இதற்கு தேவையான பொருட்கள்:
டாக்கோ ஷெல்
சிக்கன் (ground chicken )
லெட்யூஸ்
ப்ளாக் பீன்ஸ்
தக்காளி
வெங்காயம்
சோளம்
டாக்கோ sauce
துறுவிய சீஸ்
நான் பாவித்த டாக்கோ ஷெல்ஸ் க்றிஸ்பி ஷெல்ஸ் வகையாகும். அதனை டோஸ்டர் அவனில் சில நிமிடங்கள் ( 3 நிமிடங்கள், 350 F இல் பேக் செய்து வைக்கவும்)
சட்டியில் எண்ணெய் விட்டு, பொடியாக வெட்டிய வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு வதங்கியதும், சிக்கனைப் போடவும். உப்பு, மிளகாய்ப் பொடி ( 1/2 டீஸ்பூன் ) போட்டு நன்கு வதக்கவும். சிக்கன் ப்ரவுன் கலரில் வரும்வரை வதக்கவும். அடுப்பை அணைத்த பின்னர் டாக்கோ சாஸ் விட்டு கிளறவும்.
எல்லாப் பொருட்களையும் ரெடியாக எடுத்து வைத்தால் போதும். அவரவர் விருப்பத்திற்கேற்ப பொருட்களை டாக்கோ ஷெல்களில் நிரப்பி சாப்பிடலாம். நான் இங்கு பாவித்த சாஸ் மெக்ஸிகன் சல்சா வகையாகும். இதற்காக என்று தனியாக சாஸ் கடைகளில் கிடைக்கும். சீஸூம் மெக்ஸிகன் டாக்கோ மிக்ஸ் என்று கிடைக்கும். அது கிடைக்காவிட்டால் சாதாரண சீஸ் பாவிக்கலாம். சிக்கன் வதக்கிய போது மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்ப்பது என் ஐடியா. இதெல்லாம் சேர்க்காவிட்டால் மிகவும் plainஆக இருக்கும் என்பதால் கொஞ்சம் modify செய்து ரெசிப்பி போட்டுள்ளேன்.