Friday, February 19, 2010

French Toast




தேவையான பொருட்கள்:


முட்டை - 2
பால் - 1/2 கப்
சீனி - 3 டேபிள்ஸ்பூன்
சினமன் பௌடர் - 1/4 டீஸ்பூன்
ஜாதிக்காய் பௌடர் - 1/4 டீஸ்பூன்

அலங்கரிக்க:
ஸ்ட்ராபெரி/ வாழைப்பழம்
தேன்/மேபிள் சிரப்

செய்முறை:
முட்டையை அடித்து ஊற்றி எக் பீட்டரால் நுரை வரும் வரை நன்கு அடிக்கவும். பிறகு பால், சீனி, சினமன் பொடி, ஜாதிக்காய் பொடி போட்டு நன்கு அடிக்கவும்.இந்த கலவையை ஒரு கோப்பையில் ஊற்றவும்.


பிரெட் ஸ்லைசை இதனுள் ஊறப்போடவும்.


அடுப்பில் பான்/தோசைக்கல் வைத்து சூடானதும் பட்டர் போட்டு உருகியது பிரெட் சேர்க்கவும் .
பிரெட்டை மரக்கரண்டி/ ஸ்பாட்டுலாவால் நன்கு அமர்த்தவும். இப்படி செய்தால் டோஸ்ட் மிகவும்
கிறிஸ்பியாகவும், சுவையாகவும் இருக்கும்.



பிரெட்டை திருப்பி போட்டு நல்ல பொன்னிறமானதும் இறக்கி, பழங்கள், தேன்/சிரப் விட்டு பரிமாறவும்.
இது குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உணவு.

3 comments:

  1. வாணி இப்படி போட்டு அசத்துரிஙக் ஆனா எனக்கு செஞ்சு தரமாட்டங்கரிங்க? எனக்கு வேனும். எனக்கு சிங்கப்பூருக்கு அனுப்பி விடுங்க.

    ReplyDelete
  2. பழசை எல்லாம் ஞாபகப்படுத்துறீங்க வாணி. ;) ஒரு முறை (இலங்கையில்) வேலி பிரித்து அடித்துக் கொண்டு இருந்த ஆட்களுக்கு (என் வீட்டார்தான்) தேநீருக்கென்று 'பிரெஞ்ச் டோஸ்ட்' தயாரித்தேன். பட்டையை உரலில் போட்டு இடித்துக் கொண்டிருந்தேன். சுவருக்கு மறு பக்கத்திலிருந்து பப்பாசி மரத்தை வெட்டிக் கொண்டிருந்தவர்களது உரையாடல் காதில் வந்து விழுந்தது, 'பப்பாசி மரத்து வேர் வெட்ட வெட்ட என்ன மாதிரி கறுவா வாசம் வருது பாருங்க!!' என்று வியந்து கொண்டிருந்தார்கள். ;)

    ReplyDelete
  3. இமா, காலையில் சீரியஸாக இருந்த என்னை சிரிக்க வைத்து விட்டீர்கள். ஏன் உங்கள் ப்ளாக்கில் புதிதாக எதுவும் அப்டேட் செய்யவில்லை??
    பிரபா, ஒருக்கா அமெரிக்கா பக்கம் விசிட் பண்ணுங்கோ செஞ்சு தருகிறேன்.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!