Friday, January 29, 2010

பூண்டு மிளகு சொதி


வாழைக்காய் - 1
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 2 பல்
மிளகு - 1 தேக்கரண்டி
மிளகாய் - 5
புளி கரைசல் - 4 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
தேங்காய் பால் - 3/4 கப்
மஞ்சள் - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
தண்ணீர் - 1/2 to 3/4 கப்

தாளிக்க:
வெங்காயம் - கொஞ்சம்
கடுகு - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் -சிறிது
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

வாழைக்காயின் மேல் தோலை சீவி விட்டு, உள்ளே இருக்கும் தோலை வெட்டி எடுக்கவும். அதை சட்டியில் போட்டு உப்பு, மஞ்சள் சேர்த்து வேகவைக்கவும்.

தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைக்கவும். மிளகாயை இரண்டு துண்டாக்கவும்.
வாழைக்காய் தோல் ஓரளவுக்கு வெந்தவுடன், வெங்காயம், மிளகாய் சேர்க்கவும்.

வெங்காயம், மிளகாய் வெந்ததும், மிளகாய்தூள், புளி
சேர்த்து பச்சை வாடை போகும் வரை வேக விடவும்.

இப்போது தேங்காய் பால் சேர்க்கவும்.
5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பூண்டு, மிளகு குத்திப் போடவும்.

தாளித்ததையும் சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

சுவையான பூண்டு, மிளகு சொதி தயார்.


இதை சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: காரம், புளி விரும்பினால் கூட சேர்த்துக் கொள்ளலாம்.
தேங்காய் பாலுடன் Evaporated milk(2%) மிக்ஸ் பண்ணியும் செய்யலாம்.

Tuesday, January 26, 2010

வாத்து

இதில் ஏறி.


இங்கு இறங்கி.

Union Station

எந்த லைனில் நிற்பது என்று குழம்பி, பிறகு தெளிந்து.

வாத்தில் ஏறி( டக் போட்).....நீரிலும் நீந்தும். நிலத்திலும் நடக்கும்.



எங்களுக்கு ஒரு விசில் தரப்பட்டது.
எங்கள் வாத்தின் ட்ரைவர் எங்களுக்கு வைத்த ஒரு கோரிக்கை: இன்னொரு வாத்தைக் கண்டால் "குவாக் குவாக்" என்று கத்த (விசிலடிக்க) வேண்டும்.

நாங்களும் வேறு வாத்து கிராஸ் பண்ணும் போது கத்த, அவர்களும் பதிலுக்கு கத்தி விட்டு கடந்து போனார்கள்.


எங்கள் ட்ரைவர் ஸ்மித்சோனியன், காங்கிரஸ்,white ஹவுஸ்..... என்று எல்லா கட்டடங்களுக்கும் விரல் நுனியில் தகவல் சேர்த்து வைத்து விளக்கம் சொல்லிக் கொண்டே வந்தார். போர் அடிக்காமல்(ஆட்கள் தூங்கி விடாமல்) இடையிடையே கேள்விகளும் கேட்டார்.

நான் மிகவும் ரசித்தது.....வாத்து நீரில் போகும் போது.




1 1/2 மணி நேர பயணம் விரைவில் முடிந்ததை போல ஒரு உணர்வு ஏற்பட்டது.

பயணம் முடியும் நேரத்தில் பாப்( அதாங்க வாத்தின் ஓட்டுநர்)போஸ்ட் கார்டுகள் எல்லோருக்கும் தந்தார்.


இந்த கார்டில்," இன்று உங்கள் அனுபவம், உங்கள் டிரைவர் பற்றி, நிறைகள் பற்றி எழுதி அனுப்புங்கள்.என் பெயர் பாப் என்பதையும் மறவாமல் குறிப்பிடுங்கள். குறைகள் இருப்பின் என் பெயர் பாப் அல்ல கெவின்( மற்ற வாத்தின் ஓட்டுநராக இருக்க வேண்டு என்பது என் அனுமானம்) என்று போட்டு போஸ்ட் கார்டை அனுப்புங்கள்" என்று நகைச்சுவையாக முடித்தார்.


வீடு வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக பாப் அண்ணாச்சியை பற்றி நல்லதா நாலு வார்த்தை எழுதி அனுப்பி விட்டேன். ஏதோ என் புண்ணியத்தால் அவரின் சம்பளம் ஏறினால் அந்த குடும்பமே என்னை தலையில் வைத்து கொண்டாடும் அல்லவா(இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று யாரோ முணுமுணுப்பது காதில் விழுகிறது).