Tuesday, March 1, 2011

சில ஆச்சரியங்கள் ( பாகம் 3 )

நேபாளத்தில் குளிர் மிகவும் அதிகமாக இருக்கும் காலங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து விடும். மலைப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அடிப்படை தேவையான உணவுப் பொருட்களை சப்ளை செய்வது பெரிய சவாலான வேலை. இதற்காக அமெரிக்காவிலிருந்து 3 ட்ரக் ( லாரி ) டிரைவர்கள் சென்று, அங்கு மலை மீது இருக்கும் மக்களுக்கு உணவுப் பொருட்கள், மற்றும் அத்தியாவசியமான பொருட்களை கொண்டு போய் கொடுப்பதை தொலைக்காட்சியில் காட்டினார்கள். மிகவும் கரடு முரடான பாதைகள், திடீரென்று வெள்ளம் வரும் இடங்கள், ரோடு போட்டார்களா இல்லையா என்று தெரியாத அளவிற்கு பாறைகள் நிறைந்த இடங்களில் இவர்கள் லாரி ஓட்டுகிறார்கள். இவர்களின் உதவியாளர்கள் ஆம், இல்லை என்பது போன்ற அடிப்படை ஆங்கில அறிவுடன் காணப்பட்டார்கள்.

ஒரு முறை இந்த அமெரிக்கர் ஒருவரின் லாரியின் பக்கவாட்டுக் கண்ணாடியை ஒரு பேருந்து உடைத்து விட்டது. கண்ணாடியை உடைத்த பேருந்து நிற்காமல் சென்றது. கோபம் கொண்ட வெள்ளையர் பேருந்தை விரட்டிச் சென்றார். ஒரு கட்டத்தில் பிடித்தும் விட்டார். ஆனால் பேருந்து ஓட்டி தன் மீது தவறு இல்லவே இல்லை என்று சாதித்தார். இறுதியில் போலீஸ் ஸ்டேஷன் சென்றார்கள். போலீஸ் சமரசம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி வெள்ளையரிடம் சில நூறு ரூபாய்களை பிடுங்கிக் கொண்டது. நொந்து போய் நின்ற வெள்ளையரிடம் பேருந்து ஓட்டுநரும் சில நூறுகளை கறந்து விட்டார்.

போன மாசம் என் ட்ரக் ஒரு பேருந்தில் மோதிய போதும் நான் தான் அவனுக்கு பணம் அழுதேன். இன்று என் ட்ரக்கில் பேருந்து இடித்த போதும் நான் தான் பணம் குடுத்தேன். என்ன நாடோ போங்கள் என்று நொந்து போய் சொன்னார். இதுக்கே இப்படி நொந்து போய் விட்டார் லாரி ஓட்டுநர். தினமும் லஞ்சம் குடுத்தா தான் பல வேலைகள் நடக்கும் என்பது இவருக்கு தெரியாது பாவம்.

*************************************

பொழுது போகாமல் சானல் விட்டு சானல் தாவிக் கொண்டு இருந்தேன். எந்த நிகழ்ச்சியும் மனதில் ஒட்டவேயில்லை. ஏதோ ஒரு சானலில் விமானநிலையத்தில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களைக் காட்டினார்கள். குடித்து விட்டு விமானத்தில் ஏற முற்பட்டவரை தடுத்து, அவரை வீட்டுக்கு அனுப்புவது, சண்டித்தனம் பண்ணுறவங்களை எப்படி அடக்குவது, பாஷை தெரியாத பாட்டிக்கு துரிய கதியில் யோசித்து, அவருக்கு வேண்டிய உதவிகள் செய்தது இப்படிப் பல சம்பவங்கள்.

ஒரு பெண்மணி ஆஃப்ரிக்கா கண்டத்திலிருந்து கருவாட்டுக் கூடையோடு வந்து இறங்கினார். கடுப்பான கஸ்டம்ஸ் அவரின் கூடையை சோதனை செய்ய, அதிலிருந்து பெரிய வண்டுகள் துள்ளிக் குதித்து, கும்மாளமிட்டன. ஏதோ ஒரு ஸ்ப்ரே அடித்து அவற்றைக் கொன்ற பிறகு கருவாட்டுக் கூடையினையும் கடாசி விட்டார்கள். அந்தப் பெண்மணி பரிதாபமாக பார்த்துக் கொண்டு நின்றார்.

வேறு ஒருவரை விமானத்திலிருந்து இறக்கி விட்டார்கள். காரணம்: அவர் பக்கத்தில் இருந்தாலே கப் அடிக்குதாம் என்று சக பயணிகள் புகார் கூறினார்களாம்.
அவர் ஒரு அப்பாவி போல விளக்கம் கேட்க, அங்கு வேலை பார்த்தவர் சொன்னார், " போய் குளிச்சு, அக்குள் பகுதியில் நல்லா ஸ்பிரே பண்ணிட்டு, திரும்ப வாங்க" என்றார்.
ப்ளேன் போய்டுமே என்றார் வெள்ளாந்தி.
பரவாயில்லை. நீங்க போய் குளிச்சுட்டு வாங்க என்றார் அதிகாரி. இப்படி ரூல்ஸ் பேசினா நம்ம நாடுகளில் பாதிப் பேர் விமான நிலையம் பக்கம் தலை வைச்சுக் கூட படுக்க மாட்டார்கள்.

************************
சமையல் வேலையில் பிஸியாக இருந்தேன்.
மகன் கேட்டார், " அம்மா, புது பாட்டரி தாங்கோ ரிமோட்டுக்கு போடணும் ", என்றார்.
பாட்டரிகளை குடுத்தால் +, - பார்த்து மகனே போட்டுக் கொள்வார்.
பழைய பாட்டரிகளை கழற்றி ஒரு கையில் வைச்சிருந்தது தெரியாமல் நான் 2 புது பாட்டரிகளைக் குடுத்தேன்.
உடனே சுதாகரித்துக் கொண்டேன், " ராசா! பழசு, புதுசு இரண்டும் மிக்ஸ் பண்ணினா கண்டு பிடிப்பது கஷ்டம்.", என்றேன்.
" அம்மா! அது மிகவும் சிம்பிள். இங்கை பாருங்க பழைய பாட்டரிகள் இன்னும் சூடாவே இருக்கு. புது பாட்டரிகள் அப்படி இல்லை", என்று பதில் வந்தது.
கையில் வைச்சிருந்த புது பாட்டரிகளை ரிமோட்டில் போட ரிமோட் வேலை செய்தது.
பல்பு தான் . இருந்தாலும் இப்படி அசடு போல இருப்பதா என்று நொந்து கொண்டேன்.


28 comments:

  1. Your son is very smart. :-)

    துணுக்கு தோரணம், அருமையாக வந்து இருக்கிறது .

    ReplyDelete
  2. மூன்றும் ஆச்சரியமூட்டும் பதிவு மட்டும் இல்லை
    வித்தியாசமான பதிவும் கூட.
    உண்மையில் நானும் டிவி ரிமோட் செல்
    மாட்டும்போது அவசரப்பட்டு கழட்டிவிட்டு
    பழையது உடன் புதியது கலந்து போக
    பின் பெரிய க்யூப் போட்டியாளன் போல
    பலமுறை மாற்றி மாற்றி அவதிப்பட்டுள்ளேன்
    இந்த சின்ன விஷயம் இப்போது புரிய
    நானே சிரித்துக்கொண்டேன்
    சிறியவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள
    நிறைய இருக்கிறது
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல ரசனையான பதிவு

    ReplyDelete
  4. ஆச்சரியங்கள் நல்லாயிருக்கு,செய்திகள் சுவாரசியம்,மகன் அறிவாளி.

    ReplyDelete
  5. மூன்று ஆச்சரியங்களையும் சுவாரஸ்யமாக படித்தேன்,உஙக்ளுக்கே உரித்தான் எழுத்து நடையில் அழகாக விவரித்து இருந்தது அருமை வானதி

    ReplyDelete
  6. மூன்றுமே சுவாரசியம் வானதி. உங்க பையன் ரொம்ப ஸ்மார்ட்! :)

    ReplyDelete
  7. ஆச்சரியங்களை பகிர்விட்ட விதம் அருமை!

    ReplyDelete
  8. ஃஃஃஃபொழுது போகாமல் சானல் விட்டு சானல் தாவிக் கொண்டு இருந்தேன்.ஃஃஃஃஃ

    ஹ...ஹ..ஹ..

    அடடா அக்கா இந்த மந்திரம் வேற தெரியுமா ?

    ReplyDelete
  9. விமான நிலையட்தில் நடப்பதைப் பார்த்தால், நம்மூரு லோக்கல் பஸ் ஸ்டாண்ட் தோத்துடும் போலருக்கு!! ஆமா, அதை எப்படி டிவியில் ஒளிபரப்ப அனுமதிக்கிறாங்க? ஆச்சர்யமாருக்கு.

    பையர் ஸ்மார்ட்தான்!!

    ReplyDelete
  10. ஹா ஹா ஹா ஹா வெள்ளைக்காரன் பாவம்....

    ReplyDelete
  11. கடவுளே வான்ஸ்ஸ்... இது என்ன கொடுமை, தமிழ்ல பெயர் மாத்திப்போட்டும் என் கண்ணில படேல்லையே, இப்போ தற்செயலாக இல்ஸ்ஸ் பக்கம் போனபோது கண்ணில பட்டுது... படிக்க நேரமில்லை நைட் வாறேன்:).

    ReplyDelete
  12. சுவராஸ்யமான தகவல்கள்!! உங்க பையன் ரொம்ப ஸ்மார்ட் போல..

    ReplyDelete
  13. இரண்டாவது விமான நிலைய தகவல், நாங்கள் பெரும்பாலும் பார்ப்பதுண்டு... நிறைய விஷயங்கள் மிக இன்ரஸ்ரிங்காக இருக்கும். வயிற்றிலே சிலவகை ரக்ஸ்சை விழுங்கியிருப்பார்கள்... ஸ்கான் பண்ணினால் அப்புடியே காட்டும்... இப்படி நிறையவே.. பார்த்துக்கொண்டே இருக்கலாம்...

    மகனின் கதை படித்ததும் எனக்கு, முருகனும் அவ்வைப் பாட்டியும்... சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமாவை ஞாபகப் படுத்தியது.... அதுக்காக வான்ஸ்ஸ் என்ன பாட்டியா?:))

    ஆ.. என் சந்தேகத்தை ஆராவது தீர்த்து வையுங்கோவன்...

    ReplyDelete
  14. //பல்பு தான் . இருந்தாலும் இப்படி அசடு போல இருப்பதா என்று நொந்து கொண்டேன்.///

    உங்களுக்கு இது புதுசா என்ன?? பழக்கமாகும்

    ReplyDelete
  15. //அதுக்காக வான்ஸ்ஸ் என்ன பாட்டியா?:))

    ஆ.. என் சந்தேகத்தை ஆராவது தீர்த்து வையுங்கோவன்...//

    வாணியை பாட்டி என்று சொல்லியதை வன்மையாக் கண்டிக்கிறேன் எப்படி நீங்கள் சொல்லலாம் இப்படி ???
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .

    கொள்ளு பாட்டி என்றுதானே சொல்லி இருக்கணும்
    ஹிஹிஹ்

    ReplyDelete
  16. சித்ரா, மிக்க நன்றி.

    ரமணி அண்ணா, உண்மை தான்.
    மிக்க நன்றி.

    கோவை நேரம், மிக்க நன்றி.

    ஆசியா அக்கா, மிக்க நன்றி.

    ஸாதிகா அகா, மிக்க நன்றி.

    பாலாஜி, மிக்க நன்றி.

    மாதவி, மிக்க நன்றி.

    சுதா, மந்திரமா??? என் ஆ.காரர் டி.வி பார்க்கும் போது பக்கத்தில் இருக்கணுமே, வாழ்க்கையே வெறுத்து விடும் அளவுக்கு 4 சானல்கள் பார்ப்பார்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  17. ஹூசைனம்மா, இங்கே இன்னும் நிறைய காட்டுவார்கள். யாரும் எதையும் சீரியஸாக எடுப்பதில்லை.
    மிக்க நன்றி.

    நாஞ்சிலார், மிக்க நன்றி.

    மேனகா, மிக்க நன்றி.

    அதீஸ், நானும் போதை மருந்து கடத்தல் நிறைய பார்த்திருக்கிறேன்.

    கடவுளே! நான் ஒளிவு மறைவு இல்லாமல், முகத்தை மறைக்காமல் புத்தகத்தில் போட்ட பிறகும் பாட்டியோ, பூட்டியோ , கொள்ளுப் பாட்டியோ என்று சந்தேகம் வருதாம். அவ்வைப் பாட்டி உண்மையில் பாட்டி இல்லையாம்... யங் லேடியாம். எங்கட மக்கள் அவருக்கு நரைச்ச முடியும், ஊன்று கோலும் குடுத்து, சினிமாவுக்காக இப்படி மாத்திப் போட்டார்கள்.
    மிக்க நன்றி.


    கார்த்திக், கர்ர்ர்ர்ர்ர்ர்.... சும்மா ஆராவது ஏதாவது சொன்னா சேர்ந்து வாரப்படாது. ஓக்கை.
    மிக்க நன்றி, தல.

    ReplyDelete
  18. interesting post and more interesting comments! :)

    ReplyDelete
  19. எல் கே said...
    //அதுக்காக வான்ஸ்ஸ் என்ன பாட்டியா?:))

    ஆ.. என் சந்தேகத்தை ஆராவது தீர்த்து வையுங்கோவன்...//

    வாணியை பாட்டி என்று சொல்லியதை வன்மையாக் கண்டிக்கிறேன் எப்படி நீங்கள் சொல்லலாம் இப்படி ???
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .

    கொள்ளு பாட்டி என்றுதானே சொல்லி இருக்கணும்
    ஹிஹிஹ்

    ///// சியேர்ஸ்ஸ்:), ஹா..ஹா..ஹா... முதல்ல மயங்கிவிழப்பார்த்து, கீழ படிச்சதும் எனக்கு இன்னும் பத்து வயசு குறைஞ்சதுபோல வந்திட்டுது:):).... அப்பூடியே வாழைப்பழத்தில ஊசி ஏத்துறமாதிரி வெடி..... ஆ... பூஸ் எஸ்கேப்......

    கடவுளே இத வான்ஸ்ஸ் படிச்சிடவே பூடாது....

    ReplyDelete
  20. நேபாள் லயும் நம்மூரு கதை தானா? :) இவங்க சேவைக்காக செய்யராங்களா இல்ல இதற்கு பணம் உண்டா? சேவை செய்வதாக இருந்தா, இவங்கள இப்படியெல்லாம் நடத்தினா ரொம்ப கஷ்டம்..

    கருவாடு :))

    குளிக்காம ப்ளேன்ல போறது - என்ன சொல்றதுன்னு தெரியல.. என்ன அவசரமோ அவருக்கு..

    "ச" - க்யூட்..

    ReplyDelete
  21. நான் உங்க பையனின் தீவிர விசிறின்னு மறக்காமல் சொல்லிருங்க வாணி...பயலை மதுரை பக்கம் கூட்டிவாங்க..கட்சி தலைவன் ஆக்கிடலாம்...:))

    ReplyDelete
  22. //கடவுளே வான்ஸ்ஸ்... இது என்ன கொடுமை, தமிழ்ல பெயர் மாத்திப்போட்டும் என் கண்ணில படேல்லையே, இப்போ தற்செயலாக இல்ஸ்ஸ் பக்கம் போனபோது கண்ணில பட்டுது... படிக்க நேரமில்லை நைட் வாறேன்:).//

    நானும் இப்ப மஹி பக்கம் வழியாவே வந்தேன் அவ்வ்வ்

    ReplyDelete
  23. முனுமே நல்ல ரசிக்கும் படியா இருக்கு .மூனாவது இது எனன் புதுசா உங்களுக்கு ஹி..ஹி..!! :-))

    ReplyDelete
  24. //கு இன்னும் பத்து வயசு குறைஞ்சதுபோல வந்திட்டுது:):)..//

    ஓகே அதிரா பாட்டி

    ReplyDelete
  25. ஜெய்லானி said...
    //கடவுளே வான்ஸ்ஸ்... இது என்ன கொடுமை, தமிழ்ல பெயர் மாத்திப்போட்டும் என் கண்ணில படேல்லையே, இப்போ தற்செயலாக இல்ஸ்ஸ் பக்கம் போனபோது கண்ணில பட்டுது... படிக்க நேரமில்லை நைட் வாறேன்:).//

    நானும் இப்ப மஹி பக்கம் வழியாவே வந்தேன் அவ்வ்வ்////

    அதெப்பூடி ஜெய்.. இருவரும் ஒரே ராசியோ?.. கிரேட் மென் அண்ட் “யங் கேர்ள்”.... திங் அலைக்... அப்பூடி இருக்குமோ?:))... இதுக்குமேல வாணாம்... இனி புகைப்புகையா வரும் இங்க...
    :))).

    ReplyDelete
  26. எல் கே said...
    //கு இன்னும் பத்து வயசு குறைஞ்சதுபோல வந்திட்டுது:):)..//

    ஓகே அதிரா பாட்டி

    /// ஆ... மயங்கிவிழக்கூட இப்ப எனக்கு உடம்பில தெம்பில்லையே.... வான்ஸ்ஸ்ஸ் வான்ஸ்ஸ்ஸ்.. தலையணை மந்திரம் என்பினமே அதுபோல இது என்ன வலைப்பூ மந்திரமோ? உங்க பூவில ஆட்கள் அடிக்கடி(க்க) கட்சி மாறினமே......

    கட்டிலுக்கடியில இருக்காமல் வெளியில வந்ததுதான் தப்பாப்போச்சே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    ReplyDelete
  27. மகி, நன்றி.

    அதீஸ், உங்களுக்கு பத்து வயசு, இருபது வயசு குறைஞ்சா என்ன நான் இன்னும் யங்கோ யங் தான். ஓக்கை.

    சந்தூஸ், சேவையோ பணமோ இப்படியெல்லாம் காசு பறிப்பது கொடுமை. இதை பார்க்கும் மற்ற நாட்டவர்களுக்கு ஒரு மட்டமான அபிப்பிராயம் ஏற்படுவதை தடுக்க முடியாது.
    மிக்க நன்றி.

    ஆனந்தி, நான் முட்டி மோதி இத்தனை பதிவுகள் போடுறேன். எனக்கு ஒரு விசிறி இல்லை. என் மகனுக்கு ஒரு விசிறியா??? ம்ம்... எல்லாம் நேரம் தான். கண்டிப்பா சொல்றேன். கட்சியில் அம்மா போஸ்ட் எனக்கு.
    மிக்க நன்றி.

    ஜெய், ஐயே! என்ன இது அந்த வழியா வந்தேன், இந்த வழியா வந்தேன்னு சொல்லிட்டு. சரி! வந்து படிச்சு, கமன்ட் போட்ட படியா மன்னிச்சு விடுறேன்.
    மிக்க நன்றி, ஜெய்.

    ReplyDelete
  28. எல்கே, உங்களுக்கும் அதீஸூக்கும் பெரிசா வயசு வித்தியாசம் இருக்காது. எனவே நோ worries .

    அதீஸ்,
    //கிரேட் மென் அண்ட் “யங் கேர்ள்”.... திங் அலைக்... அப்பூடி இருக்குமோ?:)).//
    ஏன் என்று தெரியவில்லை, கிரான்ட் மா & கிரான்ட் பா திங்க் அலைக் என்றே திரும்ப திரும்ப படிச்சு தொலைக்கிறேன்.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!