தலைப்பே கொஞ்சம் குழப்பமா இருக்கு. தொடர்பதிவு என்பதால் எழுதியே ஆக வேண்டும்.
யாரிடம் கேட்கலாம். தமிழை ஒழுங்கா படிச்சிருந்தா இப்படி குழப்பம் வராது. ஒழுங்கா தான் படிச்சேன். உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, ஆய்த எழுத்து 1. எல்லாத்தையும் கூட்டி, கழிச்சு பார்த்தா 247 எழுத்துக்கள் தமிழில்.
இதில் பெண் எழுத்துக்கள் எங்கே? விளங்கவில்லை. என் ஆ.காரர் சொன்னார் பெண் எழுதினா அது பெண் எழுத்தாம். பேய் எழுதினா அது பேய் எழுத்தாம். சரி நீங்க டென்ஷன் ஆவாதீங்க. அவருக்கு இன்று டீ கட்.
பெண் எழுத்து பற்றி என் பள்ளி ஆசிரியரிடம் கேட்டால் என்ன பதில் வரும்.
" மிஸ், பெண் எழுத்து என்றால் என்ன? ", இது நான்.
" உன்னை நான் திருக்குறள் 30 மனப்பாடம் செய்ய சொன்னேன். அதை விட்டுட்டு பெண் எழுத்து என்றால் என்னன்னு கேள்வியைப் பாரு. போய் படி", இது ஆசிரியை.
" ம்ம்ம்...( பதில் தெரியலைன்னா அதை வெளிப்படையா சொல்லணும் ) "
என்ன முணு முணுப்பு. நீதானே போன வாரம் பள்ளி பேருந்தில் என் தலையில் பெட்டி விழ பார்த்து சிரிச்சவ.
"கடவுளே! உங்க தலையில் பெட்டி விழுந்திச்சா. எப்ப டீச்சர்? " இது அப்பாவி நான்.
" ஓ! அப்ப அது நீ இல்லையா. சரி போய் படி. பெண் எழுத்து, ஆண் எழுத்துன்னு எதையாச்சும் சொல்லி என் வாயை கிளராதே.
இவங்களுக்கு தெரியலை போல இருக்கே. அடுத்து என் கல்லூரி ஆசிரியரிடம் கேட்க வேண்டியது தான்.
மிஸ், பெண் எழுத்து என்றால் என்ன? , என் கேள்வி.
குழந்தைகள் தூங்கும் போது பார்க்கவே அழகா இருக்கும். ஆனால், நீ, நான் படுத்திருந்தால் பிணம் போல தெரிவோம். எப்பவாச்சும் தூங்கிட்டு இருக்கிறவனை பார்த்து இருக்கிறீங்களா? . என்னைக் கேள்வி கேட்டது போதும் வள்ளுவன் தடுமாறினான் பாகம் எடுத்து படிங்க.
ஆங்! வள்ளுவன் தடுமாறினான் நல்ல தலைப்பு. இந்த திருக்குறளை மனப்பாடம் பண்ணி நான் தடுமாறிட்டு இருக்கிறேன். என் கேள்விக்கு யாரும் பதில் சொல்லப் போவதில்லை. நானே எதையாவது அடிச்சு விட வேண்டியது தான்.
ஆண்கள் நினைச்ச உடனே, நினைச்சதை, எழுதிட்டு போயிடுவார்கள். பெண்கள் அப்படி எழுத முடியுமா?
எதையாவது எசகு, பிசகா எழுதினா அவ்வளவு தான். கமன்ட் என்ற பெயரில் ஒரு வழி பண்ணி விடுவார்கள். ஒரு பெண் பதிவர் எதையோ எழுதப் போக, அவருக்கு நிறைய விமர்சனங்கள், திட்டுக்கள். ஒரு ஆண் பதிவர் சொன்னார், " பெண் பதிவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆண் பதிவர்களுடன் ஒரு நட்பு வட்டத்தினை உருவாக்கி கொள்ள வேண்டும் . அதாவது ஒவ்வொரு பெண் பதிவருக்கும் ஒரு ஆண் தோழமை இருந்தா நல்லது." அட! இது என்ன அநியாயம். ஏன் பெண்களுக்கு ப்ளாக்கில் தனியாக உலாவ ஒரு ஆண் துனை வேண்டுமா?
எனக்கு தோன்றுவதை நான் எழுதுகிறேன். பிடிச்சா நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க. பிடிக்காவிட்டால் விட்டுட்டு போகலாம்.
இந்த தொடர்பதிவுக்கு நான் அழைப்பது
அதீஸ்
மகி
ஓட்ட வட நாரயணன்
இரண்டு பேரை கூப்பிட்டு இருக்கிறேன். முடிஞ்சா எழுதுங்க.