எங்கள் மக்களுக்கு சுட்டுப்போட்டாலும் இங்கிதம் வரவே வராது என்பது சரவணாவின் கருத்து. உள்நாட்டில் எப்படியோ இருந்து தொலையுங்கள், ஆனால் வெளிநாடு வந்த பின்னராவது சில ஜென்மங்கள் திருந்தவே திருந்தாது என்று அங்கலாய்ப்பான்.
மனைவி இந்தியன் கடைக்குப் போக வேண்டும் என்று சொன்னாலே கடுப்பாகி விடுவான். அங்கு வருபவர்கள் பெரும்பாலனவர்கள் ஏதோ கடமைக்கு வாழ்பவர்கள் போலத் தோன்றும். முகத்தில் சிரிப்போ, சந்தோஷமோ கடுகளவும் இருக்காது. மெல்ல புன்னகைத்தால் எங்கே இவன் என் தலையில் மிளகாய் அரைத்து விடுவானோ என்பது போல ஒதுங்கிப் போவார்கள். கதவைத் திறந்து உள்ளே போக எத்தனித்தால் கூடவே கும்பலாக முண்டியத்துக் கொண்டு நுழைவார்கள். நன்றி சொல்வார்கள் என்று எதிர்பார்ப்பது பெரிய முட்டாள்தனம் என்பான்.
கடைகாரர் அதைவிட மோசம். ஹிந்தியில் பேசியே கொல்வார். ஹிந்தி தெரியாது என்று சொன்னாலும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார். ஒரு அசட்டுச் சிரிப்புடன் விளங்குறாப் போல தலையை ஆட்டி வைப்பான். அதை விடக் கொடுமை கஸ்டமர்கள் இருக்கும் போது வேறு யாருடனாவது போனில் அரட்டை நடக்கும். ஏதாவது கேள்வி கேட்டாலும் மையமாக தலையசைத்து வைப்பார்கள். சரவணாவுக்கு ஆத்திரமாக வரும். வாங்கிய பொருட்களை எல்லாம் அந்தாள் தலையில் கொட்டி விட வேண்டும் போல கோபம் வரும். மனைவி சிரிப்பாள். யார் எப்படி இருந்தா உனக்கென்ன ஆச்சு என்பாள்.
இதெல்லாவற்றையும் விடக் கொடுமை நம்ம ஆட்கள் செல் போனில் பேசுவது என்பான். பக்கத்தில் யார் நின்றாலும் கவலைப்படாமல் பெரிய பிரசங்கமே நடக்கும். போன வாரம் ரெஸ்டாரன்ட் போன போது ஒரு ஆசாமி செல்போனில் பண்ணிய அலப்பறை பார்த்து நொந்து போனான். செல்போனை பிடுங்கி கொதிக்கும் சாம்பாரில் எறிய வேண்டும் போல வெறி உண்டானது.
சரவணா இப்படி கோபத்தை எல்லாம் அடக்கி வைத்து, ஒரு நாள் பொங்கியெழுந்து விட்டான். வடமெரிக்காவின் பெரும் பகுதிகளில் மின் தடங்கல் ஏற்பட்டது. பஸ், புகையிரதம் என்று எதுவுமே இயங்கவில்லை. கார்களுக்கு எரிபொருள் போட முடியாமல் மக்கள் பரிதவித்துப் போனார்கள். பெட்ரோல் போடுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். சரவணாவும் போய் மணிக்கணக்கில் காத்திருந்தான். அப்போது ஒரு கார் கிடைத்த இடைவெளியில் நுழைந்து கொண்டது. மணிக்கணக்கில் காத்திருந்த பலரும் முகம் சுழித்து, முணுமுணுத்தார்களே ஒழிய யாரும் இடத்தை விட்டு நகரவேயில்லை.
சரவணாக்கு மற்றவர்களைப் போல பார்த்துக் கொண்டிருக்க பொறுக்கவில்லை. மதியம் சாப்பிடாத எரிச்சலும் சேர்ந்து கொண்டது. இறங்கி விறு விறுவென நடந்து போனான். அந்த நபர் சரவணாவைக் கண்டதும், " வாங்க அண்ணா, நலமா? " என்றான் தமிழில்.
" என்ன ஓய், நீர் இப்பதான் மரத்திலிருந்து இறங்கி வந்தீராக்கும். உம்ம தலையில் என்ன களிமண்ணா? இவ்வளவு பேரும் காத்திருப்பது உம்ம கண்ணில் விழவேயில்லையா? ? ", காச்சு மூச்சென்று கத்திய சரவணாவை பார்த்ததும் அந்த நபர் காரை திருப்பிக் கொண்டு ஓடிவிட்டான். வெற்றிச் சிரிப்புடன் சிங்கநடை போட்டு வந்த சரவணாவை அங்கு நின்றவர்கள் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். " டேய் நீ சிங்கம்டா ", என்று தன்னைத் தானே பாராட்டிக் கொண்டான். ஏதோ சாதித்த திருப்தி உண்டானது.
ஆஆஆஆஆஆஆஆஅ.. எனக்குத்தான் வடை.... நானும் இப்பத்தான் வந்தேன் புளொக் பக்கம்... சட்னியும் எனக்குத்தான்... ஆ.....
ReplyDeleteகடைகாரர் அதைவிட மோசம். ஹிந்தியில் பேசியே கொல்வார். ஹிந்தி தெரியாது என்று சொன்னாலும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார்./// கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க....
ReplyDeleteசபாஷ் சரவணா!!!!.... அனுபவமா? கதையா? எதுவாய் இருந்தாலும் நல்லா இருக்கு...
ReplyDeleteதமிழிஷ் வோட்டு பட்டை இருக்கு ...இன்னும் இணைக்க வில்லையா? சீக்கிரம் இணையுங்கள்..
ReplyDeleteசரவணா யாரு? உங்க ரங்க்சா??
ReplyDelete//நானும் இப்பத்தான் வந்தேன் புளொக் பக்கம்... சட்னியும் எனக்குத்தான்... ஆ...//
ReplyDeletegrr mundikittengala
எ.கொ.ச.இ ???? :)))
ReplyDeleteவாழ்க வளமுடன்
LK said...
ReplyDelete//நானும் இப்பத்தான் வந்தேன் புளொக் பக்கம்... சட்னியும் எனக்குத்தான்... ஆ...//
grr mundikittengala//// ஹா... ஹாக்...ஹாக்.... ஹா..... வடையும் சட்னியும் சூப்பர்...... இப்போ காத்து “என் பக்கம்”:).
ஹைஷ்126 said...
எ.கொ.ச.இ ???? :)))//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அ.கோ. செ.பு
அனுபவம் புதுமை!!...
ReplyDeleteபொறுத்தது போதும்னு பொங்கி எழுந்தாச்சு... சூப்பர்.. :-))
ReplyDeleteதலைப்ப பார்த்து பயந்து கிட்டே வந்தேன் ...என்ன ஆகுமோ ஏதாகுமோன்னு.. நல்ல வேளை க...தை..
ReplyDeleteகதை சூப்பர்..
ReplyDelete//எ.கொ.ச.இ ???? :)))//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அ.கோ. செ.பு //
ReplyDeleteஎ .ந.இ .தெ.
நல்ல அனுபவம் வானதி! :)
ReplyDeleteசூப்பர்ப்..ஃபினிஷிங்...
ReplyDeleteஇது முழுக்க முழுக்க உண்மை நிகழ்வுகள்தான். இந்தியாவில் மட்டுமில்லை, எங்கெல்லாம் நாம் இருகிறோமோ அங்கெல்லாம் இந்த மாதிரி கேடு கெட்ட, அறிவற்ற ஜென்மங்கள் நிறைய போது இடங்களில் பார்க்கலாம் .இதுபோன்ற அனுபவங்கள் மிக சாதரணமாய் போய்விட்டன.அல்ப புத்திக்காரர்கள் ,சுயநலமிகள்,
ReplyDeleteபொதுஇடம் என்ற பண்பாடு அற்றவர்கள்.இதுதான் இந்தியாவின் தேசிய குணம்.
" டேய் நீ சிங்கம்டா ", என்று தன்னைத் தானே பாராட்டிக் கொண்டான். ஏதோ சாதித்த திருப்தி .
ReplyDeleteசூப்பர்,வானதி.
'நல்ல கதை வாணி,'
ReplyDelete...என்று சொல்லலாம் என்று பார்த்தால் ஒவ்வொருத்தர் //சரவணா யாரு? உங்க ரங்க்சா??//, //நல்ல அனுபவம் வானதி!// என்று எல்லாம் சொல்லி இருக்கிறாங்களே!! :)
நிச்சயமாக கதைதானே வாணி!! ;)
அதீஸ், வடை, சட்னி, & இட்லி உங்களுக்கே. வருகைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteநாடோடி, மிக்க நன்றி.
எல்கே, மிக்க நன்றி. என் ரங்ஸ் அல்ல. இது பல இந்திய நண்பர்களின் புலம்பல்கள்.
ஹைஷ் அண்ணா, நன்றி.
அதீஸ், அ.கோ.செ.பு என்றால் என்ன? என்னை திட்டிவில்லையே?
மேனகா, ஆனந்தி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ஜெய், பயப்படாமல் வாங்கோ. உங்களைப் பற்றி எதுவுமே இல்லை. அதற்கு கொஞ்ச நாட்கள் பொறுங்கோ எழுதுறேன் ( சும்மா ஃப்லிம் )
ReplyDeleteஜெய், மிக்க நன்றி.
மகி, மிக்க நன்றி.
வசந்த், மிக்க நன்றி.
கக்கு மாணிக்கம், மிக்க நன்றி. சரியா சொன்னீர்கள். நான் என் அனுபவங்களை வைத்தே எழுதினேன்.
ஜெயதேவா, வருகைக்கு மிக்க நன்றி. இதில் நான் சொன்னது அடிப்படை நாகரீகம் பற்றியதே. உங்களைப் போல நானும் நிறைய எழுதலாம். ஆனால், மற்றவர்களின் மனதை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.
ReplyDeleteமீண்டும் நன்றிகள்
நல்ல கதை வாணி
ReplyDeleteஆனா நம்ம மக்கள் மட்டும்னு சொல்ல முடியாது.... பெரும்பாலும் எல்லாரும் அவங்க அவங்க community குள்ள இப்படி தான் இருக்காங்கன்னு தோணுது.... நல்ல Narration style Vanathy
தங்ஸ், சரியா சொன்னீங்க. நிறைய இருக்கு எழுத தயக்கமா இருக்கு. அறுசுவையில் போன வருடம் இதற்காக ஒரு இழை தொடங்கினார்கள். நான் சொல்லத் தயங்கிய விடயங்கள் பலவற்றை வேறு சில தோழிகள் எழுதினார்கள். ஆச்சரியமாக இருந்திச்சு. அதே சமயம் எனக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் இதே அனுபவங்கள் நடந்திருக்கு என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். மற்றும்படி எங்கள் நாட்டவர்களை தாழ்த்தி, வெளிநாட்டவரை உயர்த்திக் கூற வேண்டும் என்ற நோக்கத்திற்காக எழுதவில்லை.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
இங்கிதம் என்ற ஒன்று எங்கும் குறைந்து (மறைந்து) கொண்டுதான் வருகிறது...! நல்ல பதிவு தோழி...
ReplyDeleteசரவணா கலக்குற போ...சில சமயம் நானும் அப்படி தான்....
ReplyDeleteஹாஹ்ஹா.. எனக்கு சரவணன் மாதிரியேதும் அனுபவமில்லையே..
ReplyDeleteஉ
ReplyDeleteஎன்ன சொல்றது! குட்டி பாப்பாக்கு ஒன்னும் புரில்லை!
நேக்கு மனோகரா வஜனம் தான் தெர்யும்!