Monday, May 3, 2010

சந்தியா

அன்று சனிக்கிழமை. வெளியே ஊர் சுற்றி விட்டு மாலை 4 மணி போல வீடு வந்தேன். என் தங்கை தேவகி என்னைக் கூப்பிட்டாள்.

" அண்ணா, இங்கே வந்து பாரேன் " என்றாள்.
" என்ன சொல் ? " என்றேன்.
" அங்கே பாருங்கள் அந்தப் பெண்ணை " என்று தூரத்தில் யாரையோ ஜன்னல் வழியாக காட்டினாள்.
" உன்னையே எனக்கு அரைகுறையாகத் தான் தெரியுது. நீ தெருவைத் தாண்டி யாரையோ காட்டுகிறாயே. இரு வருகிறேன் " என்று சொல்லிவிட்டு கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டேன்.

என்னைப் பற்றி - என் பெயர் அருண். வயது 29. வசிப்பது- கனடா. எப்போதும் வேலையில் கம்யூட்டரைப் பார்த்து என் கண்களே பூத்து விட்டன. கண்ணாடி அணிந்தால் தான் தெளிவாகப் பார்க்க முடியும்.

ஜன்னல் வழியாகப் பார்த்தேன். தூரத்தில் ஒரு பெண் தெரிந்தாள்.
" ம்ம்...இப்ப அதற்கென்ன ? ஒரு பெண் நிற்கிறாள் " என்றேன் தேவகியிடம்.

" அந்தப் பெண் மதியம் 12 மணியிலிருந்து அந்த இடத்திலேயே நிற்கிறாள். குறைந்தது 4 மணி நேரங்களாக நிற்கிறாள் " என்றாள் தேவகி.
" நீ படிக்காமல் 12 மணியிலிருந்து அந்தப் பெண்ணையே வேடிக்கை பார்க்கிறாயா ? போய்ப் படி " என்று கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் என் தங்கையை விரட்டினேன்.

தேவகி என்னை முறைத்து விட்டு நகர்ந்தாள்.

நான் டி.வி பார்க்க அமர்ந்தேன். மாலை 5. 30 போல என் தங்கை அந்தப் பெண் அங்கேயே நிற்கிறார் என்று தகவல் சொன்னாள். ஜந்தரை மணி ஆறு மணியானது. ஆனால் அந்தப் பெண் எங்கும் நகரவேயில்லை.

என் தங்கை ஏதோ ஒரு முடிவுடன் புறப்பட்டாள். என்னையும் வா என்று கெஞ்ச நானும் வேறு வழி இல்லாமல் அரை மனதுடன் புறப்பட்டேன்.

கனடாவில் சம்மர் காலமாகையால் புழுக்கமாக இருந்தது. காரில் என் தங்கையையும் ஏற்றிக் கொண்டு போனேன்.

" நான் காரில் காத்திருக்கிறேன். நீ போய் என்னவென்று கேட்டு விட்டு வா " என்று தங்கையை அனுப்பினேன்.

தொடரும்....

16 comments:

 1. ச‌ஸ்பென்சை இவ்வ‌ள‌வு சீக்க‌ர‌மாவா வச்சி முடிக்கிற‌து.... சீக்க‌ர‌ம் அடுத்த‌ போஸ்டை ரெடி ப‌ண்ணுங்க‌..

  ReplyDelete
 2. வானதி சுவாரசியமாக இருக்கு,அடுத்தது நாளை?

  ReplyDelete
 3. சஸ்பென்ஸ் தொடரா கலக்கறீங்க வானதி! :)

  ReplyDelete
 4. கரெக்டா எங்கே தொடரும் போடனும்ன்னு உங்களுக்கு கரெக்டா தெரியுது. ஆர்வம் தாங்கல மீதியையும் சீக்கிரம் போடுங்க.

  ReplyDelete
 5. நல்ல கெட்டிக்கார அண்ணன், தான் பத்திரமாக காரில் இருந்துகொண்டு தங்கையை அனுப்பியிருக்கிறார்... அடிகிடி விழுந்தாலும்.... முன்னால் போறவருக்குத்தானே எல்லாம்... தொடருங்கோ... பார்ப்போம் அது பெண்ணோ??? ஆவிகீவியோ என்பதை:):).

  ReplyDelete
 6. மேனகா, நன்றி.
  நாடோடி,
  //அடுத்த‌ போஸ்டை ரெடி ப‌ண்ணுங்க‌..//
  இதோ ரெடி பண்றேன்.
  ஆசியா அக்கா, மிக்க நன்றி.

  ReplyDelete
 7. மகி, வாங்கோ. மிக்க நன்றி.
  ஜெய்லானி, டைப் பண்ண நேரமில்லை அது தான் தொடரும் போட்டேன். ஹிஹி..

  ReplyDelete
 8. அதீஸ், ம்ம்... என் ஹீரோ அல்லவா அப்படி முன்னெச்சரிக்கையாக இருக்கிறார். அதோடு என்னைப் போல எல்லோரும் வீரமானவர்கள் என்று சொல்ல முடியாது. ஐயய்யோ.... ஆவியா?? என் ப்ளாக் படிக்கும் குழந்தைகளை இப்படி பயமுறுத்தக் கூடாது.

  வருகைக்கு மிக்க நன்றி அதீஸ்.

  ReplyDelete
 9. வானதி ஆரம்பமே அமர்க்களம். அடுத்த பகுதியை உடனே போட்டுடுங்க.

  ReplyDelete
 10. vanathy
  nethu nan potta comment enga ? unga blogla irukara aavi tookitu poiudcha

  ReplyDelete
 11. தொடர்ந்து தொடரும் போட்டுக் கலக்குறீங்கள் வாணி. ;)

  ReplyDelete
 12. குமார், வாங்க! ம்ம்.. நாளை வரும். மிக்க நன்றி.

  எல்கே, நீங்களும் அதீஸூம் இப்படி என் ப்ளாக்கில் ஆவி உலாவுது என்று சொன்னால் எப்படி??? சின்னபுள்ளைங்க பயந்துடப் போறாங்க. எனக்கும் விளங்கவில்லை எங்கே போனது உங்கள் காமன்ட் என்று. நானும் சில நேரங்களில் சிலருக்கு குடுக்கும் பின்னூட்டங்கள் காணாமல் போய் விடுகிறது.
  வருகைக்கு மிக்க நன்றி.

  இமா, மிக்க நன்றி.

  ReplyDelete
 13. hmmm .. very nice.. adhuthu padikkaraen.. :)

  ReplyDelete
 14. நல்லா இருக்குங்க ஆனா சஸ்பென்ஸ் சீக்கிரமாவே வச்சுட்டீங்க... அடுத்த பகுதியும் படிச்சுட்டு சொல்றேன்...

  ReplyDelete
 15. வசந்த், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ஆனந்தி, மிக்க நன்றி.

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!