Monday, March 1, 2010
உளுந்துக் களி
தேவையான பொருட்கள்:
உளுந்து மா - 1/2 கப்
சீனி - 1/3 கப்
உப்பு - 1 பின்ஞ்
பால் - 3/4 கப்
பட்டர் - 1/2 டேபிள்ஸ்பூன்
ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் பாலை விட்டு காய்ச்சவும். பால் மெதுவாக சூடேறியதும் உப்பு போட்டு, உளுந்து மாவை சிறிது சிறிதாக போட்டு கிளறவும். கைவிடாமல் கிளற வேண்டும். மா திரண்டு வரும் போது சீனியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். இறுதியில் சிறிது பட்டர்(விரும்பினால்) சேர்த்து, சூடாக சாப்பிடவும்.
குறிப்பு:
இந்த ரெசிப்பி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் விருப்பமான ஒன்று. பிள்ளைகளுக்கு பட்டர் சேர்த்து செய்வேன். நானே உளுந்து வறுத்து, அரைத்து, மாவாக்கியே களி செய்வேன். மிகவும் சத்தானதும், செய்வதற்கு ஈஸியானதும் ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
/நானே உளுந்து வறுத்து, அரைத்து, மாவாக்கியே/ ம்ம்...உஸ்...அப்பாடா..படிச்சி முடிக்கவே மூச்சு வாங்குது வாணியக்கா..இதெல்லாம் சுவைக்க ஜீனோக்கு எங்கே வாய்ப்பு??
ReplyDeleteபடம் பாத்து கதை சொல்க-ரேஞ்சுல படம் பாத்து ஜொள்ளு உட்டுக்க வேண்டியதே வேலையாப் போச்சி.
அயகா இருக்கு உங்க கை வேலைகள்..கங்க்ராட்ஸ்!!
ஜீனோ, நன்றி. இந்த ரெசிப்பியை டோராக்கு விளங்குறாப்போல எழுதிக் குடுத்து பாருங்களேன். என்ன நடந்தது என்று பிறகு வந்து சொல்லுங்கோ(மறக்காமல், மறைக்காமல் சொல்ல வேண்டும்).
ReplyDeleteஉளுத்தங்களி கேள்விப்பட்டிருக்கேன்..செய்ததில்லை.
ReplyDeleteநல்லாருக்கு..இது ஸ்வீட் மாதிரிதானே வானதி??
ஹீ ஹீ ஹீ உளுத்தங்களி எனக்கு ரொம்ப பிடிக்கும். நன்றி வாணி.
ReplyDeleteபிரபா, நன்றி. எடுத்து சாப்பிடுங்கோ.
ReplyDeleteமகி, சீனி சேர்ப்பதால் ஸ்வீட் தான்.எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.
வாணி, பப்பியைக் குழப்பி விட்டேன். இனி உளுத்தங்களி சாப்பிடாது. ;)
ReplyDeleteஇமா, பப்பிக்கு அண்டா நிறைய களி செய்து குடுத்தேன். சாப்பிட்டு விட்டு தெம்பாக வந்து கொண்டிருக்கு. இனிமேல் எல்லோருக்கும் பயங்கரமாக கடி விழும்.
ReplyDeletem.. paarppom, paarppom. ;)
ReplyDelete