வானதி ( மனதினுள் ) ஒரு கெட்டு கெதர் வைத்தால் நல்லா இருக்கும். யாரை இன்வைட் பண்ணுவது, எத்தனை பேர்... நினைக்கவே குழப்பமாக இருக்கு. முதலில் அதீஸூக்கு போன் போடலாம்.
( அதிராவின் வீட்டில்) போனில் பூனையின் சத்தம்
மியாவ்...மியாவ்...மியாவ்
வானதி: அதிரா இருக்கின்றாவா? பேசலாமா? ( என்ன இந்த வீட்டில் பூனை தான் போனை எடுக்குமா? )
அதிரா : யார் வாணியோ?
வானதி : ம்ம்.. அதீஸ், ஒரு கெட்டுகெதர் வைக்கலாமா?
அதிரா: ஆகா! எங்கே? எப்போ ? ...
வானதி : அதான் ஒரே குழப்பமா இருக்கு.
அதிரா: நீங்கள் உலகில் எந்த மூலையில் வைத்தாலும் வந்திடுவேன்.
வானதி : எப்படி?
அதிரா : நான் சப்மரீன்ல வந்திடுவேன். நான் நல்லாசப்மரீன் ஓடுவேன்.
வானதி : லைசென்ஸ் இருக்கா?
அதிரா : ஹிஹி.. அதெல்லாம் இல்லை. எங்கட வீட்டுப் பக்கத்திலை தான் சப்மரீனை கட்டி வைக்கிறவங்கள். நான் மெதுவா கிளப்பிக் கொண்டு வந்திடுவேன்.
வானதி: சரி. வரும் போது இமாவையும் ஏற்றிக் கொண்டு வந்திடுங்கோ. இமாவிடம் ஃபேஸ் பெயின்டிங் பொருட்களையும் மறக்காமல் கொண்டு வரச் சொல்லுங்கள்.
அதிரா : என்ன சாப்பாடு கெட்டு கெதரில்?
வானதி : சாப்பாடெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
ஆசியா அக்காவின் பிரியாணி, மகியின் ஸ்வீட்ஸ், முடிந்தால் ஜலீலா அக்காவின் ப்ரெட் புடிங்...
அதிரா : அப்ப அவிச்ச கோழி முட்டை இல்லையா?
வானதி : நம்ம ஜெய் தான் அதில் கில்லாடி. நீங்கள் ஜெய்யிடம் சொல்லுங்கோ. 10 முட்டைகளாவது கொண்டு வரச் சொல்லுங்கோ.
அதிரா: பத்து எந்த மூலைக்கு காணும் . ஒரு நூறாவது வேணும்.
வானதி : அதீஸ், நூறா? இதெல்லாம் டூ மச். சரி ஜெய்க்கு போன் போட்டு சொல்லுங்கோ. மறக்க வேண்டாம். வரட்டா. பை பை.
அதிராவின் சப்மரீன்லை கெட்டுகெதர் பார்ட்டி நடைபெறுகிறது.
வானதி : எல்கே, நீங்கள் தானே எப்போதும் எல்லா இடத்திலையும் முன்ணணி வகிப்பது. வாசலில் நின்று வர்றவங்களை வரவேற்பது உங்கள் பொறுப்பு. சரியா?
எல்கே : சரி.
( மனதினுள் ) என்ன ஒரு பயலையும் காணோம். யாரோ தூரத்தில் ஆபிஸர் வராப்போல தெரியுது.
( சத்தமாக ) வாங்க, வாங்க. நீங்கள் வழி மாறி வந்துட்டாப் போல இருக்கு. இது கெட்டுகெதர் நடக்கும் இடம்.
வந்தவர்.
நான் ஜெய். ஜெய்லானி.
எல்கே : ( மனதினுள் ) அடச்சே!
( சத்தமாக ) என்ன கோட்டு சூட்டு எல்லாம் போட்டு ஒரே அமர்களமாக இருக்கு.
ஜெய் : ஓ! அதுவா. இது எங்கம்மா ஆசையா அமெரிக்காவிலிருந்து வாங்கியது. விலை அதிகம். 200 டாலர்கள் ஆச்சு.
எல்கே : பர்மா பஜாரில் 200 ரூபாய்க்கு வாங்கலாம்.
ஜெய் : ம்ம்.. குடுப்பான்.
அதிரா : வாங்கோ, ஜெய். முட்டை எங்கே?
ஜெய் : இப்ப வந்திடும்.
அதிரா : என்ன? அப்ப முட்டை இன்னும் வரவில்லையா? முட்டையை அனுப்பிய பிறகு அல்லவா நீங்கள் வந்திருக்கோணும். சரி நான் இங்கே நின்று முட்டையை வரவேற்கிறேன். நீங்கள் உள்ளே போங்கள். வெள்ளை கோட் அழகா இருக்கு.
ஜெய் : இது எங்கம்மா அமெரிக்காவில்...
எல்கே : ( மனதினுள் ) ம்ம் ஆரம்பிச்சுட்டார்.
அதிரா : சரி. நீங்கள் உள்ளே போங்கள். நான் முட்டைகளோடு வருகிறேன்.
இமா : பேஸ் பெயின்டிங் போட விருப்பம் உள்ளவர்கள் இங்கே வாங்க.
மகி : இமா, எனக்கு ஒரு கன்னத்தில் மஞ்சள் ரோஸ். மற்ற கன்னத்தில் எலி வரையுங்க.
சந்தனா : எலி என்ன பெருச்சாளியே வரையலாம். நான் தான் முதலில் வந்தேன். அப்படி தள்ளி நில்லுங்க.
சந்தனா : இமா, எனக்கு.
இமா: சந்தனா, ஆடாமல் அசையாமல் இருக்கோணும் சரியா?
இமாவின் பேஸ் பெயின்ட் கீழே சிந்திவிட்டது.
இமா: சந்தனா, நான் அப்பவே சொன்னேன். ஆடாமல் அசையாமல் இருக்கோணும் என்று. இப்ப பாருங்கள் எவ்வளவு பெயின்ட் தரையில். அதிரா வரும் முன் க்ளீன் பண்ண வேண்டும்.
சந்தனா: ஏன் டென்ஷன்? இதோ ஒரு வெள்ளைத் துணி இருக்கு. இதை பாவியுங்கள்.
இமா : சந்தனா, இது யாருடையதோ வெள்ளை கோட்...
சந்தனா: இமா, இது யாரோ ஆபிஸர்ஸ் அணியும் உடை. இதை பாவித்து துடையுங்கோ. எங்கையாவது மூலையில் கடாசி விடலாம்.
இமா : சரி.
தங்ஸ் வருகிறார்.
வானதி: தங்ஸ், வாங்க!
தங்ஸ் : ம்ம் ... வரவேற்பு எல்லாம் நல்லாத் தான் இருக்கு. நான் கொண்டு வந்த இட்லி எங்கே?
எல்கே : அ(ட) ப்பாவி அக்கா, நான் திமிங்கிலத்திற்கு சாப்பாடாக்கும் என்று நினைத்து, கடலில் எல்லாத்தையும் தூக்கி ....
தங்ஸ்: அடப்பாவி! இரு உன்னை திமிங்கிலத்திற்கு டிசர்ட்டா குடுக்கிறேன்.
தங்ஸ் எல்கேயை விரட்டிக் கொண்டு ஓடுகிறார்.
ஆசியா அக்கா : வானதி, பிரியாணி கொண்டு வந்திருக்கேன். ஆனால் சூடா இருக்கு. எங்கே வைக்க?
வானதி: இருங்க. ஏதாச்சும் துணி இருக்கா என்று பார்க்கிறேன்.
அட! இங்கே ஒரு பழைய வெள்ளைக் கோட் இருக்கு. இதிலே வையுங்கள்.
ஜெய்லானி : ( மனதினுள் ) இப்ப இங்கே தான் என் கோட் வைத்து விட்டு பாத்ரூம் போனேன். வந்து பார்த்தால் காணவில்லை. எங்கே போயிருக்கும். எனக்கென்னவோ எல்கே மீது தான் சந்தேகமா இருக்கு.
வானதி : எல்லோரும் வந்து சாப்பிடுங்கள்.
அதிரா : நான் முட்டை இல்லாமல சாப்பிட மாட்டேன். ஜெய், முட்டை எங்கே?
ஜெய் : என் வெள்ளை கோட் எங்கே ?
அப்போது ஒரு நபர் முட்டைகளை கொண்டு வந்து குடுக்கிறார்.
அதிரா : என்ன 10 முட்டைகள் தான் இருக்கு?
ஜெய் : நூறுக்கும் பத்துக்கும் ஒரு சைபர் தானே வித்தியாசம். என் கோட் எங்கே?????
அதிரா : இன்னும் 90 முட்டைகள் எங்கே?
ஜெய் : என் 200 டாலர் கோட் எங்கே?
தங்ஸ் : எல்கே, என் இட்லி எங்கே?
வானதி : வாங்கப்பா எல்லோரும் சாப்பிட. சண்டையை பிறகு வைத்துக் கொள்ளலாம்.
அதிரா : இல்லை. நான் வரமாட்டேன்.
ஜெய் : நானும் இதற்கு ஒரு முடிவு கட்டாமல் வரப்போவதில்லை.
தங்ஸ் : நானும் தான்.
மற்றவர்கள் சாப்பிட்டு விட்டு, அண்டா, குண்டாவுடன் கிளம்பி போய் விட்டார்கள்.
தங்ஸ் : அங்கே ஏதோ வெள்ளைத் துணி தெரியுது அதான் உங்க கோட் போல இருக்கு..
ஜெய்லானி தீஞ்சு போன கோட்டினை எடுத்துப் பார்த்து விட்டு, தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விடுகிறார்.
2 மணி நேரம் கடந்த பின்னர்.
ஜெய் : எனக்கு பசிக்குது.
தங்ஸ் : அடடா ! நான் என் இட்லி சட்டியை எங்கேயோ வைச்சுட்டு, சப்மரீன் முழுக்க தேடி, அந்த அப்பாவி எல்கேயையும் சந்தேகப்பட்டு... சே என்ன வேலை செய்து விட்டேன்.
அதிரா : இந்தாங்க முட்டை தான் இருக்கு. சாப்பிடுங்க.
ஜெய் : சரி. இட்லியும் முட்டையும் சாப்பிடுவோம்.
அதிரா : இட்லி அருமை.
ஜெய் : மல்லிகைப்பூப் போல அவ்வளவு மிருதுவா இருக்கு.
தங்ஸ் : ( ஆனந்தக் கண்ணீருடன் ) நன்றி! நன்றி!! நன்றி!!!!
**************************************************
இது தான் ஜெய்யின் கோட்!