Monday, February 22, 2010

குரக்கன்(Millet flour) வாழைப்பழ தோசை


தேவையான பொருட்கள்:

குரக்கன் மா - 3/4 கப்
மைதா மா -1/4 கப்
பால் - 3/4 கப்
சீனி -1/2 கப்
வாழைப்பழ‌ம் - ஒன்று
உப்பு -1 பின்ஞ்
பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்

வாழைப்பழத்தை நன்கு கரண்டியால் மசித்துக் கொள்ளவும். சீனி, பால், உப்பு சேர்த்து கரைக்கவும். இறுதியில் மா வகைகள் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் பூசி, மாவை ஊற்றி பரவி விடவும். மேலே சிறிது பட்டர் விட்டு மொறுகலாக சுட்டு எடுக்கவும்.
இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாகும்.

குறிப்பு:
டயட்டில் இருப்பவர்கள் பால், சீனி அளவை குறைத்து செய்யலாம்.

6 comments:

  1. வானதி ரொம்ப சூப்பரான ராகி தோசை. அருமை

    ReplyDelete
  2. மில்லட் ப்ளோர்னு கூகுள் பண்ணிப் பாத்தா ராகியத் தவிர வேற எல்லா மாவும் வந்தது!! :)
    நல்ல குறிப்பு வானதி.

    ReplyDelete
  3. ரொம்ப சூப்பரான வாழைப்பழ தோசை

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!