Saturday, February 27, 2010
கூஸ் கூஸ் பொங்கல்
தேவையான பொருட்கள்:
(இஸ்ரேலி)கூஸ்கூஸ் -1/2 கப்
பாஸ்மதி அரிசி -1/2 கப்
பால் - 1/2 - 3/4 கப்
வெல்லம் - 6 oz
முந்திரி வற்றல் -சிறிது
ஏலக்காய் - 4
நெய் அல்லது பட்டர் -1 டேபிள்ஸ்பூன்
முந்திரிப் பருப்பை லேசாக நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
அரிசி, கூஸ்கூஸ் இரண்டையும் கழுவி, தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்.
ஏலக்காய் சேர்க்கவும்.
அரிசி, கூஸ்கூஸ் வெந்ததும் வெல்லம் சேர்க்கவும்.
வெல்லம் கரைந்ததும் பால் சேர்க்கவும்.
இறுதியில் விரும்பினால் நெய்/பட்டர் சேர்த்து, முந்திரி பருப்பு சேர்க்கவும்.
சுவையான பொங்கல் தயார்.
குறிப்பு:
இஸ்ரேலி குஸ்குஸ் என்பது கொஞ்சம் பெரிதாக உளுந்து போல இருக்கும். பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பருப்புக் குழம்பு இதற்கு ஏற்ற சைட்டிஷ்.
Subscribe to:
Post Comments (Atom)
wow, yum ;p
ReplyDeleteImmi, thanks!
ReplyDeleteநல்லா இருக்கு வானதி..இஸ்ரேலி குஸ்குஸ், ஆர்டினரி குஸ்-குஸ் ரெண்டும் எந்தக் கடைல கிடைக்கும்னு சொல்லுங்களேன்.
ReplyDeleteமகி, சூப்பர் மார்க்கெட்டில் பாஸ்டா/நூடில்ஸ் செக்ஸனில் இருக்கும்.
ReplyDeleteகுஸ்குஸ் உப்புமா என் தங்கையின் ரெசிப்பி.