Tuesday, March 2, 2010

முடி திருத்தகம்

சனிக்கிழமை காலை 8 மணிக்கு( மற்றைய நாட்களில் 6 மணிக்கு) சூரியன் கிழக்கு வானில் மெல்ல எழும்பியது!! அன்றைய தினம் மகனுக்கு முடி வெட்ட சலூன் போக வேண்டும் என்பதே நேர்த்திக்கடன்.

சலூன் போய், என் மகனின் பெயரை கணிணியில் பதிந்து.......

எங்களுக்கு முன்பு 2 பேர் காத்திருந்தார்கள். ஒரு டீன் ஏஜ் பெண்ணும் அதில் அடக்கம்.
நாங்கள் போய் 10 நிமிடங்கள் கழித்து, 35 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் வந்தார். வந்தவருக்கு அவரின் பெற்றோர் வைத்த பெயர் என்னவோ தெரியாது....நான் அவருக்கு வைத்த பெயர் "குடைச்சல்".

குடைச்சல் வந்ததும் ஏதோ ஒரு பொருள்( சலூனில் வாங்கியது) ரிட்டன் பண்ண முயற்சித்தார். ரசீது இல்லாமல் ரிட்டன் பண்ண முடியாது என்ற அடிப்படை விஷயமே தெரியாமல் சண்டை போட ஆரம்பித்தார். சலூனில் வேலை செய்த பெண்மணி முடியாது என்று மறுத்து விட ஆரம்பமானது இவரின் குடைச்சல்.

குடைச்சல்: எங்கே உன் மானேஜர்?
பெண் : இந்தா நம்பர்? கூப்பிட்டுக்கோ? என் பெயர் மேரி என்றும் சொல்லிக்கோ?

குடைச்சல் போய் நாற்காலியில் அமர்ந்தார். நம்பரை குத்தத் தொடங்கினார். எதிர் முனையில் சாதகமான பதில் வரவில்லை என்பது அவரின் செய்கையில் தெரிந்தது. விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருந்தார்.

இப்போது டெனிஸ் அண்ணாச்சி வந்தார். மிகவும் உயரமாக இருந்தார். வந்து பெயரை சொல்லி கம்யூட்டரில் பதிந்து விட்டு, அமர்ந்தவர், கண்களை மூடிக் கொண்டார். தூங்கினாரா? அல்லது இந்த குடைச்சல் பெண்மணியிடம் இருந்து தப்பிக்க அப்படி செய்தாரா தெரியவில்லை.
போனை வைத்து விட்டு எழும்பி போய் இன்னும் எவ்வளவு நேரம் வெயிட் பண்ண வேண்டும் என்று மேரியிடம் திரும்ப சண்டை போடத் தொடங்கினார் குடைச்சல்.

மீண்டும் வந்து அமர்ந்தவர். அப்போது தான் என்னைக் கண்டவர் போல எழும்பி ஓடி வந்தார்.

குடைச்சல்: ஏனுங்கோ அம்மிணி, எவ்வளவு நேரம் வெயிட்டிங்?
நான் : 30, 40 நிமிடங்கள் இருக்கும்.
குடைச்சல்: என்னது அம்புட்டு நேரமா இருக்கியா?

என் பதிலை எதிர் பாராமல் மீண்டும் மேரியுடன் சண்டைக்கு போய் விட்டார்.
மேரி என்னை பார்த்து விட்டு, " ஓ இந்த பெண்மணி இவர் கணவருடன் வந்துள்ளார். கணவருக்காக வெயிட்டிங்" என்று சமாதானப்படுத்தினார்(அங்கு என் கலரில் யாருமே இருக்கவில்லை. யாரை என் கணவர் என்று சொன்னாரோ தெரியவில்லை).
நான் தலையை ஆட்டி விட்டு, என் மகனின் தலையை காட்டினேன்.

குடைச்சல் சண்டை ஆரம்பிக்க, நான் பேசாமல் இருக்க, மேரி அவரின் கஸ்டமருக்கு அலுமினியம் ஃபாயிலை தலையில் சுற்றத் தொடங்கினார்.
மிகவும் மனமுடைந்து போன குடைச்சல் நான் ஒருத்தியா இருந்து உங்கள் உரிமைக்காக போராடுகிறேன். உங்களுக்கு எல்லாம் சூடு/சொரணையே இல்லையா? என்பது போல் ஒரு லுக் விட்டார்.
நான் வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொள்ள, அது வரை கண்களை மூடி இருந்த டெனிஸ் எழும்பி விறுவிறு என்று போய் மறைந்து விட்டார்.

என் மகனின் முறை வந்தது. நான் என் மகனை கூட்டிக் கொண்டு உள்ளே போனேன். வரவேற்பறையில் குடைச்சல் பெண்மணி ஓயாது சண்டை போட்டு, வாக்கு வாதம் பண்ணிக் கொண்டே இருந்தார். நான் அங்கிருந்து வரும் வரை அவரின் சண்டை ஓயவில்லை.
இந்த டென்ஷனில் என் மகனுக்கு முடி வெட்டியவர் திருப்பதி ஸ்டைலில் மொட்டை அடித்து விட்டார்.

இதன் பிறகு நான் எடுத்த முக்கியமான முடிவு:
1.வீக்கென்டில் சலூன் போக கூடாது.
2.குடைச்சல் பெண்மணியின் கணவரை வாழ்வில் ஒரு தடவை மீட் பண்ண வேண்டும். எப்படித் தான் சமாளிக்கின்றாரோ தெரியவில்லை?

9 comments:

 1. ஹா..ஹா..பாவம் வானதி நீங்க!

  போன வாரம் நானும் எங்க வீட்டு குழந்தை:)ய முடி திருத்தகம் கூட்டிட்டு போயிருந்தேன்..நல்ல வேளை, உங்க ஊர் குடைச்சல் பார்ட்டி மாதிரி யாரும் வரலை. இருந்தாலும் ஒரு காமெடி நடந்தது.

  ஹேர் கட் முடிச்சு கடைக்கு வெளியே வந்து இவர் 'எப்படி இருக்கு என் நியூ லுக்?'-னு சூப்பர் ஸ்டார் ஸ்டைல்ல கேட்க..நானும் 'சூப்பரா இருக்குங்க'-ன்னு ஜொள்ளு விட்டுட்டே சொல்ல..ஒரு முப்பது செகன்ட் உலகத்த மறந்து ரெண்டுபேரும் நின்னோம்.

  என்னங்க ரெண்டு பேரும் (லூசு மாதிரி எக்ஸ்பிரஷனோட ) இங்கே நிக்கறீங்கன்னு ஒரு குரல் கேட்டு திரும்பினா..எங்க பக்கத்துக்கு வீட்டு நண்பர்...அசடு வழிஞ்சுட்டே அவர்கிட்ட பேசிட்டு வீடு வந்தோம்.:))))

  ReplyDelete
 2. மகி, உங்கள் வீட்டு குழந்தை சமர்த்தாக இருந்ததா?? இருந்தால் தான் லாலி பாப் தருவார்கள்.
  குடைச்சல் பார்ட்டியின் குடைச்சல் பாதி தான் இங்கே எழுதினேன். எல்லாமே எழுதினால் இந்த பக்கம் காணாது.
  நாங்களும் முன்பு முடி வெட்ட ஏதோ டூர் போவது போல கிளம்பி போவோம். எனக்கு இந்த கடைகளில் வரும் மணம் ஒத்து வராது. அது தான் காலை வேளையிலே போய் வேலையை முடிக்க போனேன். இப்படி மாட்டிக் கொண்டேன்.

  ReplyDelete
 3. வாணி... நிறைய்...ய முன்னேறி இருக்கிறீங்க. சிரிப்பு தாங்க முடியேல்ல. ;D

  திருமதி. எலி வேற சிரிப்புக் காட்ட கூட்டுச் சேர்ந்து இருக்கு. ;)

  ReplyDelete
 4. இது அல்லவா சிரிப்பு!!நன்றி!

  ReplyDelete
 5. //நானும் 'சூப்பரா இருக்குங்க'-ன்னு ஜொள்ளு //

  ithellam enga nadakuthu inga.. enna hair style maathinaalum oru kurai

  ReplyDelete
 6. ஹா ஹா நல்லா இருந்துச்சு உங்க அனுபவம் பாவம் உங்க மகன் என்ன நினைச்சுருப்பாருங்க..

  அதுக்காக முடு வெட்டும் நிகழ்வை சொல்லக்கூட சூரியன் கிழக்கு வானில் மெல்ல எழும்பியதுன்னு ஆரம்பிக்கிறதெல்லாம் கொஞ்சம் டூ மச்ங்க...

  ReplyDelete
 7. vera anubavangal edhum illaya vanathy

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!