எங்களில் பெரும்பாலனவர்களுக்கு இரண்டு, மூன்று குழந்தைகள் வளர்ப்பதே பெரிய சவாலாக இருக்கு. ஆனால் சிலருக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது.
தொலைக்காட்சியில் வரும் சில நிகழ்ச்சிகளைப் பார்த்தால் எரிச்சல் மண்டிக் கொண்டு வரும். ஜான் & கேட் ப்ளஸ் 8. இவர்களுக்கு ஒரு பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள், இரண்டாவதில் 6 குழந்தைகள். அந்த அம்மா செய்யும் அலட்டகளைப் பார்த்தா ரத்தக் கண்ணீர் வராத குறை தான்.
ஒரு குழந்தையை வளர்க்கும் போது சுற்றுச் சூழல் எவ்வளவு மாசடைகிறது என்று விரிவாக காட்டினார்கள். அதாவது டயப்பர் செய்ய பயன்படும் மூலப் பொருட்களில் முக்கியமானது மரம். எவ்வளவு மரங்களை வெட்டி, டயப்பர் செய்து, டயப்பரை பயன்படுத்திய பின்னர் குப்பையில் எறியும் போது ஏற்படும் கேடுகள் இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு முறை கடைக்குச் சென்று குழந்தைகளுக்கு ஆடைகள் எடுக்க ஏற்படும் செலவுகளைப் பார்த்தா மலைப்பா இருக்கும்.
இந்த ஜான் & கேட் ஜோடி இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்கள். விளம்பரம் மூலம் நிறையப் பணம் வந்திருக்கும். படுக்கும் நேரம் தவிர்த்து மீதி நேரம் எப்போதும் வீடியோவும் கையுமாக ஆட்கள் வீட்டினுள் இருந்திருப்பார்களோ என்றே தோன்றுமளவுக்கு சாப்பிடுவது, சண்டை போடுவது என்று எல்லாமே காட்டுவார்கள். இறுதியில் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று சூப்பர் மார்க்கெட் நியூஸ் ஸ்டான்டில் செய்தி பார்த்தேன். இந்த நிகழ்ச்சியைப் பார்த்து கடுப்பான ஒரு ஆசாமி, துப்பாக்கியுடன் சென்று ஏதோ ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையத்தில் சிலரை கொன்று விட்டதாக சொன்னார்கள். இந்த ஆசாமி ஜான் & கேட் நிகழ்ச்சியை நிறுத்தும்படி நிறையத் தரம் சொன்னாராம். யாரும் காது கொடுத்துக் கேட்கவில்லையாம். அந்த ஆசாமியின் கூற்றுப்படி இந்த மாதிரி ஷோக்கள் அமெரிக்காவில் தடை செய்யப்பட வேண்டியவை.
இதே போல இன்னொரு நிகழ்ச்சி. 16 & counting ( அதாவது 16 பிள்ளைகள் ஆனால் இன்னும் பெற்று முடியவில்லை ). ஒரு முறை சானல் மாற்றிக் கொண்டு போகும் போது இந்த நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. அந்த அம்மா 16 குழந்தைகளைப் பெற்று, 16க்கும் J இல் ஆரம்பிக்குமாறு பெயர்களும் வைத்து, வயிற்றில் இன்னொன்று வளருவதாக சொன்னார். ஆண்டவன் கொடுக்கும் போது எப்படி வேண்டாம் என்று மறுப்பதாம், என்றார் அந்தப் பெண்மணி. ஆண்டவன் கொடுக்கிறார் என்று எல்லோரும் இப்படியே பெற்றுக் கொண்டிருந்தால் பூமி என்னாவது.
இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே பாவம் என்பது என் கருத்து. சமீபத்தில் அவருக்கு 19 வது குழந்தை பிறந்துவிட்டதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். இப்பவும் நிப்பாட்டுகிற ஐடியா எதுவும் அந்த அம்மாவுக்கு இல்லையாம்.
இவர்கள் பிரபலமாக யார் காரணம் என்று பார்த்தால் மக்கள் தான். இந்த மாதிரி நிகழ்ச்சிகளை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். அதனால் ஒளிபரப்பு நிலையங்களுக்கு விளம்பரங்கள் மூலம் நல்ல இலாபம் வருகிறது. நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு வேலையும் மிச்சம், பணமும் நன்றாக கொட்டும். நல்ல திறமையான நடிகர்களை இயக்கி நாடகங்கள் எடுப்பதானால் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால், இந்த மாதிரி ஷோக்களில் பெரிதாக மெனக்கெட ( கதை எழுதுவது, இயக்குவது, மேக்கப், ஆடைகள் ) தேவையில்லை. வீட்டில் இருக்கும் ஒரு வாண்டு எதையாவது உளறிக் கொட்டினாலும் மக்கள் பார்ப்பார்கள். இது மாதிரி நிகழ்ச்சிகள் எல்லாம் வளரும் நாடுகளில் இன்னும் வரவில்லை என்று நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவை பார்த்த பின்னர் யாருக்கும் ஐடியா வந்தாலும் வரலாம்.
அந்த நாட்களில் பிள்ளைகள் நிறையத்தான் இருந்தன. இப்போதைய கால கட்டத்தில் ஒன்று அதுவும் இல்லாமல் என்று கூட ஆகிவிட்டது.
ReplyDelete//எல்லோரும் இப்படியே பெற்றுக் கொண்டிருந்தால் பூமி என்னாவது.//.
ஹா.. ஹா.. கவலைப்படாதீர்கள். எல்லோரும் நினைத்தாலும் அப்படி நிகழாது.. வெகு சிலர் மட்டுமே இப்படி.. பயப்பட வேண்டாம்!
அந்த ஆசாமியின் கூற்றுப்படி இந்த மாதிரி ஷோக்கள் அமெரிக்காவில் தடை செய்யப்பட வேண்டியவை.//
ReplyDeleteபின்னே சாப்பிடுவது சண்டை போடுவதை எல்லாம் வீடியோ எடுத்து போட்டு மக்களை கொன்னா, எவனாவது இப்பிடி கெளம்பி வந்து போட்டு தள்ளதான் செயவாயிங்க...!!!
என்ன வான்ஸ்ஸ் என்ன நடந்தது? ஒரே பப்படம் பொரிஞ்ச மாதிரி பொரிஞ்சு தள்ளிட்டீங்க அவ்வ்வ்வ்:))).
ReplyDeleteஇப்போது மக்கள் எதைப் பார்க்கிறார்கள், எப்படிப் பணம் சம்பாதிக்கலாம் என்று மட்டும்தானே....
ஆனா மாத்தி யோசியுங்க வான்ஸ்... கள்ளவழியில் கூடான வழியில் பணம் சம்பாதிக்காமல்... இப்படிச் சம்பாதிக்கிறார்களே... என நினைத்து ஆறுதல் படுவோம்.
இதெல்லாம் பார்க்க ஒருவித கோபம் தோன்றினாலும் எல்லாம் கடவுளின் செயல்தான் வாணி, குழந்தை இல்லையே என இருப்போருக்கு கொடுக்காமல்... இருப்போருக்கே அள்ளி அள்ளிக் கொடுக்கிறார் .. இதை என்னவென்று சொல்வது.
என்னாது எல்லாப் பெயரும் J இல் ஆரம்பிக்குதோ? ஒருவேளை நம்மட ஜெ... வாணாம் வாணாம் எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்ஸ்..:)) ஏற்கனவே கலைக்கினம்... நான் ஒளிச்சுத் திரிகிறேன்...:)).
ReplyDelete//இந்த பதிவை பார்த்த பின்னர் யாருக்கும் ஐடியா வந்தாலும் வரலாம்.
//
ஆங்ங்ங்ங்ங் ... நிறையப் பேருக்கு ஐடியா வந்திருக்குமே இப்போ:)))... ஆஆ.. ஆரது ஓடுறது.... சத்தியமா நானில்லை... மீ எஸ்ஸ்ஸ்:))).
வணக்கம் வானதி அக்கா,
ReplyDeleteநலமாக இருக்கிறீங்களா?
கொஞ்சம் பிசியாகிட்டேன்.
அதான் வலைப் பக்கம் இப்போ முன்பு போல வர முடிவதில்லை! மன்னிக்கவும்,
குழந்தைகளை வைத்து நடக்கும் குதூகல நிகழ்ச்சி பற்றி அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.
ReplyDeleteரிஷபன், நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்.
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மனோ, நீங்களும் கடுப்பிலை தான் இருக்கிறீங்க போல.
மிக்க நன்றி.
அதீஸ், பணம் சம்பாதிப்பது இது நல்ல வழி தான். ஆனால், இதைப் பார்க்கும் சில ஜென்மங்களுக்கு இப்படியும் கூட பணம் உழைக்கலாம் என்று ஒரு ஐடியா வரும். சிலர் பார்த்துவிட்டு மறந்தும் விடுவார்கள். ஒரு சிலர் ஏன் நாங்களும் இதை முயற்சி செய்யக் கூடாது என்று கிளம்பிவிடுவார்கள். இதைப் போல வேறு நிகழ்ச்சிகளும் இப்ப பிரபலமாகி வருகிறது.
ReplyDeleteஓ! எங்க ஜெ....இருக்காது.
எங்கட நாடுகளில் இதே ஒரு முழுநேரத் தொழிலாக செய்து போடுவார்கள்.
நிரூ, நலமே.
மிக்க நன்றி.
வணக்கம், புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...
ReplyDeleteமங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவில் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..வணக்கம், புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...
மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவில் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..
. இப்பவும் நிப்பாட்டுகிற ஐடியா எதுவும் அந்த அம்மாவுக்கு இல்லையாம்.//
ReplyDeleteஒன்றும் வேண்டாம் .அரசாங்கம் தருகின்ற
சோஷியல் பெனிஃபிட்ஸ் /சைல்ட் பெனிஃபிட் இதெல்லாம் நிப்பாட்டினா அவ்வளவுதான் இவங்க நிலைமை .
ஆனாலும் GOD இப்படி செய்ய கூடாது .எத்தனை பேர் பிள்ளை வரம் வேண்டி இருக்காங்க .அதில பத்து பேருக்கு ஒன்னு ஒண்ணா தந்தா கூட நல்லா இருக்கும் .
//ஒரே பப்படம் பொரிஞ்ச மாதிரி பொரிஞ்சு தள்ளிட்டீங்க//
நானும் கூட பொரிவேன் . இன்னிக்கு டாக்டர்கிட்ட வாக்சின் போட போனா அங்கே மினி நர்சரி மாதிரி ஒரு லேடி பதினோரு பிள்ளைகளுடன் .
ஃஃஃஃஃஆண்டவன் கொடுக்கிறார் என்று எல்லோரும் இப்படியே பெற்றுக் கொண்டிருந்தால் பூமி என்னாவது.ஃஃஃஃ
ReplyDeleteஎன்னக்கா கதையிது.. தப்பிறதுக்கு நல்ல நல்ல காட்டுகள் வைத்திருக்கிறாங்கள்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)
இது போன்ற ரியாலிட்டி ஷோஸ் பார்க்கையில் சில நேரங்களில் காமெடியா இருக்கும்,சில நேரங்களில் கோவமா வரும்! எதோ ஒரு nanny வந்து வீட்டில் அடங்காம இருக்கும் குழந்தைகளைத் திருத்தற மாதிரி ஒரு ப்ரோக்ராம் வருமே! அதைப் பார்த்தாலும் இப்படிதான் இருக்கும்!
ReplyDeleteUnder cover Boss மட்டுமே நான் எப்பவாவது பார்ப்பேன். நீங்க சொன்ன 19 குழந்தை நியூஸ் 17வது குழந்தை பிறந்தப்ப பார்த்தது,இப்ப இன்னும் 2 சேர்ந்தாச்சா?!!!அவ்வ்வ்வ்....
வணக்கம் சகோதரி! பதிவுலகில் புதியவன். என் மனைவி உங்கள் தளத்தை விரும்பிப் பார்ப்பார்கள்.
ReplyDeleteநான் இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன். அருமையான கருத்துக்கள். பகிர்விற்கு நன்றி. தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி. நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."
மங்கையர் உலக,, மிக்க நன்றி.
ReplyDeleteஏஞ்சலின், உண்மைதான்.
மிக்க நன்றி.
சுதா, மிக்க நன்றி.
மகி, நானி ஷோ எனக்கு எரிச்சல் வரும்.
நீச்சல் குளம் இருக்கும் வீட்டில் பிள்ளைகளை அருகில் விளையாட விட்டுட்டு அம்மா, அப்பா அப்படி ஒரு அப்பாவி போஸ் குடுப்பார்கள் பாருங்கள் சூப்பரோ சூப்பர். இந்த நானி ஆன்டி ஒரு டம்மியை குளத்தில் போட்டு, இப்படித் தான் உங்க குழந்தையும் இறக்க நேரிடும் என்பார். ஹையோ! இப்படியும் பெற்றோர்கள் நடிப்பார்களா என்று வியப்பாக இருக்கும்.
மிக்க நன்றி.
தனபாலன், மிக்க நன்றி.
பொரிஞ்சுதான் இருக்கிறீங்கள். லூஸ் ப்ரோக்ராம் எத்தனையோ வரும், பார்க்காதைங்கோ இனி.
ReplyDelete