குமாருக்கு வாழ்க்கையே வெறுத்து விடுமளவிற்கு விரக்தியாக இருந்தது. எப்படி இதிலிருந்து தப்பலாம் என்று பலவாறாக யோசனை செய்தான்.
அப்பா, அம்மா இருவரும் இவனைக் கட்டாயம் கட்ட சொல்லி ஒரே தொல்லை. இவனுக்கு மட்டும் அவர்களின் விருப்பத்தினை நிறைவேற்ற ஆசை தான். ஆனால், சிறு வயதில் நேர்ந்த கசப்பான அனுபவம் இன்னும் நினைவில் நின்றது.சிறுவயதில் தவறு விடுவது இயல்பு தானே. இப்பவும் அதையே நினைக்காமல் கட்டுப்பா என்று அப்பா மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார்.
ஆங்! இவருக்கென்ன இலேசா சொல்லிட்டுப் போயிடுவார். அதைக் கட்டிக் கிட்டு, இந்த நாட்டில் எப்படி காரில் ஏறி, இறங்கி, போகும் இடம் எல்லாம் எல்லோரும் பார்ப்பார்களே.
இதற்கு ஆயிரம் விளக்கம் சொல்லித் தொலைக்க வேண்டும்.
ஏதோ ஒரு படத்தில் லைலா பொண்ணு பார்க்கும் நாள் அன்று வீட்டிற்கு வராமல் பஸ்ஸில் ஏறி எங்கோ போய்க் கொண்டே இருப்பாரே அது போல செய்யலாம் என்று நினைத்தான்.
நீ மட்டும் கல்யாணத்தன்று சொதப்பலா ஏதாச்சும் செய்தே அவ்வளவு தான் நீ எனக்கு மகன் இல்லை என்று அப்பா மிரட்டலோ அல்லது கெஞ்சலோ என்று இனங்காண முடியாத குரலில் எச்சரிக்கை விடுத்தார்.
சொந்தங்கள் வேறு தொலைபேசியில், என்னப்பா! இப்படிப் பண்ணிட்டே. நீ கட்டலைன்னா வேறு யார் கட்டுவா என்று ஒரு நாளைக்கு குறைஞ்சது 2 தொலைபேசி அழைப்புகள்.
அப்பா! உங்களுக்காக இதைக் கட்டித் தொலைக்கிறேன். ஆனா கல்யாணம் முடிஞ்சதும் இதைக் கழட்டி விட்டுட்டு தான் மறு வேலை. சரியா?, என்று சொன்ன மகனை சந்தோஷத்துடன் பார்த்தார் அப்பா.
அம்மா ஒரு பெட்டியை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தார். பெட்டியில் அழகிய பட்டு வேஷ்டி குமாரைப் பார்த்து கதைகள் சொன்னது.
அம்மா, என்ன இது நான் வேஷ்டி கட்டுறேன் என்று சொன்னதும் மறதியா உங்கள் புடவையை கொண்டு வந்திட்டீங்களா? என்று கேட்டவனை தாய் செல்லமாக முறைத்தார். இல்லைப்பா அதான் நீ கட்டப் போற பட்டு வேஷ்டி. மாப்பிளைக்கும் இது போல் பட்டு வேஷ்டி, தோழன் உனக்கும் பட்டு வேஷ்டி தான் என்று சொல்லிவிட்டு, சமையல் அறையில் போய் மறைந்து கொண்டார்.
" அப்பா, இந்த வேஷ்டி குறைஞ்சது 5 கிலோ இருக்குமா?", என்றான்.
" டேய்! நீ சிங்கம்டா. 5 என்ன 50 கிலோவும் தூக்கும் உடல் வலிமை உனக்கு இருக்கு ராசா ", என்றார்.
அன்று முழுவதும் இவனுக்கு தூக்கமே வரவில்லை. இதை எப்படி இடுப்பில் இறுக்கமா கட்டுவது என்று யோசனை ஓடியது.
பெல்ட் அல்லது இறுக்கமா கயிறு கட்டினால் விழவே விழாது என்று அப்பா ஆறுதல் சொன்னார்.
ஒவ்வொரு நாளும் வேலையால் வந்ததும் வேஷ்டி கட்டிக் கொண்டு வேகமாக நடந்து பழகினான்.
நாளடைவில் வேஷ்டி கட்டிக் கொண்டு ஓடினான், தாவினான். இப்படி பலதும் செய்யும் அளவுக்கு தேர்ச்சி பெற்று விட்டான். தமிழ் ஹீரோக்கள் போல இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு வேகமாக நடந்து பார்த்தான். வேஷ்டி மிகவும் பிடித்துக் கொண்டது.
தங்கையின் திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்தது. ஒரு நாள் வேலையால் வந்தபோது தங்கை கண்களை கசக்கியபடி இருந்தாள். அவள் வருங்கால கணவர் வேஷ்டி கட்டமாட்டேன் என்று சொல்லி விட்டாராம். இவன் வேஷ்டியின் மகிமைகள் பற்றி எவ்வளவோ எடுத்து சொல்லியும் மாப்பிள்ளை கேட்டபாடு இல்லை. நான் திருமணத்திற்கு வரவே போவதில்லை என்று கண்டிப்பா சொல்லிவிட்டாராம்.
ஏதோ ஒரு வட இந்தியன் கடையில் போய் குர்தாவோ ஏதோ ஒரு வாயில் நுழையாத ஆடை வாடகைக்கு எடுத்து, அதற்கு பொருத்தமா தலைப்பாவும் கொடுத்தார் கடைக்காரன். விடிந்தால் கல்யாணம். குமாரின் பெரிய மண்டைக்கு தலைப்பா நுழையவே இல்லை. மாப்பிள்ளை எப்படியோ உள்ளே தலையை நுழைத்துக் கொண்டார். குமாருக்கு அழுகை வந்தது. தங்கை மேல் எவ்வளவு பாசம் இருந்தா இப்படி கவலைப்பட்டு கண் கலங்கி அழுவான் என்று பக்கத்தில் இருந்தவர் யாரோ சொன்னார். தலைப்பா விழா வண்ணம் ஒரு கையினால் பிடித்தபடி அந்த ஆளை அறையலாமா என்பது போல முறைத்து பார்த்தான்.
கெட்டி மேளம் முழங்க தங்கையின் கழுத்தில் தாலி ஏறியது. குமார் நிம்மதி பெருமூச்சு விட்டபடி, தலைப்பாவை எடுத்து கக்கத்தில் செருகியபடி, அறையினை நோக்கி ஓடினான்.
ஐ ஐ ஐ எனக்குத் தான் சுடு சோறு...
ReplyDeleteஃஃஃஃஅவள் வருங்கால கணவர் வேஷ்டி கட்டமாட்டேன் என்று சொல்லி விட்டாராம்.ஃஃஃஃ
ReplyDeleteஹ...ஹ... அவருக்கும் கொடியிடையோ... பாவமுங்க..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...
அப்பா! உங்களுக்காக இதைக் கட்டித் தொலைக்கிறேன். ஆனா கல்யாணம் முடிஞ்சதும் இதைக் கழட்டி விட்டுட்டு தான் மறு வேலை. சரியா?, என்று சொன்ன மகனை சந்தோஷத்துடன் பார்த்தார் அப்பா//
ReplyDeleteசிலேடை வசனம், ரசித்தேன்.
அவஸ்தை.. அருமையான உரை நடையில் அழகாக நகர்ந்து செல்கிறது.
எமது பாரம்பரிய உடைக்கு இருக்கும் மகத்துவத்தையும், அதனை இளையோர்கள்(நாங்கள்) இக் காலத்தில் ஏளனம் செய்து அவோயிட் பண்ணும் முறையினையும் உங்களின் சிறுகதை அழகாகச் சொல்லியிருக்கிறது.
ReplyDeleteஅவஸ்தை.. சமூகத்தின் வரம்புகளை வேண்டியோ, வேண்டாமலோ மீறத் துடிக்கும் மனங்களையும், கலாச்சார உடையின் முக்கியத்துவத்தினையும் பிரதிபலித்து நிற்கிறது.
நிஜமாகவே பெரிய அவஸ்தை தான் வானதி.வேஸ்டி போய் குர்தா வந்தது டும் டும் டும்..
ReplyDeleteநல்ல கதை,தங்கைக்காக அண்ணனின் அவஸ்தையை எழுதிய விதம் அருமை.
அவரவர் அவஸ்தை அவரவர்க்கு..... :-)))))
ReplyDelete//ஒவ்வொரு நாளும் வேலையால் வந்ததும் வேஷ்டி கட்டிக் கொண்டு வேகமாக நடந்து பழகினான்.
ReplyDeleteநாளடைவில் வேஷ்டி கட்டிக் கொண்டு ஓடினான், தாவினான். இப்படி பலதும் செய்யும் அளவுக்கு தேர்ச்சி பெற்று விட்டான். தமிழ் ஹீரோக்கள் போல இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு வேகமான நடந்து பார்த்தான். வேஷ்டி மிகவும் பிடித்துக் கொண்டது.//
நானும் எவ்வளவோ நாள் வேஷ்டி கட்டி பாக்குறேன் இடுப்புல நிக்க மாட்டேங்குது அவ்வ்வ்வ்வ்...
சிறு கதை சூப்பரா இருக்கு....
ReplyDelete;)))))))))) ரசித்தேன்.
ReplyDeleteஇப்போ டொமார் எங்க போயிட்டார்?:)
ReplyDeleteவேஷ்டி எனக்கு மிகவும் பிடித்த உடை..
ReplyDeleteபெரும்பாலும் ஆபிஸ்க்கு போகாத நேரத்திலும் சரி, மற்ற இடங்களுக்கு செல்லும்போதும், ஏதாவது விசேசம் என்றாலும் எப்போதும் வேட்டி தான்..
நல்ல கதை ரசித்தேன்..
ReplyDeleteமிக வேதனையான விஷயம் இது. ஒரு வேஷ்டி கட்டக் கற்றுக் கொள்வதில் தவேறென்ன ? அதை விட்டு, பெர்முடாஸ், லுங்கி :(
ReplyDeleteவேஷ்டி கட்டுனா வர்ற கெத்தே தனி தான்.. ;)
ReplyDeletevery nice write up dear. I enjoyed.
ReplyDeleteviji
Ha ha ha... a similar episode happened recently... kodumai thaan vanathy...:))
ReplyDeleteஹெ ஹெ ஹெ... ஒறம்பரை வராங்கன்னு அவசர அவசரமா பிரியாணி செஞ்சா தயிர் சாதம் இல்லையான்னு கேப்பாங்களே சில சமயம் அது மாதிரி.... ஹெ ஹெ ஹெ..//
ReplyDelete//" டேய்! நீ சிங்கம்டா. 5 என்ன 50 கிலோவும் தூக்கும் உடல் வலிமை உனக்கு இருக்கு ராசா ", என்றார்.//
ReplyDeleteஇப்படி சொல்லி சொல்லியே எல்லாரையும் கவுத்திடறாங்கப்பா!! ஹி ஹி ஹி
:))))))))) நல்ல அவஸ்தை வானதி! கொஞ்சநாட்கள் போனா புடவைக்கும் இதேகதிதான்.(இப்பவே பலபெண்கள் புடவையா..நோ-நோங்கறாங்க!)
ReplyDelete//ஒறம்பரை வராங்கன்னு அவசர அவசரமா பிரியாணி செஞ்சா தயிர் சாதம் இல்லையான்னு கேப்பாங்களே சில சமயம் அது மாதிரி....//ஹஹ்ஹா!நல்ல ஒப்பீடுங்க அன்னு! :)))))))))))
சிலேடையாக ஆரம்பத்தில் எழுதி இருப்பது நல்லா இருக்கு வான்ஸ் அக்கா. ஏனோ வானதி அக்கா, வான்ஸ் அக்கா என்று எல்லாம் எழுதும் போது வானரமும் ஞாபகத்திற்கு வருகிறது. ஹா ஹா ஹா ஹா.
ReplyDeleteபட்டு வேஷ்டி எனக்குப் பிடிப்பதில்லை. ஆனால், ஆண்கள் ஆந்திரா வேட்டி (இரண்டு கலர் போடர் இருக்குமே. நாலு முழத்திற்கு பச்சையும் அடுத்த நாலு முழத்திற்கு மரூனும் போடராகப் போட்ட காட்டன் வேட்டி) உம் பிரின்ட் போடாத பிளைன் அடர் நிற கொட்டன் சேட்டும் மிகவும் அழகாக இருக்கும். இதெல்லாம் சொன்னாலும் இவர்களுக்குப் புரிவதில்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
குர்த்தா எல்லா ஆண்களுக்கும் நல்லா இருக்காது. அது புரியாமல் போட்டுட்டு இவர்கள் வரும் போது பார்க்கும் கொடுமையை என்னவென்று சொல்லுவேன். எனக்கு பிடிச்சிருக்கு என்று போட்டுட்டு வருவார்கள். அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் கொடுமை எப்படி என்று எங்களுக்கல்லவா தெரியும்.
எல்லா அளவும் திருத்தமாக இருக்கவேண்டும். அதை விட, தட்டையான வயிறு, பொருத்தமான நிறம் என்று நிறைய இருக்கிறது. ஆனானப்பட்ட (ஹி)ரித்திக் ரோஷனுக்கே குர்த்தா நல்லா இருக்காது. இதில மற்றவர்கள் போட்டால் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் பார்ப்போம். கொடுமையோ கொடுமை. ( ஷாருக்கானுக்கு குர்த்தா பொருந்துவது போல யாருக்கும் பொருந்துவதில்லை. )
//athira said...
ReplyDeleteஇப்போ டொமார் எங்க போயிட்டார்?:) //
அவர்தான் வளர்ந்துட்டார் போலிருக்கு :-))))
ஐயோ...என் தம்பி திருமணத்திலும் இதே அவஸ்தை தான் வாணி...அவன் தாலி கட்டுற டென்ஷன் விட வேஷ்டி அவுந்திருமோனு எங்க டென்ஷன் தான் ஜாஸ்தி...அவன் செம ஒல்லிபிச்சான் வேற...செம காமடி அன்னைக்கு....
ReplyDeleteநல்ல கதை! நிறைய பேரோட அனுபவமா இருக்கும்!
ReplyDelete//ஒவ்வொரு நாளும் வேலையால் வந்ததும் வேஷ்டி கட்டிக் கொண்டு வேகமாக நடந்து பழகினான்.
ReplyDeleteநாளடைவில் வேஷ்டி கட்டிக் கொண்டு ஓடினான், தாவினான். இப்படி பலதும் செய்யும் அளவுக்கு தேர்ச்சி பெற்று விட்டான். தமிழ் ஹீரோக்கள் போல இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு வேகமாக நடந்து பார்த்தான். வேஷ்டி மிகவும் பிடித்துக் கொண்டது.//
கடவுளே.... ஒரு வேட்டி கட்ட இத்தன முன்னேற்பாடா :))))) அதுவும் தங்கச்சி கல்யானத்துக்காகவா :) நல்லாருக்கு வான்ஸ் :)
சுதா, மிக்க நன்றி.
ReplyDeleteநிருபன், பொறுமையா விமர்சனம் போடுறீங்க.
கலாச்சாரம் என்பதே இல்லாமல் போய் விடும் போல இருக்கே. இதில் உடை பற்றி யார் கவலைப்பட போகிறா.
மிக்க நன்றி.
ஆசியா அக்கா, மிக்க நன்றி.
சித்ரா, மிக்க நன்றி.
மனோ, பெல்ட் போட்டு கட்டுங்க.
மிக்க நன்றி.
இமா, நன்றி.
அதீஸ், டொமார் இங்கன தான் நின்றார். காணவில்லை.
ReplyDeleteநீங்க அவரை இன்னும் மறக்கவில்லையா????
மிக்க நன்றி.
தம்பி கூர்மதியான், சிலருக்கு வேட்டி மிகவும் பிடித்த உடை. சிலருக்கு கண்டாலே வெறுப்பு.
மிக்க நன்றி.
மேனகா, மிக்க நன்றி.
கார்த்திக், மிக்க நன்றி.
பாலாஜி, உண்மை தான்.
மிக்க நன்றி.
விஜி, மிக்க நன்றி.
அன்னு, ஹாஹா...
ReplyDeleteஏதாச்சும் சொல்லி வேலையை முடிக்கணும் இல்லையா?
மிக்க நன்றி.
மகி, புடவைக்கும் இதே கதி தான்.
ஹிஹி... எனக்கும் புடவையை கண்டாலே அலர்ஜி.
நிறைய பட்டு சேலைகள் இருக்கு. வருடத்தில் ஒரு நாள் கட்டினாலே பெரிய அதிசயம்.
போன வருடம் கட்டிய போது என் ஆ.காரர் இனிமேல் அடிக்கடி கட்டும்படி சொன்னார்.
மிக்க நன்றி.
அனாமிகா, பழசை மறக்காம இருக்கணும் அதுக்காக எப்போதும் வானரங்களை நினைச்சுட்டு இருக்கப்படாது.
ReplyDeleteஎன்ன இது? ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் என்று புலம்பிட்டு? இவங்கெல்லாம் யாரு?
சரி டென்ஷன் ஆவாதிங்க!!! சினிமா நடிகர்கள் மீது பெரிய ஈர்ப்பு இல்லை. அவர்கள் போடும் ட்ரெஸ்களை கவனித்து பார்த்ததுமில்லை.
மிக்க நன்றி.
ஜெய், உங்களுக்கும் டொமார் தெரியுமா??
மிக்க நன்றி.
சுகந்தி, மிக்க நன்றி.
சந்தூ, மானம் போனா வராது அல்லவா. அது அவன் கல்யாணமா இருந்தா என்ன? தங்கை கல்யாணமா இருந்தா என்ன?
மிக்க நன்றி.
நல்ல படைப்பு
ReplyDeleteரசித்துப் படித்தேன்
தொடர வாழ்த்துக்கள்����
:) enakkum waste kaatta theriathu...
ReplyDeleteநல்ல யதார்த்தமான கதை
ReplyDeletei like it.
//மானம் போனா வராது அல்லவா. அது அவன் கல்யாணமா இருந்தா என்ன? தங்கை கல்யாணமா இருந்தா என்ன?//
ReplyDeleteதங்கை கல்யாணத்தில்தான் ரொம்பக் கவனமா இருக்கணும். ஏன்னா, அதுதான் ‘மார்க்கெட்டிங்’ டைம்!! ;-)))))