Friday, February 19, 2010
வெந்தயம் வெங்காயம் குழம்பு
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 3
காய்ந்த மிளகாய் - 8
பூண்டு - 4 பல்
புளி - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி பவுடர் -1 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சின்ன சீரகம் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்பூ -1 1/2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் -1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் -சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தழை -விரும்பினால்
வெங்காயத்தை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். சட்டியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.சிறிது நேரத்தில் நீளவாக்கில் வெட்டிய பூண்டு, கறிவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம் மெல்லிய brown நிறமாகும் வரை வதக்கவும். பிறகு தட்டில் பேப்பர் டவலை போட்டு வதங்கிய வெங்காயத்தை அதில் பரவி விடவும்.
வெந்தயத்தை வெறும் சட்டியில் போட்டு ஓரளவு சூடாகும் வரை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
வேறு சட்டியில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் போட்டு நிறம் மாறும் வரை வறுத்து, இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து 1 நிமிடம் கழித்து இறக்கவும். இதனுடன் மல்லி தூள், மஞ்சள், மிளகு, சின்ன சீரகம் சேர்த்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் மிக்ஸியில் நன்கு அரைத்து( 2 முறை அரைத்துக் கொள்ளவும்) வடி தட்டில் வடித்து தண்ணீரை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சட்டியை அடுப்பில் வைத்து, இந்த அரைத்த தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். இதனுடன் புளி, உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போனதும் வதக்கிய வெங்காயம் சேர்த்து, நன்கு கொதித்து, எண்ணெய் மிதக்க ஆரம்பித்தவுடன் வெந்தயம் போட்டு 2 நிமிடங்களின் பிறகு இறக்கவும்.
விரும்பினால் கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
ரைஸ், புட்டு, இடியப்பம், cous cous உப்பு மா இவற்றுக்கு ஏற்ற பக்க உணவு.
Subscribe to:
Post Comments (Atom)
வானதி.. ஈசியா இருக்கு.. நான் செய்வதை விட வித்தியாசமா இருக்கு.. செஞ்சு பாக்கறேன்..
ReplyDeleteவானதி, உங்க ரெசிப்பி எல்லாமே எங்க வீட்டுல பேவரிட்..இந்தக் குழம்பும் கட்டாயம் எங்களுக்குப் பிடிக்கும்னுதான் நினைக்கிறேன்.
ReplyDeleteஅதென்னங்க cous cous உப்புமா?? புதுசா இருக்கே..விரைவில் அதன் ரெசிப்பியையும் எதிர்பார்க்கிறோம்.
இன்க்ரிடியன்ட்ஸ்-ஐ மெனக்கெட்டு அழகா அரேஞ் பண்ணிருக்கிங்க..நல்லாருக்கு காய்ந்த மிளகாய்-பூண்டு-கறிவேப்பிலை அரேஞ்ச்மென்ட்! :)
சந்தனா, நன்றி. நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்கள்.
ReplyDeleteமகி, அப்படியா??? மிகவும் சந்தோஷம். இதையும் செய்து பாருங்கள்.பாராட்டுகளுக்கு நன்றிகள்.
எல் போர்ட்.. பீ சீரியஸ்.. //செஞ்சு பாக்கறேன்..// என்று சொன்னா எவிடன்ஸ்ஸோட செஞ்சு காட்டணும்.
ReplyDeleteஎன்ன மகி, எனக்கு முன்னால வந்து நான் சொல்ல இருந்த கமன்டை சொல்லிட்டுப் போய்டீங்களே!! :)
வாணி, 'மிளகாய்ப்பூ' அழகாய் இருக்கு.