தலைப்பே கொஞ்சம் குழப்பமா இருக்கு. தொடர்பதிவு என்பதால் எழுதியே ஆக வேண்டும்.
யாரிடம் கேட்கலாம். தமிழை ஒழுங்கா படிச்சிருந்தா இப்படி குழப்பம் வராது. ஒழுங்கா தான் படிச்சேன். உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, ஆய்த எழுத்து 1. எல்லாத்தையும் கூட்டி, கழிச்சு பார்த்தா 247 எழுத்துக்கள் தமிழில்.
இதில் பெண் எழுத்துக்கள் எங்கே? விளங்கவில்லை. என் ஆ.காரர் சொன்னார் பெண் எழுதினா அது பெண் எழுத்தாம். பேய் எழுதினா அது பேய் எழுத்தாம். சரி நீங்க டென்ஷன் ஆவாதீங்க. அவருக்கு இன்று டீ கட்.
பெண் எழுத்து பற்றி என் பள்ளி ஆசிரியரிடம் கேட்டால் என்ன பதில் வரும்.
" மிஸ், பெண் எழுத்து என்றால் என்ன? ", இது நான்.
" உன்னை நான் திருக்குறள் 30 மனப்பாடம் செய்ய சொன்னேன். அதை விட்டுட்டு பெண் எழுத்து என்றால் என்னன்னு கேள்வியைப் பாரு. போய் படி", இது ஆசிரியை.
" ம்ம்ம்...( பதில் தெரியலைன்னா அதை வெளிப்படையா சொல்லணும் ) "
என்ன முணு முணுப்பு. நீதானே போன வாரம் பள்ளி பேருந்தில் என் தலையில் பெட்டி விழ பார்த்து சிரிச்சவ.
"கடவுளே! உங்க தலையில் பெட்டி விழுந்திச்சா. எப்ப டீச்சர்? " இது அப்பாவி நான்.
" ஓ! அப்ப அது நீ இல்லையா. சரி போய் படி. பெண் எழுத்து, ஆண் எழுத்துன்னு எதையாச்சும் சொல்லி என் வாயை கிளராதே.
இவங்களுக்கு தெரியலை போல இருக்கே. அடுத்து என் கல்லூரி ஆசிரியரிடம் கேட்க வேண்டியது தான்.
மிஸ், பெண் எழுத்து என்றால் என்ன? , என் கேள்வி.
குழந்தைகள் தூங்கும் போது பார்க்கவே அழகா இருக்கும். ஆனால், நீ, நான் படுத்திருந்தால் பிணம் போல தெரிவோம். எப்பவாச்சும் தூங்கிட்டு இருக்கிறவனை பார்த்து இருக்கிறீங்களா? . என்னைக் கேள்வி கேட்டது போதும் வள்ளுவன் தடுமாறினான் பாகம் எடுத்து படிங்க.
ஆங்! வள்ளுவன் தடுமாறினான் நல்ல தலைப்பு. இந்த திருக்குறளை மனப்பாடம் பண்ணி நான் தடுமாறிட்டு இருக்கிறேன். என் கேள்விக்கு யாரும் பதில் சொல்லப் போவதில்லை. நானே எதையாவது அடிச்சு விட வேண்டியது தான்.
ஆண்கள் நினைச்ச உடனே, நினைச்சதை, எழுதிட்டு போயிடுவார்கள். பெண்கள் அப்படி எழுத முடியுமா?
எதையாவது எசகு, பிசகா எழுதினா அவ்வளவு தான். கமன்ட் என்ற பெயரில் ஒரு வழி பண்ணி விடுவார்கள். ஒரு பெண் பதிவர் எதையோ எழுதப் போக, அவருக்கு நிறைய விமர்சனங்கள், திட்டுக்கள். ஒரு ஆண் பதிவர் சொன்னார், " பெண் பதிவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆண் பதிவர்களுடன் ஒரு நட்பு வட்டத்தினை உருவாக்கி கொள்ள வேண்டும் . அதாவது ஒவ்வொரு பெண் பதிவருக்கும் ஒரு ஆண் தோழமை இருந்தா நல்லது." அட! இது என்ன அநியாயம். ஏன் பெண்களுக்கு ப்ளாக்கில் தனியாக உலாவ ஒரு ஆண் துனை வேண்டுமா?
எனக்கு தோன்றுவதை நான் எழுதுகிறேன். பிடிச்சா நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க. பிடிக்காவிட்டால் விட்டுட்டு போகலாம்.
இந்த தொடர்பதிவுக்கு நான் அழைப்பது
அதீஸ்
மகி
ஓட்ட வட நாரயணன்
இரண்டு பேரை கூப்பிட்டு இருக்கிறேன். முடிஞ்சா எழுதுங்க.
எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...
இது சித்ரா மேடம் எழுதுன மாதிரி இருக்கே...
ReplyDelete////" மிஸ், பெண் எழுத்து என்றால் என்ன? "///
ReplyDeleteஎன்னங்க நீங்க இது தெரியாமல்.. பெண் எழுத்து, ஆண் எழுதினா ஆண் எழுத்து, திரு நங்கை எழுதினா திருநங்கை எழுத்து... எல்லாருக்கும் கடவுள் எழுதினா தலையெழுத்து... ஹ..ஹ..
//இரண்டு பேரை கூப்பிட்டு இருக்கிறேன். முடிஞ்சா எழுதுங்க//
ReplyDeleteஹே ஹே யாரந்த ரெண்டு பேர்...
அடடா வடை போச்சே....
ReplyDeleteசுதா, மிக்க நன்றி. வாரம் ஒரு முறையா? முன்னாடி மாசத்துக்கு ஒரு தடவை தானே வந்துட்டு இருந்தீங்க. ஓகே. நோ டென்ஷன்.
ReplyDeleteநேரம் கிடைக்கும் போது வாங்க.
நாஞ்சில் அங்கிள் ( நன்றி, நிவே ஆன்டி ), இது என்ன அநியாயம்??? நான் மண்டையை பிச்சு, யோசிச்சு எழுதினது.
மிக்க நன்றி.
//எனக்கு தோன்றுவதை நான் எழுதுகிறேன். பிடிச்சா நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க. பிடிக்காவிட்டால் விட்டுட்டு போகலாம்.//
ReplyDeleteஒன்னு ரெண்டு மூணு நான்கு ஹே ஹே ஹே நாலு வார்த்தை சொல்லிட்டேனே....
யாரந்த இரண்டு பேர்??? ஹைலைட் பண்ணி பாருங்கப்பா!!!
ReplyDelete//நாஞ்சில் அங்கிள் ( நன்றி, நிவே ஆன்டி ), இது என்ன அநியாயம்??? நான் மண்டையை பிச்சு, யோசிச்சு எழுதினது.
ReplyDeleteமிக்க நன்றி//
ஹேய் பேஸ்புக் ஆளுல்ல நீங்க...? நிவே பேர் சொன்னதும்தான் தெரிஞ்சுது....வாழ்த்துகள் வாழ்த்துகள்...அசத்துங்க அசத்துங்க....நானும் உங்க பாலோவராதான் இருக்கேன்....
//vanathy said...
ReplyDeleteயாரந்த இரண்டு பேர்??? ஹைலைட் பண்ணி பாருங்கப்பா!!!//
"ங்கே" தெரியவே இல்லை....
ஒன்னு : ஹிலாரி கிளிண்டன்...?
ரெண்டு : சோனியாகாந்தி...?
நாஞ்சிலார், பேஸ்புக் ஆளுன்னு இப்ப தான் கண்டு பிடிச்சீங்களா???
ReplyDeleteஎன் பெயரில் இன்னொருத்தி இல்லையே.
அந்த இரண்டு பேரில் ஒருவர் கொஞ்சம் டெரரான ஆளு. அதான் அப்படி மறைச்சு போட்டேன்.
மிக்க நன்றி, நாஞ்சிலார்.
ஹே ஹே காமெடியா சொல்றாங்களாமாம்..
ReplyDeleteஅதுபோகட்டும் இப்ப போயி ஸ்கூல் மிஸ்ட கேட்டா கூட திருக்குறள படிக்க சொல்றாங்களா.??? ரொம்ப டெரர்ரான டீச்சரா இருப்பாரோ.???
//கமன்ட் என்ற பெயரில் ஒரு வழி பண்ணி விடுவார்கள்//
யாரது..?? நீங்க எழுதுங்க நான் பாத்துகிடுறன்.
// பிடிச்சா நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க.//
பிடிச்சிருக்கு.. ஆனா குறை இருக்கு.. அப்போ எப்படி நல்லதா நாலு சொல்றது.. குறைய சுட்டிகாட்டனும்ல(உடனே அதுவும் நல்லது தான்னு சொல்லுவீங்க.. டே கூர்.. உனக்கு இது தேவையா.?)
//ஒரு வரைமுறை இருக்கு.//
ப்ரேக் தி ரூல்ஸ்..
//பெண் அப்படி எழுதினா லூஸா இருக்கும் போல் என்று முடிவு கட்டி விடுவார்கள்.//
யாருப்பா அது..??? பெண்ணா இருந்தாலும் ஆணா இருந்தாலும் ஒன் கோ, ஒன் கம் தான்..
அதீஸ்,மகி... தொடர்பதிவு.. ம்ம்..
//நாஞ்சில் அங்கிள் //
வன்மையாக கண்டிக்கிறேன்.. உங்களை விட 50வயது பெரியவரை அங்கிள் என்று சொல்லாமல் தாத்தா என்று சொல்வதே சிறப்பு.. சரியா மனோ தாத்தா..
வானதி ஆரம்பத்திலே நீங்க பள்ளி ஆசிரிய,கல்லூரி விரிவுரையாளர்களிடம் கேட்டதைப்பார்த்துமே வானதியை கத்திரிகாயில் பஜ்ஜி,பொரியல்,சாம்பார்,கூட்டு,கோசுமல்லி.சூப்,வறுவல்,வதக்கல்,சாதம்,துகையல்,பச்சடி,ஏன் கடைசியா பாயசம் வைத்து புல் கட்டு கட்டிவிட்டு யோசியுங்க என்று பின்னூட்டம் போடணுனும் என்று நினைத்தேன்.ஆனால் கடைசியில் உங்கள் கருத்தை ரொம்ப அழகா சொல்லி நான் வானதியேதான் என்று நிருப்பிச்சிட்டீங்க வானதி.குட்.
ReplyDelete////நாஞ்சில் அங்கிள் //
ReplyDeleteவன்மையாக கண்டிக்கிறேன்.. உங்களை விட 50வயது பெரியவரை அங்கிள் என்று சொல்லாமல் தாத்தா என்று சொல்வதே சிறப்பு.. சரியா மனோ தாத்தா..//
அடபாவி விட்டால் பேரபிள்ளயையே கொண்டு வந்து கையில குடுத்துருவாரோ....
//அடபாவி விட்டால் பேரபிள்ளயையே கொண்டு வந்து கையில குடுத்துருவாரோ....//
ReplyDeleteஅதுக்கு தான் நான் இருக்கேன்ல.. உங்களுக்கு என்னைவிடவா பெரிய பேரன் வேணும்.. உங்க மகனோட பையனுக்கு அடுத்த மாசம் கல்யாணம்னு கேள்விபட்டேனே மும்பை வருவீங்களா தாத்தா..???
தைரியமா எழுதிகிட்டு வந்து கடைசியில ஏன் இந்த சறுக்கல்..???...!!! :-)))
ReplyDelete. உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, ஆய்த எழுத்து 1. எல்லாத்தையும் கூட்டி, கழிச்சு பார்த்தா 247 எழுத்துக்கள் தமிழில்.
ReplyDelete...same doubt! :-))))
நீங்க கூப்பிட்டத்துல ஒரு ஆள் தைரியமா எழுதுமுன்னு நினைக்கிறேன் பார்க்கலாம் :-))
ReplyDeleteஆனால், பெண் அப்படி எழுத முடியுமா? பெண் அப்படி எழுதினா லூஸா இருக்கும் போல் என்று முடிவு கட்டி விடுவார்கள்.
ReplyDelete....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...
பெண் எழுத்தாளர்களின் எழத்து என
ReplyDeleteமுதலில் துவக்கிவைத்தவர்கள்
குழப்பம் இல்லாமல் துவக்கி வைத்திருக்கலாமோ?
முன்பு பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் எல்லாம்
ஆண்களாய் இருந்ததைவிட இப்போது
பெண் மருத்துவர்கள் இருப்பது
ஆண் மருத்துவர்களை அந்தத் துறைவிட்டு ஓட வைத்ததைப்போல
பெண்கள் பிரச்சனை குறித்து ஆண்கள் எழுதியதைவிட
பெண் எழுத்தாள்ர்கள் எழுதத் துவங்கியவுடன்தான்
பிரச்சனைகளின் புதிய பரிணாமமே வெளிவரத்துவங்கியது
கதை உலகில் மட்டும் இல்லை பதிவுலகில் கூடத்தான்
நல்ல பதிவு
அடுத்து தொடர்பவர்களை எதிர்பார்த்து...
கடைசில நச்னு சொல்லிட்டீங்க...
ReplyDelete//நீங்க கூப்பிட்டத்துல ஒரு ஆள் தைரியமா எழுதுமுன்னு நினைக்கிறேன் பார்க்கலாம் :-)) //அந்த 'இன்னொரு' ஆளைத்தானே ஜெய் அண்ணா சொல்றீங்க? கரெக்ட்டுதான்.தைரியமா எழுதிருவாங்கன்னு நானும் நினைக்கிறேன்,பார்க்கலாம்! ;)
ReplyDeleteஆ... கடவுளே.. வான்ஸ்ஸ் டென்ஷனே இல்லாமல் படிச்சிட்டு வந்தேனா... கடேஏஏஏஏஏசில வச்சிட்டீங்களே ஆப்பூஊஊஊஊ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteஓக்கை நான் எழுதுறேன்... ஆனால் கொஞ்சம் டைம் எடுத்துத்தான் எழுதுவேன் ஓக்கைதானே..
வான்ஸ்ஸ் யெல்ப் மீ பிலீஸ்ஸ்ஸ் பெண் எழுத்து அப்பூடின்னா என்னாது?... அப்பாவியாக நான்..
ReplyDeleteவானதி உங்க பகிர்வு மிக்க சுவாரசியம்.அதிரா எழுதுங்க,அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்.
ReplyDelete//வான்ஸ்ஸ் யெல்ப் மீ பிலீஸ்ஸ்ஸ் பெண் எழுத்து அப்பூடின்னா என்னாது?... அப்பாவியாக நான்..//
ReplyDeleteகட்டிலுக்கு அடியிலிருந்து தலையையை வெளியே நீட்டாம குரல் குடுப்பது ஹி...ஹி....!!! இப்ப தைரியமா நீங்க எழுதுங்க துனைக்கு மயில் ...ஹா..ஹா..!!!((இப்ப சூப்பர் பிஸி போர்டையும் கானோம் ))
வானதி! உங்க ஆதங்கம் புரியறது! ஆனா நீங்க நினைக்கறமாதிரி பெண் எழுத்து அப்டீன்னு ஒண்ணே கெடையாது அப்டீங்கறதுதான் என்னோட கருத்து! இந்த பதிவுக்கு மிக நீளமான, விளக்க பதிவு என்னால் எழுத முடியும்!
ReplyDeleteநீங்க தொடர் பதிவுக்கு அடுத்து அழைத்திருப்பது இரண்டு பெண்பதிவர்கள் என்று நினைக்கிறேன்! இந்த விஷயத்தில் ஆண்களின் கருத்து என்னவாக இருக்கும் என்பதை அறிந்து பார்க்க்க உங்களுக்கு ஆசையில்லையா?
ஒன்று தெரியுமா? பெண்பதிவர்களுக்கு ஆதரவாக, குரல் தரக்கூட்டிய ஆண் பதிவர்கள் இந்த வலையுலகில் இருக்கிறார்கள்! அவர்களது ஆதரவை பெறுவது உங்களுக்குப் பலம்தானே! அதை ஏன் வேண்டாம் என்று மறுக்கிறீர்கள்!
உங்கள் கருத்துக்கு ஆதரவாக பத்து பெண்பதிவர்கள் குரல் கொடுப்பதற்கும், ஒரு ஆண் பதிவர் குரல் கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்க இல்லையா?
வானதி, ஒரு விஷயம், இன்று ப்ளாக் ல எழுதும் பெண் பதிவர்களுக்கு ஒருவித குழப்பம் இருப்பது உண்மை! சிலர் ப்ளாக் கே வேணாம்னு ஒதுங்கியும் சென்றுவிட்டார்கள்! இவர்களை தைரியம் கொடுத்து மீண்டும் அழைத்துவருபவர் யார்?
வலையுலகில் பெண்கள்
என்ன செய்யலாம்?
எப்படி செய்யலாம்?
பிரச்சனைகளை எப்படி எதிர்நோக்கலாம்?
இதில் பெண்களின் சுதந்திரம் எந்தளவுக்கு உள்ளது?
முட்டுக்கட்டை போடுபவர்களை எப்படி சமாளிக்கலாம் ?
இதுமாதிரி நிறைய ஐடியாக்கள் என்னிடம் உள்ளன! கேட்பதற்கு நீங்கள் தயார் என்றால் சொல்வதற்கு நானும் தயார்!
பார்க்கலாம்!!
நான் பொருத்து இருந்து பார்க்கிறேன் இப்போ ஒன்னும் புரியல :(
ReplyDeleteகூர்மதியான், திருக்குறள் ஏரியா ரொம்ப வீக். ஹிஹி...
ReplyDeleteஅடடா! குறையை சுட்டிக் காட்டுங்கப்பா. திருத்திக் கொள்கிறேன். ஆனா, ரவுன்டு கட்டி அடிக்க வேணாம் என்கிறேன்.
மிக்க நன்றி.
ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.
மனோ அங்கிள், சாக்கிரதையா இருங்க. எல்லோரும் மார்க்கமாவே அலையுறாங்க போல.
நிசமா மகனுக்கு கல்யாணமா?? நாஞ்சிலாரே யூத் போல இருக்கிறாரே???
ஜெய், சறுக்கலா?? யானைக்கும் அடி சறுக்கும் ( யானைன்னு சொன்னதும் ஜெய் பறந்துட்டார் ஹிஹி... )
நன்றி, ஜெய்.
சித்ரா, மிக்க நன்றி.
ReplyDeleteஜெய், நான் ( ஒரு முறை சுட்டுக் கொண்ட பிறகு ) யாரையும் தொடர்பதிவுக்கு அழைப்பது இல்லை.
இது தான் நான் மற்றவர்களை தொடர்பதிவுக்கு அழைக்கும் கடைசி தடவை.
ரமணி அண்ணா, உண்மை தான்.
மிக்க நன்றி.
அதீஸ், நீங்கள் எழுதுறேன் என்று சொன்னதே பெரிய சந்தோஷம். நேரம் கிடைக்கும் போது எழுதுங்கோ.
பெண் எழுத்து - பெண் எழுதணும். ஓக்கை.
நன்றி, அதீஸ்.
ஆசியா அக்கா, நன்றி.
மாத்தி யோசி, கடவுளே! நான் சொல்ல வந்த கருத்து வேறு. இதில் பிரச்சனைகளை உருவாக்குவதே பெரும்பாலும் ஆண்கள் தான்.
பெண் எழுத்து, ஆண் எழுத்து இரண்டும் ஒன்று தான். ஆனால், சொல்ல வந்த விடயத்தை நாசூக்காக சொல்வதில் இருபாலாருக்கும் வித்யாசங்கள் உண்டு.
பெரும்பாலனவர்கள் தொடர்பதிவுக்கு கூப்பிடும்போது ஓடி ஒளிகிறார்கள். நீங்கள் எழுதப் போறேன் என்று முன்வந்திருக்கிறீங்க. சந்தோஷம். கட்டாயம் நேரம் கிடைக்கும் போது எழுதுங்கோ.
மிக்க நன்றி.
இசை அன்பன், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteமொத்தத்ல பதிவு நல்லா இருக்கு. ஆனா ஒன்னுமே புரியவும் மாட்டேங்குது.இதுதான் பெண் எழுத்தோ?
ReplyDeleteவானதி .... Good.
ReplyDeleteவான்ஸ் ! உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் போடலைன்னாலும் படிச்சிட்டு தான் இருந்தேன். சூப்பர்... இப்படித்தான் எனக்கு நிஜவாழ்வில உங்க ரீச்சர் மாதிரி எனக்கும் பலர் பல விசயங்கள் சொல்லி இருக்காங்க..
ReplyDeleteஉங்க கருத்து என்னொட கண்ணோட்டத்துக்கும் உடன்பாடாக இருக்கு... ஐ.. சேம் பின்ச் :)
ஆண்கள் நினைச்ச உடனே, நினைச்சதை, எழுதிட்டு போயிடுவார்கள். பெண்கள் அப்படி எழுத முடியுமா?
ReplyDeleteஎதையாவது எசகு, பிசகா எழுதினா அவ்வளவு தான். //
வணக்கம் சகோதரி! உங்களின் இந்தக் கருத்துக்களுடனும், நீங்கள் பதிவில் சொல்லிய அனைத்துக் கருத்துக்களுடனும் உடன்படுகிறேன்.
தமிழில் இலக்கிய காலமாகிய சங்க காலங்களையும், அதனைத் தொடர்ந்து வந்த காலப்பகுதிகளிலும் இரண்டே இரண்டு பெண் எழுத்தாளர்களை தமிழிலக்கிய உலகம் முதன்மைப்படுத்தியிருக்கிறது.
ஆண்டாள்- இவர் நாச்சியார் திருமொழி பாடியவர்,
இவரினைக் கூட, இவரின் கண்ணன் மீதான ஒரு தலைக் காதல் உணர்வுகளைக் கூட எமது சமூகம் ஆணாதிக்க அடிப்படையில் தான் விமர்சித்தது, விமர்சித்து வருகிறது.
ஆண்டாளுக்கு பாலியல் உணர்வு அதிகம். ஆதலால் தான் அவர் தன் உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் என்று மட்டுமே எமது சமூகம் நோக்குகிறது. இதனைத் தான் இக் காலப் பெண்களுக்கு ஏற்படும் பெயர்கள் மூலமும் பதிவில் நீங்கள் விளக்கியிருக்கிறீர்கள்/ விளித்திருக்கிறீர்கள்.
பதிவினடிப்படையிலும், இன்றைய கால தமிழர்களின் அடிப்படையிலும் பார்க்கையிலும் அக்காலம் முதல், இந்தக் காலப் பகுதி வரை பெண்களை இத்தகைய பார்வையில் தான் எமது தமிழ்ச் சமூகம் நோக்குகிறது. ஆக மொத்தத்தில் எமது சமூகம் திருந்த வில்லை அல்லது மாறவேயில்லை என்றே கூறலாம்.
அடுத்த பெண் ‘காரைக்கால் அம்மையார்.
அவர் பாடியவை திருவிரட்டை மும்மணிக் கோவை, திருவிடை மருதூர் கோவை, அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம். முதலிய நூல்களாகும்.
அவரின் ஒரு பாடல் ‘இறவாத அன்பு வேண்டிற் பிறவாமை வேண்டும்
எனத் தொடங்கி...
’’அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருத்தல் வேண்டும்! என்று முடிகிறது.
இங்கே காரைக்கால் அம்மையாரைக் கூட இறைவனின் அடியின் கீழ் இருந்து ஏதோ பார்க்க நினைக்கிறார், அவருக்கு அமர் என்றே எமது சமூகம் விமர்சிக்கின்றது,
இத்தகைய விமர்சனங்களை இலக்கியக்கார பெண் எழுத்தாளர்கள் தொடக்கம் இன்றைய பெண் எழுத்தாளர்க்ளை வரை கண்டு கொள்ளலாம்.
தமிழ்ப் பெண் எழுத்து?
தலைப்பே இரண்டு பொருள் உணர்த்தி நிற்கிறது.
இன்றைய காலப் இலக்கிய உலகிலும் சரி, தமிழ் உலகிலும் சரி பெண்களின் பங்கு ஆணாதிக்கம், எனும் இலக்கிய விற்பனர்களினால் மிக மிக குறைவாக இருக்கின்றமையினை நாம் கண்டு கொள்ளலாம்.
ReplyDeleteபெண்கள் எதனை எழுதினாலும் சமூகம் அவர்களை வேறோர் கோணத்தில் பார்ப்பது இன்று வரை உள்ளது என்பதற்கு சகோதரியின் உதாரணங்களே போதுமானது.
‘வான்மழையில் நனைந்தால் பூக்கள் உருவாகும்!
வான் மழையில் நனைந்தால் பயிர்கள் உருவாகும்!(அந்நியன் ஐயங்கார வீட்டு அழகே பாடல்..)
என்று ஒரு ஆண் கவிஞர்(வைரமுத்து) எழுதினால் அது கவிதை. அதில் இலக்கிய நயம் பொருந்தியிருக்கிறது,
‘விஞ்ஞானக் கள்வன் நீ என்று கண்டும் உள்ளாடை நீரானதே...(ஆஞ்சநேயா படத்தில் வரும் வெண்ணிலா வெண்ணிலா...)
என்று ஒரு ஆண் மகன் எழுதும் போது அதனை கவிதை, நவீனத்துவம் என்று பாராட்டும் கவிஞர்கள்
தாமரை போன்ற பெண் கவிஞர்கள் ஒரு பாட்டை எழுதினால் எவ்வாறு விமர்சிக்கிறார்கள் எனும் ஒரு உதாரணமே போதும், சமூகத்தில் பெண் எழுத்திற்கு இருக்கும் அந்தஸ்தினை விளக்க...
‘சில சமயம் உன் உள்ளாடைக்குள் நான் வேண்டும்..(மின்னலே வசீகரா... பாடல்? இதனை எழுதியவர் பெண் கவிஞர் தாமரை.
இந்த உதாரணங்களே போதும் பெண் ஆணாதிக்கம் எனும் ஆண்களின் பார்வையினூடாக எப்படி விமர்சிக்கப்படுகிறாள், அல்லது நோக்கப்படுகிறாள் என்பது. அன்று முதல் இன்று வரை ஆண்கள் மாறவில்லை என்பதை ஒரு ஆண்மகனாக இருந்து சொல்லிக் கொள்வதில் வெட்கப்படுகிறேன் நான்.
இந்தப் பின்னூட்டங்களை சகோதரி சித்திரா, வானதி ஆகிய இருவரின் பதிவுகளும் ஒரே விடயத்தை விளக்கி நிற்பதால் இரு பதிவுகளுக்கும் என் விமர்சனங்களாக மாற்றி மாற்றி விட்டிருக்கிறேன்.
இணைய உலகில் டெம்பிளேட் பின்னூட்டங்களை தவிர்த்து, விமர்சனங்களை முன் வைக்க வேண்டும் எனும் காரணத்தால் நான் கொஞ்சம் லேட்!
தொடக்கத்தில் சுவாரசியமாக கொண்டு சென்று, ஆதங்கத்தில் வந்து முடிந்திருக்கிறது பதிவு. என் கருத்து என்று சொன்னா நாம சொல்றதை சொல்ல நினைப்பதை தெளிவா சொல்லிட்டு போயிட்டே இருக்கணும். ஆரம்பத்தில் பெண் எழுத்தை பற்றிய விமர்சனங்கள் வந்தாலும் போக போக நம் எழுத்தின் உறுதி விமர்சிப்பவர்களின் வாயை அடைத்துவிடும்.
ReplyDeleteஎன்னையும் இந்த பதிவு எழுத அழைத்திருக்கிறார்கள் வாணி, நேரம் கிடைக்காமல் அல்லாடிட்டு இருக்கிறேன். :)))
good vanathy
ReplyDelete//பெண் எழுதினா அது பெண் எழுத்தாம். பேய் எழுதினா அது பேய் எழுத்தாம்//
ReplyDeleteஇது ரெண்டத்தையும் சேத்தி சொன்னதுக்கு எதுனா காரணம் இருக்கானு உங்க ஆ.காரர் கிட்ட கேட்டீங்களா? சும்மா ஒரு டவுட்டு தான் யு சி... (நாராயண நாராயண...:))
//பதில் தெரியலைன்னா அதை வெளிப்படையா சொல்லணும்//
ஹா ஹா... என்னா ஒரு அறிவு அப்பவே... :)))
//இது அப்பாவி நான்//
ஹலோ...அப்பாவி நான் மட்டும் தான் மேடம்...:))
//பெண் அப்படி எழுதினா லூஸா இருக்கும் போல் என்று முடிவு கட்டி விடுவார்கள்//
நூத்துல ஒரு வார்த்தைப்பா...:((
வானதினா...வானதி தான்...பள்ளிகூடம், கல்லூரி என்று அழகாக எழுதி இருக்கிங்க..
ReplyDeleteவான்ஸ் சுவாரஸ்யமா எழுதிருக்கிற மாதிரி இருக்கு. பெண்எழுத்துப் பற்றி பெரியவர்கள் பேசும்போது நான் குறுக்கே வரக்கூடாது தான்.அவ்வவ்..
ReplyDeleteஇருந்தாலும் பிள்ளைகளை ஸ்கூல் கூட்டிப் போகும் போது ஆசிரியரிடம் கேட்டு தெரிஞ்சுக் கிட்டீங்களா? இல்லையா?? தொடர்பதிவை முனைப்பா எழுதுகிறவர்கள் எனது கணிப்புப்படி அதிகமா பெண்கள்தான். ஆகவே பெண்எழுத்து என்பது அது தானோ?? #டவுட்டு#
//Chitra said...
ReplyDeleteஆனால், பெண் அப்படி எழுத முடியுமா? பெண் அப்படி எழுதினா லூஸா இருக்கும் போல் என்று முடிவு கட்டி விடுவார்கள்.
....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...
//
சேம் பிளட்!!! :))
லஷ்மி ஆன்டி, நான் எழுதினது புரியவில்லையா?? அவ்வ்வ்
ReplyDeleteமிக்க நன்றி.
குமார், மிக்க நன்றி.
இலா, என் கருத்துக்களோடு உடன்படுறீங்களா. மிக்க நன்றி.
நிருபன், நிறைய சங்க இலக்கியங்கள் படிப்பீங்கள் போல இருக்கு.
நிறைய கருத்துக்கள் அழகா சொல்லி இருக்கிறீங்க.
திரைத்துறையில் பெண் கவிஞர்களின் கவிதைகள் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகிறது என்பது உண்மை.
மிக்க நன்றி, நிருபன்.
கௌஸ், உண்மை தான். எழுத வந்த கருத்தை தெளிவா, உறுதியா சொல்லிட்டா வேலை முடிஞ்சிடும்.
ReplyDeleteநேரம் கிடைக்கும் போது எழுதுங்க. படிக்க ஆவலா இருக்கு.
மிக்க நன்றி.
சரவணன், மிக்க நன்றி.
அப்பாவி, கேட்டு அவருக்கு தண்டனையும் குடுத்தாச்சு.
மிக்க நன்றி.
கீதா, நன்றி.
நாட்டாமை, இதில் ஏதோ உள்குத்து இருக்குமா?
பெரியவர்கள் - யாரை சொல்றீங்க???
ஆசிரியரிடம் கேட்டீங்களா? - நல்லா சொன்னீங்க போங்க? ஆசிரியர்கள் வெள்ளைக்காரர்கள்.
மிக்க நன்றி.
அன்னுக்கா, மிக்க நன்றி.
வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரவே... டைட்டில் பூக்கள் ரொம்ப அழகாக இருக்கின்றன வான்ஸ்..
ReplyDelete//எனக்கு தோன்றுவதை நான் எழுதுகிறேன். பிடிச்சா நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க. பிடிக்காவிட்டால் விட்டுட்டு போகலாம்.//
குட்.. ME TOO..
ம்ஹூம்.. இதைப் படித்தும் ஒண்டும் புரியல.. இது எதைப் பற்றிய தொடர் பதிவு என்றே.. :)