Thursday, March 29, 2012
ஐ பூரி
இந்த ரெசிப்பி எனக்கு மிகவும் பிடிக்கும். ஊரில் இருந்த போது, என் அம்மாவின் தூரத்து உறவினர் ஒருவர் இருந்தார். அவர் எங்கள் வீட்டுக்கு வரும் போது சாப்பிடச் சொன்னால், இல்லைம்மா இப்ப தான் அய் பூரி சாப்பிட்டேன், என்பார்.
என் அம்மாச்சி அவரிடம் ரெசிப்பி கேட்டார். அவரும் சொன்னார். வீட்டில் அய் பூரி செய்தார்கள் செய்து அடுத்த நொடி எல்லாமே முடிந்துவிட்டது.
இப்ப இது என் பிள்ளைகளின் பேவரைட் உணவு. தேங்காய் சட்னியோடு அல்லது சைட் டிஷ் இல்லாமல் சாப்பிட சுவையாக இருக்கும்.
சரி இப்ப இந்த பெயர் வந்த காரணத்தை பார்ப்போமா?
ஊரில் என் உறவினர் சூடிய பெயர் " அய் பூரி". என் மகன் சூட்டிய பெயர் " ஐ பூரி".
ஏன் இந்தப் பெயர்?, இது நான்.
அதுவா ஐ போன், ஐ பாட் போல இதுக்கு பெயர் ஐ பூரி, என்றார்.
தேவையான பொருட்கள்:
மா - 2 கப்
வெங்காயம் - 1/4
காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காரட் - துருவியது 1/4 கப்
உப்பு
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் வெங்காயத்தை மிகவும் பொடியாக வெட்டவும். பொடியாக வெட்ட மாட்டேன் என்று அடம் பிடிக்க கூடாது. பொடியாக வெட்டினால் தான் மாவோடு சேர்ந்து இருக்கும். இல்லாவிட்டால் தனியாக பிரிந்து போய்விடும். சட்டியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் போடவும். பின்னர்
பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு, லேசாக வதக்கவும். வதங்கியதும் தட்டில் பரவி ஆற விடவும்.
மாவுடன் உப்பு, காரட், வெங்காய கலவை கலந்து கொள்ளவும். குளிர்ந்த தண்ணீரை விட்டு சப்பாத்தி மா பதத்திற்கு பிசையவும். பிசைந்து முடிந்ததும் எண்ணெயில் தொட்டு பூரி சைஸில் உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இப்ப சுவையான ஐ பூரி ரெடி.
மா - கோதுமை மா, மைதா மா இரண்டும் மிக்ஸ் செய்து பூரி செய்யலாம். நான் மைதா மா மட்டும் பாவித்தேன். குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் உணவு. பெரிசுகளும் சாப்பிடத் தொடங்கினால் நிப்பாட்ட மாட்டார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
ரெசிப்பி நல்லா இருக்கு வானதி!ஏதோ போளி செய்திருக்கீங்க என்று நினைச்சேன்!
ReplyDeleteஇதுவரை பூரியில் இப்படி பொருட்கள் சேர்த்து செய்ததில்லை.சப்பாத்தியில் விதவிதமா ட்ரை பண்ணிருக்கேன். ரெசிப்பிய விட பேர் ரொம்ப catching-ஆ இருக்கு!அய்பூரி--ஐபூரி!! :)))))
ஒரு டவுட்டு..பூரி நல்லா புஸ்ஸுன்னு உப்பி வருமா? இல்ல அப்பளம் மாதிரி flat-ஆக வருமா? ;)
பூரி போல புஸ்ஸூன்னு வராது. அப்பளத்துக்கு பெரிய அண்ணா போல இருக்கும். கொஞ்சம் மொத்தமாக சப்பாத்தி போல தட்டுவதால் பெரிதாக உப்பாது. மிக்க நன்றி, மகி.
ReplyDeleteOh..okay! We have to fallen the poori with hand, not with rolling...got it! ;)
ReplyDelete----- correction!
ReplyDeleteFlatten it with hands,not with the rolling pin!
:) :)
மகி, ரோலிங் பின் வைச்சு தான் எப்பவும் சப்பாத்தி, பூரி எல்லாமே செய்வேன். கைகளினால் தட்டியதில்லை.
ReplyDelete:) நான்தான் குழப்பிக்கறேனா அப்போ? தேங்க்ஸ் வானதி!
ReplyDeleteவித்தியாசமான மசாலா பூரிதான்.
ReplyDeleteஹைய்,பூரி! அப்பிடின்னு சொல்றா மாதிரி இருக்குறதுனால ஐ பூரின்னு பேர் வந்துச்சோ...ஒரே அளவெடுத்த மாதிரி இருக்கிற ஐ பூரிக்கு நான் ஓ போடுறேன்..
ReplyDeleteநிச்சயம் வித்தியாசமான பூரிதான் வான்ஸ். கேள்விப்பட்டதே இல்லை. இன்னும் ஒரு கிழமையில செய்து சாப்பிட்டுப்போட்டு சொல்லுறன்.
ReplyDeleteரெசிப்பிக்கு நன்றி வானதி
ReplyDeleteபார்க்கவே சுவையாக இருக்கிறது
ReplyDeleteஇந்த வாரம் செய்து பார்த்துவிடவேண்டியதுதான்
படங்களுடன் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்
நல்லாயிருக்கு வான்ஸ்.அப்படியே அந்த ப்லேட்டை இங்கே தள்ளுங்க.
ReplyDeleteஅய் ஐ பூரி பேரு சூப்பரா இருக்கு பூரியும் நல்ல இருக்கு
ReplyDeleteவான்ஸ் ஐ பூரி சூப்பர் ஆ இருக்கும் போல் இருக்கு? அடுத்த வாரம் லீவு சோ செஞ்சு பார்த்திட்டு சொல்லுறேன். இதுக்கு முன்னே இப்படி பூரி கேள்வி பட்டதில்ல
ReplyDeleteபொரித்து எடுக்கும் போது காரட் , வெங்காயம் எல்லாம் தனியா வந்திடாதா?
ReplyDeleteபொடியாக வெங்காயத்த வெட்ட சொல்லி இருக்கீங்க அதுதேன் கொஞ்சம் இடிக்குது ஏன்னா எங்க அம்மா மாமியார் எல்லாரும் நான் கொழம்புக்கு வெங்காயம் நறுக்கவா ன்னு கேட்டா ஐயோ வேணாம் அதி எப்போ வதந்குறது ன்னு அலுத்துக்குவாங்க அவ்வ....ளோ சின்னதா நறுக்குவேன்:))
//:) நான்தான் குழப்பிக்கறேனா அப்போ// என்னாச்சு மகி பொதுவா கர்ர்பூரமா ( சாரி ஸ்பெல்லிங் சரியா வர மாட்டேங்குது:)) இருப்பீங்களே ? பூஸ் இல்லாத சோகமா?
ReplyDeleteராதா ராணி, மிக்க நன்றி.
ReplyDeleteஇமா, செய்து பாருங்கோ நல்லா இருக்கும்.
மிக்க நன்றி.
சரவணன், மிக்க நன்றி.
ரமணி அண்ணா, மிக்க நன்றி.
ஆசியா அக்கா, தள்ளியாச்சு. மிக்க நன்றி.
ReplyDeleteலஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.
கிரிசா அம்மிணி, பொரிக்கும் போது தனியா வராதுங்கோ. அதுக்கு தானே பொடியாக நறுக்குறோம். இருந்தாலும் 4, 5 வெங்காயத் துண்டுகள் மட்டும் பிரிஞ்சு போகும். கண்டு கொள்ளக் கூடாது. வெங்காயம், காரட் எல்லாம் மாவோடு ஒட்டி இருக்கு. அதனால் பயமில்லை. அதோடு எண்ணெய் தொட்டு உருட்டுவதால் கறிவேப்பிலை, வெங்காயம், கடுகு..... எல்லாமே அப்படியே இருக்கு.
ReplyDeleteஇதில் லேசாக வதக்குவதால் பொடியாக நறுக்குவதில் பிரச்சினை இல்லை.
பூஸார் போனதிலிருந்து மஞ்சள் பூ, கீரி எல்லோருக்கும் நிறைய சோகம் போலும். இல்லாவிட்டால் நான் தான் ரெசிப்பியை குழப்மாக கொடுத்து இருக்கிறேனோ!!!!!
//எண்ணெயில் தொட்டு பூரி சைஸில் உருட்டி,//இந்த வரியில முதல்ல "உருட்டி" என்பதற்கு பதிலாக "தட்டி" என்றுதானே எழுதீருந்தீங்க வானதி? அதுமில்லாம பூரி கொஞ்சம் அப்பளம் மாதிரி மொறுமொறுன்னு தெரிஞ்சது,அதான் கேட்டேன்.:))))
ReplyDelete//பூஸார் போனதிலிருந்து மஞ்சள் பூ, கீரி எல்லோருக்கும் நிறைய சோகம் போலும்.// சோகம்லாம் இல்லைங்கோ,லீவுக்குதானே போயிருக்காங்க,ஐ திங்க் சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் கனடால இருந்து நம்ம ப்ளாகெல்லாம் பாத்துட்டுதான் இருப்பாங்க பூஸ்!;)
கிரிசா,குழப்பறவங்க குழப்புனா குழம்புறவங்க குழம்பித்தானே ஆகணும்? [எதாச்சும் புரியுது?????! ;) ]
//பூஸார் போனதிலிருந்து மஞ்சள் பூ, கீரி எல்லோருக்கும் நிறைய சோகம் போலும்//
ReplyDeleteசில நேரம் சந்தொஷத்துலையும் தல கால் புரியாது வான்ஸ் :))
//கிரிசா,குழப்பறவங்க குழப்புனா குழம்புறவங்க குழம்பித்தானே ஆகணும்? [எதாச்சும் புரியுது???//
ReplyDeleteபாவம் வான்ஸ் ஏதோ அப்பப்போ சமையல் குறிப்பு போடுறாங்க இனிமே உங்களுக்கு பயந்து அதையும் போடாம இருந்திட போறாங்க :))
/பாவம் வான்ஸ் ஏதோ அப்பப்போ சமையல் குறிப்பு போடுறாங்க இனிமே உங்களுக்கு பயந்து அதையும் போடாம இருந்திட போறாங்க :))///கிரிசா,இப்பூடி நீங்களா புதுப்புது ஐடியாவாக் குடுத்து வான்ஸைக் குயப்பி;) விட்டுருவீங்க போலருக்கே??
ReplyDeleteநான் கேட்டா சீரியஸாத்தான் டவுட்டுக் கேப்பேன்னு அவிங்களும் நம்பி பதில் சொல்றாங்க.. [நான் எப்பவுமே அப்புடித்தான் கேக்கறது.ஆனா பாருங்க, காதோடு பேச வந்தா கொஞ்சம் எங்கூருக் குசும்பு எட்டிப்பார்க்கும், ஹிஹி!;)] நீங்க அதையக் கெடுத்துவிட்டுராதீங்கோ! :)))
//[நான் எப்பவுமே அப்புடித்தான் கேக்கறது.ஆனா பாருங்க, காதோடு பேச வந்தா கொஞ்சம் எங்கூருக் குசும்பு எட்டிப்பார்க்கும், ஹிஹி!;)] //
ReplyDeleteஹும் தெரியும் தெரியும்! அது சில பேரோட முக(!) ராசி என்ன பண்ண! சும்மா போகும் போது கும்மிட்டு போகணுமுன்னு தோணும் போல இருக்கு
//நீங்க அதையக் கெடுத்துவிட்டுராதீங்கோ! :)))//
ச்சே ச்சே நான் சொல்லி எல்லாம் வான்ஸ் குயம்ப:)) மாட்டாங்க நீங்க உங்க டவுட்டு & கும்மி(!) கண்டின்யு பண்ணுங்கோ