மகனின் பிறந்தநாள். இந்த முறை ஸ்கூலில் பிள்ளைகளுடன் கொண்டாட ஆசைப்பட்டார். எல்லாம் ரெடி பண்ணியாச்சு. ஒரே ஒரு பிரச்சினை.....நாளை( வெள்ளிக்கிழமை) பனிப்புயல். ஸ்கூல் இருக்குமா?? இல்லையா?? என்பது கேள்விகுறி.
என் மகனின் அழகிய, அன்பான ஆசிரியைக்கு ஒரு சிறு துண்டு கேக்.
இமா, அண்ணாமலையான், மற்றும் என் ப்ளாக்கிற்கு வருகை தரும் அனைவரும் கூச்சப்படாமல் எடுத்து சாப்பிடுங்கோ!!!
vaany
Thursday, February 4, 2010
Tuesday, February 2, 2010
Corn Soup
சிக்கின் - 500 கிராம்
கார்ன் - 3
காரட் - 1
பீன்ஸ் - 100 கிராம்
ஸ்பினாச் - 1/2 கட்டு
மல்லி விதை - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
வெள்ளை மிளகு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு
செய்முறை:
சிக்கினை எலும்பில்லாமல் சுத்தம் செய்து வைக்கவும்.
காரட், பீன்ஸ் பொடியாக அரிந்து வைக்கவும்.
சோளத்தை செங்குத்தாக பிடித்து அப்படியே சோள முத்தை மட்டும் கத்தியால் அரிந்து எடுக்கவும்.
இந்த அரிந்த சோளத்தை சட்டியில் போட்டு, அது மூழ்கும் அளவு
தண்ணீர் விட்டு சிறிது உப்பு போட்டு அவிக்கவும். நன்கு அவிந்ததும் இஞ்சி, மல்லி
விதை, மிளகு போட்டு மேலும் 5 நிமிடங்கள் அவிக்கவும்.
பின்பு இஞ்சியை எடுத்து விட்டு, புட் பிராஸஸரில் (Food processor)அரைக்கவும்.
இதை சல்லடையில் வடிக்கவும். மீண்டும் சோளம், மல்லி விதை கலவையை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வடிக்கவும்.
தண்ணீரை மட்டும் எடுத்து ஒரமாக வைக்கவும்.
வேறு சட்டியில் சிக்கினை போட்டு, தண்ணீர், ஆலிவ் எண்ணெய், உப்பு போட்டு தண்ணீர் ஓரளவு வற்றும் வரை மூடி அவிக்கவும்.
பின்பு காரட், பீன்ஸ் சேர்த்து 1 கப் நீர் சேர்த்து நன்கு அவிக்கவும்.
காரட், பீன்ஸ் அவிந்ததும் அரைத்து வைத்துள்ள சோளத் தண்ணீரை விட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு, ஸ்பினாச் கீரையை அரிந்து போட்டு இறக்கவும்.
பரிமாறும் போது வெள்ளை மிளகு/ கறுப்பு மிளகு தூள் தூவி பரிமாறவும்.
Monday, February 1, 2010
Kids Coconut Roll
மா - 3/4 கப்
தேங்காய் பூ - 3/4 கப்
சீனி - 1/2 கப்
முட்டை - 1
பால் - 3/4 கப்
பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்
சினமன் தூள் - 1/4 டீஸ்பூன்
ஜாதிக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்
ஃபுட் கலரிங் - சிறிது
உப்பு - சிறிது
சட்டியில் தேங்காய் துருவல், தண்ணீர், சீனி, சினமன் தூள், ஜாதிக்காய் தூள், உப்பு எல்லாவற்றையும் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும்
தண்ணீர் வற்றி, ஓரளவு திக்காக (7-8 minutes) வரும்வரை கிளறி இறக்கவும்.
வேறு சட்டியில் பட்டரை மைக்ரோவேவ் அவனில் 15 செகன்ட்ஸ் உருக்கவும்.
பிறகு மா, முட்டை, உப்பு, பால் விட்டு நன்கு கட்டி இல்லாமல் மிக்ஸ் பண்ணவும். இறுதியில் ஃபுட் கலரிங் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும், மாவை ஊற்றி மெல்லிய தோசையாக பரவவும்
வெந்ததும் திருப்பி போடவும்
அதன் மேல் தேங்காய் கலவையை வைக்கவும்.
இருபுறமும் மடித்து விடவும்.
கோப்பையில் வைத்து, விருப்பமான பழங்களுடன் பரிமாறவும்.
சுவையான கோக்கனட் ரோல் தயார்.
குறிப்பு: குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான மாலைநேரச் சிற்றுண்டி.
Subscribe to:
Posts (Atom)