Thursday, February 25, 2010
இடியப்பம்
தேவையான பொருட்கள்:
அரிசி மா -3 கப்
அவித்த மைதா மா- 1/2 கப்
உப்பு -சிறிது
அரிசி மா, மைதா மா இரண்டையும் கலந்து கொள்ளவும். உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
சட்டியில் தண்ணீர் கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் சிம்மரில் விடவும்.
மாக் கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி மரக்கரண்டியால் குழைக்கவும். பந்து போல் திரண்டு வர வேண்டும்.
மாவை எடுத்து இடியப்ப உரலில் போட்டு, இடியப்ப தட்டில் பிழிந்து கொள்ளவும். இட்லிப் பானையில் தண்ணீரை கொதிக்க வைத்து இடியப்பங்களை வேக வைத்து( 10 நிமிடங்கள் வேக வைக்கவும்)எடுக்கவும்.சுவையான இடியப்பம் தயார். முட்டைச் சொதி, கறி வகைகள், பூண்டு மிளகு சொதி இதற்கு ஏற்ற சைட் டிஷ்.
குறிப்பு:
மா கட்டியில்லாமல் இருக்க வேண்டும்.
நான் மேற்சொன்ன அளவில் 35 இடியப்பங்கள் செய்யலாம்.
ஒரு செட் இடியப்பம் (12 இடியப்பங்கள்)ஸ்டீம் செய்ய 10 நிமிடங்கள் பிடிக்கும்.
குழந்தகளுக்கு பசும் பாலும், சீனியும் சேர்த்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
m.. a set for imma plz. ;)
ReplyDeleteImma, please help your self. This is like your house.
ReplyDeletetkz Vany. ;)
ReplyDeleteவாணி பார்க்கும் போதே சாப்பிடனும் தோனுது. எனக்கு கொஞ்சம் பார்சல் பிளீஸ்.
ReplyDeleteஇடியப்பம் செய்வது கொஞ்சம் காம்ப்ளிகேட்டட்-ஆஆஆஆ இருக்கு வானதி எனக்கு!!:)))))))))
ReplyDeleteநான் இது வரை மைதா மாவு சேர்த்தது இல்லை.செஞ்சு பாக்கிறேன்.
எடுத்து சாப்பிடுங்கோ, பிரபா.
ReplyDeleteமகி, நன்றி. மைதா சேர்த்து தான் நான் எப்போதும் செய்வேன்.
வானதி மைதா மாவு சேர்த்து செய்ததில்லை பார்க்க ராகி இடியாப்பம் போல் இருக்கு.
ReplyDeleteஜலீலா அக்கா, என் அம்மா எப்போதும் மைதா மா சேர்ப்பார்கள். நானும் அப்படியே பழகி விட்டேன். இது சிவப்பு அரிசி மாவில் செய்தேன். நன்றி.
ReplyDeleteஆசியா அக்கா, வாங்கோ. நல்வரவு.
ReplyDelete