் புதிது வாணி. நான் கொதி தண்ணீரை ஊற்றி மூடி வைத்து விட்டுப் பின்னர் முள்ளுக் கரண்டியால் கிளறி எடுப்பேன். மீதிப் பொருட்கள் எல்லாம் தனியாகத் தாளித்துச் சேர்த்துக் கொள்வேன். அடுத்த முறை உங்கள் முறைப்படி சமைக்கப் போகிறேன். குஸ்குஸ் எப்படி சமைத்தாலும் எனக்குப் பிடிக்கும்.

    குடமிளகாய் எல்லாம் செட் பண்ணி அழகாக இருக்கு உங்கள் டிஷ்.

    (இதென்ன, கொஞ்ச நாள் இடைவெளியில் சிலர் சீரியஸாக மாறி விட்டார்களே!!)

    ReplyDelete
  5. மகி, குஸ்குஸ் மிகவும் சத்தானது. என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த உணவு. செய்து பாருங்கள்.
    இமா, நன்றி. நீங்கள் என்னை சொல்லவில்லை தானே?( சிலர் திடீர் திடீர் என்று மாறுகின்றார்கள் ). இனிமேல் யாராவது மாறுவது என்றால் முன்னறிவித்தல் இல்லாமல் மாற வேண்டாம்.

    ReplyDelete
  6. கூஸ் கூஸ், என்ன கோதுமை ரவையா?
    பார்க்க நல்ல இருக்கு

    ReplyDelete
  7. ஜலீலா அக்கா, ரவை போல தான் இருக்கும். மிகவும் சுவையாக இருக்கும்.

    ReplyDelete
  8. கூஸ்-கூஸ் உப்மா செய்தாச்சு வானதி! நல்லா இருந்தது.

    ReplyDelete
  9. மகி, மிகவும் நன்றி. உங்கள் குஸ் குஸ் உப்புமா படம் அருமை.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!