Monday, February 22, 2010

கீரை கடையல்



தேவையான பொருட்கள்:

ஸ்பினாச் கீரை - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 7
மிளகாய் - 5
பூண்டு - 2 பல்
தயிர் - 5 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம் புளி - 1 டேபிள்ஸ்பூன் உப்பு

செய்முறை:
வெங்காயத்தை சுத்தம் செய்து, நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். ஸ்பினாச் கீரையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
சட்டியை சூடாக்கி, எண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும் வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு மெதுவாக வதக்கவும்.
பிறகு, கீரையை சேர்க்கவும்.
கீரையை அதிக நேரம் சமைக்காமல் எடுக்கவும்.
எடுத்து ஆற வைக்கவும்.
பூண்டு, மிளகாய் மட்டும் தனியாக எடுத்து, புட் பிராஸ்ரில் மெதுவாக அரைக்கவும்.
பிறகு, கீரை சேர்க்கவும். மெதுவாக அரைக்கவும்.
சட்டியில் கொட்டி தயிர், உப்பு, புளி சேர்க்கவும்.

குறிப்பு: காரம், புளி அதிகம் விரும்புபவர்கள் மிளகாய், புளியின் அளவை கூட்டி செய்யலாம்.

சுவையான கீரை கடையல் தயார். சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

3 comments:

  1. அடுத்த முறை ஸ்பினாச் வாங்கியதும் செய்து பார்த்துட்டு சொல்லறேன்..இந்த ரெசிப்பி ரொம்ப நாளா பெண்டிங்கா இருக்கு.

    ReplyDelete
  2. தயிர் சேர்ப்பது வித்தியாசமா இருக்கு வானதி.. இப்படி ஒருக்கா செஞ்சு பாக்கறேன்..

    ReplyDelete
  3. நன்றி, மகி & சந்தனா. நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்கள்.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!