Monday, December 19, 2011
தோசைப் பொடி
தேங்காய்பூ - 1 கப்
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
எள் - 1/4 கப்
காய்ந்த மிளகாயை வெறும் சட்டியில் வறுத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
சட்டியில் தேங்காய் துருவலை போட்டு, மிதமான தீயில் வறுக்கவும். கறிவேப்பிலை சேர்க்கவும். ஒரளவுக்கு வறுபட்டதும் எள், மிளகு சேர்க்கவும். தேங்காய் துருவல் பொன்னிறமாக நிறம் மாறும் வரை வறுக்கவும். இறக்கி நன்கு ஆற வைக்கவும்.
ஆறியதும் அரைத்து வைத்த மிளகாய்ப் பொடி, உப்பு கலந்து நன்கு அரைக்கவும்.
யம்மி... தோசைப் பொடி தயார்.
இது என் அம்மாவின் ரெசிப்பி. முன்பு அடிக்கடி செய்து அனுப்புவார்கள். இப்பெல்லாம் இந்தப் பொடியைக் கண்ணில் காட்டுவதே இல்லை. நானே முதன் முறையாக செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.
*********************************
ராசி பலன் எழுதுபவர்கள் எதுக்கு இப்படி எழுதுகிறார்கள் என்று நினைக்க சிரிப்பா வருகிறது. எங்க வீட்டில் நான் ஒரு ராசி, என் கணவர் ஒரு ராசி. எங்கள் இருவருக்கும் எதிரும் புதிருமாவே பலன் எழுதுகிறார்கள்.
எனக்கு வீம்பு - அவருக்கு சிரமம்
எனக்கு சிரமம் - அவருக்கு களிப்பு
எனக்கு செலவு - அவருக்கு பயம்
எனக்கு திறமை - அவருக்கு செலவு
ஒவ்வொரு நாளும் இதே கதையாத் தான் இருக்கு.
*****************************************
நானும், என் மகளும் செய்த நத்தார் ornament . மகள் தான் மணிகள் ஒட்டி, அலங்காரம் செய்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Dosai podi? ...looks good!
ReplyDeleteIruntha..Tamil-la varen! :)
சுப்பர் பொடி... அதைவிட ராசிப்பலன் இன்னும் சூப்பர்... பொருத்தத்தையும் மீண்டும் ஒருக்கால் பாருங்கோவன்:))).
ReplyDeleteஎன்னப்பா, தோசைப்பொடின்னு தலைப்பு போட்டுட்டு, மற்ற ஐட்டங்களும் சேத்திருக்கீங்க!! ;-))
ReplyDeleteஇந்த தோசைப்பொடியை எங்கூர்ல “சம்மந்திப் பொடி”ன்னு சொல்வாங்க. இன்னும்கூட வேற பருப்புகள் சேர்ப்பாங்கன்னு ஞாபகம்.
dry தேங்காய்ப் பவுடர்ல செய்யலாமா இல்ல ஃப்ரோஸன் தேங்காயை வறுக்கணுமா வானதி? மிளகு சேர்த்து பொடி செய்ததில்லை..ட்ரை பண்ணிப் பார்க்கிறேன். ஆனா மெயின் இங்கிரிடியன்ட் தேங்காய்..அதுவும் வறுத்த தேங்காய்ன்றதுதான் கொஞ்சம் இடிக்குது! ;)
ReplyDeleteராசிபலன் ஜூப்பரு! ;)))))))
க்றிஸ்மஸ் ஆர்னமென்ட் அழகா இருக்கு. மிட்டாயிலயா செய்திருக்கீங்க?!
//எனக்கு செலவு - அவருக்கு பயம்
ReplyDeleteஎனக்கு திறமை - அவருக்கு செலவு//
இது மட்டும் எல்லா தம்பதியருக்கும் இருக்கும் ஒரே பலன் ..
எங்கம்மா இந்த பொடி செய்ய்வாங்க டேசிகேடட் கோகோனட் சேர்த்து .
ReplyDeleteஆர்னமென்ட் அழகா இருக்கு
ராசி பலனில் எதிரும் புதிருமாக
ReplyDeleteபலன் கொடுத்திருப்பதில் கூட ஏதோ
தொடர்பு இருப்பது போலப்படுகிறதே
வீம்பு-சிரமம்
செலவு-பயம்
ஆர்னமென்ட் மிக மிக அழகு
தங்கள் செல்விக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள்
சுப்பர் பொடி../// hahahaha..
ReplyDeleteReally super podi..:)
வானதி,உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
ReplyDeletehttp://mahikitchen.blogspot.com/2011/12/blog-post_22.html
தொடரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்! நன்றி!
ஆர்னமென்ட் நன்றாக இருக்கு.... தோசை பொடி தேங்காய் போட்டு செய்தது இல்லை... செய்து பார்க்கறேன்...
ReplyDeleteவான்ஸ் வித்தியாசமான தோசை போடி. ஒரு தடவ செஞ்சு பார்த்துட்டு டவுட்டு இருந்தா கேக்குறேன். தேங்காயில செய்யும் எந்த சாப்பாட்டு ஐடெம் உம எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா ரொம்ப செய்யுறது இல்ல. தேங்காயில cholesterol இருக்குதுன்னு சொல்லுறாயிங்க.. நமக்கு தான் அது தேவைக்கு அதிகமாவே இருக்குதே: ))
ReplyDeleteராசிபலன் தான் சூப்பர். பாப்பாவோட அர்ணமெண்டும் சூப்பர். பாப்பாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்
ReplyDeleteஇப்ப தான் இந்த தோசைப்பொடியை பார்க்கிறேன்.சூப்பர்.
ReplyDeleteராசிபலன் ஜோக் ரசித்தேன்.மகளின் நத்தார் பகிர்வு அருமை.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்
மகி, அதிரா, ஹூசைனம்மா, ஏஞ்சலின், ரமணி அண்ணா, சிவா, ப்ரியா ராம், கிரிஷா, தனபாலன், ராஜி, ஆசியா அக்கா, எல்லோருக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteரமணி அண்ணா, வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.