ஃப்ரைட் ரைஸ்
ஜாஸ்மின் ரைஸ் - 2 கப்
வெங்காயம் - பாதி
water chest nuts - 1/2 கப்
சிக்கன் - 1/2 கப்
கிரீன் பீஸ் - 1/2 கப்
முட்டை - 2
வெங்காயத் தாள் - 1/2 கப்
சோயா சாஸ் - 1/4 கப் ( அல்லது விரும்பிய அளவு )
எண்ணெய்
முட்டைக்கு கொஞ்ச உப்பு, மிளகு தூள் சேர்த்து அடித்து வைக்கவும்.
ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு சைனீஸ் வோக் எனப்படும் நான் ஸ்டிக் சட்டி வாங்க வேண்டும் என்ற என் பலநாள் கனவு இந்த வருடம் நிறைவேறியது. உங்கள் வசதிற்கேற்ப பல விலைகளிலும் கிடைக்கிறது. 20 டாலர்களிலிருந்து 100 டாலர்கள் வரை ரேஞ்ச்களில் கிடைக்கிறது.
ஃப்ரைட் ரைஸ் செய்ய ஜாஸ்மின் ரைஸ் தான் சிறந்தது. 1 கப் ரைஸ் எனில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு, முதல் நாள் இரவே ரைஸ் குக்கரில் சோறு செய்து, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
சைனீஷ் வோக்கினை அடுப்பில் வைத்து சூடாக்கவும். இங்கு எல்லாப் பொருட்களையும் stir fry முறையில் தான் பொரிக்க வேண்டும். அடுப்பினை ஹையில் வைத்து,
வெங்காயத்தை ஃப்ரை செய்து எடுக்கவும். இதே போல water chestnuts , கிரீன் பீஸ், முட்டை எல்லாவற்றையும் தனித் தனியாக பொரிக்கவும்.
கடைசியாக சிக்கினை ( கவனிக்கவும் லேசாக தான் உப்பு சேர்க்க வேண்டும் )பொரித்தெடுக்கவும்.
சோம்பல் பட்டுக் கொண்டு எல்லாவற்றையும் ஒரேதாக சட்டியில் கொட்டக் கூடாது.
சட்டியினை லேசாக துடைத்துவிட்டு, சிறிது எண்ணெய் விட்டு குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் ரைஸினை உதிர்த்து போடவும். பின்னர் சோயா சாஸ் விடவும். ஃப்ரை செய்து வைத்திருக்கும் பொருட்களை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும். இறுதியில் வெங்காயத்தாள் தூவி அலங்கரிக்கலாம்.
சோயா சாஸில் உப்பு இருப்பதால் பொருட்களை உப்பு சேர்க்காமல் பொரித்தெடுக்கவும். விரும்பினால் மஷ்ரூம் சேர்க்கலாம்.
( Thanks to google )
water chestnut என்பது கொரியன் கடைகளில் ப்ரெஷ் ஆக கிடைக்கும் அல்லது டின்களில் அடைத்தும் விற்கிறார்கள்.
வாங்க கார்லிக் ( உள்ளி, பூண்டு ) உரிக்கலாம்.
என் மகனின் நண்பனின் கிரான்ட்மா குளிர்சாதனப் பெட்டியில் நிறை..ய ஜிஞ்சர்+ கார்லிக் பேஸ்ட் அரைத்து வைத்திருப்பதைக் காட்டினார். டிவி பார்த்துக் கொண்டே கார்லிக் உரித்து, ஜிஞ்சர் வெட்டி அரைப்பாராம். அவ்வளவு பூண்டும் தோல் நீக்குவது என்பது எவ்வளவு மெனக்கெட்ட வேலை என்று விளங்கியது.
நான் தேவைக்கேற்ப உடனே அரைத்து பாவித்துக் கொள்வேன். க்ரான்ட்மாவின் ஐடியா நல்லா தான் இருந்தது. ஆனால், இவ்வளவு பூண்டும் தோல் நீக்குவது என்பது அலுப்பு பிடிச்ச வேலை. அப்ப தான் பல வருடங்களின் முன்னர் எங்கட ரேச்சல் ரே அக்கா ( தொலைக்காட்சியில் ரெசிப்பிகள் வழங்குபவர் ) சொன்ன இலகுவான முறை ஞாபகம் வந்தது.
இரண்டு எவர் சில்வர் சட்டிகளை எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டுகளை அப்படியே தோலோடு சட்டியில் போடவும். மறு சட்டியால் மூடி, நன்கு குலுக்கவும். சில நிமிடங்களில் கார்லிக் தோல் நீங்கி சூப்பராக வரும்.
இதில் 2 சட்டிகளும் எவர் சில்வராக இருக்க வேண்டும். ப்ளாஷ்டிக் சட்டிகள் கண்டிப்பாக பாவிக்க கூடாது.
fried rice looks yummy .
ReplyDeleteஇன்னிக்கு பூண்டு பொடி செய்யபோறேன் தோலுரிப்பது பற்றி யோசிச்சி கிட்டு இருந்தேன் .thanks for the idea.:}
ஆஆஆஆ றீச்சர் ஓஓஓடி வாங்ங்ங்ங்கோஓஓஓஓஓஒ ///பொறிக்கப்”/// போறாவாம் வான்ஸ்ஸ்ஸ்:))). அது பொரித்தல்:)) எங்கிட்டயேவா? நாமதான் தமிழ்ல கோல்ட் மெடல் வாங்கிட்டமே:)))
ReplyDeleteபிரைட் ரைஸ் சூப்பர், ஆனா உறைப்பே இல்லாமல் செய்திருக்கிறீங்கபோல. நான் “வொக்” எப்பவோ வாங்கிட்டேன்.
ReplyDeleteஉண்மையாகவோ? அப்பூடிக் குலுக்கினால் பூண்டு உரிபடுமோ? நான் நம்பவே மாட்டன்... நான் கையாழு/ளும்:)) வழி... ஒரு பேப்பரில் போட்டு சுட்டியலால் அனைத்தையும் ஒரு தட்டுத் தட்டி விட்டு கடகடவென உரித்திடுவேன்.. எப்பூடி? எப்பூடி என் ஐடி ஆஆஆஆஆஆ?:)))..
ReplyDeleteஅஞ்சுவுக்குப் பூண்டுப் பொடி, மீக்கு பிரைட் ரைஸ்ஸ்ஸ்.. ஆனா நான் அதற்கு தூளும் பச்சை மிளகாயும் போடுவேன்ன்ன்ன்ன்ன்:))..
ReplyDeleteவான்ஸ்ஸ் போன தலைப்புக்கு என்ன ஆச்சு?:).
HELLO GOLD MEDALIST
ReplyDelete.GUCK MAL ,Dekho,IKKADA CHOODU இவ்விட நோக்கு
//சுட்டியலால் // :}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}
சுத்தியலால் ல்ல்ல்லல்
நோ....நோ.. ஐ காண்ட் இக்கட சூடு:)))... நெருப்புக்குப் பயமெனக்கு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))
Deleteபோட்டு தாக்குங்க அஞ்சு கோல்ட் மெடலிஸ்ட் எ ஹி ஹி ஹீ :))
Deleteஅஞ்சு, வாங்கோ. இது ( பூண்டு உரிப்பது ) நான் பல தடவை செய்து பார்த்த பிறகு தான் இங்கனை போட்டேன். அப்படியே முழுப் பூண்டினை போட்டால் கூட சூப்பரா உடைபடுது.
ReplyDeleteமிக்க நன்றி, அஞ்சு.
புஷ், எழுத்துப் பிழை- நான் பதிவை வெளியிட்ட பிறகு கவனிக்கவில்லை. அதோடு என் கணிணியும் என்னிடம் இருக்கவில்லை. இப்பதான் ஒரு வழியா கிடைச்சது. தங்கப்பதக்க மங்கையே! மிக்க நன்றி.
ReplyDeleteவான்ஸ் அவசரப்பட்டு தங்க பதக்க மங்கையே ன்னு பாராட்டி டீங்க ? தங்க பதக்க மங்கை சுட்டியல் ன்னு டைப் பண்ணத பார்க்காம:))
Deleteஆஆ..ஆஆ..ஆஆ.. அது வான்ஸ் சொன்னது, நான் சுவீட் 16 எல்லோ?:)) அதுக்குத்தானாம் அந்தப் பட்டம்:))).. ஹையோ ஏன் எல்லோரும் முறைக்கினம்ம்ம்?:))
Deleteபுஷ், டூ மச் உறைப்பு கூடாது. வோக் வாங்கிட்டீங்களா??? பிபிசி லை சொல்ல மறந்துட்டாங்க போல.
ReplyDeleteஎனக்கு வாங்கி வைக்க இடம் பிரச்சினை என்பதால் வாங்கவில்லை. இந்த முறை வாங்கிட்டோமில்லை.
ஐயே! பூண்டை சுத்தியலால் அடிப்பீங்களோ??? என்ன கொடுமை. சட்டியில் போட்டு குலுக்கிப் பாருங்கோ. வேலை மிச்சம்.
ReplyDeleteநம்பமுடியவில்லை, விடியட்டும் முயற்சிக்கிறேன்... நல்லது நடந்தால் சரிதான்:))
Deleteபுஷ், போன தலைப்பு கொஞ்சம் திருத்த வேலைகள் இருக்கு. செய்த பின்னர் வெளிவரும். செத்தல் மிளகாயை லேசாக இடித்துச் சேர்த்தால் உறைப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். என் பிள்ளைகளுக்கு என்பதால் உறைப்பு சேர்ப்பது இல்லை. அதோடு ஃப்ரைட் ரைஸ் + உறைப்பு பொருத்தம் சரி வருமா?????
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு அப்பாவிப் பூஸைப் பார்த்து “புஷ்” எண்டமைக்கு:)
Deleteபுஷ் என்று நான் சொல்லவில்லை உங்கட கலைய்யக்கோவ் தான் சொல்லச் சொன்னவ. போய் ஏன் என்று கேளுங்கோ.
Deleteஅஞ்சு, இப்ப தான் தங்க மங்கை என்று பட்டம் கொடுத்தேன். இனிமேல் அது இல்லை. பட்டம் canceled.
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))... சுத்தியல்.. அது எழுத்துப்பிழை அல்ல, பேச்சு வழக்கு:)) எங்கிட்டயேவா... எங்கே என் தங்கப்ப தக்கம்?:)))..
Deleteசைனீஸ் பிரைட் ரைஸ் எனப் பெயர் வைத்தால் உறைப்புச் சேர்க்கப்பூடாதுதான், நான் தூள் போட்டிட்டு.. பூஸ் பிரைட் ரைஸ் என மாத்திடுவனே:)))...
விழுந்தாலும் பூஸாரின் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது இது தானோ!!!!
DeleteYes yes athethaan. Good pattaththa cancel pannathukku remba taanksuuu
DeleteKARRRRRRRRRRRRRRRRRRRR 4 KIIIIIIIIIIIIIIRIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII:))))
Deleteகலகலப்பான அரட்டை நடந்திருக்கு போலே! ஐ ஜஸ்ட் மிஸ்ட் இட்! :)))
ReplyDeleteஎங்கூட்டுப் பக்கத்தால இருக்க Thai ரெஸ்டாரண்ட்ல "பேசில் ப்ரைட் ரைஸ், பைனாப்பிள் ப்ரைட் ரைஸ் " எல்லாம் சாப்பிடுவேன்,ஆனா வீட்டில் செய்யும் அளவுக்கு விருப்பமான வஸ்துன்னு சொல்லமுடியாது! ;)
பூண்டு டிப்ஸ் நல்லா இருக்குது, நானும் ட்ரை பண்ணிப்பார்த்துட்டு சொல்றேன். ஆனா அவ்வளவு பூண்ட உரிச்சு என்ன்ன்ன்ன்ன்ன செய்ய??! ஙேஙே...என்று இருக்கு! ஆங்..பூண்டுகுழம்பு செய்துருவோம்! ;)
ஊசிக்குறிப்பு ஃபார் அதிரா..
அதிரா, நீங்க wok-ல ஆப்பம் சுட்டதை நாங்க மறந்திருவோமா என்ன?! ;)
பூண்டு பேஸ்ட் செஞ்சு பிரிட்ஜில் வெச்சிடுங்க மகி
Deleteகிரிஜா,மொத்தமா அரைச்சு ஃப்ரிட்ஜில் வைச்சு யூஸ் பண்ணறது handy-னாலும், ஃப்ரெஷ்ஷா அரைச்சு போடும்போது தனி டேஸ்ட்தானுங்க..என் கிச்சன்ல எல்லாமே ஃப்ரெஷ்! ;) :)
Deleteஇப்படி பூண்டு உரிச்சா குழம்புதான் வைக்கலாம்னு இருக்கேன், இன்னும் நடைமுறைப் படுத்தலை.
மகி அது குட்டி வொக்... அடுப்பில் வைப்பது, புதுஷா வாங்கினது, நான் சொன்னது எலக்றிக் வொக்.... சூட்டைக் கூட்டிக் குறைக்கலாம்.. பெரிசூஊஊஊஊ:)) அது 2008 இல் வாங்கிட்டேன்:))
Deleteகோடை விடுமுறையில் என் மனைவி
ReplyDeleteதங்கள் பதிவு சமையல் குறிப்புகளைப் பார்த்து
செய்யத் துவங்கிவிட்டாள்
உங்க்ள் புண்ணியத்தில் கொஞ்சம் விதம் விதமாய்
சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்
ரமணி அண்ணா, உண்மையா??? ஒரே சந்தோஷமா இருக்கு.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.
மகி, வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். நீங்க சொன்ன வெரைட்டி ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டதில்லை.
ReplyDeleteபூண்டு உரிச்சு பூஸாருக்கு அனுப்புங்கோ. அவர் ஏதோ சுத்தியல் வைச்சு அடிப்பாராம். இதைக் கேட்டதிலிருந்து எனக்கு ஒரே டென்ஷனா இருக்கே ஏன்ன்ன்ன்????
மிக்க நன்றி.
நீங்க ஏன் டென்ஷன் ஆவுறீங்க? நான் அஞ்சு எல்லாம் எவ்ளோ ஸ்டெடியா இருக்கோம் பாருங்க :))
Deleteபூண்டு - குலுக்கினால் தோல் வந்துடுமா - ஈஸியான மெத்தட்- ஆக இருக்கு. ஆச்சர்யமா இருக்கே.... நேத்துதான் இ-பூ பேஸ்ட் அரைச்சேன், தெரிஞ்சால் முயற்சி செய்திருக்கலாம். பாவம், என்னவருக்கு கைவலி வந்திருக்காது. ஏன்னா, அவர்தான் உரித்துத்தருவார் எப்பவும்!! :-))))))
ReplyDeleteஇந்த முறைக்கு நாலஞ்சு பூண்டுபல் போட்டாலும் தோல் உரிந்துவிடுமா அல்லது மொத்தமாக நிறைய பூண்டு போட்டுத்தான் செய்யணுமா?
வானதி, அவ்வப்போது உரிப்பதைவிட, மொத்தமாக அரைத்து வைப்பதுதான் நேரமும் மிச்சம்; சிக்கனமும்கூட!!
பார்க்கவே சாப்பிடதூண்டுது.பீஸ் & சிக்கன் என்னை வா வா அழைக்குது வான்ஸ்.
ReplyDeleteசூப்பர் வான்ஸ் fried ரைஸ் ரொம்ப நல்லா இருக்கு. பூண்டு உரிக்க சுலபமா சொல்லி இருக்கீங்க. இந்த மாதிரி ட்ரை பண்ணி உரிக்க முடியலேன்னா அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்பி விடுறேன் ஓகே :))
ReplyDeleteவான்ஸ் உங்க கூட ஒரு விருதை பகிர்ந்து உள்ளேன். ப்ளீஸ் வந்து வாங்கிக்குங்க
ReplyDelete