Friday, April 6, 2012


சம்பல்
தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் - 3
தேங்காய்பூ - 1 கப்
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை
சின்ன சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு
சட்டியில் 1/4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயை  நன்கு வறுக்க வேண்டும்.இந்த சம்பல் ப்ரெட், சப்பாத்தி, தோசை இப்படி எல்லா வகையான உணவுகளுக்கும் ஏற்ற சைட் டிஷ். 
ஊரில் இருந்த போது காய்ந்த மிளகாயை வறுத்து உரலில் இடித்து, தேங்காய் துருவல் சேர்த்து இடித்து, பின்னர் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சின்ன சீரகம், சிறிது எலுமிச்சை சாறு ( விரும்பினால் ), உப்பு சேர்த்து இடித்து, ப்ரெட், ரொட்டி, அப்பம், புட்டு, இடியப்பம் உடன் சாப்பிட்டால் அமிர்தம் தான். வெளிநாட்டில் உரலுக்கு எங்கே போவது. இந்த சம்பல் செய்வது நின்று போனது. கனடாவில் என் அம்மா ஒரு முறை காய்ந்த மிளகாயை வறுத்து, காஃபி க்ரைன்டரில் பொடியாக்கி, தேங்காய் துருவலை பிரட்டி எடுத்து, பின்னர் food processor இல் போட்டு ஒரு சுழற்று சுழற்றி, வெங்காயம், கறிவேப்பிலை, சின்ன சீரகம், உப்பு போட்டு லேசாக ஸ்பின் செய்து இறக்கினார். இந்த சம்பலுக்கு தண்ணீர் ஒரு துளி கூட சேர்க்க கூடாது. தண்ணீர் சேர்த்தால் சட்னியாக மாறிவிடும். 


சொதப்பல்கள்
மகியின் காண்ட்வி ரெசிப்பி செய்தேன். அவர் குறிப்பிட்ட அளவுகள் எல்லாம் போட்டு, குறிப்பின்படி கை வலிக்க கிளறி, எண்ணெய் பூசிய அலுமினியம் foil இல் பரவி... இதுவரை நல்லாத் தான் போனது. ஆனால், இந்த பாய் போல சுருட்டுவது தான் சரி வரவில்லை. சுருட்டி வைத்துவிட்டு திரும்பி பார்க்க எல்லாம் தாமாகவே பழைய நிலைக்கு வந்து கிடந்தன. மீண்டும் சுற்ற நினைத்தேன் ஆனால், அப்படியே டைமன்ட் ஷேப்பில் வெட்டினால் என்ன என்ற எண்ணம் வந்தது. அப்படியே வெட்டி, தாளித்து போட்டு, சாப்பிட்டால் சுவையோ சுவை. 


16 comments:

 1. சம்பல் நல்லா இருக்கு. சுவையோ சுவை

  ReplyDelete
 2. சம்பல் நல்லா இருக்கு வானதி! இப்படி தண்ணீர் ஊற்றாமல் சட்னி அரைக்க ட்ரை பண்ணினதில்லை! மிக்ஸி எதாச்சும் ஆகிட்டா என்ன பண்ணுவதுன்னு ஒரு பயம்! ;)

  //இந்த பாய் போல சுருட்டுவது தான் சரி வரவில்லை. சுருட்டி வைத்துவிட்டு திரும்பி பார்க்க எல்லாம் தாமாகவே பழைய நிலைக்கு வந்து கிடந்தன.//ஓ..ஏன்னு தெரிலையே! மாவு கரெக்ட்டா வெந்திருந்தா சுருட்டினது அப்படியே நிற்குமே வானதி! அதனால என்னங்க,சுருட்டிதான் சாப்பிடணுமா என்ன? நம்ம வசதிப்படி சாப்புட்டுக்க வேண்டியதுதான்! :) போட்டோ அழகா இருக்கு!

  ReplyDelete
 3. தேங்காய் சம்பல் சூப்பர்.மகியின் காண்ட்வி லின்க் கொடுத்திருக்க்லாமே!நமக்கு சுவை தானே முக்கியம்.சுவையோ சுவை:))).

  ReplyDelete
 4. சைவச்சம்பல் இது.இதில்லேயே நாங்கள் மாசிப்பொடி சேர்த்து செய்வோம்.

  ReplyDelete
 5. அருமமையான குறிப்பு

  ReplyDelete
 6. கர்ர்ர்ர் இப்பிடி புகைவர வைக்கப்படாது வான்ஸ்ஸ்.
  I miss my 'mara ural' ;((

  எங்கட பக்கத்து ரெசிபி - சி.சீ + தேசிப்புளி.
  ஸாதிகா சொன்னது போல மாசி இல்லாட்டி றால் கருவாடு, யம்... பொரிச்சமீன் அல்லது பொ.கருவாடு/ சுட்ட கருவாடு சேர்த்து இடிச்சாலும் நல்லா இருக்கும்.

  யாழ்ப்பாணத்தில நான் தங்கி இருந்த வீட்டு மணி அக்கா பழப்புளியை ஊறவைக்காமல் சேர்த்து இடிப்பா. அது இடியப்பத்துக்கு ;P நேரம் இருந்தால் சிரட்டையில தணல் எடுத்து செத்தல் சுட்டு இடிப்பா.

  எங்கட ஸ்டேப்பிள் சைட் டிஷ்.. ;) நினைவு படுத்திப் போட்டீங்கள்... இமா சம்பல் இடிக்கப் போறேன்ன்ன்ன். ;)

  ReplyDelete
 7. சம்பல் ரெசிபி சூப்பர் வான்ஸ். இலங்கை நண்பர்கள் வீட்டில் தோசை கூட சாப்பிட்டும் இருக்கேன். ஆனா இது வரை செஞ்சு பார்த்த தில்லை ப்ரெட் உக்கு நல்லா இருக்குமுன்னு சொல்லி இருக்கீங்க. ட்ரை பண்ணி பார்க்கணும்.

  ReplyDelete
 8. காண்ட்வி பார்த்தால் ரொம்ப சுவையா இருக்கும் போல இருக்கு. பாய் போல சுருட்ட வரலேன்னா என்ன டேஸ்ட் நல்லா வந்திருக்கு இல்லே. ஸோ சூப்பர் வான்ஸ்.

  ReplyDelete
 9. லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.
  மகி, மிக்ஸிக்கு எதுவும் ஆகாது. என்னிடம் அமெரிக்கன் ப்ளென்டர் மட்டுமே இருக்கு. இந்தியன் பிராண்ட் இல்லை. வாங்கணும். அதனால் தான் காஃபி க்ரைன்டர், ஃபுட் ப்ராஸசர் எல்லாம் யூஸ் பண்ணினேன். கான்ட்வி மா நல்லா வெந்து தான் இருந்துச்சு. என்ன மிஸ்டேக் என்று தெரியவில்லை. எப்படி சாப்பிட்டா என்ன என்று விட்டாச்சு.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 10. ஆசியா அக்கா, மிக்க நன்றி.
  லிங்க் கொடுக்க ட்ரை பண்ணினேன் ஆனால் வேலை செய்யவில்லை.

  ஸாதிகா அக்கா, மாசி சேர்ப்பதும் இருக்கு. என் பிள்ளைகளுக்கு பிடிக்காது என்பதால் சேர்க்கவில்லை.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 11. குமார், மிக்க நன்றி.
  இமா, இவ்வளவு வரைட்டியா இருக்கா?? நாங்கள் மாசி அல்லது ப்ளையின் சம்பல் மட்டும் தான். பழப்புளி சேர்ப்பது வித்யாசமா இருக்கும். இப்பெல்லாம் இந்த சம்பல் செய்வது குறைவு. எப்பாவது 3, 4 மாசத்துக்கு ஒரு முறை தான்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 12. கிரி, செய்வது ஈஸி. எங்கள் வீட்டில் அவசரத்துக்கு சில வேளைகளில் கை கொடுக்கும் சைட் டிஷ் இது. கோதுமை தோசைக்கு நல்ல பொருத்தம். இல்லாவிட்டால் பிஷ் டின் சம்பல் செய்வதுண்டு.
  மிக்க நன்றி, கிரி.

  ReplyDelete
 13. வானதி,உங்களின் சம்பல் செய்தேன்,சுவையாக இருந்தது.அம்மா இதுபோல் பச்சை மிளகாய் சேர்த்து துவையல் போல அரைப்பாங்க.நன்றி உங்களுக்கு!!

  ReplyDelete
 14. அருமையான பதிவு

  தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
  இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
  தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  http://tamil.dailylib.com

  To get vote button
  http://tamil.dailylib.com/static/tamilpost-vote-button/

  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

  நன்றி
  தமிழ் போஸ்ட்

  ReplyDelete
 15. சம்பல் குறிப்பு அருமை வானதி! அதையும்விட ஐ பூரி குறிப்பு பிரமாதம்! சீக்கிரம் செய்து பார்த்து எழுதுகிறேன்!

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!