Friday, February 18, 2011

இரண்டு பெண்கள்

சூப்பர் மார்க்கெட் போயிருந்தேன்.
" ஹேய் ! யாரு என் கார் மேலை அழுக்கு பண்ணியது ", என்ற குரல் கேட்டு திரும்பினேன்.
அங்கு ஒரு பெண், அவரின் 2 வாரிசுகள் நின்றார்கள்.
என்ன அழுக்காக இருக்கும் என்று பார்த்தேன். குக்கியோ அல்லது ஏதோ ஒரு சாப்பாட்டு பொருளை காரின் முன் ( car bonnet ) பாகத்தில் கொட்டியிருந்தார்கள்.
என்னைப் பொறுத்தவரை அது ஒரு பெரிய குற்றம் போல தெரியவில்லை. ஆனால், அந்த அம்மா குழந்தைகளை திட்டித் தீர்த்தார்.
சும்மா ஒரு பேப்பரினால் துடைச்சா வந்திட்டு போவுது. இந்த உயிரில்லாத பொருளுக்காக ஏன் உயிருள்ள ஜீவன்களை வதைக்கிறார் என்று ஆத்திரம் வந்தது.
பின்னர் கடையினுள்ளும் அவரின் அர்ச்சனை ஓயவேயில்லை. மகனுக்கு 10 வயசும், மகளுக்கு 8 வயசும் இருக்கலாம். திட்டு வாங்கிய போது இருவரின் முகமும் வாடிப் போய் இருந்தது. சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு மாறி, ஓடி ஓடி தாய்க்கு உதவிகள் செய்தார்கள்.
மகன் மீண்டும் ஏதோ தவறு செய்ய, மீண்டும் மகனுக்கு திட்டு, திட்டு,.. இப்படியே தொடர்ந்து கொண்டே இருந்தார்.
சிலர் புன்முறுவலுடன் கடந்து போனார்கள், சிலர் முகம் சுழித்தார்கள்.
இப்படிக் கூட தாய் இருப்பாளா என்று நினைத்துக் கொண்டேன்.
எனக்கு மட்டும் ஆண்டவன் இன்விஸிபிளா மாறும் சக்தியை குடுத்திருந்தா அந்த அம்மாவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டிருப்பேன்.


**********************
பொருள் வாங்கிய பிறகு காசு குடுக்கோணும் அல்லவா? அதுக்காக போய் லைனில் நின்றேன். அங்கு ஸ்டான்டில் இருந்த புத்தகங்களை சும்மா மேலோட்டமா ஒரு பார்வை பார்த்தேன். பில் கிளின்டனின் மகள் கணவரை விட்டுப் பிரியப் போவதாக ஒரு கிசுகிசு மாகஸினில் போடிருந்தார்கள். அடடா! 6 மாசம் கூட இல்லையே அதற்குள் கசந்திடுச்சா.....

பின்னாலிருந்து ஒரு குரல், " இந்த பால் பாட்டிலை இங்கு வைக்கவா ?", என்று கேட்டது. ஒரு வெள்ளைக்கார அக்கா நின்று கொண்டிருந்தார்.
நான் என் பொருள்களே மூவிங் பெல்ட்டில் இன்னும் வைக்கவில்லை.
" சரி. அதுக்கென்ன வையுங்களேன்", என்றேன்.
அந்தப் பெண்மணியின் கைகளில் வேறு பாட்டில்கள், சாமான்கள் என்று வைத்திருந்தார். ஏன் ஒரு ஷாப்பிங் கார்ட் அல்லது கூடை எடுத்திருக்கலாமே என்று நினைத்துக் கொண்டேன்.
" கொஞ்ச சாமான்கள் சமாளிக்கலாம்ன்னு நினைச்சேன். முடியலை. இப்ப பால் பாட்டிலை எடுத்திர்றேன் ", என்றார்.
" பரவாயில்லை. நீங்கள் முதலில் போங்கள். நான் பின்னாடி வர்றேன்", என்று சொல்லி என் பொருட்களை எடுத்துக் கொண்டு அவருக்கு வழி விட்டேன்.

சிறிது தயங்கியவர். பிறகு புன்முறுவலுடன் என்னைக் கடந்து போய் லைனில் நின்று கொண்டார்.
நன்றி என்று குரல் வந்தது.
அட! நன்றி என்று தமிழில் சொன்னவர் யாராக இருக்கும் என்று யோசித்தேன். லைனில் முன்னுக்கு போய் நின்றவர் புன்முறுவலுடன், " நான் தான் நன்றி என்றேன்", என்றார்.
தமிழ் எப்படி? நீங்க? யாரிடம்? என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டேன்.
" நான் ஒரு வயசான இலங்கை பாட்டியை பார்த்துக் கொள்கிறேன். அவங்க எனக்கு தமிழ் சொல்லிக் குடுத்தாங்க", என்றார்.
குளிக்க வாங்கோ, சாப்பிட வாங்கோ, புறா... இப்படி பல தமிழ் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போனார்.
தமிழ் அழகான மொழி. இனிமேல் எழுதப் பழக வேண்டும் என்றார்.
போகும் முன்பு சொன்னார், " இலங்கை, இந்தியா, சைனா போன்ற நாடுகளில் வயசான பெற்றோர்களை முதியோர் காப்பகத்துக்கு அனுப்பாமல் பிள்ளைகளே வைச்சு பொறுப்பா பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், அமெரிக்காவில் தான் மூலை முடுக்கெல்லாம் முதியோர் காப்பகங்கள். அங்கு போய் அதிகபட்சம் 18 மாதங்கள் உயிரோடு இருப்பார்கள். பிறகு இறந்து போகிறார்கள். நான் என் ( 74, 78 ) தாய், தந்தை
இருவரையும் அவர்களின் இறுதிக் காலங்களில் வைச்சு கவனமா பார்த்துக் கொள்ளப் போகிறேன். இதை என் அம்மாக்கும் உறுதியா சொல்லியாச்சு ", என்றபடி விடை பெற்றார்.
இவர் எங்கே, தொட்டதற்கெல்லாம பிள்ளைகளை திட்டிய மற்றப் பெண்மணி எங்கே என்று நினைத்துக் கொண்டேன்.

38 comments:

  1. ரெண்டும் ரெண்டு பாகம். பாவம் அந்தப் பெண்மணிக்கு இன்றைய இந்தியாவின் நிலை தெரியவில்லை. வயதானால் ஏன் அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்ளவும் என்றுக் கேட்பவர்கள் இந்தப் பதிவுலகிலும் இருக்கிறார்கள்

    ReplyDelete
  2. ஒப்பீடு அருமை.
    நம் ஊரிலும் அந்த நாட்டைப்போல
    வயோதிகர்கள் இல்லம் இப்போது
    பெருத்துக்கொண்டுவருவது
    சமுக ஆர்வலர்கள் அனைவருக்கும்
    கவலை அளிக்கும் விஷயமாகத்தான் உள்ளது
    காலத்தின் கோலமா? அல்லது
    காலத்தின் கட்டாயமா ?
    காலம்தான் பதில்சொல்ல வேண்டும்
    நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  3. இப்படி ஒருவர் இப்படியும் ஒருவர்

    ReplyDelete
  4. நல்லவேளை அந்தப்பெண்மணி இந்தியாவுக்கு வந்து
    இங்கு முடியவர்களின் நிலைமையை இன்னும் தெரிந்துகொள்ளாமல் இருப்பது.அப்படி பார்த்திருந்தால்
    அவரின் எண்ணமே மாறி இருக்கும்.

    ReplyDelete
  5. முதல் நிகழ்வை படிக்கும் போது கோபமும் இரண்டாவதில் பெருமையும் வருது வானதி! நைஸ் :)

    ReplyDelete
  6. 1.சில தாய்மார்கள் பிள்ளைகளிடம் இது போன்று நடந்து கொள்வதற்கு அவர்கள் மட்டும் காரணமாக இருக்க முடியாது. வேலை பழு மனம் அழுத்தம் ஏற்பட்டு,அதனால் ஏற்படும் கோபத்தை ,மற்றவர்களிடம் காட்ட முடியாமல் தன் பிள்ளைகளிடம் காட்டுவது.

    2.அடுத்தவர்கள் நம் மொழியை பேசும் பொழுது,நமக்கு ஒரு வகை சந்தோசம் ஏற்படும். என்னிடம் இது போன்று சில அரேபியர்கள் பேசியுள்ளார்கள்.

    ReplyDelete
  7. எதிரும் புதிருமாக இரண்டு பெண்களை சந்தித்து இருக்கிறீர்கள். :-)

    ReplyDelete
  8. //இப்படிக் கூட தாய் இருப்பாளா என்று நினைத்துக் கொண்டேன்.
    எனக்கு மட்டும் ஆண்டவன் இன்விஸிபிளா மாறும் சக்தியை குடுத்திருந்தா அந்த அம்மாவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டிருப்பேன்.//

    ஆஹா... ரெம்ப டென்சனான பார்ட்டி போலருக்கே... பார்த்துங்கக்கோவ்... :))

    //இவர் எங்கே, தொட்டதற்கெல்லாம பிள்ளைகளை திட்டிய மற்றப் பெண்மணி எங்கே என்று நினைத்துக் கொண்டேன்.//
    ம்ம்ம்... நல்ல கருத்து, அதை அவங்ககிட்ட சொல்லலையா? :)

    ReplyDelete
  9. முதல் பெண் - எதுக்கு இன்விசிபிள் பவர்? நேரே விசிப்ளாக சென்று ரெண்டு போட்டிருக்கலாம்!

    ReplyDelete
  10. இரண்டாவது பெண் - ஆச்சரியம்தான்! அவர்களது உயர்ந்த பண்புகள் எமக்கு எப்போது வரும்! இங்கு பிரெஞ்சுக்காரர்களும் இப்படித்தான்!!

    ReplyDelete
  11. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று,குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று..இந்தப்பாட்டுதான் நினைவுக்கு வருது,முதல் நிகழ்வைப் படிக்கையில்! என்னதான் வேலைப்பளு-மனஅழுத்தம் இருந்தாலும் பொதுஇடத்தில் இப்படி நடந்துகொள்வது எரிச்சல் மூட்டும் விஷயம்தான்!

    இரண்டாவது நிகழ்வைப் படிக்கையில் கொஞ்சம் சந்தோஷமாத்தேன் இருக்கு! :)

    ReplyDelete
  12. // இலங்கை, இந்தியா, சைனா போன்ற நாடுகளில் வயசான பெற்றோர்களை முதியோர் காப்பகத்துக்கு அனுப்பாமல் பிள்ளைகளே வைச்சு பொறுப்பா பார்த்துக் கொள்கிறார்கள். //ஹ்ம்ம்...இந்தியவை வந்து பார்க்க சொல்லுங்க அந்த வெள்ளைக்கார அக்காவை.முதியோர் இல்லத்திற்கு அனுப்பாவிட்டாலும் முதியோர்களுக்கு நடக்கும் க்டுமை கண்டால் ரத்தகண்ணீர் வடிப்பார்.

    ReplyDelete
  13. எங்கு சென்றாலும் மனிதர்களை அவதானிக்கிறீர்கள். பகிர்ந்த விதம் எளிமை & அருமை வாணி.

    எங்கயாவது பப்ளிக்ல போய் நிக்கேக்க பார்த்துக் கவனமாய் இருக்கவேணும், பின்னால வாணியம்மா நிண்டாலும் நிப்பா. ;)

    ReplyDelete
  14. ஃஃஃஃஃ அடடா! 6 மாசம் கூட இல்லையே அதற்குள் கசந்திடுச்சா.....ஃஃஃஃஃ

    அக்கா... ஹ....ஹ.... உள்ளவனுக்கு ஒரு மடம் இல்லாதவனுக்கு... பழமொழி கேட்டுட்டாங்கனோ

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

    ReplyDelete
  15. //எனக்கு மட்டும் ஆண்டவன் இன்விஸிபிளா மாறும் சக்தியை குடுத்திருந்தா அந்த அம்மாவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டிருப்பேன்//
    Great people think alike. ஹி ஹி. நான் தேன்.

    ReplyDelete
  16. நல்ல அழகா வர்ணித்து எழுதுறீங்க...

    ReplyDelete
  17. நீங்கள் சொன்னதை பார்க்கும் பொழுது ம்னசு சங்கடமாயிருக்கு,இப்படியும் உண்டு அப்படியும் உண்டு தானே!

    ReplyDelete
  18. வான்ஸ்ஸ்ஸ் கடவுள் சத்தியமா, இன்றுதான் இத் தலைப்பு என் கண்ணில பாட்டது, அது ஏனெண்டே தெரியேல்லையே... இனித் தமிழில மாத்திவிடப்போறேன் என் பக்கத்தில் உங்கள் பெயரை.... அதன் பி எப்படி மறையுதெனப் பார்ப்போம்.

    ஐ ஆம் ரூ லேட்:(((.

    ReplyDelete
  19. // எனக்கு மட்டும் ஆண்டவன் இன்விஸிபிளா மாறும் சக்தியை குடுத்திருந்தா அந்த அம்மாவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டிருப்பேன்.//

    அதெப்படி உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் தோணுது வான்ஸ். ஹி..ஹி.. எங்கள் கன்னமும் தப்பித்தது!!

    ReplyDelete
  20. நம் கலாச்சாரமும், தாய் அன்பின் நேசமும் நம் சொந்தங்களை விட்டு எந்நாளும் பிரியாது.

    ReplyDelete
  21. //வான்ஸ்ஸ்ஸ் கடவுள் சத்தியமா, இன்றுதான் இத் தலைப்பு என் கண்ணில பாட்டது, அது ஏனெண்டே தெரியேல்லையே... இனித் தமிழில மாத்திவிடப்போறேன் என் பக்கத்தில் உங்கள் பெயரை.... அதன் பி எப்படி மறையுதெனப் பார்ப்போம்.

    ஐ ஆம் ரூ லேட்:(((. //

    எனக்கும்தான் ஏன்னு தெரியல..!!!

    //எங்கயாவது பப்ளிக்ல போய் நிக்கேக்க பார்த்துக் கவனமாய் இருக்கவேணும், பின்னால வாணியம்மா நிண்டாலும் நிப்பா. ;)//

    வாணி அம்மாவா..??? யாருக்கு உங்களுக்கா..ஹி..ஹி..!! :-))

    ReplyDelete
  22. மருமகனே... இது வேற மாதிரி அம்மா. சும்மா பிழையாப் பிழையா விளங்கிக் கொள்ளப்படாது. ம்.

    ReplyDelete
  23. //மருமகனே... இது வேற மாதிரி அம்மா. சும்மா பிழையாப் பிழையா விளங்கிக் கொள்ளப்படாது. ம்.//

    மாமீஈஈ..நீங்க வாயை திறப்பதே அபூர்வம் இதுல நா என்னத்தை சரியா விளங்குவது ஹா..ஹா... வாணியம்மா.....ச்சே..வான்ஸ் வந்து என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம் ..

    வேர மாதிரி அம்மான்னா அம்மம்மாவா...? :-))

    ReplyDelete
  24. நல்ல ஆழமான கருத்து. நம் நாட்டில் முதியோர் இல்லங்கள் வேண்டுமா? வேண்டாமா? என்ற இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.உதாரணமாக. பெற்ற பிள்ளைகள் வெளி நாடுகளுக்கு செல்கையில்,வயோதிக பெற்றொர்கள் முதியோர் இல்லத்தில் சற்று சிரமமில்லாமல் இருப்பார்கள் என்ற கருத்து நிலவுகிறதே!

    ReplyDelete
  25. எல்கே, இங்கு வயதானவர்களுக்கு அரசாங்கம் பணம் குடுப்பதால் அவர்களின் தேவைகளை அவர்களே கவனித்து கொள்கிறார்கள். சிலர் முதியோர் காப்பகம் போகாமல் வீட்டில் ஆள் வைச்சு கவனித்து கொள்கிறார்கள். நிறைய பணம் செலவானாலும் எல்லோருக்கும் ஒரு மன திருப்தி கிடைப்பது ஆறுதல்.
    யாரை சொல்றீங்க என்று விளங்கவில்லை? அவர்கள் எப்படியோ போய் தொலையட்டும். நாங்கள் எங்களால் முடிந்தவரை வயசானவர்களின் மீது அன்பாக நடந்து கொள்வோம்.
    மிக்க நன்றி.

    ரமணி அண்ணா, நானும் படித்தேன். எல்லோரும் பணம் பணம் என்று பறக்கும் போது நிலமை இப்படி மாற வாய்புகள் அதிகம்.
    மிக்க நன்றி.

    சரவணன், நீங்க தான் முதல்!!!
    மிக்க நன்றி.

    ReplyDelete
  26. லஷ்மி ஆன்டி, உண்மை தான்.
    மிக்க நன்றி.

    பாலாஜி, மிக்க நன்றி.

    தூயவன், எல்லோருக்கும் தான் மன அழுத்தம், கோபம் எல்லாமே இருக்கும். அதுக்காக பொது இடங்களில் அப்படி நடந்து கொள்வது அநாகரிகம்.
    உண்மை தான்.
    மிக்க நன்றி.

    சித்ரா, மிக்க நன்றி.

    அன்னுக்கா, டென்ஷன் பார்ட்டியே தான்.
    கடவுளே! அவங்க விஸிபிளாவே என்னை அறைஞ்சிருப்பாங்க. நல்ல அட்வைஸ் பண்ணுறீங்க போங்க.
    மிக்க நன்றி.

    ஓட்ட வடை, ஏன் பெயரை மாத்தீட்டீங்க???
    போலீஸ் கேஸாயிடும், தல.
    மற்றவர்களின் மொழிகளில் 2 வார்த்தைகள் தெரிந்து வைச்சு பேசினால் ஒரு ஆனந்தம் தான்.

    மிக்க நன்றி.

    மகி, உண்மைதான்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  27. அமைதி அக்கா, மிக்க நன்றி.

    ஸாதிகா அக்கா, அவ்வளவு கொடுமையா இருக்கும் அந்த இடம் என்பது விளங்குது.
    இன்றைய இளைஞர்கள் நாளைய முதியோர்கள் என்பதை எண்ணி நடந்தால் நல்லது.
    மிக்க நன்றி.

    இமா, அந்த பயம் எப்பவும் இருக்கோணும்.
    மிக்க நன்றி.

    சுதா, ம்ம்ம்... இருக்கலாம். இதுங்க ஒத்துமையா இருந்தா தான் அதிசயமே.
    மிக்க நன்றி.

    அனாமிகா, நீங்களும் என் கேஸா??
    மிக்க நன்றி.

    ReplyDelete
  28. நாஞ்சிலா, மிக்க நன்றி.

    ஆசியா அக்கா, மிக்க நன்றி.

    அதீஸ், ம்ம்ம்.. பெயரை மாத்திட்டீங்களோ??
    மிக்க நன்றி.

    அப்துல் காதர், நல்லவங்களை நான் தண்டிப்பதில்லை.
    மிக்க நன்றி.

    ஜெய், இது ஏதோ ஒரு பெரிய சதியா கிடக்கு???
    இது வேறை அம்மா... அது வேறை அம்மா..விளங்குதா??
    ஜெயலலிதாவை அம்மான்னு கூப்பிடுறாங்க. அதுக்காக அவங்க எல்லோருக்கும் அம்மாவா?? சும்மா ஒரு அன்பு அவ்வளவு தான்.

    குறட்டைப் புலி, வயோதிக விடுதிகளில் சிரமமில்லாமல் இருப்பார்களா??? இதை கண்டு பிடிச்சவன் வாழ்க!
    மிக்க நன்றி.

    ReplyDelete
  29. //ஜெயலலிதாவை அம்மான்னு கூப்பிடுறாங்க. அதுக்காக அவங்க எல்லோருக்கும் அம்மாவா??//

    நான் ஸிஸ்டர்ன்னு கூப்பிடுவேன் நீங்க எப்படி அவங்களை கூப்பிடுவீங்க ஹா..ஹா...

    ReplyDelete
  30. வாணி...ரெண்டு நிகழ்வுகளையும் ஒப்பீட்டு பண்ணிய முறை சுவாரஸ்யமா இருந்தது...அட செல்சியா அவர் கணவரை விட்டு பிரிய போகுதா...என்னப்பா இவனுங்க கல்ச்சர்??? :))))

    ReplyDelete
  31. ஓ! உங்க சிஸ்டரா அவங்க. அடுத்த தடவை சத்துணவு இலாகா உங்களுக்குத் தான். அக்கா/ தங்கை பக்கத்தில் நின்னா நீங்க கொசு போல இருப்பீங்க ஹாஹா.
    அவங்களை எதுக்கு நான் கூப்பிடணும்?????? ( ஆ! மடக்கிடோம் இல்லை )

    ஆனந்தி, கிசு கிசு தான் ? உண்மையா ? பொய்யா? என்று தெரியவில்லை.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  32. // ஓ! உங்க சிஸ்டரா அவங்க. அடுத்த தடவை சத்துணவு இலாகா உங்களுக்குத் தான். அக்கா/ தங்கை பக்கத்தில் நின்னா நீங்க கொசு போல இருப்பீங்க ஹாஹா.
    அவங்களை எதுக்கு நான் கூப்பிடணும்?????? ( ஆ! மடக்கிடோம் இல்லை) //

    சத்துணவு வேணாம் டாஸ்மாக் தரச் சொல்லுங்க! இப்படி கொடுத்து மடக்கினாதான் உண்டு!! அவ்வ்வ்வ்

    ReplyDelete
  33. // அப்துல் காதர், நல்லவங்களை நான் தண்டிப்பதில்லை.//

    நாங்கல்லாம் அம்புட்டு நல்லவங்களா வான்ஸ்!!!!!!!!!

    ReplyDelete
  34. சத்துணவு வேணாம் டாஸ்மாக் தரச் சொல்லுங்க!//
    அப்படியே எல்லோரும் சேர்ந்து நாசமா போங்க.

    நாங்கல்லாம் அம்புட்டு நல்லவங்களா வான்ஸ்//
    பின்ன இல்லையா?

    ReplyDelete
  35. //எனக்கு மட்டும் ஆண்டவன் இன்விஸிபிளா மாறும் சக்தியை குடுத்திருந்தா அந்த அம்மாவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டிருப்பேன்//
    எப்படி இப்படி எல்லாம் தோணுது... பசங்க கூட சேந்து நெறைய அவங்க டைப் சினிமா பாக்கறீங்கன்னு தோணுது... ஜோக்ஸ் அபார்ட்... சில அம்மாக்கள் இப்படி தான் என்ன செய்ய...:(

    //நன்றி என்று குரல் வந்தது//
    வெள்ளையம்மாவை தமிழ் பேசவெச்ச வாணி வாழ்க...:)

    //தாய், தந்தை இருவரையும் அவர்களின் இறுதிக் காலங்களில் வைச்சு கவனமா பார்த்துக் கொள்ளப் போகிறேன். இதை என் அம்மாக்கும் உறுதியா சொல்லியாச்சு//
    சூப்பர்....I salute her...:)

    ReplyDelete
  36. //எனக்கு மட்டும் ஆண்டவன் இன்விஸிபிளா மாறும் சக்தியை குடுத்திருந்தா அந்த அம்மாவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டிருப்பேன்.//

    :))

    இப்பல்லாம் இந்தியால முதியோர் நிலைமை கஷ்டம் தான் வான்ஸ்.. காப்பகங்களும் இல்ல.. பிள்ளையளும் சரியாக கவனிப்பதில்ல..

    எங்க தாத்தா பாட்டீஸ் ரெண்டு பேரும் வீட்டுக்குப் பக்கத்திலே தான் இருந்தாங்க.. சண்டைகளும் உண்டு சமாதானங்களும் உண்டு.. எனக்கும் அதே மாதிரி எங்க ரெண்டு பேரு வீட்டையும் பாத்துக்கனும்ன்னு ஆசை உண்டு.. பார்க்கலாம்..

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!