தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு - 3/4 கப்
வெங்காயம் -பாதி
மிளகாய்த் தூள் -1 1/2 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 5 பல்
கொத்தமல்லி தழை- சிறிது
நெய் - 1 டீஸ்பூன்(விரும்பிய அளவு)
வெந்தயம் சோம்பு பவுடர் -1/2 டீஸ்பூன்
உப்பு
தாளிக்க:
கடுகு, சின்னசீரகம், பெரிய சீரகம் -தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம்
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
பருப்புடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 டேபிள்ஸ்பூன், பொடியாக வெட்டிய பூண்டு, உப்பு சேர்த்து, பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அவிய விடவும்.
அடி கனமான சட்டியில் எண்ணெய் விட்டு கொஞ்சம் வெங்காயம் சேர்த்து 1 நிமிடத்தில் மிளகாய்த்தூள் சேர்த்து, பச்சை வாசனை போனதும் இறக்கி பருப்பு கலவையில் கொட்டி நன்கு அவிய விடவும்.
மசாலா வாசனை போய் பருப்பு நன்கு வெந்ததும் சோம்பு வெந்தயம் பவுடர், தாளித்தது, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சூடாக இருக்கும் போதே( விரும்பினால்) நெய் விட்டு ரைஸ், சப்பாத்தி உடன் பரிமாறவும்.
பிரமாதமான கொழம்பு ..... நன்றி
ReplyDeleteHi Annamalayan, thanks 4 your comment.
ReplyDeleteகுழம்பு நல்லாருக்கு..குழம்பை கலக்கும் குட்டிக் கை இன்னும் அழகா இருக்கு!! :D
ReplyDeleteகுழம்பு நல்லாருக்கு..
ReplyDeleteMahee... this is the second time.
ReplyDeletenaan poda ninaikkirathai eppadi enakku munnaala vanthu sollalaammmm!!! :)
Thanks, Mahi, Piraba & Imma. That's "S" hand.
ReplyDeleteஅதுக்கென்ன செய்ய இமா? நானும் வானதியும் ஒரே நாட்டுல இருக்கோம்..நீங்க கொஞ்சம் தள்ளி வேற காண்டினென்ட்ல இருக்கிங்க..
ReplyDeleteசரி, நெக்ஸ்ட் டைம் உங்களுக்கப்புரம் கமென்ட் போடறேன் நானு.:)))
மகி, இமா உங்களை மன்னித்து விட்டார்.
ReplyDelete