ஆசியா அக்கா கொடுத்த விருது.
நன்றி, அக்கா.
ஃபாயிஜா கொடுத்த விருது.
நன்றி, பாயிஜா.
***********************
இவள் தான் என் கடையில் ரகளை பண்ணியது என்று கடைகாரர் சாட்சி சொன்னார்.
1 2 3... சே! சரியாக எண்ணவில்லை போல இருக்கே. போன முறை எண்ணிய போது 30 வந்திச்சு. இந்த முறை 28 தான் எப்படிக் கூட்டினாலும் வருது. மீண்டும் எண்ணுவோமா 1 2 3....
இது கனவே தான். நான் சிறையில் இருந்து கம்பி எண்ணும் காட்சி கண் முன்னே விரிந்தது. அடடா! காரணம் இன்னும் சொல்லவில்லையா...தொடர்ந்து படித்து விட்டு, ஒரு தீர்வும் சொல்லிட்டுப் போங்கள்.
**********
போன மாசம் ஒரு நாள் இந்தியன் கடை போயிருந்தோம். போனதும் என் மகள் ஒரு சிப்ஸ் பாக்கெட் தூக்கி வைத்துக் கொண்டார். நான் பெரும்பாலும் சிப்ஸ்கள் வாங்குவது குறைவு. வீட்டிலும் பொரியல் வகைகள் மாசத்துக்கு ஒரு தடவை தான் இருக்கும்.
மகள் தூக்கி விட்டதால் மறுப்பு சொல்ல முடியவில்லை. வாங்கியாச்சு. வீட்டிற்கு வந்து பாக்கெட்டை திறந்த நொடி ஒரு வித நெடி நாசியை தாக்கியது. எடுத்து வாயில் வைக்க முடியாமல் ஒரே கசப்பான/அருவருக்கத்தக்க சுவை. பணம் வீணாகி விட்டதே என்று எரிச்சல் ஏற்பட்டது. என் சொத்தையே குடுத்து வாங்கவில்லை என்றாலும் பணம் பணம் தானே.
கணவர் வேலையால் வந்ததும் ஒரு பாட்டம் புலம்பல்.
தூக்கி குப்பையில் போடுங்கள் - என்று சொல்லிவிட்டு கணவர் போய் விட்டார்.
சரி, தூக்கி போடலாம் என்று போனேன். பாக்கெட்டில் போன் நம்பர், தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரி போட்டிருந்தார்கள்.
கடையில் போய் ரிட்டன் செய்வது என்பது முடியாத/ நடக்காத காரியம். ரசீதில் சும்மா குரோசரி 1, குரோசரி 2 என்றே விலை போடுவார்கள்.
யு.பி.சி கோட் ஸ்கேன் பண்ணினாலும் ரசீதில் அந்த தகவல்கள் வராது.
அதோடு, முன்பொரு முறை ஒரு வயதான தம்பதிகள் ஏதோ ஒரு பொருளை ரிட்டன் செய்ய முயன்ற காட்சி கண் முன்னே ஓடியது.
கடைகாரர் : இது என்ன?
தம்பதிகள் : இங்கே வாங்கிய பொருள் தான். வாயில் வைச்சாலே கப்படிக்குது. திரும்ப காசு குடுங்க!
க.காரர்: முடியாது.
தம்பதிகள் : அப்ப நாங்க போக மாட்டோம்.
க.காரர் : போலீஸை கூப்பிடவா..
( இந்த காட்சி தான் நினைவில் வந்து... மேலே கனவில் வந்து...)
இதற்கு மேல் நான் அங்கு நிற்க விரும்பாமல் வீடு வந்து விட்டேன். போலீஸ் வந்தாலும் கடை காரருக்கு தான் ஆபத்து. இது அவருக்கு தெரிந்தாலும் அந்த வயசான தம்பதிகளை மிரட்டவே அப்படி செய்தார்.
இந்த சம்பவங்கள் எல்லாம் கண் முன்னே விரிந்து, கடைப் பக்கம் போகாதே என்று எச்சரிக்கை செய்தது.
அடுத்த நாள் அந்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினேன். இப்படி சரியில்லாத பொருளை அடுத்தவர் தலையில் கட்டுவது சரியா, நியாயமா, அடுக்குமா... என்ற ரீதியில் தட்டி விட்டேன் ஒரு மெயில்.
மெயில் அனுப்பியதோடு அதைப் பற்றி மறந்தும் விட்டேன். இந்த உலகத்தில் நல்லதா நாலு வார்த்தை புகழ்ந்து எழுதினாலே கண்டு கொள்ளமாட்டார்கள். இந்த லட்சணத்தில் இப்படி திட்டி மெயில் அனுப்பினால், படிப்பவர்களுக்கு கடுப்பு வந்து, படித்த உடனே கிழித்து குப்பையில் எறிந்துவிட்டு தானே மறுவேலை பார்ப்பார்கள்.
கிட்டத்தட்ட 2 நாட்களின் பின்னர் ஒரு மின்னஞ்சல் அந்த நபரிடமிருந்து. தயக்கத்துடனே திறந்தேன். என்ன அர்ச்சனை நடந்திருக்கோ என்று யோசனை.
அந்த நபர் மன்னிப்பு கேட்டு எழுதியிருந்தார். பாக்கெட்டில் இருந்த நம்பர், மேலும் சில தகவல்கள் தேவை என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு என் வீட்டு முகவரியும் தந்தால் புதிதாக ஒரு சிப்ஸ் பாக்கெட் அனுப்புவதாகவும் எழுதியிருந்தார்.
என் ஆத்துக்காரரிடம் சொன்னேன். அவர் சொன்னார், " இந்த பிசாத்து காசுக்கு இவ்வளவு நேரத்தை ஏன் செலவு செய்ய வேண்டும் ."
ஆனால், எனக்கு அவர்கள் செய்வது சரி என்றே படவில்லை. அந்தக் கடையில் குறைந்தது 20 சிப்ஸ் பாக்கெட்டுகள் இருந்தன. எத்தனை பேர் வாங்கி ஏமாந்து போயிருப்பார்கள். யார் என்னைப் போல ( வேலையில்லாதவள்ன்னு முணு முணுப்பது கேட்குது ) இப்படி மெயில் அனுப்பி கேள்விகள் கேட்கப் போகிறார்கள்.
//1 2 3... சே! சரியாக எண்ணவில்லை போல இருக்கே. போன முறை எண்ணிய போது 30 வந்திச்சு. இந்த முறை 28 தான் எப்படிக் கூட்டினாலும் வருது. மீண்டும் எண்ணுவோமா 1 2 3..//
ReplyDeleteenna relation puriyala
தவறை சுட்டி காட்டி கடைசியில் மன்னிப்பு கேட்கவைத்து விட்டீர்கள்....நன்று தோழி.
ReplyDeleteவிருதுகளுக்கு வாழ்த்துக்கள்!! பரவாயில்லை வாணி நீங்க மெயில் செய்திருக்கிங்க..சிலநேரம் எனக்கும் இந்த அனுபவம் இருந்தாலும் நானும் இப்படி மெயில் அல்லது போன் செய்யலாம்ன்னு கூட தோனும்.பின் அப்படியே விட்டுடுவேன்.உங்கள் துணிவுக்கு பாராட்டுக்கள்!!
ReplyDelete//enna relation puriyala//
ReplyDeleteஎல்கே, கவனமா படித்தால் புரியும்.
வானதி நானும் கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்பேன்,உதாரணத்திற்கு ஹோட்டலில் ஒரு முறை ஆனியன் ஊத்தப்பம் ஆர்டர் செய்தால் சாப்பிடும் பொழுது உள்ளே மாவு எப்படி சாப்பிடுவது,என் கணவர் வேண்டாம் என்றால் வைத்து விடு என்றார்,நான் சர்வரை அழைத்து திரும்ப கொடுத்து விட்டேன்,திரும்ப சுட்டு வந்தது சூப்பரோ சூப்பர்.
ReplyDeleteதவறை சுட்டி காட்டி கடைசியில் மன்னிப்பு கேட்கவைத்து விட்டீர்கள்....நன்று தோழி.///
ReplyDeleteRepeeeeeeeeeettttttt...
தவறை சுட்டி காட்டுவது எப்போதும் நல்ல விசயமே.. காரணம் சம்பந்தபட்டவர்கள் தெரியாமலே செய்தால் அதை திருத்தி கொள்ள உதவியாக இருக்கும்..
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள்...!!இன்னும் நிறைய பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..!!
ReplyDeleteஎனக்கும் இது போல சிலநேரம் நடந்திருக்கு. நினைத்தால் அவர்கள் மேல் கேஸ் கூட போடலாம் . அதனால்தான் அவர்கள் மன்னிப்பு கேட்பது.
ReplyDeleteவாங்கும் போது எக்ஸ்பிரி டேட் பார்த்து வாங்கினால் மேக்ஸிமம் இந்த தொல்லை இருக்காது..
கனவுக்கு ஒரு கதை அருமை.. விருதுக்கு வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு நன்றீ.
ReplyDeleteஉருப்படியான வேலைதான் செய்திருக்கீங்க வானதி! இண்டியன் கடைகளில் ஸ்னாக்ஸ் பெரும்பாலும் இப்படி சிக்கு வாடையுடன்தான் இருக்கும்.நான் ரெண்டு-மூன்று முறை அனுபவப்பட்டதிலிருந்து வாங்குவதே இல்லை.
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள்!
சூப்பர்ப் வானதி...இப்படி தான் இருக்க வேண்டும்...நானும் இப்படி செய்து இருக்கின்றேன்...ஆனால் திட்டு வாங்கியதோ என்னவரிடம் இருந்து...ஏன் வீணாக இதுக்கு போய் இவ்வளவு அலட்டிகிறே...எதுல உஷராக இருக்க வேண்டுமே அதில எல்லாம் இருக்க மாட்டே....சும்மா 1$க்குகோ அல்லது இரண்டு$க்கோ போய் இப்படி சண்டை போடுற என்கிறார்...என்னத சொல்ல....
ReplyDeleteநல்ல வேலை செஞ்சீங்க வானதி! நானும் பெருசா சிப்ஸ் வகைகள் வாங்குவதே இல்லை!
ReplyDeleteகதை அருமை. விருதுக்கு வாழ்த்துக்கள்...!!இன்னும் நிறைய பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..!!
ReplyDeleteவாஆஆஆஆ...அணி, தலைப்பு வந்து 3 நாட்கள் ஆகிவிட்டது, என் கண்ணுக்கு தெரியவே இல்லை, இன்று தற்செயலாக சந்தனாவின் வீட்டுக்குப் போனபோதுதான் இது கண்ணில் பட்டது. கொஞ்சம் பிசியாகிட்டேன்...(ஆ... பெரீஈஈய குயின் எனச் சொல்வது கேட்குது) நான் அவைக்கு எதிர்வீடென்பதால் அவவைவிட ரொம்பவும் பீஈஈஈஈசீஈஈஈஈஈ:)).
ReplyDeleteஆஹா.... எனக்கும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருது, பாகிஸ்தான் கடையொன்றில் மிக்ஸர் பக்கட் வாங்கினேன்.... அப்போ பக்கத்தில் மிக்ஸர் எல்லாம் வாங்கமுடியாத நேரம், வீட்டுக்கு வந்து ஓபின் பண்ணினால் ஒரு உடைந்த போத்தல் துண்டு உள்ளே இருக்கு. என் கணவரும் அதையேதான் சொன்னார், குப்பையில் போட்டுவிடுங்கோ, இனி அங்கு வாங்கிடவேண்டாம் என. சிலகாலம் பொறுமையைக் கடைப்பிடித்தேன்.... பழையபடி வேதாளம்........, வாங்கத் தொடங்கிற்றேன்.... வேறு வழியில்லை, எனக்கு உறைப்பு வேணும், வேறிடத்தில் உறைப்பு இல்லை:)).
ஆ.... மறந்திட்டன் வாஆஆ....ஆணி.... காதைக் கொண்டுவாங்கோ... கிட்ட..இன்னும் கிட்ட... சோப் போட்டுக் கழுவினனீங்கள்தானே?? உப்பூடி முறைக்கப்படாது, நான் அஜீஸ் பண்ணுறன்... பயப்புடாமல் கொண்டுவாங்கோ... காதைத்தேன்....
விருதுக்கு வாழ்த்துக்கள்.....ஆங்... மீ....எஸ்ஸ்ஸ்..
விருதுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஎல்லா விஷயத்தையும் துணிச்சலா தான் டீல் பண்றீங்க. குட் அப்படிதானிருக்கணும். விருதுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள்.வானதி உங்கள் துணிச்சலுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமன்னிப்பு கேட்க வைத்தாச்சு. நேரத்தை செலவிட்டாலும் இனி இதுபோல் தவறு நடக்காமல் முதலாளி பார்த்துப்பார் இல்லையா?
விருதுகளுக்கும் உங்கள் தைரியத்துக்கும் இரட்டிப்பு வாழ்த்துக்கள் வானதி!!
ReplyDeleteவானதி.. எங்க வீட்டுலயும் இப்பிடியொரு அனுபவமானது உண்டு.. (எனக்கு இல்ல :)) .. அதுவும் இப்பிடித்தான் - ஏதோ ஸ்வீட்டோ முறுக்கோ.. முடிஞ்சளவுக்கு இந்தியன் கடைகள்ல வாங்கும் போது எக்ஸ்பயரி டேட் பாத்து வாங்கனும்..
ReplyDeleteநான் ஒருக்கா ரெண்டு இளைஞர்கள் கடைக்காரக் கிட்ட சண்ட போடறதப் பாத்திருக்கேன்.. அவங்களுக்கும் பெப்பப்பே தான் கிடைச்சது :)
பரவாயில்ல.. இவ்வளவு தூரம் முயற்சி செஞ்சிருக்கீங்க.. தொடருங்க..
விருதுக்கு வாழ்த்துக்கள் வானதி
ReplyDeleteகௌஸ், மிக்க நன்றி.
ReplyDeleteமேனகா, இது போல வேறும் சில சாதனைகள் இருக்கு. எல்லாம் வெளியே சொல்லிட்டு இருக்க கூடாதில்லையா?( நான் ரொம்ப தன்னடக்கம் ).
மிக்க நன்றி.
ஆசியா அக்கா, நீங்கள் செய்தது சரி தான். வீணாவது நம்ம பணம் தானே.
மிக்க நன்றி.
அஹமது இர்ஷாத், மிக்க நன்றி.
ReplyDeleteநாடோடி, மிக்க நன்றி.
இதெல்லாம் தெரிந்தே நடக்கும் தவறுகள். லாபம் சம்பாதிக்க என்ன வேணுமென்றாலும் செய்வார்கள்.
ஜெய், மிக்க நன்றி.
எக்ஸ்பயரி டேட் - அதிலெல்லாம் நான் ரொம்பவே உஷார்.
மதுரை சரவணன், மிக்க நன்றி.
மகி, உண்மைதான். சிப்ஸ் வாங்கினால் உடலுக்கும் கேடு. பணமும் வீண்.
ReplyDeleteமிக்க நன்றி.
கீதா, என் ஆ.காரரும் அதே தான்.
நான் தான் பொங்கியெழுந்து விடுவேன்.
மற்றைய கடைகளில் ரிட்டன் பாலிஸி இருக்கும். இந்தியன் கடைகளில் மட்டும் அப்படி எந்தவித பாலிஸியும் இருக்காது.
மிக்க நன்றி.
சுகந்தி, மிக்க நன்றி.
தவிர்ப்பதே நலம்.
பிரபா, மிக்க நன்றி.
அதீஸ், எனக்கும் மிக்ஸர் என்றால் கொள்ளை விருப்பம். இப்ப பொரியல் வகைகள் சாப்பிடுவதை குறைத்து விட்டேன்.
ReplyDeleteகனடா போனால் நல்லா சாப்பிடுவதுண்டு. மிக்ஸர் மிக்ஸர் தான்...ம்ம்ம் யம்மி.
என் காதெல்லாம் சுத்தமா, மல்லிகைப் பூ சென்ட் அடித்து, சுத்த மா வைச்சிருக்கிறேன். நீங்கள் பல்லை விளக்கிட்டு பக்கத்திலை வாங்கோ ஹிஹி...
மிக்க நன்றி.
கலாநேசன் , மிக்க நன்றி.
அப்துல் காதர், மிக்க நன்றி.
ReplyDeleteசரவணன், மிக்க நன்றி.
குமார், முதலாளி, தொழிலாளி எல்லாமே ஒருவர் தான்.
மிக்க நன்றி.
மனோ அக்கா, மிக்க நன்றி.
சந்தூ, மிக்க நன்றி.
அதே அனுபவம் உங்கள் வீட்டிலுமா?
பெரும்பாலும் எல்லா இந்தியன் கடைகளிலும் நாமம் தான் போலும்.
ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.
//என் காதெல்லாம் சுத்தமா, மல்லிகைப் பூ சென்ட் அடித்து, சுத்த மா வைச்சிருக்கிறேன். நீங்கள் பல்லை விளக்கிட்டு பக்கத்திலை வாங்கோ ஹிஹி.//
ReplyDeleteக்கி..க்கி....க்கீஈஈஈஈஈ.. காதுக்கு ஜாஸ்மின் செண்டாஆஆஆ .பூஸ் பல்லு விளக்குமா...ஹா...ஹா...( சிரிச்சி..சிரிச்சி வயிறு வலிக்குது ஹா...ஹா....))
வணக்கம்
ReplyDeleteநீங்களா இருக்க மெயில்ல தட்டிகேட்டிங்க நம்ம ஊரா இருந்துச்சினா அருவா இல்ல கேட்டிருக்கும்.
இதுக்குத்தான் நாம சமைச்சே சாப்பிடறது.
http://marumlogam.blogspot.com
பூஸ் பல்லு விளக்குமா...ஹா...ஹா...( சிரிச்சி..சிரிச்சி வயிறு வலிக்குது ஹா...ஹா....))
ReplyDelete////ஜெய்.....karrrrrrrrrrr, அப்போ பூஸ் விளக்காத பல்லோடயோ எல்லோரையும் கடிக்குதென நினைக்கிறீங்க?:)), அப்பூடிக் விளக்காமல் கடிக்காது, ஏனெண்டால், பல்லு விளக்காமல் கடிச்சால் ஊசியே இல்லையாம், விளக்கிட்டுக் கடிச்சால்தான் 16 ஊஊஊஊஊசி போடோணும்:))(கவனிக்கவும் பூஸுக்கல்ல:)....) நாங்க இதிலெல்லாம் வலு உஷாரான ஆட்களாக்கும்:))).
ஜெய், என்னா சிரிப்பு சிரிக்கிறீங்க? காதுக்கு சென்ட், பூஸ் பேஸ்ட் எல்லாம் கேள்விப்பட்டதில்லையா???
ReplyDeleteபிரபா, தகவலுக்கு மிக்க நன்றி.
என்னுடையது சமையல் தளம் இல்லையே. எல்லாமே கலந்து ஒரு சாம்பார் போல் இருக்கே.
தினேஷ், ரொம்ப உஷாரா தான் இருக்கிறீங்க.
அப்படியே அந்த அருவாளை அப்படி ஓரமா போடுங்கோ..ம்ம்ம். வெரி குட் பையன்.
அதீஸ், அப்படியா சங்கதி?? அதானே பார்த்தேன். பூஸ் இவ்வளவு கடி கடித்தும் நாங்கள் எல்லோரும் நல்ல சுகமா இருக்கிறோம் என்று.
//ஜெய், என்னா சிரிப்பு சிரிக்கிறீங்க? காதுக்கு சென்ட், பூஸ் பேஸ்ட் எல்லாம் கேள்விப்பட்டதில்லையா???//
ReplyDeleteஹலோ ..தலைக்கு வைக்குற அந்த பூவால அந்த ஏரியாவே வாசனை அடிக்கும்.. தனியா காதுக்கு மட்டும் அடிகிரத அதுவும் பெண்கள் வைப்பதை பார்த்து இல்லை (( ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் செண்ட் ஆண்கள் பஞ்சில் வைத்துது பார்த்துண்டு அதுவும் பெரிசுகள்தான் )) பூஸ் பேஸ்ட் யார் விலக்கி விடுவது ஹி..ஹி..
/////ஜெய்.....karrrrrrrrrrr, அப்போ பூஸ் விளக்காத பல்லோடயோ எல்லோரையும் கடிக்குதென நினைக்கிறீங்க?:)), அப்பூடிக் விளக்காமல் கடிக்காது, ஏனெண்டால், பல்லு விளக்காமல் கடிச்சால் ஊசியே இல்லையாம், விளக்கிட்டுக் கடிச்சால்தான் 16 ஊஊஊஊஊசி போடோணும்:))(கவனிக்கவும் பூஸுக்கல்ல:)....) நாங்க இதிலெல்லாம் வலு உஷாரான ஆட்களாக்கும்:))). //
ReplyDeleteஆமா ,ஆமா பல்லு விலக்குவது மனுஷன் மட்டும்தான் , மற்ற படி குளிப்பது எல்லா ஜீவராசியும்தான்
விருதுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇப்படி ஏமாற்றி விற்கும் கடைக்கார்களை ரிப்போர்ட் செய்து கண்டிக்க வேண்டும். சே, Good business ethics is missing here.
ReplyDeleteநேரம் வீனானாலும் நீங்கல் செய்தது சரியே.
ReplyDeleteநானும் அப்படி தான் காசு கம்மியான பொருளா இருந்தாலும், நல்ல இல்லை என்றால் திருப்பி கொடுத்து நல்லது கேட்டு வாங்குவது..
என் ஹஸ் திட்டுவார் இதுக்காக ஏன் மெனக்கிடனும் என்று.
வாங்கி வந்து அப்படியே குப்பையில் போடுவதற்கு.
இது பெட்டர்
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteசித்ரா, மிக்க நன்றி.
ReplyDeleteஎனக்கும் எரிச்சலா வரும். ஆனால் என் ஆ.காரர் இந்த வேலைக்கெல்லாம் வரவே மாட்டார்.
ஜலீலா அக்கா, சரியா சொன்னீங்க.
எல்லா வீடுகளிலும் ஆண்கள் இப்படி தானா???
என் அப்பா என்னைப் போலவே தான்.
மிக்க நன்றி, அக்கா.