Friday, May 7, 2010

டொமார்

ஊரில் அவனை எல்லோரும் குமார் என்றழைக்க எனக்கு மட்டும் அவன் டொமார் ஆகிப் போனான். நான் அவனை ஏன் டொமார் என்று சொன்னேன் என்று யாரும் கேட்க வேண்டாம். குமார் என்பது டொமார் என்றானதோ அல்லது ஏதாவது ஒரு காரணத்திற்காக அல்லது காரணமில்லாமல் டொமார் டொமார் என்று கீழே விழுந்தெழும் காரணமோ தெரியாது..

நானும் அவனும் சம வயதுக்காரர்கள். எங்கள் இருவர் வீடும் ஒரே தெருவில். எப்போதும் மூக்கு ஒழுகத் திரியும் அவனைக் கண்டால் எனக்கு வெறுப்பாக இருக்கும். ஆனால் அவன் எப்போதும் ராதிகா ராதிகா என்று என் பின்னே அலைவான்.

ஐந்து வயதானதும் இருவரும் பள்ளியில் சேர்க்கப்பட்டோம். என் அப்பா என்னை பள்ளியில் விட்டு விட்டு போய் விட்டார். டொமாரும் நானும் ஒரே வகுப்பு. வகுப்பில் டொமாரைத் தவிர எல்லாமே புது முகங்கள்.

நான் பெண்கள் பக்கம் நின்று கதறி அழ, அவன் ஆண்கள் பக்கம் நின்று கதறி அழுதான். நான் நான்கு நாட்கள் அழுது விட்டு பிறகு ஓய்ந்து விட்டேன். ஆனால் டொமார் ஏழு நாட்கள் அழுது தீர்த்தான். அவன் மேலே எனக்கு ஒரு இரக்கம் உண்டானது அப்போது தான். அன்றிலிருந்து நானும் அவனும் நண்பர்களாகி விட்டோம். அவன் மூக்கு ஒழுகுவதை நான் பெரிதாக சட்டை செய்யவில்லை.

இரண்டு பேருக்கும் படிப்பில் வெறுப்பாக இருந்த காலம் அது. பட்டம் விடுவது, மாமரத்தில் ஏறுவது, சாக்லேட் கடதாசிகள் பொறுக்குவது என்று இருவருக்கும் பொதுவான விடயங்கள் இருந்தன. பள்ளி விட்டு வந்ததும் டொமார் என் வீட்டிற்கு வந்து விடுவான். அந்தி சாயும் நேரம் வரை எங்கள் விளையாட்டு ஓயாது. ஆறு மாதங்கள் என்னோடு படித்தவன் பிறகு வேறு பள்ளி போய் விட்டான்.

என் பெற்றோர் என்னை வெளியே எங்கும் சென்று விளையாட அனுமதிக்க மாட்டார்கள். எல்லா விளையாட்டுக்களும் எங்கள் வீட்டு முற்றத்திலேயே நடக்கும்.

ஒரு நாள் என் அம்மா என்னிடம் 2 ரூபாய்கள் கொடுத்தார். ராஜா மாமா கடையில் விற்கும் அல்வா என்றால் எனக்கு உயிர். ராஜா மாமா வீட்டிலே செய்து, கடையில் விற்பனை செய்வார்கள். மைதா மாவில் தாராளமாக நெய் ஊற்றி, முறுகலான சுவையுடன் இருக்கும். அதில நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, ஏலக்காய், வற்றல் எல்லாம் தாராளமாகவே போட்டிருப்பார்கள். பச்சை கலரில் அழகாக பாலித்தீன் கடதாசி சுற்றி பார்க்கவே சாப்பிடத் தோன்றும்.


அந்த நேரம் டொமார் வீட்டிற்கு வந்தான். நான் அவனிடம் காசைக் குடுத்து அல்வா வாங்கி வரும்படி சொன்னேன். போனவன் போனது தான் திரும்பி வரவேயில்லை. எனக்கு அவன் அல்வா குடுத்து விட்டான் என்று அந்தி சாயும் நேரம் விளங்கியது.

நீங்கள் எங்காவது டொமாரைப் பார்த்தால் எனக்குச் சொல்லுங்கள். எப்படி அடையாளம் காண்பதா? எப்போதும் மூக்கு ஒழுகும். அவன் காற்சட்டை ஒரு நாளும் இடுப்பில் நிற்காது. அடிக்கடி விழுந்தெழும் யாரையாவது பார்த்தீர்களானால் அவனே தான் டொமார். அப்படியும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒரு 2 ரூபாய்கள் கொடுத்து பாருங்கள். அப்ப விளங்கும்.

28 comments:

 1. arumai .. alwa vanducha illaya

  ReplyDelete
 2. வீட்ல டொமார்ன்னு அடி விழுந்துச்சா இல்லையா ? அல்வா வாங்காததுக்கு.

  ReplyDelete
 3. //எனக்கு அவன் அல்வா குடுத்து விட்டான் என்று அந்தி சாயும் நேரம் விளங்கியது. //

  அய்ய‌ய்யோ அப்புற‌ம்.... ஓ க‌தை முடிந்து விட்ட‌தா?

  ReplyDelete
 4. அல்வாக் குடுத்துட்டுப் போனவன் பேரை குமாருன்னே வச்சிருக்கலாமே... இப்புடி டொமார்ன்னு போட்டுட்டிங்களே..!

  சின்னப் புள்ளையிலயே அல்வா வாங்கியாச்சா... அது சரி..!
  அதான் இம்புட்டுக் கோபம்.

  ReplyDelete
 5. எல்.கே, அல்வா கிடைத்திருந்தால் இப்படி ராதிகா புலம்பியிருக்கமாட்டார் அல்லவா....வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 6. ஜெய்லானி,
  //வீட்ல டொமார்ன்னு அடி விழுந்துச்சா இல்லையா //
  ராதிகாவை கேட்டு சொல்றேன். வருகைக்கு நன்றி.
  மதுமிதா, சிரிப்பிற்கு மிக நன்றி.

  ReplyDelete
 7. நாடோடி, ஆமா கதை முடிந்து விட்டது. சீக்கிரம் முடித்து விட்டேனா??? என்ன செய்ய அல்வாவை இழந்த சோகத்தில் ராதிகா இவ்வளவு தான் டீடெய்ல்ஸ் குடுத்தார்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 8. குமார்,
  //சின்னப் புள்ளையிலயே அல்வா வாங்கியாச்சா... அது சரி..!
  அதான் இம்புட்டுக் கோபம்.//

  உங்களுக்கு விளங்குது.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 9. கதைக்கு தலைப்பெல்லாம் எங்கே இருந்து புடிக்கறீங்க வானதி? டொமார்..நல்ல காமெடி!

  ReplyDelete
 10. hahaahaa.. super ma..

  paatha solraen.. :D :D

  ReplyDelete
 11. வானதி உங்கள் கதைகளில் நகைச்சுவை மிளிர்வதால் படிக்கும் பொழுது சுவாரசியாமாகத்தான் இருக்கு.

  ReplyDelete
 12. ஹாஹ்ஹா.. நல்லா காமெடி பண்ணியிருக்கீங்க வானதி.. டொமார்.. கடைசி வரி பஞ்ச்.. ரெண்டு ரூபா கொடுத்துப் பாக்கறதா :)

  ReplyDelete
 13. இதுவும் உங்கட வீட்டுல எடுத்த படமென்று சொல்லிடாதையுங்கோ :))

  ReplyDelete
 14. மீதிக் கதையெல்லாம் ஒன்னொன்னாத் தான் படிப்பேன்.. அக்காங்..

  ReplyDelete
 15. Atheeeees, tissue please. ;) x 6564865765764765476

  ReplyDelete
 16. அவன் காற்சட்டை ஒரு நாளும் இடுப்பில் நிற்காது. /// இந்தக்காலத்தில யாருக்குத்தான் காற்சட்டை இடுப்பில நிற்குது:) ராதிகா???

  Atheeeees, tissue please. ;) x 6564865765764765476 /// ஆ..... இமா மூக்கால வடியுதோ.....???? ஆ.... கால் வச்ச வனி... இதுதான் உங்கட “டொமார்” பிடியுங்கோ பிடியுங்கோஓஓஓஓ மீ எஸ்ஸ் என்னை விடுங்கோஓஓஓஓஓ

  இமா :) 64646464646464

  ReplyDelete
 17. எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
  மீதிக் கதையெல்லாம் ஒன்னொன்னாத் தான் படிப்பேன்.. அக்காங்../// எல்லா இடத்திலயும் இதுதானோ??? சந்து கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  ReplyDelete
 18. மகி, கைவசம் நிறைய தலைப்புகள் இருக்கு. வருகைக்கு மிக்க நன்றி.
  ஆனந்தி, வாங்க. கட்டாயம் சொல்லோணும். நன்றி.
  ஆசியா அக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 19. சந்து, வருகைக்கு நன்றி.
  இது எங்கட வீட்டுப் படம் அல்ல எங்கட Zoo படமாக்கும். வீட்டிலை சிங்கம், புலி வளர்த்தால் கம்பி எண்ண வேண்டியிருக்கும்.
  நேரம் கிடைக்கும் போது படியுங்கள் சந்தனா.

  ReplyDelete
 20. இமா, எதுக்கு அழுவாச்சி. சிரியுங்கோ.
  அதீஸ், கடவுளே எங்கட இம்ஸ் தான் டொ( மார் ) ம்ஸ் ஆஆஆஆஆ. பிடித்து தந்தற்கு கோடி நன்றி.
  //எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
  மீதிக் கதையெல்லாம் ஒன்னொன்னாத் தான் படிப்பேன்.. அக்காங்../// எல்லா இடத்திலயும் இதுதானோ??? சந்து கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.///கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  மிக்க நன்றி, அதிரா.

  ReplyDelete
 21. மேனகா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 22. ;) x 46 64 46 64 46 64 46

  ReplyDelete
 23. //;) x 46 64 46 64 46 64 46 //

  enna meaning???

  ReplyDelete
 24. எல்கே, வாங்க. அது வேறு ஒன்றுமில்லை. இமா அத்தனை தடவை சிரித்து, சந்தோஷத்தை வெளிப்படுத்துறாங்க. அதனை வலைப்பூவில் அப்படித் தான் சுருக்கமாக சொல்வது.

  ReplyDelete
 25. ;) ம்.. இப்பதான் கடைசி 2 கமண்ட்டும் பார்த்தேன். ;))

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!