Saturday, March 6, 2010
வாழைப்பழ பணியாரம்
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 1
மைதா மா -1 1/2 கப்
பால் - 1 1/4 கப்
சீனி -1/2 கப்
உப்பு - சிறிது
வெல்லம் - கொஞ்சம்
பேக்கிங் பவுடர் -1/4 டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
ஐஸிங் சுகர் - 1/2 கப்
சினமன் பவுடர் -1 டேபிள்ஸ்பூன்
ஐஸிங் சுகர், சினமன் பவுடரை ஒன்றாக கலந்து வைக்கவும்.
வாழைப்பழத்தை கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
இதனுடன் பால், உப்பு, சீனி, பேக்கிங் பவுடர், பொடித்த வெல்லம் போட்டு கலந்து கொள்ளவும்.
சிறிது சிறிதாக மா சேர்த்து, கலக்கவும். கேக் மா போல் பதம் வர வேண்டும். அப்போது தான் பணியாரம் softஆக இருக்கும்.
சட்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் மாவை கரண்டியால் எடுத்து சிறு உருண்டைகளாக போட்டு பொரிய விடவும்.
பொன்னிறமானதும் எடுத்து சினமன் ஐஸிங்சுகர் கலைவையில் போட்டு, நன்கு படும்படி பிரட்டி விடவும்.
வாழைப்பழ பணியாரம் தயார்.
குறிப்பு: மா கேக் மா போல தளர்வாக இருக்க வேண்டும். பாலின் அளவை தேவை எனில் அதிகரிக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
நல்லாருக்குங்க வானதி! நான் மைதா-ரவை -சர்க்கரை -ஏலக்காய் சேர்த்து பணியாரம் செய்வேன்..ஐசிங் சுகர் கோட்டிங் நல்லாஇருக்கு!
ReplyDeleteமகி, ரவை சேர்த்து செய்வீர்களா? நானும் சேர்த்து பார்க்கிறேன்.
ReplyDeleteI am more interested in those 2 dishes than ur recipe Vany. ;)
ReplyDeleteஇமா, கர்ர்ர்ர்ர்.
ReplyDeleteசரி அடுத்த முறை தட்டுகள் செய்வது எப்படி என்று விளக்கமாக சொல்கிறேன்.
என்னென்னமோ பண்றீங்க வானதி.. இதெல்லாம் எப்ப்போப் பண்ணப் போறேனோ :)
ReplyDeleteவெயிட்.. இத எங்க ஊருல கச்சாயம்ன்னு செய்வாங்க.. வித்தவுட் கோட்டிங்..
ReplyDeleteஅதெல்லாம் பண்ணிருவீங்க எல்ஸ். ;) இவ்வளவு நாளைக்கும் சேர்த்து வச்சு இன்றைக்கு வந்து வாணி ப்ளாக்ல பின்னூட்டம் போடல. அது போல ஒரு நாள் வரும். அப்ப எல்லா ரெசிபி கடனும் ஒண்ணா தீர்த்துருவீங்க. ;D
ReplyDeleteசந்தனா, நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்கோ.அது சரி இமாவுக்கு சந்து மேலே என்ன கர்ர்ர்ர்ர்ர்....
ReplyDeletejust oru paasamthaan. ;)
ReplyDelete