Sunday, December 11, 2011
பூக்கள்
முதலில் இப்படி வட்டமாக புள்ளிகள் போட்டுக் கொள்ளவும்.
பிறகு படத்தில் காட்டியபடி, ஓரத்தில் நூலினால் தையல் போட்டுக் கொள்ளவும். இந்த நூல் கொஞ்சம் லைட்டான கலரில் இருக்குமாறு தைத்தால் நன்றாக இருக்கும்.
ஊசியில் கொஞ்சம் டாக்கான நூலினை கோர்த்து, பூவின் மையத்தில் ஊசியினை கீழிருந்து குத்தி மேலே கொண்டு வரவும். இந்த நூலினை லைட்டான நூலின் வழியாக கோர்த்து இழுக்கவும். மிகவும் டைட்டாக இழுக்காமல் பூவின் இதழ் போல இருக்குமாறு நூலினை சரி பார்த்துக் கொள்ளவும். நூலினை துணியின் கீழ் கொண்டு சென்று, மீண்டும் அடுத்த இதழினை இதே போல தைக்கவும். எல்லா இதழ்களையும் தைத்த பிறகு படத்தில் காட்டியது போல பூ ஷேப் கிடைக்கும்.
பூவின் மையத்திற்கு ஊசியில் sequin கோர்த்து, பிறகு முத்து கோர்க்கவும். பின்னர் நூலினை மீண்டும் சீக்கின்ஸ் வழியாக கொண்டு சென்று, துணியின் கீழே முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
( திரும்ப முத்தின் வழியாகத் தான் நூலினைக் கொண்டு செல்வேன் என்று அடம்பிடித்தால் நான் ஒன்றுமே செய்ய முடியாது )
இப்ப அழகான பூக்கள் ரெடி.
சங்கிலித் தையல், அடைப்புத் தையல்களால் உருவான பூக்கள், வண்ணத்துப்பூச்சிகள் கீழே.
Subscribe to:
Post Comments (Atom)
வானதி எம்பிராய்டரி கொள்ளை அழகு..:)
ReplyDeleteSuuuuuper!:)
ReplyDeleteகலக்கிட்டீங்க போங்க!ஆரஞ்ச் பூக்கள் ரொம்ப சிம்பிளா அழகா இருக்கு! கடைசி படத்தில இருக்க வயலட் பூக்கள், திக்கான பச்சைத் தண்டுக்கு என்ன தையல் உபயோகித்திருக்கீங்க? அடைப்புத்தையல் கொஞ்சம் வித்யாசமாத் தெரியுது எனக்கு.
ReplyDeleteஇந்தமுறை(யாவது) நானும் ஊசிநூலைத் தேஏஏஏஏஏஏஏடி எடுக்கப்போறேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்! ;)
ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு.. குழந்தைகள் டிரஸ்ஸில் போடலாம் ரொம்ப அழகு
ReplyDeleteஅழகாக இருக்கு.
ReplyDeleteசுபர்ப் வான்ஸ். மூன்றுமே அழகாக இருக்கின்றன.
ReplyDeleteமேலே இருக்கும் நாவல் பூக்களும் அழகு. ;)
ReplyDeleteரொம்ப ரொம்ப அழகு
ReplyDeleteசெய்துள்ள விதமும்
அதைச் சொல்லியுள்ள விதமும்
வாழ்த்துக்கள்
அழகு
ReplyDeleteநமக்கு தான் பொருமைங்குறதே இல்லையே :-(
பொறுமையின் சின்னமாய் பூக்கள்
ReplyDeleteஉங்கள் கைவண்ணத்தில் ..super..
பொருமைங்குறதே ///பொறுமை பொறுமை :)
ReplyDeleteஆஹா இந்தப்பதிவை என் வீட்டம்மாகிட்டே உடனே காட்டனுமே...!!!
ReplyDeleteஅழகு...!!!!
ReplyDeleteFantastic !!!!!!
ReplyDelete( திரும்ப முத்தின் வழியாகத் தான் நூலினைக் கொண்டு செல்வேன் என்று அடம்பிடித்தால் நான் ஒன்றுமே செய்ய முடியாது )//
ROFL ROFL ROFL
அழகு! அருமை.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி சகோதரி!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"
ரத்னவேல், மிக்க நன்றி.
ReplyDeleteஸாதிகா அக்கா, மிக்க நன்றி.
மகி, மிக்க நன்றி.
அது அடைப்புத் தையலே தான். இலை டிசைன் நேராக இல்லாமல் நிறையக் கோடுகள் வருமாறு வரைந்தால் தைக்கும் போது இப்படித் தான் அடைப்புத் தையல் வரும்.
ஸ்நேகிதி, மிக்க நன்றி.
ReplyDeleteமகளின் சட்டையில் போட்ட டிஸைன் அந்த வண்ணத்துப்பூச்சி & பூக்கள்.
ஆசியா அக்கா, மிக்க நன்றி.
இமா, மிக்க நன்றி.
நாவல் பூக்கள் கோயிலில் இருந்த பூக்கள். என் ஆ.காரர் எடுத்த படம். அவரின் அனுமதி இல்லாமல் போட்டாச்சு என்று கொஞ்சம் கோபம்/விரக்தியில் இருந்தார். நான் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.
ரமணி அண்ணா, மிக்க நன்றி.
ReplyDeleteஆமினா, பொறுமை - தைக்க ஆரம்பிச்சா பொறுமை தானா வந்துவிடும்.
மிக்க நன்றி.
சிவா, மிக்க நன்றி.
மனோ, மிக்க நன்றி.
ஏஞ்சலின், நான் முதலில் அப்படித் தான் செய்தேன் ஹிஹி...
மிக்க நன்றி.
தனபாலன், மிக்க நன்றி.
அக்கா ரொம்ப ரொம்ப அழகாயிருக்கிறது...
ReplyDeleteஆனால் எனக்கு இதற்கெல்லாம் பொறுமையில்லையே..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர் உணர்வுகள்
வெகு சிறப்பு.... கலைத்தொழில்.
ReplyDeleteவானதி நேரமிருக்கும்போது என் தமிழ் பக்கமும் வாங்க அங்கே இன்னும் நிறைய வாழ்த்து அட்டைகள் போட்டிருக்கிறேன்
ReplyDeleteஎனக்கும் கொஞ்சம் கொஞ்சம் எம்ப்ராய்டரி தெரியும். உங்க கைவண்ணத்தில் பூக்கள் ஜொலிக்கின்றது சகோதரி
ReplyDeleteகருணாகரசு, மிக்க நன்றி.
ReplyDeleteராஜி, மிக்க நன்றி.