Monday, June 14, 2010

கெட் டு கெதர்

வானதி ( மனதினுள் ) ஒரு கெட்டு கெதர் வைத்தால் நல்லா இருக்கும். யாரை இன்வைட் பண்ணுவது, எத்தனை பேர்... நினைக்கவே குழப்பமாக இருக்கு. முதலில் அதீஸூக்கு போன் போடலாம்.

( அதிராவின் வீட்டில்) போனில் பூனையின் சத்தம்

மியாவ்...மியாவ்...மியாவ்

வானதி: அதிரா இருக்கின்றாவா? பேசலாமா? ( என்ன இந்த வீட்டில் பூனை தான் போனை எடுக்குமா? )

அதிரா : யார் வாணியோ?
வானதி : ம்ம்.. அதீஸ், ஒரு கெட்டுகெதர் வைக்கலாமா?

அதிரா: ஆகா! எங்கே? எப்போ ? ...

வானதி : அதான் ஒரே குழப்பமா இருக்கு.

அதிரா: நீங்கள் உலகில் எந்த மூலையில் வைத்தாலும் வந்திடுவேன்.

வானதி : எப்படி?
அதிரா : நான் சப்மரீன்ல வந்திடுவேன். நான் நல்லாசப்மரீன் ஓடுவேன்.
வானதி : லைசென்ஸ் இருக்கா?
அதிரா : ஹிஹி.. அதெல்லாம் இல்லை. எங்கட வீட்டுப் பக்கத்திலை தான் சப்மரீனை கட்டி வைக்கிறவங்கள். நான் மெதுவா கிளப்பிக் கொண்டு வந்திடுவேன்.

வானதி: சரி. வரும் போது இமாவையும் ஏற்றிக் கொண்டு வந்திடுங்கோ. இமாவிடம் ஃபேஸ் பெயின்டிங் பொருட்களையும் மறக்காமல் கொண்டு வரச் சொல்லுங்கள்.

அதிரா : என்ன சாப்பாடு கெட்டு கெதரில்?

வானதி : சாப்பாடெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
ஆசியா அக்காவின் பிரியாணி, மகியின் ஸ்வீட்ஸ், முடிந்தால் ஜலீலா அக்காவின் ப்ரெட் புடிங்...

அதிரா : அப்ப அவிச்ச கோழி முட்டை இல்லையா?

வானதி : நம்ம ஜெய் தான் அதில் கில்லாடி. நீங்கள் ஜெய்யிடம் சொல்லுங்கோ. 10 முட்டைகளாவது கொண்டு வரச் சொல்லுங்கோ.

அதிரா: பத்து எந்த மூலைக்கு காணும் . ஒரு நூறாவது வேணும்.

வானதி : அதீஸ், நூறா? இதெல்லாம் டூ மச். சரி ஜெய்க்கு போன் போட்டு சொல்லுங்கோ. மறக்க வேண்டாம். வரட்டா. பை பை.


அதிராவின் சப்மரீன்லை கெட்டுகெதர் பார்ட்டி நடைபெறுகிறது.


வானதி : எல்கே, நீங்கள் தானே எப்போதும் எல்லா இடத்திலையும் முன்ணணி வகிப்பது. வாசலில் நின்று வர்றவங்களை வரவேற்பது உங்கள் பொறுப்பு. சரியா?

எல்கே : சரி.
( மனதினுள் ) என்ன ஒரு பயலையும் காணோம். யாரோ தூரத்தில் ஆபிஸர் வராப்போல தெரியுது.
( சத்தமாக ) வாங்க, வாங்க. நீங்கள் வழி மாறி வந்துட்டாப் போல இருக்கு. இது கெட்டுகெதர் நடக்கும் இடம்.

வந்தவர்.
நான் ஜெய். ஜெய்லானி.

எல்கே : ( மனதினுள் ) அடச்சே!
( சத்தமாக ) என்ன கோட்டு சூட்டு எல்லாம் போட்டு ஒரே அமர்களமாக இருக்கு.

ஜெய் : ஓ! அதுவா. இது எங்கம்மா ஆசையா அமெரிக்காவிலிருந்து வாங்கியது. விலை அதிகம். 200 டாலர்கள் ஆச்சு.

எல்கே : பர்மா பஜாரில் 200 ரூபாய்க்கு வாங்கலாம்.

ஜெய் : ம்ம்.. குடுப்பான்.

அதிரா : வாங்கோ, ஜெய். முட்டை எங்கே?

ஜெய் : இப்ப வந்திடும்.

அதிரா : என்ன? அப்ப முட்டை இன்னும் வரவில்லையா? முட்டையை அனுப்பிய பிறகு அல்லவா நீங்கள் வந்திருக்கோணும். சரி நான் இங்கே நின்று முட்டையை வரவேற்கிறேன். நீங்கள் உள்ளே போங்கள். வெள்ளை கோட் அழகா இருக்கு.

ஜெய் : இது எங்கம்மா அமெரிக்காவில்...

எல்கே : ( மனதினுள் ) ம்ம் ஆரம்பிச்சுட்டார்.

அதிரா : சரி. நீங்கள் உள்ளே போங்கள். நான் முட்டைகளோடு வருகிறேன்.

இமா : பேஸ் பெயின்டிங் போட விருப்பம் உள்ளவர்கள் இங்கே வாங்க.

மகி : இமா, எனக்கு ஒரு கன்னத்தில் மஞ்சள் ரோஸ். மற்ற கன்னத்தில் எலி வரையுங்க.

சந்தனா : எலி என்ன பெருச்சாளியே வரையலாம். நான் தான் முதலில் வந்தேன். அப்படி தள்ளி நில்லுங்க.

சந்தனா : இமா, எனக்கு.

இமா: சந்தனா, ஆடாமல் அசையாமல் இருக்கோணும் சரியா?

இமாவின் பேஸ் பெயின்ட் கீழே சிந்திவிட்டது.
இமா: சந்தனா, நான் அப்பவே சொன்னேன். ஆடாமல் அசையாமல் இருக்கோணும் என்று. இப்ப பாருங்கள் எவ்வளவு பெயின்ட் தரையில். அதிரா வரும் முன் க்ளீன் பண்ண வேண்டும்.

சந்தனா: ஏன் டென்ஷன்? இதோ ஒரு வெள்ளைத் துணி இருக்கு. இதை பாவியுங்கள்.

இமா : சந்தனா, இது யாருடையதோ வெள்ளை கோட்...

சந்தனா: இமா, இது யாரோ ஆபிஸர்ஸ் அணியும் உடை. இதை பாவித்து துடையுங்கோ. எங்கையாவது மூலையில் கடாசி விடலாம்.

இமா : சரி.


தங்ஸ் வருகிறார்.

வானதி: தங்ஸ், வாங்க!

தங்ஸ் : ம்ம் ... வரவேற்பு எல்லாம் நல்லாத் தான் இருக்கு. நான் கொண்டு வந்த இட்லி எங்கே?

எல்கே : அ(ட) ப்பாவி அக்கா, நான் திமிங்கிலத்திற்கு சாப்பாடாக்கும் என்று நினைத்து, கடலில் எல்லாத்தையும் தூக்கி ....

தங்ஸ்: அடப்பாவி! இரு உன்னை திமிங்கிலத்திற்கு டிசர்ட்டா குடுக்கிறேன்.

தங்ஸ் எல்கேயை விரட்டிக் கொண்டு ஓடுகிறார்.



ஆசியா அக்கா : வானதி, பிரியாணி கொண்டு வந்திருக்கேன். ஆனால் சூடா இருக்கு. எங்கே வைக்க?

வானதி: இருங்க. ஏதாச்சும் துணி இருக்கா என்று பார்க்கிறேன்.
அட! இங்கே ஒரு பழைய வெள்ளைக் கோட் இருக்கு. இதிலே வையுங்கள்.



ஜெய்லானி : ( மனதினுள் ) இப்ப இங்கே தான் என் கோட் வைத்து விட்டு பாத்ரூம் போனேன். வந்து பார்த்தால் காணவில்லை. எங்கே போயிருக்கும். எனக்கென்னவோ எல்கே மீது தான் சந்தேகமா இருக்கு.

வானதி : எல்லோரும் வந்து சாப்பிடுங்கள்.

அதிரா : நான் முட்டை இல்லாமல சாப்பிட மாட்டேன். ஜெய், முட்டை எங்கே?

ஜெய் : என் வெள்ளை கோட் எங்கே ?

அப்போது ஒரு நபர் முட்டைகளை கொண்டு வந்து குடுக்கிறார்.

அதிரா : என்ன 10 முட்டைகள் தான் இருக்கு?

ஜெய் : நூறுக்கும் பத்துக்கும் ஒரு சைபர் தானே வித்தியாசம். என் கோட் எங்கே?????

அதிரா : இன்னும் 90 முட்டைகள் எங்கே?

ஜெய் : என் 200 டாலர் கோட் எங்கே?

தங்ஸ் : எல்கே, என் இட்லி எங்கே?

வானதி : வாங்கப்பா எல்லோரும் சாப்பிட. சண்டையை பிறகு வைத்துக் கொள்ளலாம்.

அதிரா : இல்லை. நான் வரமாட்டேன்.

ஜெய் : நானும் இதற்கு ஒரு முடிவு கட்டாமல் வரப்போவதில்லை.

தங்ஸ் : நானும் தான்.



மற்றவர்கள் சாப்பிட்டு விட்டு, அண்டா, குண்டாவுடன் கிளம்பி போய் விட்டார்கள்.

தங்ஸ் : அங்கே ஏதோ வெள்ளைத் துணி தெரியுது அதான் உங்க கோட் போல இருக்கு..


ஜெய்லானி தீஞ்சு போன கோட்டினை எடுத்துப் பார்த்து விட்டு, தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விடுகிறார்.

2 மணி நேரம் கடந்த பின்னர்.

ஜெய் : எனக்கு பசிக்குது.

தங்ஸ் : அடடா ! நான் என் இட்லி சட்டியை எங்கேயோ வைச்சுட்டு, சப்மரீன் முழுக்க தேடி, அந்த அப்பாவி எல்கேயையும் சந்தேகப்பட்டு... சே என்ன வேலை செய்து விட்டேன்.


அதிரா : இந்தாங்க முட்டை தான் இருக்கு. சாப்பிடுங்க.


ஜெய் : சரி. இட்லியும் முட்டையும் சாப்பிடுவோம்.

அதிரா : இட்லி அருமை.

ஜெய் : மல்லிகைப்பூப் போல அவ்வளவு மிருதுவா இருக்கு.

தங்ஸ் : ( ஆனந்தக் கண்ணீருடன் ) நன்றி! நன்றி!! நன்றி!!!!

**************************************************
இது தான் ஜெய்யின் கோட்!

57 comments:

  1. //எல்கே : அ(ட) ப்பாவி அக்கா, நான் திமிங்கிலத்திற்கு சாப்பாடாக்கும் என்று நினைத்து, கடலில் எல்லாத்தையும் தூக்கி ....//

    ஏங்க திமிங்கலம் நல்ல இருக்கறது பிடிக்கலையா



    //
    தங்ஸ் : அடடா ! நான் என் இட்லி சட்டியை எங்கேயோ வைச்சுட்டு, சப்மரீன் முழுக்க தேடி, அந்த அப்பாவி எல்கேயையும் சந்தேகப்பட்டு... சே என்ன வேலை செய்து விட்டேன்././

    எப்படியோ தாங்க்ஸ் வாயால அப்பாவி பட்டம்

    ReplyDelete
  2. //எல்கே : ( மனதினுள் ) அடச்சே!
    ( சத்தமாக ) என்ன கோட்டு சூட்டு எல்லாம் போட்டு ஒரே அமர்களமாக இருக்கு.

    ஜெய் : ஓ! அதுவா. இது எங்கம்மா ஆசையா அமெரிக்காவிலிருந்து வாங்கியது. விலை அதிகம். 200 டாலர்கள் ஆச்சு.

    எல்கே : பர்மா பஜாரில் 200 ரூபாய்க்கு வாங்கலாம்.//

    \
    @தல

    நம்மள பிரிக்க சதி.. நம்பாதீங்க

    ReplyDelete
  3. //ஜெய் : மல்லிகைப்பூப் போல அவ்வளவு மிருதுவா இருக்கு.

    தங்ஸ் : ( ஆனந்தக் கண்ணீருடன் ) நன்றி! நன்றி!! நன்றி!!//

    எதுவுமே இல்லாத நேரத்துல, எது கிடைச்சாலும், அருமையா இருக்கும், அப்படித்தானே இந்த இட்லியும் ... யாரும் இட்லி நன்றாக உள்ளதோ என்று கவலைப் பட வேண்டாம்

    ReplyDelete
  4. ஹஹா...ஹா! சூப்பர் வானதி!
    என்னையும் மஞ்சள் ரோஸையும் பிரிக்க முடியாத மாதிரி ஒரு இமேஜ் க்ரியேட் பண்ணிட்டீங்க ! :)

    சந்தனா, அண்ணி-தண்ணிய பிரிக்க சதி..சீக்கிரம் வரவும்!

    அதிரா,எல்கே,ஜெய்லானி,வானதி,மகி, இமா,சந்தனா,அப்பாவி தங்கமணி இப்படி எல்லா கேரக்டர்ஸ்(!!)-ம் வைச்சு செம காமெடி பண்ணிட்டீங்க! நல்லா சிரிச்சு முடிச்சிருக்கேன்.

    ReplyDelete
  5. செம கற்பனை கலாட்டா...! பெண்மையின் நகைசுவையிலும் ஒரு மென்மை...!! ரொம்ப ரசித்தேன். வாழ்த்துகள் தோழி!!

    கொஞ்சம் வேலை அதிகமாக இருந்ததால் 4 நாட்களாக யாருக்கும் கமெண்ட்ஸ் போட இயலவில்லை தோழி.

    ReplyDelete
  6. நானும் பயந்துகிட்டேதான் படிச்சேன் ஹா..ஹா.. ஆனா நெனச்ச மாதிரி அவ்வளவு பீஸு பீஸா ஆக்கல ... யப்பா..ஒரு கோட்டோட போச்சு....!!!!

    ReplyDelete
  7. //ஜெய் : மல்லிகைப்பூப் போல அவ்வளவு மிருதுவா இருக்கு.

    தங்ஸ் : ( ஆனந்தக் கண்ணீருடன் ) நன்றி! நன்றி!! நன்றி!!//

    வேற வழி....கோட்ட தேடி அலைஞ்சதுல கல்லை தின்னாலே சும்மா செரிச்சுடும்.... இ..ட்..லி செரிக்காதா என்ன ?ஹி...ஹி...

    ReplyDelete
  8. //எல்கே : அ(ட) ப்பாவி அக்கா, நான் திமிங்கிலத்திற்கு சாப்பாடாக்கும் என்று நினைத்து, கடலில் எல்லாத்தையும் தூக்கி ....//

    பாத்துங்க திமிங்கிலத்துக்கு தொண்டை அடச்சிக்கப் போகுது . அந்த பழிப்பாவம் ஏன் ? க்கி..க்கி...

    ReplyDelete
  9. //சந்தனா : எலி என்ன பெருச்சாளியே வரையலாம். நான் தான் முதலில் வந்தேன். அப்படி தள்ளி நில்லுங்க. //

    செம உள் குத்தால்ல இருக்கு...

    //வானதி: அதிரா இருக்கின்றாவா? பேசலாமா? ( என்ன இந்த வீட்டில் பூனை தான் போனை எடுக்குமா? )//

    ஹி..ஹி...ஹா.....ஹா...க்கி..க்கி..

    ReplyDelete
  10. கெட் டு கெத‌ர் ந‌ல்லா இருந்த‌துங்க‌.... ந‌ல்லா சிரிச்சேன்..

    ReplyDelete
  11. அட கெட்டுகெதரில் நானும் இருக்கேன்,நல்ல கற்பனை.

    ReplyDelete
  12. மொத்தத்தில் சூப்பர்....!!!

    ReplyDelete
  13. சூப்பர் கற்பனை.

    ReplyDelete
  14. சூப்பர்ர் கற்பனை வானதி!! நன்றாக ரசித்தேன்...

    ReplyDelete
  15. அடடா வாணீஈஈஈ கெட்டுகெதரில் முட்டைக்குப் போராடிக்கொண்டிருந்தமையால புளொக்குக்கெல்லாம் பதிவே போடமுடியாமல் போய்விட்டது..... என்னா ஒரு கற்பனை சமரின், கெட்டுகெதர், வெள்ளைகோடு, இட்லி அவிச்ச முட்டை.... ஆனால் இக் கெட்டுகெதரில் எல்லாமே இரவலாகவே இருக்கே....:).

    இப்பத்தானே கண்டுபிடிச்சேன், அடிக்கடி என் கனவிலே ஒருவர் வெள்ளைக்கோட்டோடு குட்டித்தாடியோடும்(ஒரு கற்பனைதான்:)) அடிக்கடி வருகிறார்.... அது ஜெய்..லானியோ? அந்தக் கோட் படம் இருந்தால் ஒருக்கால் போடுங்கோ வாணி கரெக்ட்டாக் கண்டுபிடித்திடுவேன்.

    என் முட்டையில பாதி ஜெய்..லானிக்கும் கொடுத்தாச்சோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

    ReplyDelete
  16. அது நீண்டு போச்சு அதுதான் இது....

    கடசியில இமா ஃபேஸ் பெயிண்டிங் போடவே இல்லையோ? வேணுமென்றே, தட்டிக் கீழ கொட்டியிருப்பா..... ஏனெண்டால் அவவுக்குப் போடவே தெரியாது:)..... கடவுளே... சந்து, இமா கன்போமா இங்கு இல்லைத்தானே???

    //( அதிராவின் வீட்டில்) போனில் பூனையின் சத்தம்

    மியாவ்...மியாவ்...மியாவ்/// என்னா ஒரு கற்பனை?:) பூனை வீட்டில எலியோ கத்தும்? எப்பவுமே மியா மியாவ் சத்தம்தான்.... வேணுமெண்டால் போன் பண்ணிப்பாருங்கோ.. போன் நம்பரை எழுதி மாறி ஜெய்..லானியின் வெள்ளைக்கோட்டில் வைபட்டு விட்டது கேட்டி வாங்கிக்கொள்ளுங்கோ மக்கள்ஸ்ஸ்..

    ReplyDelete
  17. எல்கேயைக் காணவில்லையே?? ஏன் வாணி??, திமிங்கிலத்துக்கு உண்மையிலயே டிஷேட் கிடைச்சுட்டுதோ?:).

    அதாரது தங்ஸ்ஸ்ஸ்.

    ஆசியாவின் பிறியாணியைச் சாப்பிட விடாமல் பண்ணிட்டீங்களே என்னை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    //சந்தனா : எலி என்ன பெருச்சாளியே வரையலாம். நான் தான் முதலில் வந்தேன். அப்படி தள்ளி நில்லுங்க/// சந்து கெட்டுகெதரிலுமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்.

    விடமாட்டேன்... ஜெய்..லானீஈஈஈஈஈஈஈஈஈ எங்கே மீதித் 90 முட்டைகள்.....

    கெட்டுகெதர் அருமையாக இருந்தது வாணி, வயிறுதான் நிறையவில்லை, முகத்திலும் பூனைக்குட்டி வரையவில்லை:(.

    ReplyDelete
  18. சூப்பர் வாணி! நல்ல கலாட்டா... அதிலும் பின்னூட்டத்திலும் ஒரே அடி தடிதான்...மீ லைக் இட் அ லாட் !!!

    ReplyDelete
  19. @@@athira s//கெட்டுகெதர் அருமையாக இருந்தது வாணி, வயிறுதான் நிறையவில்லை, முகத்திலும் பூனைக்குட்டி வரையவில்லை:(. //

    பாத்து பேபி அதிரா... வாணி இன்னெரு பதிவு போட்டு கலக்கிடப்போறாங்க...!!!

    //விடமாட்டேன்... ஜெய்..லானீஈஈஈஈஈஈஈஈஈ எங்கே மீதித் 90 முட்டைகள்....//

    அந்த பத்து முட்டைக்குள்ள இருக்கே கவனிக்கலையா ??!!!

    //இப்பத்தானே கண்டுபிடிச்சேன், அடிக்கடி என் கனவிலே ஒருவர் வெள்ளைக்கோட்டோடு குட்டித்தாடியோடும்(ஒரு கற்பனைதான்:)) அடிக்கடி வருகிறார்.... அது ஜெய்..லானியோ? //

    ஏன் கையில ஸ்டெத் இல்லையா ?!! அதும் வச்சா டாக்டர் ஜெய்லானின்னு சொன்னா நல்லா இருக்காது

    ஹி.ஹி...க்கி..க்கி...ஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  20. ஜெய்லானி said...
    ஏன் கையில ஸ்டெத் இல்லையா ?!! அதும் வச்சா டாக்டர் ஜெய்லானின்னு சொன்னா நல்லா இருக்காது
    ஹி.ஹி...க்கி..க்கி...ஈஈஈஈஈஈஈ//ஆ.... முன்பு வக்கீல்... பின்பு...தத்துவ அறிஞர்... இப்ப டாக்டரோஓஓஓஓஓஓஒ கடவுளே... பேபி அதிரா பியிண்ட் பண்ணிட்டா.... வாணீஈஈஈஈஈஈஈஈஈ மச மச எனப் பார்த்துக்கொண்டு நிற்காமல்.... குளிரில்லாத தண்ணி கொண்டோஓஓஓஓஓஓஓஓஓடி வந்து கவனமா மேக்கப்:) கலைந்திடாமல் தெளியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  21. எல்கே, வடையா? இட்லி தான் இருக்கு.

    // எப்படியோ தாங்க்ஸ் வாயால அப்பாவி பட்டம் //

    ம்ம்.. நீங்கள் அப்பாவி தான். ஹையோ! அடுத்த விருது எனக்குத் தான்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  22. //ம்ம்.. நீங்கள் அப்பாவி தான். ஹையோ! அடுத்த விருது எனக்குத் தான்./

    sure

    ReplyDelete
  23. Mahi,
    // அண்ணி-தண்ணிய பிரிக்க சதி..சீக்கிரம் வரவும்! //
    ஓ! அப்படியா! யார் தண்ணி ??? தண்ணியை ரொம்ப நாட்களாக காணவில்லை.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  24. கௌசல்யா, மிக்க நன்றி. நேரம் கிடைக்கும் போது வாங்க. எனக்கும் நேரம் கிடைப்பது குறைவு.


    LK,
    //எதுவுமே இல்லாத நேரத்துல, எது கிடைச்சாலும், அருமையா இருக்கும், அப்படித்தானே இந்த இட்லியும் ... யாரும் இட்லி நன்றாக உள்ளதோ என்று கவலைப் பட வேண்டாம் //

    ஐயோ! இந்த தங்ஸ் எங்கே?

    ReplyDelete
  25. ஜெய்,
    //யப்பா..ஒரு கோட்டோட போச்சு.//
    ம்ம்.. கோட்டோடு போச்சே! என்ன 200 டாலர் கோட் போன சோகம் கொஞ்சம் கூட இல்லையா?

    // கல்லை தின்னாலே சும்மா செரிச்சுடும்//
    என்ன? தங்ஸின் இட்லி கல்லா?. தங்ஸ் வந்து எல்லோரையும் ஒரு வழி பண்ணப் போறாங்க.
    //பாத்துங்க திமிங்கிலத்துக்கு தொண்டை அடச்சிக்கப் போகுது . அந்த பழிப்பாவம் ஏன் ? க்கி..க்கி...//
    ஐயோ! திரும்பவும் உங்கள் இட்லியின் புகழுக்கு களங்கம் வந்து விட்டது.

    செம உள் குத்தால்ல இருக்கு...

    அடடா! அப்படி எதுவும் உள் குத்தல் இல்லை.

    மிக்க நன்றி!!

    ReplyDelete
  26. நாடோடி, மிக்க நன்றி.

    மேனகா, மிக்க நன்றி.

    ஜெய், மிக்க நன்றி.

    ஆசியா அக்கா, மிக்க நன்றி.

    ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.

    ReplyDelete
  27. // குட்டித்தாடியோடும்(ஒரு கற்பனைதான்:)) அடிக்கடி வருகிறார்.... அது ஜெய்..லானியோ? //
    குறுந்தாடி என்றால் அது சயன்டிஸ்ட் ஆஆஆ கூட இருக்கலாம். அப்படி தானே தமிழ் படங்களில் காட்டுவார்கள்.

    //ஆனால் இக் கெட்டுகெதரில் எல்லாமே இரவலாகவே இருக்கே....:).//
    இரவல் தானே இனிக்கும், அதீஸ். சொந்தமாக எல்லாம் செய்தால் என்ன சுவாரஸ்யம்.

    கோட் படம் ....இருங்கோ தேடி பார்க்கிறேன்.

    // ஏனெண்டால் அவவுக்குப் போடவே தெரியாது//
    இமாக்கு தெரியாதோ??!! கடவுளே இமா எங்கிருந்தாலும் வரவும். இமாவுக்கு தெரியாது என்று சொல்லிப் போட்டு, பூனைக்குட்டி வரையவில்லை என்று புகாரும் வாசித்தால்... படிக்கிற எனக்கே எவ்வளவு கோப..ம் வருது. இமாக்கு எம்பூட்டு கோபம் வரும்!!!!

    அதிரா, என்னது தங்ஸ் தெரியாதா?? இட்லி எப்படி செய்ய வேண்டும் என்று பதிவு போட்டு கலக்கியவர். இந்த லிங் பாருங்கள்.
    http://appavithangamani.blogspot.com/

    குளிரில்லா தண்ணி என்றால்? சுடுதண்ணீயோ??? அது தெளித்து ஜெய்யை எழுப்பியாச்சு.
    ஜெய், இனிமேல் கொஞ்ச நாட்களுக்கு எல்லோரையும் கவனிக்க வேண்டும். அப்ப தான் இன்னோரு கெட் டு கெதர் எழுதலாம்.

    மிக்க நன்றி, ஜெய் & அதீஸ்.

    ReplyDelete
  28. இலா, மிக்க நன்றி. பதிவுகளை விட பின்னூட்டங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். உண்மைதான். வரவுக்கு நன்றி.

    ப்ரியமுடன் வசந்த், நல்வரவு.

    ReplyDelete
  29. மிகவும் அருமையான கெட்டுகெதர்....நல்லா எழுதி இருக்கின்றிங்க...வாழ்த்துகள்...

    ReplyDelete
  30. //எல்கேயைக் காணவில்லையே?? ஏன் வாணி??, திமிங்கிலத்துக்கு உண்மையிலயே டிஷேட் கிடைச்சுட்டுதோ?:).//

    aathira nanthane first comment potruken .. en kanalinu sollareenga

    ReplyDelete
  31. //படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!// என்னத்தச் சொல்லுறது, என்னத்த விடுறது!! :D

    வரிக்கு வரி,வார்த்தைக்கு வார்த்தை, பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் சிரிப்பு. ;)

    நான் டிஷூ ஃபக்டரியில வேலைக்குச் சேரப்போறேன். ;)

    ReplyDelete
  32. Hy Vanathy,
    First time here...
    You got nice space with lovely collection of stories.
    Happy to follow u.
    Do drop in at my space sometime.

    ReplyDelete
  33. கீதா, மிக்க நன்றி.

    அதீஸ், கேட்டுதோ? எல்கே திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்து போட்ட பதிவு வந்தாச்சு..
    ஜெய்யின் பழைய கோட் படம் மேலே இருக்கு பாருங்கள்.

    இமா, மிக்க நன்றி. டிஷூ ஃபாக்டரியில் வேலை எனக்கும் வேணும்.

    ஜெய், மிக்க நன்றி. கட்டாயம் வருகிறேன். வரவிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  34. வானதி நான் லேட்டா வரதால கெட்டு கெதரில் என்னை சேர்த்துக்க்லையா?

    ReplyDelete
  35. ரொம்ப சிரிப்பு ஹி ஹி

    ReplyDelete
  36. //அதிரா, என்னது தங்ஸ் தெரியாதா?? இட்லி எப்படி செய்ய வேண்டும் என்று பதிவு போட்டு கலக்கியவர். இந்த லிங் பாருங்கள்//

    ஏம்மா, நான் எவ்ளோ நல்ல பதிவெல்லாம் போட்டு இருக்கேன்... இந்த லிங்க் தான் குடுக்கணுமா... அந்த அதிரா பொண்ணு பாத்த வேகத்துல தலை தெறிச்சு ஒடரதுல என்ன சந்தோஷம் வானதி உங்களுக்கு? ஹும்.... எதிரிங்க அணி பலமாகிகிட்டே போகுதே...

    ReplyDelete
  37. //LK said... எதுவுமே இல்லாத நேரத்துல, எது கிடைச்சாலும், அருமையா இருக்கும், அப்படித்தானே இந்த இட்லியும் ... யாரும் இட்லி நன்றாக உள்ளதோ என்று கவலைப் பட வேண்டாம் //
    ஏன்? ஏன்பா ஏன்? ஏன் இந்த கொலை வெறி? இட்லி பார்சல் ஆன் தி வே....

    //ஜெய்லானி said... வேற வழி....கோட்ட தேடி அலைஞ்சதுல கல்லை தின்னாலே சும்மா செரிச்சுடும்.... இ..ட்..லி செரிக்காதா என்ன ?ஹி...ஹி... //
    //பாத்துங்க திமிங்கிலத்துக்கு தொண்டை அடச்சிக்கப் போகுது . அந்த பழிப்பாவம் ஏன் ? க்கி..க்கி...//

    யு டூ ஜெய்லானி....உங்கள ரெம்ப நல்லவங்கன்னு சப்போர்ட் பண்ணி இப்போ தான் கமெண்ட் போட்டேன்.... யார் அங்கே? தூங்குங்கள் அந்த கமெண்ட்ஐ....

    ReplyDelete
  38. //அடப்பாவி! இரு உன்னை திமிங்கிலத்திற்கு டிசர்ட்டா குடுக்கிறேன்//
    இது வேணா நல்ல ஐடியா... இந்த பதிவுல எனக்கு ரெம்ப பிடிச்ச லைன் இது...

    //எனக்கென்னவோ எல்கே மீது தான் சந்தேகமா இருக்கு//
    அதே அதே...குட் going ..... இப்படியே maintain பண்ணுங்க....

    //அப்பாவி எல்கேயையும்//
    என்னை கேக்காம இப்படி ட்விஸ்ட் எல்லாம் வெக்கறது சரி இல்ல... LK ங்கற வார்த்தையும் & அப்பாவிங்கற வார்த்தையும் ஒண்ணா சொன்னா சரியா வரலியே.... சரி சரி....

    //அதிரா : இட்லி அருமை.
    ஜெய் : மல்லிகைப்பூப் போல அவ்வளவு மிருதுவா இருக்கு//
    ஜெய் & அதிரா வாழ்க வாழ்க....

    //இது தான் ஜெய்யின் கோட்!//
    ஹய்யோ ஹய்யோ.... பாவம் ஜெய்... (என்ன இருந்தாலும் என்னோட இட்லிய மல்லிகைபூனு சொன்னாரே....)

    ReplyDelete
  39. LK said...
    //எல்கேயைக் காணவில்லையே?? ஏன் வாணி??, திமிங்கிலத்துக்கு உண்மையிலயே டிஷேட் கிடைச்சுட்டுதோ?:).//

    aathira nanthane first comment potruken .. en kanalinu sollareenga//// வாணீஈஈஈஈ, நான், எல்கே பெரியவர் என நினைத்துப் பகிடி விட்டிட்டேன்... ஆனால் அவரின் பதிலைப்பார்க்க.... அவர் எல்கேஜி லயேதான்:) இருக்கிறார்....முறைக்கக்கூடாதூஊஊஊஊ.

    எல்கே.. நான் நகைச்சுவையாகத்தான் அப்படிக் கேட்டிருந்தேன்... புரியவில்லையோ?.

    அதுதான் ஜெய்..லானியின் கோட்டோ? கடவுளே!!! இன்று என் நித்திரை போச்சேஏஏஏஏஏஏஏஏ மீ... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  40. இமா said...நான் டிஷூ ஃபக்டரியில வேலைக்குச் சேரப்போறேன். ;)/// அப்போ, இப்ப அங்கே இல்லையோ? சாரி.. நோ சொறி... நான் அங்கதானாக்கும் வேலை என நினைச்சுட்டேன்....

    இமா ஒரு பிங் டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  41. அப்பாவி தங்கமணி said...//ஏம்மா, நான் எவ்ளோ நல்ல பதிவெல்லாம் போட்டு இருக்கேன்... இந்த லிங்க் தான் குடுக்கணுமா... அந்த அதிரா பொண்ணு பாத்த வேகத்துல தலை தெறிச்சு ஒடரதுல என்ன சந்தோஷம் வானதி உங்களுக்கு? ஹும்.... எதிரிங்க அணி பலமாகிகிட்டே போகுதே...///

    மிக்க நன்றி வாணி, லிங் தந்தமைக்கு, பார்த்திட்டேன், நன்றாகவே இருக்கு...... இருப்பினும் என்னையறியாமல் ஏதோ ஓர் உதறல்:), போன வேகத்தைவிட அதி... வேகமாக திரும்பி வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)
    ஏன் எதுக்கென்றெல்லாம் ஆரும் குறுக்க கேள்வி கேட்கப்பூடாதூஊஊஊஊ.

    ReplyDelete
  42. //
    எல்கே.. நான் நகைச்சுவையாகத்தான் அப்படிக் கேட்டிருந்தேன்... புரியவில்லையோ?.//

    purinjathu ...
    //நான், எல்கே பெரியவர் என நினைத்துப் பகிடி விட்டிட்டேன்..//

    naan sinna payyanaakaum periyavar illa

    ReplyDelete
  43. வான்ஸ்!! உங்க கடை கோட் நல்லா இருக்கு..ஹி..ஹி,,யப்பா ..ஆள விடு சாமீ..

    நல்ல வேளை 90 முட்டைய மறந்துட்டாங்க..க்கி..க்கி... இப்ப ஐட்லி..ச்சே. இட்லிக்கு பின்ன ஆட்கள் இருக்கினம்..

    ReplyDelete
  44. aurmaiana pathivu, pinuutam padithu ha ha ha....

    ReplyDelete
  45. //ஏன் எதுக்கென்றெல்லாம் ஆரும் குறுக்க கேள்வி கேட்கப்பூடாதூஊஊஊஊ//

    kekamattom. reason terium

    ReplyDelete
  46. ஜலீலா அக்கா, நீங்கள் சீனியர். உங்களை வைச்சு காமெடி... அந்த ஐடியா சரிவருமா??
    மிக்க நன்றி, அக்கா.

    தங்ஸ், நான் கைவலிக்க இவ்வளவு டைப் பண்ணி இருக்கிறேன். நீங்கள் ஒரு வரியை மட்டும் பிடித்து இருக்கு என்று சொல்றது சரியில்லை.
    // அந்த அதிரா பொண்ணு //
    அதிரா பொண்ணா??? ஹிஹி... அவங்க எனக்கு பாட்டி முறை.

    ReplyDelete
  47. அதீஸ், கோட் எப்பூடி?

    ஜெய், என் கடை கோட் நல்லாயிருக்கா?? ம்ம் ... நன்றி. இதை வாங்கிய உங்கள் அம்மாவிற்கும் நன்றி சொல்லுங்கோ.

    மைதிலி, வரவிற்கு மிக்க நன்றி.

    எல்கே,
    //kekamattom. reason terium//
    எனக்கு மட்டும் அந்த காரணம் சொல்லுங்கோ.

    ReplyDelete
  48. //அவங்க எனக்கு பாட்டி முறை//

    appa enakum paattithaan..

    ReplyDelete
  49. பதிவு அரைப்பக்கம்ன்னா பின்னூட்டம் மூணு பக்கத்துக்கு ஓடுது... மெய்யாலுமே ஒரு கெட் டு கெதர் ஃபீலிங்.. நாளைக்கு பின்னூட்டத்தையெல்லாம் படிச்சுப் பாத்துட்டு இன்னொரு பின்னூட்டம் போடறேன்.. ஓக்கை?

    பதிவு முழுக்க புன்னகைத்துக் கொண்டேயிருந்தேன்.. நன்றி வானதி.. நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு..

    மஹி.. ஹி ஹி.. அதெல்லாம் கவலைப்படாதீங்க.. ஆனா நாந்தான் முதல்ல போட்டுக்குவேன் சரியா?

    ReplyDelete
  50. //// அந்த அதிரா பொண்ணு //
    அதிரா பொண்ணா??? ஹிஹி... அவங்க எனக்கு பாட்டி முறை. //

    எனக்கு என் பாட்டியின் அம்மா முறை...ஹி..ஹி..

    ReplyDelete
  51. ;) திரும்ப மெதுவாக வந்து பின்னூட்டம் எல்லாம் படித்துப் பார்க்க வேணும். ;)

    ReplyDelete
  52. LK said...
    //purinjathu ...
    //நான், எல்கே பெரியவர் என நினைத்துப் பகிடி விட்டிட்டேன்..//

    naan sinna payyanaakaum periyavar illa/// ஓ அப்பூடியோ?:), இனிமேல் நேசறிப் பகிடிகள் மட்டும்தேன்.....:).

    vanathy said...
    அதீஸ், கோட் எப்பூடி?// ஆ... மறக்கவே விடமாட்டினம்போல இருக்கே.. இண்டைக்கும் என் அருமந்த நித்திரை போச்சே:).

    Lk said...
    //அவங்க எனக்கு பாட்டி முறை//
    appa enakum paattithaan..///// karrrrrrrrrrrrrrrrrr

    ஜெய்லானி said...
    //// அந்த அதிரா பொண்ணு //
    அதிரா பொண்ணா??? ஹிஹி... அவங்க எனக்கு பாட்டி முறை. //

    எனக்கு என் பாட்டியின் அம்மா முறை...ஹி..ஹி../// karrrrrrrrrr * 100 *100

    ReplyDelete
  53. சூப்பர் கெட் டு கெதர் ...வானதி

    எங்கள தான் கூப்பிடல.. சரி ஓகே..
    அடுத்த முறை பாக்கலாம்.. :D :D

    ReplyDelete
  54. போனா போகுது.. ஜெய்-க்கு ஒரு வெள்ளை கோட் அமெரிக்க ல இருந்து வாங்கி குடுத்துரலாம வாணி?? :)

    ReplyDelete
  55. ஆனந்தி, நன்றி.
    கட்டாயம் வாங்கலாம். எல்லோரும் டொனெஷன் குடுங்கப்பா!!!!

    சரவணன், வாங்க. மிக்க நன்றி.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!