Monday, February 1, 2010
Kids Coconut Roll
மா - 3/4 கப்
தேங்காய் பூ - 3/4 கப்
சீனி - 1/2 கப்
முட்டை - 1
பால் - 3/4 கப்
பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்
சினமன் தூள் - 1/4 டீஸ்பூன்
ஜாதிக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்
ஃபுட் கலரிங் - சிறிது
உப்பு - சிறிது
சட்டியில் தேங்காய் துருவல், தண்ணீர், சீனி, சினமன் தூள், ஜாதிக்காய் தூள், உப்பு எல்லாவற்றையும் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும்
தண்ணீர் வற்றி, ஓரளவு திக்காக (7-8 minutes) வரும்வரை கிளறி இறக்கவும்.
வேறு சட்டியில் பட்டரை மைக்ரோவேவ் அவனில் 15 செகன்ட்ஸ் உருக்கவும்.
பிறகு மா, முட்டை, உப்பு, பால் விட்டு நன்கு கட்டி இல்லாமல் மிக்ஸ் பண்ணவும். இறுதியில் ஃபுட் கலரிங் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும், மாவை ஊற்றி மெல்லிய தோசையாக பரவவும்
வெந்ததும் திருப்பி போடவும்
அதன் மேல் தேங்காய் கலவையை வைக்கவும்.
இருபுறமும் மடித்து விடவும்.
கோப்பையில் வைத்து, விருப்பமான பழங்களுடன் பரிமாறவும்.
சுவையான கோக்கனட் ரோல் தயார்.
குறிப்பு: குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான மாலைநேரச் சிற்றுண்டி.
Subscribe to:
Post Comments (Atom)
எனக்கும் சாப்பிட விருப்பமா இருக்கு வாணி. இப்போ நேரம் போதவில்லை. ஆனால் நிச்சயம் எப்பவாவது சுற்றி விடுவேன். எனக்கும் இந்த காம்பினேஷன் பிடிக்கும். ;)
ReplyDeleteImma, my hus and myself love this recipe more than our kids. My mom used to make this when I was little.
ReplyDelete