பல வருடங்களின் பின்னர் ஊர் போனது மிகவும் சந்தோஷமாக இருந்தது. கடை வீதியில் பள்ளித் தோழி சுபாஷினியோடு கதை அளந்து கொண்டிருந்தபோது கடந்து போன ஆண் - எங்கேயோ பார்த்த ஞாபகம். உடனே மூளையில் பொறி தட்டியது.
ஹேய்! டொமார், என்றேன்.
அந்த ஆண் திரும்பி, ஒரு நிமிடம் குழம்பி என்னைப் பார்த்து, " நீங்கள் யார்?", என்றார்.
என்னைத் தெரியவில்லையா? நான் தான் ராதிகா, என்றேன்.
ஓ! எப்படி இருக்கிறாய், என்று ஒருமைக்குத் தாவினான்.
அவன் பக்கத்தில் அவனைப் போலவே ஒரு குட்டி. டொமார் சின்ன வயதில் மூக்கு ஒழுகத் திரிந்தது போல டொமாரின் குட்டி நின்றான்.
நான் நல்லா இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய், என்றபடி தொடர்ந்தேன். உன் பிள்ளைக்கு மூக்கு இப்படி ஒழுகுதே துடைச்சு விடப்படதா, என்றேன்.
டேய்! மூக்கை துடை, என்றான் கடுப்போடு. அவன் மகன் டொமாரின் லுங்கியில் மூக்கினை துடைத்தான்.
நான் நீட்டிய பிஸ்கட், சாக்லெட்டுக்களை ஆசையோடு வாங்கிக் கொண்டான் குட்டி.
நீ இன்னும் பழைய வீட்டில் தானே இருக்கிறாய். இன்று மாலை உன் வீட்டுப் பக்கம் கட்டாயம் வருவேன். உன் மனைவியை கட்டாயம் பார்க்க வேண்டும், என்றேன்.
வேண்டா வெறுப்பாகத் தலையாட்டி விட்டு நகர்ந்து சென்றான்.
இவனை எப்படி மறக்க முடியும். இன்று மாலை இவனின் மனைவியை எப்படியும் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.
என் கணவரிடம் நான் டொமாரை சந்தித்த கதையினை சொன்னேன்.
ஓ! அப்படியா என்றதோடு நிறுத்திக் கொண்டார்.
என் பழைய கதைகள் பற்றி ஏதாவது கேட்பார் என்று நினைத்து, ஏமாந்து போனேன். இன்று மாலை டொமார் வீட்டுக்க்கு நான் போறேன். நீங்களும் கட்டாயம் வர வேண்டும், என்றேன்.
நான் வரவில்லை. என் நண்பனை சந்திக்க வேண்டும், என்றார்.
மாலை 4 மணி அளவில் டொமார் வீட்டுக்குச் சென்றேன். டொமாரைக் காணவில்லை. அவன் மனைவி, பிள்ளைகள் மட்டும் இருந்தார்கள். என்னை நானே சுய அறிமுகம் செய்து கொண்டேன்.
டொமார் எங்கே? , என்றேன்.
அதுக்கென்னம்மா குறைச்சல். இப்ப குடிச்சுட்டு எங்கனை விழுந்து கிடக்குதோ தெரியவில்லை. மப்பு தெளிய வீட்டுக்கு வரும், என்றார் மனைவி.
அப்ப வேலைக்கு போறதில்லையா? எப்படி குடும்பம் நடத்துகிறீர்கள்?, என்றேன்.
நான் அப்பம், தோசை செய்து விற்பனை செய்கிறேன். அந்தக் காசினைக் கூட குடிச்சே அழிக்கிறார். இன்று காலையில் 200 ரூபாய் குடுத்துவிட்டேன் அரிசி வாங்க. திருந்திட்டேன் என்று சொல்லித் தான் காசு வாங்கிப் போனார், என்றபடி கண்களைக் கசக்கினார் மனைவி.
டொமார் தள்ளாடியபடியே வீடு வந்து சேர்ந்தான்.
ஏன் டொமார், உனக்கு அறிவு இருக்கா? , என்று எகிறினேன்.
ராதிகா, நீ உன் வேலையை மட்டும் பாரு. உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?, என்றபடி கட்டிலில் படுத்துக் கொண்டான்.
மனைவி கண்களைக் கசக்கியபடி நின்றார். நான் வீட்டினை நோக்கி நடந்தேன்.
அடுத்த நாள் டொமாரின் மனைவி என் வீடு தேடி வந்தார்.
நேற்று எனக்கு கன்னத்தில் அறைஞ்சுட்டார் என் கணவர், என்றார் வீங்கிய கன்னங்களைக் காட்டியபடி. ஒவ்வொரு நாளும் குடிச்சுட்டு வந்து அடிக்கிறதே வேலை அவருக்கு, என்றார்.
அடுத்த கிழமை என்னை வந்து பாருங்கள் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.
அதன் பிறகு வேலைகள் மளமளவென நடைபெற்றது. ஒரு சிறிய இடத்தினை வாங்கி, அதில் தேவையான பொருட்கள் வாங்கி அடுக்கி, சாவியினை டொமாரின் மனைவியிடம் கொடுத்தேன்.
என்னால் முடிந்த உதவி. கடை உங்க பெயரில் தான் இருக்கு. டொமாருக்கு இதில் ஒரு சல்லிக் காசு கூட உரிமை இல்லை. ஏதாவது வம்பு செய்தா என்னிடம் சொல்லுங்கள், என்றபடி விடை பெற்றேன்.
நீ எதுக்கு ராதிகாவிடம் பிச்சை வாங்கினாய் என்று மனைவியை அடித்தாக மனைவி மறு நாள் சொன்னார்.
நீ இப்படி பயந்து சாவதால் தான் அவர் உன்னை அடிக்கிறார். விரட்டுகிற நாய்க்கு ஓடுகிற நாயினைக் கண்டால் சந்தோஷமாம். அது போலத் தான் இதுவும். ஒரு நாளைக்கு எதிர்த்து கேள்வி கேள், என்றேன்.
அட! போங்கமா அவரிடம் நல்லா மொத்து வாங்க ஐடியா குடுக்கிறீங்க. நான் போறேன், என்றபடி விடை பெற்றார் மனைவி.
டொமார் குடிச்சுட்டு வந்து மனைவியை அடிப்பது குறையவேயில்லை. நான் வெளிநாடு போகும்நாளும் வந்தது. கார் டொமார் வீட்டினை கடந்த போது அந்த எண்ணம் தோன்றியது. காரினை நிப்பாட்டச் சொன்னேன். என் கணவர் விளங்காமல் பார்த்தார். இறங்கி விடு விடுவென உள்ளே சென்றேன்.
எதிர்ப்பட்ட டொமாரின் கன்னத்தில் சப்பென்று இரண்டு அறைகள் விட்டேன். ஒன்று உன் மனைவியை அடிச்சதுக்கு மற்றது உனக்குத் தான் தெரியுமே. என் கணவர் வந்து என் கையினை பிடித்து இழுத்துச் சென்றார்.
டொமார் அதிர்ந்து போய் நின்றான்.
வெளிநாடு போய் சேர்ந்து 2 வாரங்களின் பின்னர் என் அம்மா சொன்னார், இப்பெல்லாம் டொமார் குடிச்சுட்டு வந்து மனைவியை அடிப்பதே இல்லையாம். நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.
பின்குறிப்பு: ( disclaimer )
டொமார் யார் என்று தெரியாதவர்கள் அந்த லிங்கினை க்ளிக்குங்கள். இது ஒரு கற்பனைக் கதையே. இதில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே.
கற்பனையென்ட்றாலும் ரசிக்கும்படியாகத்தான் இருக்கு
ReplyDeleteஅடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவமாட்டான்
என்பது சரிதான் போல இருக்கு
மனம் கவர்ந்த பதிவு
அடிக்கடி பதிவுகள் தர வேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
குடிச்சுட்டு மனைவியை அடிப்பவங்களுக்கு முரட்டுவழியைத்தான் காட்டனும் போல இருக்கு. கற்பனையும் நிஜம் போலதான் இருக்கு.
ReplyDeleteஅடடா டொமார் திரும்ப வந்தாச்சோ? கதை நன்றாக இருக்கு... வான்ஸ்.
ReplyDeleteஆனா நாங்க டொமாரைப்பற்றி நல்லவிதமான எண்ணத்தோட இருந்திட்டம், இப்போ இப்பூடி சொன்னதுக்கு வன்மையான கண்டனங்கள்:)))).
இருந்தாலும் உங்களுக்கு ரொம்பப் பெரிய மனது:)) ஐ மீன்ன்ன்ன்ன் ராதிகவுக்கூஊஊஊஊஉ:))).
ReplyDeleteடொமாரை இப்படி சித்தரித்தது எனக்கும் வருத்தமே! வாழ்க்கைச் சூறாவளியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மாறுவதும் நடக்கும் என்று உணர்த்திய க்தை தான் என்று தேற்றி கொண்டேன்.
ReplyDeleteநல்ல திருப்பம்.
:) டொமார் ரிடர்ன்ஸ்-ஐப் படிச்சு முடிச்சதும் "அடி உதவற மாதிரி அண்ணன்தம்பி கூட உதவமாட்டான்!"ங்கற பழமொழிதான் நினைவு வந்தது.பாத்தா முதல் கமென்ட்டிலும் அதே பழமொழி!:)
ReplyDeleteஎது எப்படியானாலும் டொமார் திருந்தி நல்லவழிக்கு வந்தது சந்தோஷம்!
நாட்டுல இருக்கிற ஒவ்வொரு டொமாருக்கும் ஒரு ராதிகா சின்னக் காலத்திலேயே அறிமுகமாகிற மாதிரி கடவுள் செட் பண்ணி வைச்சால் எவ்வளவு நல்லா இருக்கும். ;) பளார் சீன்ல... மொழி ஜோ நினைவு வந்துது எனக்கு.
ReplyDeleteசுவாரசியமாக எழுதி இருக்கிறீங்க வான்ஸ். டொமாருக்கே இப்பிடி என்றால்... நான் ஒன்றும் சொல்லேல்ல. ;))))
டொமார் பாகம் 3 அடுத்த விடுமுறையின் பின் வருமோ!!
அருமை.
ReplyDeleteரமணி அண்ணா, உண்மை தான். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக நிறையப் பதிவுகள் மீண்டும் வரும்.
ReplyDeleteமிக்க நன்றி.
லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.
அதீஸ், டொமார் நல்லவரா??? என் அல்வா களவெடுத்த ஆளை நல்லவன் என்று சொல்லக் கூடாது. பெரிய மனசா???? ஓஓஓஓ!! ராதிகாவுக்கா???
நன்றி, அதீஸ்.
ஆசியா அக்கா, உண்மை தான்.
மிக்க நன்றி.
மகி, டொமார் அடியால் திருந்தினது எல்லோருக்கும் சந்தோஷம்.
ReplyDeleteமிக்க நன்றி.
இமா, யாருக்கு அறை விடணும் என்று சொல்லுங்கோ ராதிகாவை விட்டு அறையலாம்.
டொமார் பாகம் 3 - எழுத என்ன இருக்கு??? யோசிச்சு பார்க்க வேண்டும்.
மிக்க நன்றி.
திரு. ரத்னவேல், மிக்க நன்றி.
ரசித்து வாசித்தேன் வானதி.அபாரமான எழுத்து நடை.வாழ்த்துக்கள்,
ReplyDeleteஉங்க கற்பனை நிஜமானால்...,!!!??
ReplyDelete//பல வருடங்களின் பின்னர் ஊர் போனது மிகவும் சந்தோஷமாக இருந்தது. //
ReplyDelete:-) :-) :-))
//டொமார் யார் என்று தெரியாதவர்கள் அந்த லிங்கினை க்ளிக்குங்கள். இது ஒரு கற்பனைக் கதையே. இதில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே. //
வான்ஸ்...இதை வேர போட்டு ...ஹி...ஹி....(மீ எஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப் )
வான்ஸ்..இதுப்போல இன்னும் நிறைய கதைகள் எழுதுங்க..ஷார்ட்டான கதையை விட தொடர் போல எழுத முயற்சி செய்யுங்க :-))
ReplyDeleteபாவம் டொமார் ரெண்டு ரூபாய்க்கா அடிச்சீங்க சே சே அடிச்சாங்க ராதிகா .
ReplyDeleteSUPERB STORY
ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.
ReplyDeleteராஜி, மிக்க நன்றி.
ஜெய், எதுக்கு சிரிக்கிறீங்க? எதுக்கு ஆச்சரியப்படுறீங்கன்னு தெரியலையே????
வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ஏஞ்சலின், 2 ரூபாய் அந்தக் காலத்தில் பெரீய்ய்ய.... காசு.
இப்ப 2 ரூபாய்க்கு அல்வா வாங்க முடியுமா சொல்லுங்கள்.
மிக்க நன்றி.
அருமையான கதை வான்ஸ். நான் இப்போதான் டொமார் பார்ட் 1 படிச்சேன். எனக்கு பொதுவா கதையில சினிமாவில் எல்லாம் சந்தோஷமான முடிவு இருந்தால் தான் புடிக்கும்.
ReplyDeleteடீச்சர் சொன்னது போல எல்லா டோமாருக்கும் ஒரு ராதிகா கெடைச்சா ஏன் பெண்கள் கணவன் கிட்டே உதை பட போறாங்க
////நீ எதுக்கு ராதிகாவிடம் பிச்சை வாங்கினாய் என்று மனைவியை அடித்தாக மனைவி மறு நாள் சொன்னார்.////
ReplyDeleteதண்ணி அடிப்பதற்காய் பிச்சை எடுக்கும் மனிதருக்கு ரோசத்துக்கு மட்டும் குறைவருவதில்லை...
இப்படி எத்தனை குடும்பங்கள் அழிகிறது தெரியுமா?
... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com
ம்ம்ம் அசத்தலாக இருக்கே
ReplyDeleteகிரிசா, எல்லோரும் ராதிகாவா??? பெரிய ஆசைதான் போங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி.
சுதா, உண்மைதான்.
மிக்க நன்றி.