Friday, December 30, 2011

இலவசம், இலவசம் ஓடிவாங்கோ

ஒரு பொருள் வாங்கும் போது இன்னொரு பொருள் இலவசமாக கிடைத்தால் பெரும்பாலனவர்களுக்கு சந்தோஷமே. எண்ணெய், லோஷன் பாட்டில்களில் 20% அதிகம் என்றோ அல்லது கடுகு, பெருஞ்சீரகம் 30% அதிகமாக அடைக்கப்பட்டுள்ளது என்று பொதிகளில் அச்சிடப்பட்டிருந்தால் உடனே வாங்கி வந்துவிடுவோம். சமீபத்தில் என் கணவர் ரெடிமேட் ஊத்தப்பம் மா வாங்கி வந்தார். எனக்கு ரெடிமேட் பொடி வகைகள், மா, இட்லி, தோசை மா வகைகள் எப்போதும் பிடிப்பதில்லை. இந்த ஊத்தப்ப மா பார்த்ததும் கடுப்பு வந்தது. கூடவே சாம்பார் பொடி இலவசம் என்று இருந்தது. என் ஆ.காரரிடம் இதை எதுக்கு வாங்கினீங்க என்று கேட்டேன். ஒரு நாளைக்கு சாப்பாடு செய்கிற வேலை மிச்சம் என்றார். ஒரு கல்லில் ரண்டு மாங்காய் அடிச்சிட்டேனே என்று ஒரே பெருமை வேறு. சாம்பார் பொடியும், ஊத்தப்பம் மிக்ஸூம் இரண்டு மாங்காய்களாம்.
பழி வாங்க நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்துக் கொண்டேன். அன்று இரவே ஊத்தப்பம் செய்வது என்று முடிவு செய்தேன். பொதியில் சொல்லப்பட்ட முறையின்படி மாவை மிக்ஸ் செய்ய, பொதியினைத் திறந்தால் ஏதோ ஒரு வகையான மணம். வேறு சாப்பாடுகளும் இதை நம்பி ஆயத்தமாக இல்லாத காரணத்தினால் இதையே கல்லில் ஊற்றினேன். என் கணவர் வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்தார்.

ஆனால் பாருங்கள் ஒரு விதமான புகாரும் இல்லை. இரண்டு மாங்காயில் ஒரு மாங்காய் பழுது என்று அவரின் முகத்தைப் பார்க்க விளங்கியது. சாம்பார் பொடியும் ஷெல்ஃபில் அப்படியே தூங்குது. மாங்காய் அல்ல கல்லுத் தான் திரும்ப வந்திருக்கு.

ஊரில் இடம் பெயர்ந்து சென்று ஒரு பள்ளியில் இருந்த போது சாப்பாடு வாங்க காசு இருக்கவில்லை. பெரும் பசி எல்லோருக்கும். ஒரு வகுப்பறைக் கதவில் பெரிய பூட்டுத் தொங்கியது. யாரோ சொன்னார்கள் அந்த அறையில் சாப்பாட்டுப் பொருட்கள் இருப்பதாக. சிலர் அதை திறக்க விடமாட்டோம் என்று வாசலில் காவல் இருந்து களைத்துப் போய் போன பிறகு, வேறு சிலர் கதவினை உடைக்க மக்கள் உள்ளே புகுந்து சாப்பாட்டுப் பொருள்களை எடுத்தார்கள். ஒரு பக்கம் நிறைய நோட்டுக்கள், பென்சில், பேனாக்கள் இருந்தன. கதவினை உடைத்தவர்கள் சொன்னார்கள், தயவு செய்து சாப்பாட்டுப் பொருள்களை மட்டும் எடுங்கள். வேறு எதையும் தொட வேண்டாம். சரி என்று தலையாட்டிய மக்கள் பேனா, பென்சில், நோட்டு என்று எதையும் விட்டு வைக்கவில்லை. என் பிள்ளைக்கு பொழுது போக வேண்டாமா? அவனும் எவ்வளவு நேரம் தான் விட்டத்தையே வெறிப்பது என்று ஒரு அப்பா சொன்னார். இலவசம் என்பதுக்காக எதுக்கு எமக்கு வேண்டாத பொருட்களை எடுக்க வேண்டும். அடுத்த நாள் நோட்டில் கிழிக்கப்பட்ட பேப்பர்கள் கப்பல், ராக்கெட், குப்பைகளாக மாறி இருந்தன.


இந்தியாவில் இருந்த போது, ஒரு முறை குரோசரி கடையில் ஒரு பெண்மணி ஒரு பொருளை வாங்கிய பின்னர் நகராமல் அங்கேயே நின்றார்.
என்னம்மா வேணும், என்றார் கடைகாரர்.
ஏதோ ஃப்ரீன்னு போட்டிருக்கு. அதை குடுத்தா என்ன குறைஞ்சா போடுயிவாய், என்றார் பெண்மணி.
அது கொலஸ்ட்ரால் ஃப்ரீன்னு போட்டிருக்கு. போய் வேலையைப் பாரும்மா, என்று கடைக்காரன் பதில் சொல்ல, பெண்மணியின் முகம் வாடிப் போய்விட்டது.

ஒரு வெள்ளைக்கார ஆன்டிக்கும் அங்கிளுக்கும் 25வது மணநாள். இன்று என் மனைவிக்கு ஏதாவது பரிசுப் பொருள் வாங்கி குடுத்துட்டுத் தான் மறுவேலை என்று கணவர் கிளம்பினார். அவர் ஏதோ வைரத்தால் மனைவியை இழைக்கப் போகிறார் என்று பார்த்தால் மனிதர் குப்பைத் தொட்டியை தேடிச் செல்கிறார். குப்பைக்குள் இறங்கி ஒரு வாடிய ரோஜாப் பூச்செண்டினை எடுக்கிறார். வேறு குப்பையில் ஒரு தேநீர் கேட்டிலும் எடுத்துக் கொள்கிறார். 1.68 டாலருக்கு இனிப்பு மிட்டாய், ஒரு மனித மண்டை ஓட்டு பொம்மை வாங்கிக் கொள்கிறார். இரவு மனைவியை சாப்பிட வெளியே அழைத்துச் செல்கிறார். மனைவி ஒரு கண்டிஷனோடு செல்கிறார். சரி அப்படியே ஆகட்டும் என்கிறார்கணவர். சாப்பிட்ட பின்னர் மனைவியின் கண்களை மூடச் சொல்கிறார். ஒரு பெரிய சாக்குப் பையினை காரிலிருந்து எடுத்து வந்து, ரோஜா செண்டினை வெளியே எடுத்து மனைவிக்கு கொடுக்க மனைவியின் முகத்தில் எரிச்சல். என்ன செத்துப் போன பூவை தருகிறாயே? என்கிறார். பின்னர் கேட்டில், மிட்டாய்கள், பொம்மை எல்லாவற்றினையும் கொடுத்த பின்னர் பக்கத்து மேசையினை நோக்கி ஓடுகிறார். அங்கே மிஞ்சிப் போன உணவுகளை சேகரித்துக் கொண்டிருக்கிறார்.

நீ வரும் போதே இந்த வேலை செய்யமாட்டேன் என்று சொன்னபடியால் தான் உன்னுடன் வந்தேன். இப்ப இப்படி செய்கிறாயே, என்றபடி மனைவி எழுந்து வெளியே போகிறார்.

அட! பதறே என்பது போலப் பார்க்கிறார்கள் அங்கிருந்த மக்கள். இவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மேசைக்கு மேசை ஓடி, ஓடி உணவுகளை சேகரிக்கிறார். இது மனநோயாக இருக்குமோ என்பது என் கருத்து.
இது அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி. உலக மகா கஞ்சன்கள் என்று வேறு சிலரைக் காட்டினார்கள்.

எங்கள் இடத்தில் இருக்கும் மிருக காட்சி சாலையில் கோடை காலம் குறிப்பிட்ட நாட்களுக்கு அனுமதி இலவசம். இதற்காக மக்கள் கூட்டம் அலை மோதும். என் பக்கத்து வீட்டுப் பெண்மணி காலையில் எழுந்து போகப் போவதாக சொன்னார். நீயும் போறியா, என்று என்னைக் கேட்டார்.
காசு கொடுத்து இல்லை காசு கொடுக்காமலும் பாம்பினை பார்க்க நான் ரெடி இல்லை என்று சொன்னேன்.
ஃப்ரீ தானே போய் பார்க்க வேண்டியது என்றார்.
மிருக காட்சி சாலைகளில் சிங்கம், புலி, கரடி இப்படி மிருகங்கள் தப்பி ஓடுவது போல பாம்பும் ஓடி, மறைந்து நின்று, நான் போக வெளியே வந்தால்...

இல்லை நான் வரவில்லை. நீ போய் நல்லா எஞ்சாய் பண்ணு என்று கழன்று கொண்டேன்.
எதுக்கு எல்லாம் இலவசம் என்று ஒரு வரை முறையே இல்லாமல் போய்விட்டது.

23 comments:

 1. //எதுக்கு எல்லாம் இலவசம் என்று ஒரு வரை முறையே இல்லாமல் போய்விட்டது.//


  சரியா சொன்னீங்க .நகை கடையில் பார்த்தீங்கன்னா அந்த GIFT BAG வாங்குவதிலேயே நம்ம மக்கள்ஸ் மும்முரமா இருப்பாங்க .
  ஆயிரமாயரமா கொட்டி நகை வாங்குறவங்களுக்கு இருபது ரூபா பொருள் பெருசா போகுது .

  உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. :)

  இலவசம்னா வாயைப் பிளப்பது மனித குலத்தின் அடையாளமாக்கும்..அதைப்போயி குறை சொல்லிகிட்டு! ;) ;) ;)

  உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!:)

  ReplyDelete
 3. இலவசம் குறித்த பதிவு அருமை
  வாடிக்கையாளர்கள் ஈர்ப்பதற்கும் சரியாக ஏமாற்றுவதற்கும்
  இதைப் போனற் அருமையான டெக்னிக் வேறு இல்லை
  சொல்லிச் சென்றவிதம் அருமை
  பகிர்வுக்கு நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. ஆனால் பாருங்கள் ஒரு விதமான புகாரும் இல்லை. இரண்டு மாங்காயில் ஒரு மாங்காய் பழுது என்று அவரின் முகத்தைப் பார்க்க விளங்கியது. சாம்பார் பொடியும் ஷெல்ஃபில் அப்படியே தூங்குது. மாங்காய் அல்ல கல்லுத் தான் திரும்ப வந்திருக்கு.//

  ஐயோ பாவம் என் மருமகன், இது கொலைவெறி பாட்டி...

  ReplyDelete
 5. காசு கொடுத்து இல்லை காசு கொடுக்காமலும் பாம்பினை பார்க்க நான் ரெடி இல்லை என்று சொன்னேன்.//

  பாம்பை கண்டால் படையே நடுங்குது, வானதி மட்டும் விதி விலக்கா என்ன ஹி ஹி...!

  ReplyDelete
 6. ஆமா எதுக்குதான் இலவச்ம்னு ஒரு வரை முறையே இல்லாமபோச்சு.
  இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. அதென்னமோ இலவசம் என தலைப்புப் பார்த்ததும் ஓடி வந்திட்டேன்:))... எங்கு "sale"... போர்ட் கண்டாலும் அங்கு ஓடிவிடுவேன்... என் கணவர் சொல்வார் கடவுளே அந்தப் பக்கம் பார்த்திடாதீங்கோ என:))...

  ஆனா இப்போ வருடம் முழுவதும் சேல் போர்ட்தான் தொங்குது எங்கயும்...

  ReplyDelete
 8. வணக்கம் வான்ஸ் அக்கா,
  நல்லா இருக்கிறீங்களா?

  இலவசம் என்று வாங்கியந்தவருக்கே பழுதடைந்த உணவினை கொடுத்து விட்டீங்களே...என்னா ஒரு கொல வெறி.

  அப்புறமா கொலட்ஸ்ரோல் பிரீ...செம காமெடி..

  இலவசம், கஞ்சன்கள் என இரு வேறுபட்ட குணங் கொண்டோரை அலசியிருக்கிறீங்க.
  ரசித்தேன்.

  ReplyDelete
 9. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.இலவசம் என்றவுடன் நானும் ஓடிவந்தேன்,very interesting..

  ReplyDelete
 11. wish you a very happy new year -2012

  ReplyDelete
 12. இன்றைய வியாபார உலகத்தில் இலவசம் என்றால்தானே அதிகமாய் வியாபாரம் ஆகிறது! இலவசத்துக்கு ஆசைப்படுகிற மக்களைத்தான் சொல்ல வேண்டும். அந்த ' கொலஸ்ட்ரால் ஃப்ரீ' ஜோக் சிரிப்பை வ‌ரவழைத்தது.
  ஒரு சிறப்பான பதிவாய் அமைந்து விட்டது இது!!

  புத்தாண்டு வாழ்த்துக்க‌ள் வான‌தி!!

  ReplyDelete
 13. நல்ல பதிவு வான்ஸ். இலவசம் இல்லேன்னா விலை குறைப்பு (sale ) அப்படின்னா நம்ம எல்லோரும் ஏதோ பெரிசா சாதிச்ச மாதிரி வாங்கிட்டு வருவோம். அதுல பாதி சாமான்கள் பல்லை இளிக்கும் போது தான் எரிச்சலா இருக்கும். உங்க கடுப்பு புரியுது டேக் இட் ஈசி :) சரி பூஸ் பாஷையில ஆம்பார் வெச்சீங்களா இல்லையா?

  ReplyDelete
 14. வானதி க்வில்லிங் செய்ய slotted tool தேவை அது இல்லேன்னாலும் பரவாயில்லை

  கீழேயுள்ள ப்ளாகில் செய்முறை அழகா சொல்லி தராங்க
  http://increations.blogspot.com/2008/04/diy-quilling-tool.html

  ReplyDelete
 15. கருத்து தெரிவித்த ஏஞ்சலின், மகி, ரமணி அண்ணா, மனோ, லஷ்மி ஆன்டி, அதீஸ், நிரூ, எல்கே, மங்கையர் உலகம், மனோ அக்கா, கிரிசா, சௌம்யா எல்லோருக்கும் மிக்க நன்றிகள்.
  ஏஞ்சலின், இப்பவே ஓடிப் போய் பார்க்கிறேன்.

  ReplyDelete
 16. உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!! :-)

  ReplyDelete
 17. //காசு கொடுத்து இல்லை காசு கொடுக்காமலும் பாம்பினை பார்க்க நான் ரெடி இல்லை என்று சொன்னேன்.//

  ஹா..ஹா.... :-))

  ReplyDelete
 18. சில பொருட்களின் சாம்பிள் ஒரிஜினலை விட நல்லா இருக்கும் ..:-) (( நோட் திஸ் பாயிண்ட் ))


  இந்த தடவை ஊரில் இருக்கும் போது ஒரு பொருளுக்கு பவுடர் பவுச் ஃபிரி ...இரெண்டு தடவை வாங்கி போய் வீட்டில் பார்க்கும் போது அந்த பவுடர் பவுச் மிஸ்ஸிங் ( தரவே இல்லை ஏமாத்திட்டான் )


  மூனாவது தடவை அதே கடைக்கு போய் சமான் வாங்கும் போது இதோடு 4 தடவை வாங்கிட்டேன் (பொய்) பவுட ர் இல்லை குடுங்கன்னு சொல்லி 4 பாக்கெட்டா வாங்கியதும்தான் திருப்தி ஹி...ஹி...

  யாருக்கோ போக வேண்டிய 2 பாக்கெட் எனக்கு ஃபிரியா கிடைச்சுது :-)))

  ReplyDelete
 19. உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!

  ReplyDelete
 20. ///அது கொலஸ்ட்ரால் ஃப்ரீன்னு போட்டிருக்கு.////

  அக்கா என்ன இருந்தாலும் போட்டிருந்தால் கட்டாயம் கொடுக்கத் தான் வேணும்...

  ஒரு சந்தேகம் அது நீங்களா?

  ReplyDelete
 21. ஜெய், புது வருட வாழ்த்துக்கள்.
  பவுடரை போய் 4 பாக்கெட் வாங்கி வந்து... எதுக்கு???? ஃப்ரீ என்பதுக்காக அப்பிட்டு திரிய முடியுமா????
  இருந்தாலும் 4 ஆஆஆஆ... கர்ர்ர்ர்ர்.
  மிக்க நன்றி.

  சிநேகிதி, மிக்க நன்றி.

  மதி, அவங்க வாங்கியது எண்ணெய். அதில் ஏற்கனவே கொலட்ஸ்ரால் இருக்குதானே.
  இப்படி சந்தடி சாக்கில் என்னை வாரக் கூடாது. ஒக்கை.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 22. அக்கா இது பின்னூட்டம் இல்லை, தமிழ்மண முகப்பு பக்கத்தில் என் போட்டோ போட்டிருக்காங்க.

  சும்மா பாருங்க. அதுக்காக பொம்பிளை பார்க்க இந்தப் போட்டோவை கொடுக்க வேணாம்.

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!