Saturday, February 27, 2010

முட்டைச் சொதி




தேவையான பொருட்கள்:


முட்டை - 4
வெங்காயம் - கொஞ்சம்( 4 டேபிள்ஸ்பூன்)
உருளைகிழங்கு - பாதி
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தேங்காய் பூ - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் - சிறிது
பச்சை மிளகாய் - 10
உப்பு
தாளிக்க:
வெங்காயம் - கொஞ்சம்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

தேங்காய் துருவலை 11/2 கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.வடி தட்டில் வடித்து வைக்கவும்.

வெங்காயத்தை பொடியாக அரிந்து வைக்கவும்.
மிளகாயை வெட்டி வைக்கவும். உருளை கிழங்கை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வைக்கவும்.
சட்டியில் மிளகாய், வெங்காயம், வெந்தயம், உருளைக்கிழங்கு, உப்பு எல்லாவற்றையும் போட்டு 1 1/2 கப் தண்ணீர் விட்டு மூடி அவிக்கவும்.
கிழங்கு நன்கு வெந்ததும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
2 நிமிடங்கள் அவிக்கவும்.
இப்போது தேங்காய் பால் சேர்க்கவும். பால் சேர்த்த பிறகு மூடியால் மூட வேண்டாம்.
பால் நன்கு கொதித்ததும் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றவும்.

முட்டைகளை சேர்த்த பிறகு கரண்டியால் கிளறுவதை தவிர்க்கவும்.
மூடியால் இடைவெளி விட்டு மூடவும். நல்ல டைட்டாக மூடினால் பால் பொங்கி ஊத்தும்.
10 நிமிடங்களின்(முட்டைகள் வெந்த பிறகு) பிறகு தாளித்து வைத்துள்ளதை கொட்டி இறக்கவும்.
இது இடியாப்பத்திற்கு மிகவும் சுவையான சைட் டிஷ்.
சிறிது ஆறியதும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.


குறிப்பு: முட்டை விரும்பாதவர்கள் கத்தரிக்காயை மெல்லிய வட்டமாக நறுக்கி, லேசாக எண்ணெயில் பொரித்து, சொதியில் சேர்க்கலாம். முட்டைகளை அவித்து துண்டுகளாக வெட்டியும் சேர்க்கலாம். முட்டைகளை சேர்த்த பிறகு கண்டிப்பாக கரண்டியால் கிளறக்கூடாது. 10 நிமிடங்கள் முட்டைச் சொதி அடுப்பில் இருக்கு என்பதை மறந்து விட வேண்டும். நான் எப்போது தேங்காய் பால், Evaporated milk மிக்ஸ் பண்ணி செய்வேன். விரும்பினால் தேங்காய் பால் அல்லது Evaporated milk மட்டும் பாவித்து செய்யலாம்.

3 comments:

  1. யம்!!இதுவும் எங்க பேவரிட்..ஆனா இதுவரை லெமன் ஜூஸ் சேர்க்கவே இல்ல வானதி..மறந்துட்டேன்.:)

    ReplyDelete
  2. முட்டையை உடைத்து ஊற்றுவது வித்தியாசமாக இருக்கிறது வாணி. நாங்கள் அவித்த முட்டைதான் எப்போதும் சேர்ப்போம். அடுத்த தடவை இப்படித்தான் சமைக்கப்போகிறேன்.

    பி.கு
    வேற கமன்ட் சொன்னதால் மகியை மன்னிச்சு விட்டுருறேன். ;)

    ReplyDelete
  3. மகி,லெமன் சேர்த்தால் இதன் சுவையே தனிதான்.
    இமா, எனக்கு முட்டையை அவித்து சேர்ப்தை விட இந்த முறையே பிடிக்கும். எனது பிள்ளைகள், கணவரின் விருப்பமான உணவு இடியப்பம் & முட்டைச் சொதி.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!