Wednesday, February 17, 2010

Patties


தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
சிக்கின் - 1 கப்(8 oz)
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
சின்ன சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் - பொறிப்பதற்கு

மாவு தயாரிக்க:
மைதா மா - 2 கப்
நீர் - 1/2 கப்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்

மாவை சட்டியில் எடுத்து, பட்டர் , உப்பு போட்டு நன்கு பிசையவும். பின்பு தண்ணீரை சிறிது, சிறிதாக விட்டு சப்பாத்தி மா பதத்திற்கு குழைத்து மூடியால் மூடி 2 மணி நேரம் வைக்கவும்.

சிக்கினை சுத்தம் செய்து, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் சேர்த்து தண்ணீர் விட்டு அவிக்கவும். உருளைக்கிழங்கை தண்ணீர் விட்டு நன்கு அவித்து, தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.

சிக்கினை தண்ணீர் நன்கு வற்றும் வரை அவிக்க வேண்டும்.

உருளைக்கிழங்கை சிறிய, சிறிய துண்டுகளாக மசித்து வைக்கவும். சிக்கினை எலும்பினை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

சட்டியில் எண்ணெய் விட்டு, கடுகு போட்டு வெடித்ததும், சீரகம், பட்டை போட்டு சிவந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

பிறகு கிழங்கு, சிக்கினை போட்டு கிளறி விடவும்.

மிளகாய்த்தூள், உப்பு போட்டு கிளறி, 1/2 கப் தண்ணீர் விட்டு, குழம்பு மிகவும் திக்காக வரும் வரை அடுப்பில் வைத்து கிளறி இறக்கவும்.

இப்போது மாவினை எடுத்து, மரப்பலகையில் வைத்து மாத்தூவி உருட்டவும்.
ஓரத்தில் சிறிது இடம் விட்டு கறியை வைக்கவும்.ஓரத்தில- விடுபட்ட மாவை எடுத்து கறியை மூடவும்.

ஒரு டின் அல்லது டம்ளரால் அழுத்தி வெட்டவும். அப்படியே அரை சந்திரன்(semi circle shape) போன்ற வடிவம் கிடைக்கும்.

இப்போது கறி வெளியே வராமல் சீல் பண்ண வேண்டும். ஒரு முள்ளுக்கரண்டி(fork) எடுத்து ஓரங்களின் மீது மெதுவாக அழுத்தவும்.


எல்லாவற்றையும் செய்து மா தூவிய தட்டில் வைக்கவும். அப்போது தான் எடுக்கும் போது பிய்ந்து விடாமல் வரும்.

சட்டியில் எண்ணெய் விட்டு சூடானது, பாட்டீஸ்களை போட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்பு:
சிக்கன் சேர்க்காமல் உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி சேர்த்தும் செய்யலாம்.

3 comments:

  1. இமா, நன்றி. பின் குறிப்பு உங்களை நினைத்தே எழுதினேன்.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!