Saturday, February 27, 2010
கூஸ் கூஸ் பொங்கல்
தேவையான பொருட்கள்:
(இஸ்ரேலி)கூஸ்கூஸ் -1/2 கப்
பாஸ்மதி அரிசி -1/2 கப்
பால் - 1/2 - 3/4 கப்
வெல்லம் - 6 oz
முந்திரி வற்றல் -சிறிது
ஏலக்காய் - 4
நெய் அல்லது பட்டர் -1 டேபிள்ஸ்பூன்
முந்திரிப் பருப்பை லேசாக நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
அரிசி, கூஸ்கூஸ் இரண்டையும் கழுவி, தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்.
ஏலக்காய் சேர்க்கவும்.
அரிசி, கூஸ்கூஸ் வெந்ததும் வெல்லம் சேர்க்கவும்.
வெல்லம் கரைந்ததும் பால் சேர்க்கவும்.
இறுதியில் விரும்பினால் நெய்/பட்டர் சேர்த்து, முந்திரி பருப்பு சேர்க்கவும்.
சுவையான பொங்கல் தயார்.
குறிப்பு:
இஸ்ரேலி குஸ்குஸ் என்பது கொஞ்சம் பெரிதாக உளுந்து போல இருக்கும். பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பருப்புக் குழம்பு இதற்கு ஏற்ற சைட்டிஷ்.
முட்டைச் சொதி
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
வெங்காயம் - கொஞ்சம்( 4 டேபிள்ஸ்பூன்)
உருளைகிழங்கு - பாதி
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தேங்காய் பூ - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் - சிறிது
பச்சை மிளகாய் - 10
உப்பு
தாளிக்க:
வெங்காயம் - கொஞ்சம்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
தேங்காய் துருவலை 11/2 கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.வடி தட்டில் வடித்து வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக அரிந்து வைக்கவும்.
மிளகாயை வெட்டி வைக்கவும். உருளை கிழங்கை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வைக்கவும்.
சட்டியில் மிளகாய், வெங்காயம், வெந்தயம், உருளைக்கிழங்கு, உப்பு எல்லாவற்றையும் போட்டு 1 1/2 கப் தண்ணீர் விட்டு மூடி அவிக்கவும்.
கிழங்கு நன்கு வெந்ததும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
2 நிமிடங்கள் அவிக்கவும்.
இப்போது தேங்காய் பால் சேர்க்கவும். பால் சேர்த்த பிறகு மூடியால் மூட வேண்டாம்.
பால் நன்கு கொதித்ததும் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றவும்.
முட்டைகளை சேர்த்த பிறகு கரண்டியால் கிளறுவதை தவிர்க்கவும்.
மூடியால் இடைவெளி விட்டு மூடவும். நல்ல டைட்டாக மூடினால் பால் பொங்கி ஊத்தும்.
10 நிமிடங்களின்(முட்டைகள் வெந்த பிறகு) பிறகு தாளித்து வைத்துள்ளதை கொட்டி இறக்கவும்.
இது இடியாப்பத்திற்கு மிகவும் சுவையான சைட் டிஷ்.
சிறிது ஆறியதும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
குறிப்பு: முட்டை விரும்பாதவர்கள் கத்தரிக்காயை மெல்லிய வட்டமாக நறுக்கி, லேசாக எண்ணெயில் பொரித்து, சொதியில் சேர்க்கலாம். முட்டைகளை அவித்து துண்டுகளாக வெட்டியும் சேர்க்கலாம். முட்டைகளை சேர்த்த பிறகு கண்டிப்பாக கரண்டியால் கிளறக்கூடாது. 10 நிமிடங்கள் முட்டைச் சொதி அடுப்பில் இருக்கு என்பதை மறந்து விட வேண்டும். நான் எப்போது தேங்காய் பால், Evaporated milk மிக்ஸ் பண்ணி செய்வேன். விரும்பினால் தேங்காய் பால் அல்லது Evaporated milk மட்டும் பாவித்து செய்யலாம்.
Thursday, February 25, 2010
இடியப்பம்
தேவையான பொருட்கள்:
அரிசி மா -3 கப்
அவித்த மைதா மா- 1/2 கப்
உப்பு -சிறிது
அரிசி மா, மைதா மா இரண்டையும் கலந்து கொள்ளவும். உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
சட்டியில் தண்ணீர் கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் சிம்மரில் விடவும்.
மாக் கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி மரக்கரண்டியால் குழைக்கவும். பந்து போல் திரண்டு வர வேண்டும்.
மாவை எடுத்து இடியப்ப உரலில் போட்டு, இடியப்ப தட்டில் பிழிந்து கொள்ளவும். இட்லிப் பானையில் தண்ணீரை கொதிக்க வைத்து இடியப்பங்களை வேக வைத்து( 10 நிமிடங்கள் வேக வைக்கவும்)எடுக்கவும்.சுவையான இடியப்பம் தயார். முட்டைச் சொதி, கறி வகைகள், பூண்டு மிளகு சொதி இதற்கு ஏற்ற சைட் டிஷ்.
குறிப்பு:
மா கட்டியில்லாமல் இருக்க வேண்டும்.
நான் மேற்சொன்ன அளவில் 35 இடியப்பங்கள் செய்யலாம்.
ஒரு செட் இடியப்பம் (12 இடியப்பங்கள்)ஸ்டீம் செய்ய 10 நிமிடங்கள் பிடிக்கும்.
குழந்தகளுக்கு பசும் பாலும், சீனியும் சேர்த்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
Wednesday, February 24, 2010
மைசூர் பருப்புக் குழம்பு
தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு - 3/4 கப்
வெங்காயம் -பாதி
மிளகாய்த் தூள் -1 1/2 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 5 பல்
கொத்தமல்லி தழை- சிறிது
நெய் - 1 டீஸ்பூன்(விரும்பிய அளவு)
வெந்தயம் சோம்பு பவுடர் -1/2 டீஸ்பூன்
உப்பு
தாளிக்க:
கடுகு, சின்னசீரகம், பெரிய சீரகம் -தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம்
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
பருப்புடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 டேபிள்ஸ்பூன், பொடியாக வெட்டிய பூண்டு, உப்பு சேர்த்து, பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அவிய விடவும்.
அடி கனமான சட்டியில் எண்ணெய் விட்டு கொஞ்சம் வெங்காயம் சேர்த்து 1 நிமிடத்தில் மிளகாய்த்தூள் சேர்த்து, பச்சை வாசனை போனதும் இறக்கி பருப்பு கலவையில் கொட்டி நன்கு அவிய விடவும்.
மசாலா வாசனை போய் பருப்பு நன்கு வெந்ததும் சோம்பு வெந்தயம் பவுடர், தாளித்தது, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சூடாக இருக்கும் போதே( விரும்பினால்) நெய் விட்டு ரைஸ், சப்பாத்தி உடன் பரிமாறவும்.
கத்தரிக்காய் சம்பல்
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 2
வெங்காயம் - பாதி
பூண்டு - 3 பல்
தயிர்- 1/3 கப்பிற்கு குறைவாக
எலுமிச்சம் புளி - 1 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு
அவனை(oven) 375F க்கு முற்சூடு பண்ணவும்.
ஆலிவ் எண்ணெய் எடுத்து, கத்திரிக்காய்கள் , பூண்டு, வெங்காயத்தின் மேல் நன்கு பூசவும். இதை அவனில் 30 நிமிடங்கள் வைக்கவும். 30 நிமிடங்களின் பிறகு பூண்டு, வெங்காயத்தை எடுத்து விட்டு, கத்திரிக்காய்களை திருப்பி போட்டு மேலும் 20-30 நிமிடங்கள் பேக்(Bake) செய்யவும்.
இப்போது கத்திரிக்காய்களை வெளியே எடுத்து சூடு ஆறிய பிறகு தோலை நீக்கவும்(தோல் தானகவே பிரிந்து வரும்).
பிறகு ஃபுட் புராஸ்ஸரில்(food processor) கத்திரிக்காய்கள், பூண்டு, வெங்காயம் போட்டு மெதுவாக அரைக்கவும். பிறகு தயிர் சேர்த்து அரைக்கவும்
ஒரு சட்டியில் கொட்டி உப்பு, எலுமிச்சம் புளி சேர்க்கவும்.
சுவையான கத்திரிக்காய் சம்பல் தயார்.
இது ரைஸ், பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ்.
இதுவும் வெந்தயம் வெங்காயம் குழம்பும் நல்ல காம்பினேஷன்.
Monday, February 22, 2010
கீரை கடையல்
தேவையான பொருட்கள்:
ஸ்பினாச் கீரை - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 7
மிளகாய் - 5
பூண்டு - 2 பல்
தயிர் - 5 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம் புளி - 1 டேபிள்ஸ்பூன் உப்பு
செய்முறை:
வெங்காயத்தை சுத்தம் செய்து, நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். ஸ்பினாச் கீரையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
சட்டியை சூடாக்கி, எண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும் வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு மெதுவாக வதக்கவும்.
பிறகு, கீரையை சேர்க்கவும்.
கீரையை அதிக நேரம் சமைக்காமல் எடுக்கவும்.
எடுத்து ஆற வைக்கவும்.
பூண்டு, மிளகாய் மட்டும் தனியாக எடுத்து, புட் பிராஸ்ரில் மெதுவாக அரைக்கவும்.
பிறகு, கீரை சேர்க்கவும். மெதுவாக அரைக்கவும்.
சட்டியில் கொட்டி தயிர், உப்பு, புளி சேர்க்கவும்.
குறிப்பு: காரம், புளி அதிகம் விரும்புபவர்கள் மிளகாய், புளியின் அளவை கூட்டி செய்யலாம்.
சுவையான கீரை கடையல் தயார். சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குரக்கன்(Millet flour) வாழைப்பழ தோசை
தேவையான பொருட்கள்:
குரக்கன் மா - 3/4 கப்
மைதா மா -1/4 கப்
பால் - 3/4 கப்
சீனி -1/2 கப்
வாழைப்பழம் - ஒன்று
உப்பு -1 பின்ஞ்
பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்
வாழைப்பழத்தை நன்கு கரண்டியால் மசித்துக் கொள்ளவும். சீனி, பால், உப்பு சேர்த்து கரைக்கவும். இறுதியில் மா வகைகள் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் பூசி, மாவை ஊற்றி பரவி விடவும். மேலே சிறிது பட்டர் விட்டு மொறுகலாக சுட்டு எடுக்கவும்.
இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாகும்.
குறிப்பு:
டயட்டில் இருப்பவர்கள் பால், சீனி அளவை குறைத்து செய்யலாம்.
Sunday, February 21, 2010
பார்லி கஞ்சி
தேவையான பொருட்கள்:
பார்லி -1/2 கப்
பால் -1/4 கப்
சீனி - விரும்பிய அளவு
உப்பு -சிறிது
பார்லியை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். சட்டியில் பார்லியை போட்டு, குறைந்தது 2 கப் தண்ணீர் விட்டு நன்கு அவிக்கவும். பார்லி வெந்ததும் ஒரு டம்ளரில் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். பார்லி தண்ணீர் சிறிது, பால், சீனி, உப்பு சேர்த்து கலக்கி குடிக்கவும்.
பார்லி உடம்பிற்கு மிகவும் சத்தானது. டயட்டில் இருப்பவர்கள் பாலின் அளவு, சீனியின் அளவை குறைத்து சாப்பிடலாம். எங்கள் வீட்டில் நான் அடிக்கடி செய்யும் எல்லோருக்கும் விருப்பமான கஞ்சி இதுவாகும்.
Milk Toffee
Ingredients
Sweetened condensed milk – 14 oz
Sugar – 9 oz
Nutmeg – 1/8 teaspoon
Cashew (unsalted) – 1/8 cup
Butter - 1 tablespoon
Water – 1/4 cup
Instructions
Put the cashew in a food processor/ coffee grinder and give a spin. Cashew must be a combination of chunks and coarse pieces.
Take a 2-1/2 quart non-stick pan.
First, add sugar and water into the pan.
After sugar has been dissolved, add condensed milk.
After adding the condensed milk, you must stir this mixture continuously with a wooden spoon. Now, add the nutmeg.
After 20 minutes, add cashew and continue stirring.
Then, add butter. At one point, this mixture will come together (it won’t stick together to the sides).
Take it off the heat and pour this into a tray (spray cooking oil or apply butter to the tray before pouring the mixture).
After 2 minutes, make wedges.
Let it cool for another 2 minutes.
To make wedges, you must cut through the same line again and again for 3 or 4 times. Set this aside for 2 hours.
After it has completely cooled, it (milk toffee) will come apart. Bon appétit!
இந்த ரெசிப்பி என் கணவரின் அலுவலகத்தில் மிகவும் பிரபலமான ஒன்று. ஒரு முறை அவரின் co-workerக்கு கொடுப்பதற்கு நான் எழுதிய ரெசிப்பி.
Subscribe to:
Posts (Atom)