Monday, February 14, 2011

நானும் கூகுளும்

( image from google )

ஒரு இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் எனக்கு. என் ஆ.காரர் தானே கூட்டிச் சென்று காட்டுவதாக வாக்கு கொடுத்தார். ஆனால், பிறகு அதை நிறைவேற்றவில்லை. நானும் கேட்டுக் களைத்தே போய் விட்டேன். ஒரு நாள் வேலையால் வந்த பிறகு கேட்டேன்.
ஏதோ கடுப்பில் இருந்தவர், " There is such thing called Google. Just print a map & GO."
( கூகிள் என்று ஒரு தளம் இருக்கு. அதில் தேவையான map ஐ பிரின்ட் பண்ண வேண்டியது, போக வேண்டியது... என்று தமிழாக்கம் செய்தால் பொருள் வரும்.)

எனக்கு ரோஷம், கோபம், ஆத்திரம் இப்படி எல்லாமே வந்தது. அடுத்த நாள் map பிரின்ட் பண்ணி, அதை மனப்பாடம் செய்தேன்.
பொதுவாக பிள்ளைகளின் மருத்துவர், நூலகம், வெளியில் சென்று முடிக்கும் வேலைகள் எல்லாவற்றையும் நானே செய்து விடுவேன். இதென்ன பெரிய வேலையா என்று நினைத்துக் கொண்டேன்.
மகனை பள்ளியில் விட்ட பிறகு, வீட்டுக்கு வந்து, கொஞ்சம் கண்ணுக்கு குளிர்ச்சியா ஆடை மாற்றி புறப்பட்டேன்.

பயம் ஒரு பக்கம். ரோஷம் மறுபக்கம். ஒரு வழியா ஹைவேக்கு போற ராம்பில் போயாச்சு. இனிமேல் திரும்ப முடியாது.
கூகிளாரை பக்கத்தில் வைத்துக் கொண்டேன். ஏற்கனவே மனப்பாடம் செய்தாலும் ஒரு பதட்டம். ஹைவேயில் வேகமா போனாலும் பிரச்சினை, மெதுவா போனாலும் பிரச்சினை. ஒரளவு நிதானமாக கார் ஓட்டி, நான் எடுக்க வேண்டிய எக்ஸிட் எடுத்தாச்சு. பிறகு ஒரு ரைட் turn . பிறகு ஒரு லெஃப்ட்....
கூகிளார் சொன்ன பக்கம் திருப்பி ஒரு வழியா அந்த இடத்தினை அடைந்து விட்டதா நினைச்சேன். ஆனால், நான் மிதிச்ச மிதியில் கார் நான் போக வேண்டிய இடத்தினைக் கடந்து, வெகு தூரம் போயிருந்தது. கூகிளார் சொன்ன 1/2 மைல் தூரம் 1 மைல் ஆனபோது தான் ஏதோ மிஸ்டேக் என்று விளங்கியது.
பிறகு ஒரு u turn அடிச்சு, மீண்டும் அந்த இடத்தை மிஸ் பண்ணி. அழுகை மெதுவா எட்டிப் பார்த்தது. கலங்கிய கண்களின் வழியா அந்தக் கட்டிடம் மங்கலா தெரிந்தது. நான் நின்ற ரோட்டில் இருந்து அந்தக் கட்டிடத்திற்கு இடது புறம் திரும்ப வேண்டும். ஆனால், நான் நின்றதோ வலது புறம் மட்டும் திரும்பு சாலை.

வலது புறம் திரும்பி, ஒற்றை வழிப் பாதையில் ஓடினேன் ஓடினேன்..... . விரக்தி ஏற்பட்டது. இப்படியே போனால் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை என்ற யோசனையில் ஒரு நாற்சந்தியில் மீண்டும் ஒரு u turn அடிச்சேன். நான் காரினை திருப்பவும் ஒரு போலீஸ் கார் வரவும் சரியாக இருந்தது. திருவிழா போல லைட், காதுகளை செவிடாக்கும் சைரன், நான் வின்டர் குளிரிலும் வியர்வை ஆறாக பெருகி ஓட ....

( ஏதோ இடம் இடம்ன்னு அடிக்கடி புலம்பலா இருக்கே என்ன இடம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியா இருக்குமோ என்று லானி, அதீஸ், இன்னபிற ஆட்கள் நினைப்பார்கள். அந்தளவுக்கு இன்னும் முத்தவில்லை. )

தொடரும்....

என் பிக்காஸா ஆல்பத்தில் இந்த ஆளை ( 465 views ) நிறையப் பேர் போய் பார்த்திருக்கிறார்கள். எல்லோரும் இவரை தேடித் திரியுறீங்க போல. Great job!!!



44 comments:

  1. இதுவும் தொடருமா?? அப்புறம் என்ன ஆச்சு

    ReplyDelete
  2. சரி ஹாஸ்பிடலில் இருந்து சொந்த வீட்டை கண்டுபிடிச்சு வர ஏன் இவ்வளவு பில்டப்பு வான்ஸ். ஹா.. ஹா.. !!

    ReplyDelete
  3. ஹா ஹா இது எங்க போய் முடியுமோ. இருந்தாலும் அவர் அப்படி சொல்லி இருக்க கூடாது.

    ReplyDelete
  4. //மகனை பள்ளியில் விட்ட பிறகு, வீட்டுக்கு வந்து, கொஞ்சம் கண்ணுக்கு குளிர்ச்சியா ஆடை மாற்றி புறப்பட்டேன். //

    இந்த கேள்வியே கொஞ்சம் குழப்புதே..!! :-)))ஹி..ஹி..

    ReplyDelete
  5. //ஏதோ இடம் இடம்ன்னு அடிக்கடி புலம்பலா இருக்கே என்ன இடம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியா இருக்குமோ என்று லானி, அதீஸ், இன்னபிற ஆட்கள் நினைப்பார்கள்.//

    ச்சே..ச்சே..இது என்ன புதுக்கேள்வி அடிக்கடி விசிட் செய்யும் இடத்துக்கு எதுக்கு மேப் ..நீங்க தான் கண்ணை மூடிக்கிட்டே போய்ட்டு வருவீங்களே ..ஹி..ஹி... பூஸ் நா எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப் மீதி நீங்கதான் :-)))))))))))))))))

    ReplyDelete
  6. ஜி பி எஸ் இல்லையா வண்டியில ..? முதல்ல ஒன்னு வையுங்க .யார்கிட்டையும் கேட்காமல் உலகை தனியா வலம் வரலாம் :-))

    ReplyDelete
  7. மீதிக் கதை எங்கே? டிக்கட் வாங்கியிருக்க மாட்டீங்கன்னு தான் நம்பறேன்.. :)

    என்னால இப்படி ஞாபகம் வச்சுக்க முடியாது.. அதுவும் வரிசையா லெப்ட் ரைட் - இதுல ரொம்பவே குழம்பிடுவேன் :)

    ReplyDelete
  8. :)

    எங்கே போனீங்கன்னு சீக்கிரம் சஸ்பென்ஸை உடையுங்க வானதி!

    //பைத்தியக்கார ஆஸ்பத்திரியா இருக்குமோ என்று லானி, அதீஸ், இன்னபிற ஆட்கள் நினைப்பார்கள். அந்தளவுக்கு இன்னும் முத்தவில்லை.// அப்ப பைத்தியம் புடிச்சிருக்குன்னு நீங்களே ஒத்துகக்றீங்களா? ஹிஹிஹி!

    ReplyDelete
  9. பத்திரமா போய்ச்சேர்ந்தீங்களா இல்லியா :-))))

    ReplyDelete
  10. ரைட்டு! அப்புறம் என்னாச்சு? வெயிட்டிங்! :)

    ReplyDelete
  11. ரைட்டு! அப்புறம்

    ReplyDelete
  12. மாத்தி யோசி, வருகைக்கு நன்றி.
    சொல்றேன்.

    மேனகா, நன்றி.
    மீதி வரும்.

    நாட்டாமை, சும்மா நீங்களே கெஸ் பண்ணி எழுதக் கூடாது. ஓக்கே.
    இது பில்டப் ஆஆஆ அவ்வ்வ்வ்..
    மிக்க நன்றி.

    இளம் தூயவன், இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  13. ஜெய், இதில் என்ன குழப்பம்.
    வெளியே போகும் போது அழகா போனா தானே ஒரு மரியாதை, மதிப்பு எல்லாமே கூடும். மற்றவர்கள் கையெடுத்து கும்பிடுவார்கள்.
    எப்படி இவ்வளவு சரியா சொன்னீங்க?? எனக்கு தெரிஞ்சு 2 பேர் இருக்காங்க. அவங்களை சேர்த்து, கொஞ்சம் தெளிவாக்க தான் நான் இப்படி நாயா, பேயா அலைகிறேன். அவங்க யார்ன்னு உங்களுக்கே தெரியும் ஹிஹி...
    கடைசி கேள்வி - அப்படியே ஆகட்டும்.

    மிக்க நன்றி.

    சந்தூஸ், நானும் முன்னாடி பயப்படுவேன். இப்ப இல்லை.
    சும்மா எல்லாத்துக்கும் ஒரு ஆள் பார்த்துட்டே இருந்தா வேலைக்கு ஆகாது. அதான் துணிஞ்சு இறங்கிட்டேன்.
    மிக்க நன்றி.

    மகி, பைத்தியமா? எனக்கா?
    நெவர்.
    மிக்க நன்றி.

    அமைதி அக்கா, விறுப்பான அடுத்த பதிவில் வரும் ( ஆங்! இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லைன்னு யாரோ புலம்பறது கேட்குது)
    மிக்க நன்றி.

    பாலாஜி, விரைவில் வரும்.
    மிக்க நன்றி.

    சரவணன், மிக்க நன்றி.

    ReplyDelete
  14. வானதி நல்ல அனுபவம்,
    இங்கு ஒவ்வொரு முறை துபாய் போகும் பொழுது ஏதாவது புதுசாக மாற்றம் இருக்கும்,காரில் ஜிபிஎஸ் வழி சொல்றேன்னு பேசியே என் கண்ணில் நீரை வரவழைத்து விடுவதுண்டு.தொடருங்க.

    ReplyDelete
  15. ஆசியா அக்கா, உண்மை தான். என் உறவினர் ஒருவரிடம் ஜி.பி. எஸ் இருக்கு. அது பேசிப் பேசியே கழுத்தறுக்கும். நிம்மதியா தூங்க கூட விடாது. அதை பிடுங்கி அப்படியே ஜன்னல் வழியா எறியணும் போல ஆத்திரம் வரும்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  16. //கண்ணுக்கு குளிர்ச்சியா ஆடை மாற்றி புறப்பட்டேன்.///

    பார்த்த உடனேயே இதைக் கொப்பி பண்ணிட்டேன்... போஓஓஒறவு பார்த்தா எங்கட ஜெய்யும் அதையே கேட்டிருக்கிறார்... இருந்தாலும் முன் வைத்த காலை பின் வைத்த பரம்பரை இல்லையே நம்ம பரம்பரை... அதுதான்... கேள்வி கேட்டிட வேண்டியதுதான்...

    வான்ஸ்... உப்பூடி ஏச்சு வாங்கி(ஆத்துக்காரரிடம்தான்:)) ரோசம் வந்து காரோடும்போது இது தேவையோ? இல்ல தெரியாமல்தான் கேட்கிறன் இது தேவையோ/:))).

    ///பைத்தியக்கார ஆஸ்பத்திரியா இருக்குமோ என்று லானி, அதீஸ், இன்னபிற ஆட்கள் நினைப்பார்கள். /// இன்னும் நினைச்சுக்கொண்டிருக்கிறம் என்றா நினைக்கிறீங்க? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... முடிவே கட்டியாச்சு.... ஹைவேயில சுத்தும்போதே நான் முடிவு கட்டிட்டேன்.... ஆ... இண்டைக்கு எனக்கு எங்க போனாலும் அடிதான் கிடைக்கப்போகுது.... இனிக் கொஞ்ச நாளைக்கு நான் தலைமறைவு....மீயா எஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  17. //என்னால இப்படி ஞாபகம் வச்சுக்க முடியாது.. அதுவும் வரிசையா லெப்ட் ரைட் - இதுல ரொம்பவே குழம்பிடுவேன் :)
    /// ஹி..ஹி..ஹி.. இதைச் சொன்னாத்தான் எங்களுக்குத் தெரியுமாக்கும்...:))).

    //ஜெய்லானி said...
    ஜி பி எஸ் இல்லையா வண்டியில ..? முதல்ல ஒன்னு வையுங்க .யார்கிட்டையும் கேட்காமல் உலகை தனியா வலம் வரலாம் :-))
    ///
    ஜெய் இதை முதல்ல கழட்டி உள்ளே வச்சிட்டுத்தான் நான் ஓட்டத் தொடங்குவேன்.... அதைப்பார்த்த ஒருவர் எனக்கு சேர்டிபிகேட்டும் தந்தார்....”நீங்கதான் உண்மையான ட்ரைவர் உப்புடித்தான் பழகோணும் என”... கிக்..கிக்..கிக்... ரொம்பப் பெருமையாப்போச்சு..... நான் 6 வயசிலிருந்தே ரொம்ப நல்ல பொண்ணு:)... கடவுளே... இல்ஸ்ஸ்ஸ் காப்பாத்துங்கோ......

    ReplyDelete
  18. //என்ன இடம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியா இருக்குமோ என்று &&&&&&லானி&&&&&&, /////

    இதென்ன இது ப்யுப்பயக்கம் தலையை விட்டுப்போட்டு வாலைப்பிடிக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    ReplyDelete
  19. Guess its time to buy GPS. Sometimes...even GPS upsets me a lot...taking me to 'middle of no where':( I have quite an experience, similar to urs:)

    ReplyDelete
  20. அதீஸ், நான் அப்ப ஒரு கதை இப்ப ஒரு கதை சொல்ற ஆளில்லை. ஜெய்க்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும்.

    என்ன செய்ய வந்து தொலைத்து விட்டதே! அழுதாலும் பிள்ளை அவள் தானே பெற வேண்டும் என்று சொல்வார்களே அது போல தான் இதுவும்.
    ஹைவேயில் சுத்துற எல்லாத்தையும் பைத்தியம் என்று சொல்றீங்களோ, அதீஸ்.
    அடி எல்லாம் இல்லை. என் அறிவுக்கண்களை திறந்து வைச்சிட்டீங்க. அப்பா! என்ன ஒரு கண்டு பிடிப்பு.

    லானி - அவருக்கு விளங்காமல் இருக்கட்டு என்று எழுதினேன். நீங்க அவருக்க்கு சொல்லாதீங்கோ.

    மலர் காந்தி, உண்மைதான்.
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  21. //ஹி..ஹி..ஹி.. இதைச் சொன்னாத்தான் எங்களுக்குத் தெரியுமாக்கும்...:))).//

    haha...

    // அதைப்பார்த்த ஒருவர் எனக்கு சேர்டிபிகேட்டும் தந்தார்....”நீங்கதான் உண்மையான ட்ரைவர் உப்புடித்தான் பழகோணும் என”... கிக்..கிக்..கிக்... ரொம்பப் பெருமையாப்போச்சு//


    நான் அனுப்பிய ஆள் குடுத்த காசுக்கு வஞ்சம் பண்ணாமல் உங்களை புகழ்ந்திருக்கிறார் போல.

    ReplyDelete
  22. வானதி,இத்தனை சஸ்பென்ஸா தொடரும் போட்டு விட்டீர்கள்.சீக்கிரம் அடுத்த பதிவைப்போடுங்கள்

    ReplyDelete
  23. அப்புறம் என்னாச்சு? சீக்கிரம் அடுத்த பதிவைப்போடுங்கள்.

    ReplyDelete
  24. ha ha funny story vanathy !!! I am good with directions as long as i dont go to a new place in dark then the sense of direction is lost!

    ReplyDelete
  25. ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய
    அவசியம் எனக்கு எனத் துவங்கிய
    உங்கள் மர்ம முடிச்சை நான் பலமுறை
    யோசித்தும் அவிழ்க்க முடியவில்லை
    நல்ல பதிவு மர்மத்தை விரைவில் சொல்லி
    எங்களை குழப்பதில் இருந்து விடுவிக்கவும்
    வாழ்த்துக்களுடன்.,

    ReplyDelete
  26. //ஏதோ கடுப்பில் இருந்தவர், " There is such thing called Google. Just print a map & GO //

    இந்த வம்புக்கு தான் நான் இவங்கள கேக்கறதே இல்ல... எப்பவும் கூகிள் தான் துணை... கூகிளை நம்பினார் கை விடப்படார்... (கை பிடிச்சவர் கை விட்டாலும்... LOL ...:))

    ReplyDelete
  27. //அடுத்த நாள் map பிரின்ட் பண்ணி, அதை மனப்பாடம் செய்தேன்//

    நீங்களும் மனப்பாடம் செய்யற கேஸ்ஆ? same blood ...:))))
    (ரங்க்ஸ் கன்னாபின்னானு கிண்டல் பண்ற மேட்டர்ல இதுவும் ஒண்ணு...ஹா ஹா)

    ReplyDelete
  28. //ஏதோ இடம் இடம்ன்னு அடிக்கடி புலம்பலா இருக்கே என்ன இடம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியா இருக்குமோ என்று லானி, அதீஸ், இன்னபிற ஆட்கள் நினைப்பார்கள்//

    அந்த இன்னும் பிற ஆட்கள்ல நான் இல்லை...நான்
    உங்களுக்கு சப்போர்ட்...சரியா வாணி... ஏன்னா we same blood you see ....:)

    ReplyDelete
  29. //ஒரு போலீஸ் கார் வரவும் சரியாக இருந்தது//

    சுத்தம்...:) எவ்ளோ பாயிண்ட் ஆத்தா... (தமிழ் சினிமால எல்லாம் போலீஸ் கடசீல தானே வரும்....இங்க ஏன் இப்படி...:))))

    ReplyDelete
  30. //தொடரும்....//

    whattttttttttttttttttttttttttttttttttttttttttt? unbelievable I say...ஒரு கூகிள் map பிரச்சனைக்கு ரெண்டு போஸ்டா...நானே பரவால்ல... ஹையோ ஹையோ....:)

    ReplyDelete
  31. ஸாதிக்கா அக்கா, மிக்க நன்றி.

    ஆயிஷா, விரைவில்.
    மிக்க நன்றி.

    ரமணி அண்ணா, மிக்க நன்றி.
    விரைவில் அடுத்த பாகம் போடுறேன்.

    இலா, எனக்கும் அதே தான்.
    சில நேரங்களில் போன வழியால் திரும்பி வந்தால் கூட புது இடம் போல பார்ப்பேன். ஆனால், பகல் என்றால் கதையே வேறு. இதுக்கு மேலையும் உளறினால் சிலர் கழுகு கண்களோடு திரியுறாங்க.
    மிக்க நன்றி.

    தங்ஸ், நானும் கேட்பதில்லை. ஏதோ ஒரு ஆர்வக் கோளறில் கேட்டு விட்டேன்.
    மனப்பாடம் - ரங்ஸ் முன்னாடி இருந்து மனப்பாடம் செய்து, ஏன்ன்ன் வெறும் வாய்க்கு அவல் குடுக்கணும். இதெல்லாம் திருட்டுத் தனமா செய்யணும் ஹாஹா..
    இந்தப் பதிவுலகில் என்னைப் புரிந்து கொண்ட ஒரு ஜீவன் நீங்க ( லானி, திரா கவனிக்கவும் ) தான்.

    //(தமிழ் சினிமால எல்லாம் போலீஸ் கடசீல தானே வரும்....இங்க ஏன் இப்படி.//
    அதானே. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது??

    //கூகிள் map பிரச்சனைக்கு ரெண்டு போஸ்டா//
    20 போஸ்டாவது போடிருக்கணும். 2 எந்த மூலைக்கு??
    மிக்க நன்றி, தங்ஸ்.

    ReplyDelete
  32. நல்லா ஆரம்பிச்சிங்க... அப்புறம்? சீக்கிரம் தொடருங்க!

    ReplyDelete
  33. கூகுலுக்காக கூகூகூலாக ஒரு பதிவா ஹ..ஹ..ஹ... இடுக்கண் களைவதாம் நட்பு அப்ப கூகுலும் நண்பனா ?

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

    ReplyDelete
  34. //
    அந்த இன்னும் பிற ஆட்கள்ல நான் இல்லை...நான்
    உங்களுக்கு சப்போர்ட்...சரியா வாணி... ஏன்னா we same blood you see ....:)//

    ஹ்ம்ம் நீ ஏற்க்கனவே முத்தின கேச்னு எனக்கு தெரியும். வாணி இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணும். அப்புறம், பிரச்சனைதான்...

    ReplyDelete
  35. சீக்கிரம் தொடருங்க. அப்படி கஷ்டப்பட்டு நீங்க எங்கதான் போனீங்கன்னு தெரிய வேண்டாமா?? :-))

    ReplyDelete
  36. //இலா, எனக்கும் அதே தான்.
    சில நேரங்களில் போன வழியால் திரும்பி வந்தால் கூட புது இடம் போல பார்ப்பேன். ஆனால், பகல் என்றால் கதையே வேறு. //
    ஐஈஈஈஈஈ..... நீங்க ஆந்தை பார்ட்டியா.. பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் புது நியூஸ் கிடைச்சிருக்கூஊஊஊஊ

    ReplyDelete
  37. //இந்தப் பதிவுலகில் என்னைப் புரிந்து கொண்ட ஒரு ஜீவன் நீங்க ( லானி, திரா கவனிக்கவும் ) தான்.//

    அதான் சேம் பிளட்-டுன்னு அவங்க சொன்னப் பிறகு இந்த சந்தேகம் வருமா..ஹி..ஹி...ஹய்யோ...ஹய்யோ..

    ReplyDelete
  38. கார்த்திக்,
    // நீ ஏற்க்கனவே முத்தின கேச்னு எனக்கு தெரியும்//
    என்ன இது சொந்த அக்காவை போய் இப்படியெல்லாம் பேசலாமா?? தப்பு, தப்பு... முட்டிக்கால் போடுங்கோ.

    ReplyDelete
  39. பிரியா, மிக்க நன்றி.

    சுதா, மிக்க நன்றி.

    ReplyDelete
  40. //அந்த இன்னும் பிற ஆட்கள்ல நான் இல்லை...நான்
    உங்களுக்கு சப்போர்ட்...சரியா வாணி... ஏன்னா we same blood you see ....:) //


    இன்னும் ஏதாவது பாக்கி இருக்கான்னு இப்பவே ((உணர்வோட-கஜினி ஸ்டைல் )) சொன்னாதான் ஒரு முடிவுக்கு வரமுடியும் . எல் கே மாதிரி உடனே நான் கம்ஃபேர்ம் செய்யமாட்டேன் .ஹா..ஹ.. !! :-))))))))))))))))

    ReplyDelete
  41. //என் பிக்காஸா ஆல்பத்தில் இந்த ஆளை ( 465 views ) நிறையப் பேர் போய் பார்த்திருக்கிறார்கள். எல்லோரும் இவரை தேடித் திரியுறீங்க போல. Great job!!!//

    ஏன்க்கா, அவரே FBI பிடிச்ச ஆள் மாதிரிதான் இருக்காரு. இதுல இனிமேத்தான் அவரை பிடிக்கணுமா. பார்த்து போங்க, ஹைவேல எங்கயாவது னின்னு லிஃப்ட்டு கேக்க போறார். :))

    ReplyDelete
  42. //LK said - ஹ்ம்ம் நீ ஏற்க்கனவே முத்தின கேச்னு எனக்கு தெரியும்//
    இனிமே அக்கா தங்கச்சிகள மட்டும் தான் நம்பறதுன்னு முடிவு பண்ணிட்டேன்... தும்பிகள் டௌன் டௌன்...

    //vanathy said - என்ன இது சொந்த அக்காவை போய் இப்படியெல்லாம் பேசலாமா?? தப்பு, தப்பு... முட்டிக்கால் போடுங்கோ//
    நல்லா சொல்லுங்க வாணி...நோ மோர் அக்கா தம்பி... ஜென்ம விரோதி...:))))

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!