Friday, January 29, 2010

பூண்டு மிளகு சொதி


வாழைக்காய் - 1
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 2 பல்
மிளகு - 1 தேக்கரண்டி
மிளகாய் - 5
புளி கரைசல் - 4 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
தேங்காய் பால் - 3/4 கப்
மஞ்சள் - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
தண்ணீர் - 1/2 to 3/4 கப்

தாளிக்க:
வெங்காயம் - கொஞ்சம்
கடுகு - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் -சிறிது
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

வாழைக்காயின் மேல் தோலை சீவி விட்டு, உள்ளே இருக்கும் தோலை வெட்டி எடுக்கவும். அதை சட்டியில் போட்டு உப்பு, மஞ்சள் சேர்த்து வேகவைக்கவும்.

தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைக்கவும். மிளகாயை இரண்டு துண்டாக்கவும்.
வாழைக்காய் தோல் ஓரளவுக்கு வெந்தவுடன், வெங்காயம், மிளகாய் சேர்க்கவும்.

வெங்காயம், மிளகாய் வெந்ததும், மிளகாய்தூள், புளி
சேர்த்து பச்சை வாடை போகும் வரை வேக விடவும்.

இப்போது தேங்காய் பால் சேர்க்கவும்.
5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பூண்டு, மிளகு குத்திப் போடவும்.

தாளித்ததையும் சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

சுவையான பூண்டு, மிளகு சொதி தயார்.


இதை சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: காரம், புளி விரும்பினால் கூட சேர்த்துக் கொள்ளலாம்.
தேங்காய் பாலுடன் Evaporated milk(2%) மிக்ஸ் பண்ணியும் செய்யலாம்.

5 comments:

  1. வானதி நல்லாவே இருக்கு. நான் இந்த வாரத்தில் ஒரு நாள் செய்யலாம் என்று நினைத்துள்ளேன். செய்த பின் சொல்கிறேன்.

    ReplyDelete
  2. விஜி, நன்றி. நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்கள். என் கணவருக்கு மிகவும் பிடித்த டிஷ்.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!