Monday, May 17, 2010

ஜிம்

ஜிம் எனப்படும் உடற்பயிற்சி செய்யும் இடங்களில் எனக்கு எப்போது ஒரு காதல். இதை படித்து விட்டு நான் ஏதோ ஜிம்மே கதியாக இருக்கும் ஆள் என்று நினைக்க வேண்டாம்.

ஜிம்களை பார்க்கும் போது என் மனதில் எழும் கேள்விகள் பல. அதில் ஒன்று, ஏன் எல்லா உடற்பயிற்சி நிலையங்களிலும் கண்ணாடியால் ஆன சுவர்களை அமைக்கின்றார்கள். வெளியே இருந்து உள்ளே உடற்பயிற்சி செய்பவர்களை பார்க்க கண் கோடி வேண்டும். ஒரு அழகிய ஆங்கில படத்தை slow motion இல் பார்ப்பது போல ஒரு பரவசம். ஆண்களும், பெண்களும் பாட்டு கேட்டு கொண்டோ, பேப்பர் படித்துக் கொண்டோ ட்ரெட்மில்லிலும், வேறு பெயர் தெரியாத உபகரணங்களிலும் கருமமே கண்ணாக இருப்பார்கள்.
கண்ணாடி சுவர் வழியாக தெரியும் இந்த காட்சியை பார்த்தாவது சில, பல ஜென்மங்கள் மெம்பர் ஆகி விடுவார்கள் என்ற நப்பாசையாக கூட இருக்கலாம். என்ன சொன்னாலும் இப்படி கண்ணாடிச் சுவரின் அப்பால் இருந்து உடற்பயிற்சி செய்வது ஒரு கவிதை தான். இது சொன்னால் புரியாது அனுபவித்தால் தான் விளங்கும்.

********************


என் உறவினரின் மகன், 10 வயது பொடியன். சிறு வயதிலே ஒபிஸிட்டி பிரச்சினை. குழந்தையாக இருக்கும் போது கொழுக், மொழுக் என்று இருந்தான். பெற்றோரும் எங்கள் பிள்ளை போல யாரால் பிள்ளை வளர்க்க முடியும் என்று கொண்டாடிக் கொண்டிருந்தனர். மருத்துவர் சொன்னார் வெயிட் குறைக்காவிட்டால் பெரிய பிரச்சினைகள் வர வாய்ப்புகள் அதிகம் என்று. சிறுவர்களுக்கான ஜிம்மில் பொடியன் சேர்க்கப்பட்டான். ஒரு பெரிய பையுடன் அவன் போகும் அழகே தனி தான்.

ஒரு நாள் அந்த பொடியனுக்கும், வேறு ஒருவருக்கும் நடந்த உரையாடல் பின்வருமாறு.

நபர் : ஏன்டா பொடியா அந்த பையில் என்ன இருக்கு?

பொடியன் : ஏன் கேட்கிறீங்கள் மாமா?

நபர் : இல்லை உன் சைஸிற்கும் அந்த பைக்கும் பொருத்தம் இல்லையே?

பொடியனின் அம்மா : அதெல்லாம் பொருத்தம் பார்த்து தான் வாங்கியது. நீ உன் வேலையை போய் பார்.

நபர் : நீயும் உன் மகனை ஜிம்முக்கு எவ்வளவு நாட்களாக அனுப்புகிறாய் அவன் உடம்பு குறையவே இல்லை ஏன் என்று யோசித்து பார்த்தாயா?
பொ.அம்மா : நீ என்னடா சொல்ல வருகின்றாய்?

(அந்த நபர் பொடியனின் பையை வலுக்கட்டாயமாக வாங்கி, அப்படியே கவிழ்த்து கொட்டுகின்றார். அதில் நொறுக்கு தீனிகள் நிறைய வெளியே வருகின்றது.)

நபர் : இப்ப விளங்குதா?
பொ.அம்மா : அடப்பாவி( டென்ஷனுடன் மகனை முறைக்கின்றார்)

சாப்பிட வேண்டிய வயதில் அவனின் நிலைமையை பார்க்க எனக்கு கவலையே வந்தது.

18 comments:

  1. இதுவும் ஒரு படிப்பினை தான்,சாப்பாடு கட்டுப்பாடு நிச்சயம் வேண்டும்,ஜிம் போனால் மட்டும் போதாது.

    ReplyDelete
  2. இந்தியாவில் இருந்த‌ போது நானும் ஜிம்முக்கு போனேன்... ம்ம்ம் இப்ப‌ பாலைவ‌ன‌த்துல‌ ஒண்ணும் ப‌ண்ண‌முடிய‌லை‌..

    ReplyDelete
  3. ஜிம்
    ஜம்முன்னு
    இருக்கு.

    ReplyDelete
  4. இதுவும் ஒரு படிப்பினை தான்.

    ReplyDelete
  5. //கண்ணாடிச் சுவரின் அப்பால் இருந்து உடற்பயிற்சி செய்வது ஒரு கவிதை தான். இது சொன்னால் புரியாது அனுபவித்தால் தான் விளங்கும்.//

    ;))

    ReplyDelete
  6. அருமையா உக்காந்த இடத்துல யோகா பண்ணுவதை விட்டுவிட்டு காசையும் குடுத்து த்ரெட் மில்லில் ....ஓட்டமும் தேவையா ?.

    ஆனா உனவு கட்டுப்பாடு இல்லாம ஒன்னுமே பண்ண முடியாது!!!!

    :-)))

    ReplyDelete
  7. :) நான் முதல்லயே படிச்சுட்டேன்.

    ReplyDelete
  8. ஹ்ம்ம்ம்..எங்கள் வீட்டு காம்பவுண்டை ஒட்டியே லேடீஸ் ஜிம்..ஒரு நாள் போய்விட்டு இரண்டு நாள் படுத்துக்க வேண்டியதிருக்கே :-(

    ReplyDelete
  9. பாவம் தான் பிள்ளை.. சின்னதுல இருந்தே சமச்சீர் உணவு பழக்கம் ஒண்ணு தான் வழி. அதோட நம்ம வளந்த காலம் மாதிரி இப்ப வெளிய நெறைய விளையாட இப்ப பிள்ளைகளுக்கு நேரமும் இல்லை... அதுவும் ஒரு காரணம்.... பரம்பரை தன்மைகளும் உண்டுதானே

    ReplyDelete
  10. உண்மைதான் வாணி ஜிம்முக்குள் போகாவிட்டால் விளங்காது, ஆனால், போனால் பின்பு போகாமல் நிற்க மனமே வராது. நானும் ஒரு ஜிம் பிரியை. ஜிம்மில்தான், எனக்கு வியர்த்ததைப் பார்த்து மெய்மறந்து பிரமித்து நிண்ட:) தருணங்கள் பல. வேர்வையை கண்ணால் கண்டு பல காலமானதால். இப்போ குறைத்துவிட்டேன், ஆனால் இந்தமாதத்தோடு ஆரம்பிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேஏஏஏஏஏஏஎ இருக்கிறேன்...............

    பாடத்தையும் படி கடவுளையும் வணங்கு.... என்பதைப்போலத்தான் உணவும் ஜிம்மும்... உணவையும் கட்டுப்படுத்தினால்தான் உண்டு.

    ReplyDelete
  11. ஆசியா அக்கா, உண்மைதான். வெளிநாட்டில் ஜங் புட்ஸ் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்ளும் சிறுவர்கள் அதிகம்.

    நாடோடி, மிக நன்றி.

    எல்கே, சும்மா சாக்கு சொல்லாமல் காலையில் எழுந்து வீட்டைச் சுற்றி 10 தடவை ஓடுங்க.
    மிக்க நன்றி.

    மதுமிதா, நன்றி.

    குமார், நன்றி.

    ReplyDelete
  12. இமா, மிக்க நன்றி.

    ஜெய்லானி, ஆமாம். உணவுக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம். பொரித்த உணவுகள் சாப்பிடுவதைக் குறைத்தாலே பாதி பிரச்சினை தீர்ந்தது போல இருக்கும்.
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    மகி, முதலே படித்ததற்கு மிக்க நன்றி.

    ஷாதிகா அக்கா, ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்லோவாக தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் கஷ்டம் தான்.
    மிக்க நன்றி அக்கா.

    ReplyDelete
  13. மேனகா , மிக்க நன்றி.

    அப்பாவி தங்கமணி, இங்கே பிள்ளைகளுக்கு டி.வி, வீடியோ கேம் என்று பொழுது போக்குகள் அதிகம். ஓடி விளையாட இடமோ, நேரமோ இல்லை.
    வருகைக்கு மிக்க நன்றி.

    அதீஸ், நினைத்துக் கொண்டிராமல் ஜிம் போற வழியைப் பாருங்கோ. நான் ஜிம் போனதில்லை. எல்லாமே வீட்டில் தான்.
    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  14. வானதி.. நானும் போக ஆரம்பிச்சிருக்கேன்.. உடற், மன வலு கூட்டத்தான்.. முன்னெல்லாம் சேர்ந்தாற் போல் இருபது நிமிஷம் நின்னு சமைத்தாலே தலை சுற்றும்.. இப்போ பரவாயில்லை.. நல்ல விஷயம்ன்னு தான் தோனுது..

    அதீஸ்... படிப்பீங்களோனு தெரியல இதை.. கண்டிப்பாக போக ஆரம்பியுங்கோ..

    ReplyDelete
  15. /முன்னெல்லாம் சேர்ந்தாற் போல் இருபது நிமிஷம் நின்னு சமைத்தாலே தலை சுற்றும்.. /
    எ.கொ.ச.இ??!!!!
    :)))))))))))))

    ReplyDelete
  16. சந்தனா,
    //... படிப்பீங்களோனு தெரியல இதை.. கண்டிப்பாக போக ஆரம்பியுங்கோ..//

    எப்படியாவது அதீஸ் துரத்தலாம் என்று பார்கின்றீர்கள். அதீஸ் அங்கு காமராவோடு போய் நின்றால் உங்களின் நிலமை, இமாவின் நிலமையை யோசித்துப் பார்த்தீர்களா? ஜிம் போய் ஒடி, குதித்து உடற்பயிர்சி செய்யும் வயதா உங்களுக்கு....
    மிக்க நன்றி.

    மகி, ரிப்பீட்டுடுடு.....

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!