Tuesday, March 2, 2010

கீரை சுண்டல்


தேவையான பொருட்கள்:

கேல்(kale) கீரை - 1/2 கட்டு
வெங்காயம் - பாதி
மிளகாய் - 4
தேங்காய் பூ - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம், கடுகு -தலா 1/2 டீஸ்பூன்
உப்பு
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
கீரையை சுத்தம் செய்து, தண்ணீர் வடிய காய வைக்கவும். தண்ணீர் வடிந்ததும் மிகவும் பொடியாக அரிந்து வைக்கவும்.
சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும்.
பின்னர் பொடியாக வெட்டிய வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் லேசாக வதங்கியதும் மஞ்சள் சேர்க்கவும்.
பின்னர் கீரையை சிறிது சிறிதாக சேர்க்கவும். கீரையை அதிக நேரம் சமைக்காமல் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். அடுப்பிலிருந்து இறக்கிய பிறகே உப்பு போட வேண்டும்.

குறிப்பு:
கேல், கொலார்ட் போன்ற கீரை வகைகளில் இந்த ரெசிப்பி செய்யலாம். கீரை அடுப்பில் இருக்கும் போது உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும்.

3 comments:

  1. நல்லாருக்கு வானதி.. கீரைக்கு அடுப்பிலிருந்து இறக்கினப்புரம்தான் உப்பு சேர்க்கணும்--புதுசா இருக்கு எனக்கு! :)

    ReplyDelete
  2. இமா, இங்கு கேல், கொலார்ட், ஸ்பினாச் கீரை வகைகள் தான் எனக்குப் பிடிக்கும். என் பிள்ளைகளுக்கு பிடித்த காம்பினேஷன் முகப்பில் இருக்கு.
    மகி, இது நானே கண்டு பிடித்த அரிய கண்டு பிடிப்பாக்கும். அடுப்பில் இருக்கும் போது உப்பு போட்டால் மிகவும் குழைந்து விடுகிறது. அது தான் இந்த மாற்று ப்ளான்.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!