தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 4
வாழைக்காய் - 1
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
மஞ்சள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/2 கப்
மிளகாய் - 5
மிளகாய் தூள் - 11/2 மேசைகரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லிதழை - சிறிது
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு
செய்முறை:
வெங்காயம், மிளகாய் பொடியாக வெட்டி வைக்கவும். வாழைக்காயின் மேல் தோலை சீவி விட்டு உள்ளே இருக்கும் தோல், சதைப்பகுதியை உப்பு, மஞ்சள் போட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும்.
கத்திரிக்காயை நீளவாக்கில் அரை இஞ்ச் வட்டமாக வெட்டவும்.
சட்டியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு கத்தரிக்காய்களை போட்டு மூடி, மெல்லிய தீயில் பொரித்தெடுக்கவும- .
வாழைக்காய், கத்திரிக்காய், தேங்காய் துருவல், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் சட்டியில் போட்டு, கையினால் நன்கு பிசைந்து கொள்ளவும்.
சட்டியில் எண்ணெய் விட்டு, கடுகு போட்டு வெடித்ததும் சீரகம் போடவும். பிறகு, வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் போட்டு வதக்கவும்.
ஓரளவுக்கு வெங்காயம் வதங்கியதும், வாழைக்காய் கலவையை போட்டு கிளறவும்.
பச்சை வாடை போகும் வரை கிளறவும்.
பூண்டு, மிளகு குத்திப் போடவும்.
மல்லித்தழை தூவி இறக்கவும்.
சுவையான கத்தரிக்காய், வாழைக்காய் வறை தயார்.
சாதம்,புட்டு, இடியாப்பம் இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.