Sunday, February 21, 2010
பார்லி கஞ்சி
தேவையான பொருட்கள்:
பார்லி -1/2 கப்
பால் -1/4 கப்
சீனி - விரும்பிய அளவு
உப்பு -சிறிது
பார்லியை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். சட்டியில் பார்லியை போட்டு, குறைந்தது 2 கப் தண்ணீர் விட்டு நன்கு அவிக்கவும். பார்லி வெந்ததும் ஒரு டம்ளரில் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். பார்லி தண்ணீர் சிறிது, பால், சீனி, உப்பு சேர்த்து கலக்கி குடிக்கவும்.
பார்லி உடம்பிற்கு மிகவும் சத்தானது. டயட்டில் இருப்பவர்கள் பாலின் அளவு, சீனியின் அளவை குறைத்து சாப்பிடலாம். எங்கள் வீட்டில் நான் அடிக்கடி செய்யும் எல்லோருக்கும் விருப்பமான கஞ்சி இதுவாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Never bought Barley so far..will buy it first, then will try this one! :)
ReplyDeleteபார்க்க ஆசையாகத்தான் இருக்கு. பார்க்கலாம்.
ReplyDeleteகப்பைச் சுற்றி பார்லியைக் கொட்டி வைத்திருப்பது பார்க்க அழகாக இருக்கிறது வாணி. ;)
என் கணவர் இந்த பார்லியை கண்டால் வாங்கி வந்து விடுவார். வீட்டில் அவ்வளவு பார்லி இருக்கு. இதற்கு பயந்தே என் கணவரை நான் கடைக்கு அனுப்புவதில்லை.
ReplyDeleteமிகவும் சுவையான, எளிதில் செய்யக்கூடிய கஞ்சி.
நல்ல சுவையான பார்லி கஞ்சி சூப்பர் வாணி. ஆனா பர்லி சூடுதான. நன்றி.
ReplyDelete