Saturday, March 6, 2010

இடியப்ப பிரியாணி



தேவையான பொருட்கள்:


இடியப்பம் ‍ -15
சிக்கின்(விரும்பினால்) -1/2 கப்
முட்டை - 2
காரட் -3
உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை -சிறிது
மிளகாய்தூள் - 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் -சிறிது
சின்ன சீரகம் தூள் -1 டீஸ்பூன்
மிளகு தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு

இடியப்பத்தை கைகளினால் பிய்த்து வைக்கவும்.
வெங்காயம், காரட், உருளைக்கிழங்கு ஓரளவு சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிள‌காய்த்தூள், மஞ்சள் தூள்.பச்சை மிளகாய் போட்டு பிரட்டி, சட்டியில் எண்ணெய் சூடானதும் இறைச்சி சேர்த்து பொரிய விடவும்.
சிக்கன் ஓரளவு பொரிந்ததும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். கிழங்கு பொன்னிறமானதும் காரட், வெங்காயம், கறிவெப்பிலை சேர்க்கவும். வெங்காயம், காரட் சேர்த்த பின்பு அதிக நேரம் சமைக்கத் தேவையில்லை.
முட்டைகளை உடைத்து ஊற்றவும். சின்ன சீரகம் தூள், மிளகு தூள் சேர்க்கவும்.
அடுப்பை சிம்மரில் விடவும். இடியப்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறவும். கொஞ்சம் தண்ணீர் தெளித்து கிளறி, சூடானதும் அடுப்பை நிப்பாட்டவும்.
சுவையான இடியப்ப பிரியாணி தயார்.



குறிப்பு: சிக்கன் விரும்பாதவர்கள்(இமா,மகி) முட்டை மட்டும் சேர்த்து செய்யலாம்.
முட்டையும் சாப்பிட மாட்டேன் என்று சொல்பவர்கள் இடியப்பத்தை பால் ஊற்றி சாப்பிடவும். நன்றி.

5 comments:

  1. //சூடானதும் அடுப்பை நிப்பாட்டவும்.// எங்கட வீட்டு அடுப்பு ஒரு நாளும் ஓடுறது இல்லை.


    எவ்வளவு கரிசனமான இடுகை வாணி. வாசிக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா! அப்பிடியே மனசெல்லாம் கரைஞ்சு போச்சுது. ரெண்டு பெட்டி டிஷ்யூ ஏற்கனவே முடிஞ்சுது. கண்ணால ஓடுறது மட்டும் இன்னும் முடியேல்ல.



    வேற ஒருவருக்கும் இப்பிடி ஒரு ஃப்ரென்ட் கிடைக்க மாட்டினம்.

    ReplyDelete
  2. இமா,
    //எங்கட வீட்டு அடுப்பு ஒரு நாளும் ஓடுறது இல்லை. //:D*100

    கண்ணை துடையுங்கோ. நானும் இப்படி அளவுக்கு அதிகமாக அன்பை வெளிப்படுத்தி இருக்க கூடாது.

    ReplyDelete
  3. அட..முட்டை சேர்த்து செய்யறதா? நல்லாருக்கு..

    இன்னும் இவங்க ரெண்டு பேரும் அடுப்பை அணைக்கறதிலும்,நிப்பாட்டறதிலுமே இருக்காங்களே..பேசாம ரெண்டு பேரும் ஸ்டவ்-ஐ ஸ்விட்ச் ஆப் பண்ணுங்கப்பா!:))))

    ReplyDelete
  4. //ரெண்டு பேரும் ஸ்டவ்-ஐ ஸ்விட்ச் ஆப் பண்ணுங்கப்பா!:))))//;D
    சரி பண்ணியாச்சு.

    ReplyDelete
  5. ;D சரி பண்ணியாச்சு. ;D

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!