முன் பகுதி படிக்க இங்கே செல்லுங்கள்...
சந்தியா
என் தங்கை அந்தப் பெண்ணிடம் ஏதோ கேட்டாள். 10 நிமிடங்களின் பின் இருவரும் காரை நோக்கி வந்தார்கள்.
" இவங்களுக்கு இந்த அட்ரஸ் போக வேண்டுமாம். கணவருக்காக இவ்வளவு நேரமும் காத்திருந்தார்களாம். இது இவங்க தோழியின் விலாசம். " என்றாள் தேவகி.
" ம்ம்... ஏறிக் கொள்ளுங்கள் " ( நல்ல கணவன் தான் என்று மனதிற்குள் திட்டினேன் ). என் தங்கை தந்த விலாசத்தைப் பார்த்தேன்.
காரில் ஏறிய பிறகு அவளின் முகத்தைப் பார்த்தேன். அழகாக இருந்தாள். நெற்றியில் குங்குமப் பொட்டு, தாலி எல்லாமே இருந்தது. ஆனால் முகம் தெளிவில்லாமல் குழம்பி போய் இருந்தது. இவ்வளவு நேரம் நின்ற சோர்வாக கூட இருக்கலாம். என் தங்கையின் வயது தான் இருக்கும். வெதருக்கு ஏற்ற ஆடை அணியாமல் கைகளை மூடி டி. சர்ட் போட்டிருந்தாள். அதற்கு மேல் பார்ப்பது பாவம் என்று பார்வையை திருப்பிக் கொண்டேன்.
" என் பெயர் சந்தியா " என்றாள்.
நான் மெதுவாகப் புன்னகை செய்து விட்டு, அவள் சொன்ன விலாசத்திற்கு காரை ஓட்டினேன்.
அவள் சொன்ன வீட்டின் முன்பு காரை நிப்பாட்டினேன். வீடே இருளில் மூழ்கி இருந்தது. அங்கு யாரும் இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. சந்தியா நன்றி சொல்லி விட்டு போய் விட்டாள்.
திரும்பி வரும் போது " இந்தப் பெண்ணிடம் ஏதோ மர்மம் இருக்கு " என்றாள் தேவகி. நான் எதுவுமே சொல்லாமல் காரை ஓட்டினேன்.
தொடரும்.
அடடா இப்படி குட்டி குட்டி பாகம் போடறத எப்ப மாத்த போறீங்க ??
ReplyDeleteஎன்னங்க மதியத்துல இருந்து யாரவது இப்படியேவா நிப்பாங்க.?/ என்னக்கு புரியலையே
ReplyDeleteஎல்கே, நன்றி. இது பல வருடங்களின் முன்பு நடந்த சம்பவம். ஒரு பெண் நான் சொன்ன நேரத்தை விட அதிக நேரம் ரோட்டில் நின்றார். முழுவதையும் இப்பவே சொன்னால் சுவாரஸ்யம் குறைந்து விடும். அந்தப் பெண்ணின் கதையை கொஞ்சம் கற்பனை கலந்து எழுதுகிறேன்.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி.
அடடா இப்படி சஸ்பென்சோட நிறுத்துட்டீங்களே....அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்க...
ReplyDeleteஎன்ன இது இப்படி கதையினை நிறுத்திவிட்டிங்களே...என்ன ஆகபோவுது...
ReplyDeleteஎன்ன நடக்குது இங்க... ஒரு வேள LK சொல்றாப்ல உங்க ப்ளாக்ல பேய் இருக்கோ?
ReplyDeleteம்ம்ம்ம்... சுவரஸ்யமா போகுதுங்க... அடுத்த போஸ்ட்!!!!
ReplyDeleteமேனகா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteகீதா ஆச்சல், நலமா? வருகைக்கு நன்றி.
அப்பாவி தங்கமணி, இப்பூடி புரளி எல்லாம் கிளப்பக் கூடாது.
நாடோடி, வருகைக்கு நன்றி.
ermm.. vinnie alias vanathy?!
ReplyDeleteஇப்படி சஸ்பென்ஸ் வச்சா ஒரு நாளைக்கு கூட தாங்காது.நாளை சந்தியாவை பார்க்கலாமா?
ReplyDeleteவானதி,மினி தொடரை அதே ஸ்பீடுல டெய்லி ரெண்டு பார்ட்டா ரிலீஸ் பண்ணிடுங்க.:)
ReplyDelete//vinnie alias vanathy?! // ஹேமா,இவங்க வேற,அவங்க வேற:))))
முன்னால குமுதத்தில தொடர் எல்லாம் கிழிச்சு சேர்த்து வச்சு கட்டி வைக்கிறது நினைவு வருது வாணி. ;))
ReplyDeleteஆர்வத்தை இன்னும் கிளப்புதே!!!!
ReplyDeleteyes.. superaa irukku.. next part padikka poraen :)
ReplyDeleteபொற்கொடி, அவங்க வேறு நான் வேறு. நானும் அறுசுவை மெம்பர் தான்.
ReplyDeleteஆசியா அக்கா , கதை இறுதி பாகம் போட்டாச்சு. மிக்க நன்றி.
மகி, டெய்லி 2 பார்ட்டா?? டைப் பண்ணவே சோம்பல் படும் ஆள் நான். எனக்கு ஒரு பி.ஏ வேணும். சம்பளம் சாப்பாடு, தண்ணீர் குடுக்கப்படும்.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றீ
இமா, நானும் நிறைய படித்திருக்கிறேன். வீடெல்லாம் குப்பை சேர்த்தும் இருக்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி.
மாவீரன் ஜெய்லானி, மிக்க நன்றி.
ஆனந்தி, தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ஆஹா இங்கேயும் ஒரு சஸ்பென்ஸ்... பாருங்க உங்க பேச்சு கா... சீக்கிரம் முடிச்சுடுறீங்க...
ReplyDeleteவசந்த், கோபப் படாமல் மற்ற பகுதியையும் படிங்க ஹிஹி...
ReplyDelete