Tuesday, August 10, 2010

மறக்க முடியாத நபர்!

என் மகள் பிறந்திருந்த நேரம். என் பெற்றோருடன் போய் 1 மாசம் தங்கி வர கனடா போனோம். நானும், என் மகனும், மகளும். கணவர் வரவில்லை. என் அம்மா என் மகளை தூக்கி வைத்திருந்து விட்டு, என்னிடம் கொடுத்தார்கள். இரவு 9 மணிக்கு என் மகளுக்கு பால் குடுத்த பின்னர் படுக்க வைத்தேன். எப்போதும் முதுகில் தடவி படுக்க வைப்பது என் வழக்கம். குடித்த பால் செரிமானம் ஆகவே இது போல செய்வேன்.


சிறிது நேரத்தில் மகளின் வாயிலிருந்து பால் போன்ற வெண்மையான திரவம் வழிந்தோடியது. இதுவும் அடிக்கடி நடக்கும் நிகழ்வு. நான் மகளை துடைத்து, மீண்டும் படுக்க வைத்தேன். படுக்க வைத்த போது மீண்டும் வாயிலிருந்து அருவி போல் கொட்டியது. தூக்கி வைத்திருந்த போது அவ்வாறு நடக்கவில்லை. இப்படியே ஒரு மணி நேரம் வரை நானும் அம்மாவும் மாறி மாறி வைத்திருந்தோம். ஆனால், படுக்க வைக்க முடியவில்லை.

என் அப்பா அவசர வேலையாக வெளியே போயிருந்தார். இப்படியே 11 மணி வரை மகளை தூக்கி வைத்திருந்தோம். பிறகு மீண்டும் படுக்க வைக்க மீண்டும் அதே பிரச்சினை.

என் மகள் தூக்கத்தில் இருகின்றாரா அல்லது மயக்கமாகி விட்டாரா என்று தெரியாத ஒரு நிலை. என் அப்பா வந்ததும் எமெர்ஜென்ஸிக்கு கொண்டு போக முடிவு செய்தோம்.

கனடாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டிருந்தது. பனி ஒரு புறம், உடலையே ஊடுருவிச் செல்லும் குளிர் மறுபுறம். டாக்ஸி ஸ்டான்டுக்கு சிறிது தூரம் நடக்க வேண்டும். என் மகளுக்கு குளிர் தாக்காமல் லேயர் லேயராக போர்வைகள் சுற்றி, நடுங்கும் குளிரில், இரவு 1 மணிக்கு ஓடினோம். என் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர்.

டாக்ஸியில் போய் ஏறினதும் ஓட்டுநர் குளிருக்கு இதமாக ஹீட்டர் போட்டபடியே, என்ன ஆச்சு? என்றார்.
குழந்தைக்கு உடம்பு சரியில்லை - இது அப்பா.
கவலைப்படாதீங்க இந்த குழந்தைக்கு ஒண்ணுமே ஆகாது. நாளைக்கு காலையில் உங்களோடு சிரித்து விளையாடப் போறா பாருங்கள் - என்று சொல்லி மென்மையாக சிரித்தார்.
எனக்கு ஒரு வித நிம்மதி. இப்படி நல்ல வார்த்தைகள் சொல்ல ஒரு சிலராலேயே முடியும்.
நன்றி சொன்னேன் அவருக்கு.
அவர் பாகிஸ்தான் நாட்டவர் என்று கூறினார். ஆஸ்பத்திரி போகும் வரை குழந்தை எப்படி இருக்கு என்று இடைக்கிடையில் கேட்டபடியே காரை நிதானமாக ஓட்டினார்.
போய் இறங்கி பணம் குடுத்த போது முதலில் வேண்டாம் என்று மறுத்தார். பிறகு வலுக்கட்டாயமாக கொடுத்த போது வாங்கிக் கொண்டார். மனதார வாழ்த்திக் கொண்டே, அவரின் நம்பரை அவசரத்திற்கு தேவை எனில் பாவிப்பதற்கு கொடுத்து விட்டு சென்றார்.

இது வரை லேசான உணர்வுடன் இருந்த மனம் ஆஸ்பத்திரியின் உள்ளே போனதும் மீண்டும் படபடவென அடிக்கத் தொடங்கியது. மகளை அணைத்தபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். வேறு சிலரும் காத்திருந்தார்கள்.

மீதி பிறகு...

31 comments:

 1. ஐ எனக்குத்தான் வடை, பிட்ஷா ரோல்ஸ் எல்லாமே... அருக்கும் கொடுக்கமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  ReplyDelete
 2. இப்பூடிச் செய்யப்பூடாது வாணி... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முக்கிய இடத்தில வைத்து “டொடரும்” என்று போட்டால் எப்பூடி இருக்கும்.

  ஏன் வாணி, ரக்‌ஷிக்குப் போனனீங்கள்? உடனேயே ஆம்புலன்ஸுக்கு அடித்திருக்க வேண்டும், பறந்து வந்திருப்பார்களே.

  ReplyDelete
 3. அதீஸ், எல்லாமே உங்களுக்கு தான். ஜெய் வருவதற்குள் எல்லாத்தையும் சாப்பிட்டு முடியுங்கோ.
  அவசர நேரத்தில் மூளை வேலை செய்யாது என்று சொல்வார்களே அது போல தான் இதுவும். அந்த நேரம் எதுவுமே நினைவுக்கு வரவில்லை. ஆஸ்பத்திரி போக வேண்டும் என்பது மட்டுமே ஞாபகம் வந்தது. ஆம்புலன்ஸ் இருக்கு, அடித்தால் வருவார்கள்... என்று எதுவுமே நினைவில் வரவில்லை. இதற்காக என் ஆத்துக்காரரிடம் இப்படியே திட்டு வாங்கினேன்.

  ReplyDelete
 4. ஆ.... வாணி, அ.கோ.முட்டையையும் கெதியாத் தாங்கோ... “ஜெய்” ஐக் காணவில்லை... அவர் வந்தவுடன் பிளேட்டைக் கொடுத்திடோணும்...

  அப்பா....டா... இம்முறைதான் எந்த டிசுரேப்பும் இல்லாமல் சாப்பிட முடியுது:)))).

  ReplyDelete
 5. அதீஸ், அ.கோ.மு இருக்கு ஆனால் அவிக்காமல் இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்கோ.

  ReplyDelete
 6. //அதீஸ், அ.கோ.மு இருக்கு ஆனால் அவிக்காமல் இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்கோ//

  ஆஃப் பாயிலா வழ வழா கொழகொழா எனக்கு பிடிக்காது வேண்டாம் எல்லாத்தையும், பேபியே அதிஸே சாப்பிடட்டும்..யப்பா தப்பிச்சேன் ..ஹி..ஹி..வான்ஸ் வாழ்க..

  ReplyDelete
 7. //அப்பா....டா... இம்முறைதான் எந்த டிசுரேப்பும் இல்லாமல் சாப்பிட முடியுது:)))). //


  ம் நல்லா சாப்பிடுங்க....அதுல பேதி மருந்து கலந்திருக்கு...எத்தனை அ.கோ.மு..ஹி..ஹி..

  ReplyDelete
 8. உண்மையா ,கதையா இப்ப போட்டது..????

  ReplyDelete
 9. ஆர்வமாக வாசித்தால் இதற்கும் தொடருமா?விரைவில் நடந்ததை எழுதுங்கள்.

  ReplyDelete
 10. சில‌ ந‌ல்ல‌ ம்னித‌ர்க‌ளின் உத‌வி எப்போதும் கிடைக்கும்... தொட‌ருங்க‌ள்..

  ReplyDelete
 11. வாணி எண்டால் வாணிதான், அமெரிக்காவிலதான் இருக்கிறீங்க என்பதை அப்பூடியே நிரூபிச்சிட்டீங்க.. புஸ்(பூஸின் எதிரி:)) ஐப்போல:)))

  //vanathy said...
  அதீஸ், அ.கோ.மு இருக்கு ஆனால் அவிக்காமல் இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்கோ.
  /// அவிச்ச கோ.முட்டையை ஆராவது திரும்பவும் அவிப்பினமோ... இது தெரியாமல் எங்கட ஜெய்...

  //ஜெய்லானி said...
  //அதீஸ், அ.கோ.மு இருக்கு ஆனால் அவிக்காமல் இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்கோ//

  ஆஃப் பாயிலா வழ வழா கொழகொழா எனக்கு பிடிக்காது வேண்டாம் எல்லாத்தையும், பேபியே அதிஸே சாப்பிடட்டும்..யப்பா தப்பிச்சேன் ..ஹி..ஹி..வான்ஸ் வாழ்க..

  //// கால்ஃப் பொயில் என நினைச்சு கால் பிடரியில் அடிக்க ஓடிற்றார்....கிக்..கிக்..கீஈஈஈஈஈ.

  வாணி உப்பூடிச் சொன்னதாலதான், நான் இண்டைக்கு முழு முடைகளையும் நிம்மதியாச் சாப்பிட்டுவிட்டேன்... ஆருக்கும் பிச்சூஊஊஊ பிச்சுக் கொடுக்காமல்:)) தேங்கியூஊஊஊஊஊஊ வான்ஸ்ஸ்ஸ்ஸ்....

  ஆ.... எதுக்கு யூ ஏ ஈ பக்கம் ஒரே புகையா இருக்கு:)))) மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 12. vaani is it ur life incident?

  ReplyDelete
 13. //இப்படி நல்ல வார்த்தைகள் சொல்ல ஒரு சிலராலேயே முடியும். //

  உண்மைதான் வாணி.

  ReplyDelete
 14. உண்மைதான் வானதி.மனம் கலங்கிப்போய் இருக்கும் வேளையில் கிடைக்கும் ஆறுதல் வார்த்தைகளுக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது.தொடருங்கள்..

  ReplyDelete
 15. உண்மைகதையா இப்ப போட்டது..????

  ஆர்வமாக வாசித்தால் இதற்கும் தொடருமா???????

  ReplyDelete
 16. ///// அவிச்ச கோ.முட்டையை ஆராவது திரும்பவும் அவிப்பினமோ... இது தெரியாமல் எங்கட ஜெய்.//

  ////அதீஸ், அ.கோ.மு இருக்கு ஆனால் அவிக்காமல் இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்கோ//

  நல்லா பாடிங்க.. இன்னொரு தடவை அதுக்கு பயந்து கிட்டு ஓடிய ஆள்தான் நான் .

  //ஆ.... எதுக்கு யூ ஏ ஈ பக்கம் ஒரே புகையா இருக்கு:)))) மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் //

  இது ஆஆஆஆஆனந்த கண்....ணீர் ..ஹி..ஹி..

  ReplyDelete
 17. //ஆ.... எதுக்கு யூ ஏ ஈ பக்கம் ஒரே புகையா இருக்கு:)))) மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//

  ஏங்க அதிஸ் நீங்க கெளப்பி உட்ட களேபர பயத்தில், ஜெய்,, ஒருவேளை நெருப்பு மூட்டம் போட்டு குளிர் காயிராரோ,, அதான் UAE பக்கம் ஒரே புகையா இருக்குமோ..அஹஹஹா..ஹி ஹி

  ReplyDelete
 18. ஏங்க வாணி தம்மாதூண்டு எழுதுறதுரத்துக்கு (அது நிஜமோ-கதையோ) தொடரும் வேறயா??? ஆனாலும் உங்கட ஆகாத்தியம் தாலமுடியலம்மா!!! எங்கட வீட்ல என்னாச்சுன்னு என்னாச்சுன்னு கேட்டு கேட்டு... ஹும் நாநென்ன்த்தச் சொல்றது நீங்களே மீதியையும் சொல்லிடுங்க.

  ஆமா அதென்ன ஒவ்வொரு தடவையும் டெம்ப்ளேட்டில் ஒரே டெர்ர்ரர் பிலிமா காட்றீங்க??? ஹி..ஹி..

  ReplyDelete
 19. மறக்க முடியாத அந்த நபருக்கு எங்கட சார்பிலும் ஒரு நன்றியை சொல்லிடுங்கோ!!

  ReplyDelete
 20. ம்ம் ஆர்வமா படித்தால் கடைசியில் தொடரும் போட்டுட்டீங்களே..சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க..

  ReplyDelete
 21. வாணி, உண்மையா இது! சீக்கிரம் தொடருங்கப்பா!!!

  ReplyDelete
 22. அந்த ஓட்டுனருக்கு நன்றி அதுசரி முழுசா சொல்லியிருக்கலாமே ஆர்வமா படிக்கிறப்ப தொடரும் என்பது எவ்வளவு distarbance vanadhy

  ReplyDelete
 23. என்ன வாணி இப்படி டக்குன்னு தொடரும் போட்டுட்டீங்க. சீக்கிரமா அடுத்ததைப் போடுங்க.

  எங்க போனாலும் இந்த பூஸ் ஜெய் அக்கப்போர் தாங்கலப்பா. இனிமே பதிவு போட்ட உடனேயே ரெண்டு அ.கோ.மு. தனியா எடுத்து வச்சிடணும். இல்லேன்னா இப்படித்தான் ஆஃப்பாயில் கால்பாயில்னு லொள்ளு பண்ணிக்கிட்டு இருப்பாங்க

  ReplyDelete
 24. ஆர்வமா படிச்சிட்டு வரப்ப,தொடரும் போட்டு வெறுப்பேத்தறீங்க!:) சீக்கிரமா தொடருங்க வானதி!

  ஆப்ஃபாயில்ட்,கால் ஃபாயில்ட்,அவித்த கோ.மு.../அவிச்ச கோ.முட்டையை ஆராவது திரும்பவும் அவிப்பினமோ... / அதிரா,சூப்பரா பாயின்ட்டைப் புடிச்சிட்டீங்க.இப்படிதான் கேக்கோணும் இவங்களை!!:):) வெரி குட்!!

  ReplyDelete
 25. //ஏங்க அதிஸ் நீங்க கெளப்பி உட்ட களேபர பயத்தில், ஜெய்,, ஒருவேளை நெருப்பு மூட்டம் போட்டு குளிர் காயிராரோ,, அதான் UAE பக்கம் ஒரே புகையா இருக்குமோ..அஹஹஹா..ஹி ஹி //

  ஒரு தொடரின் பாதி இன்னும் இருக்கு , மீதியில உங்களை குளிர் காய வக்கிறேன் பொருங்க தல, அப்ப நம்பியார் சிரிப்பு என் சிரிப்புதான்..

  ReplyDelete
 26. //எங்க போனாலும் இந்த பூஸ் ஜெய் அக்கப்போர் தாங்கலப்பா. இனிமே பதிவு போட்ட உடனேயே ரெண்டு அ.கோ.மு. தனியா எடுத்து வச்சிடணும். இல்லேன்னா இப்படித்தான் ஆஃப்பாயில் கால்பாயில்னு லொள்ளு பண்ணிக்கிட்டு இருப்பாங்//

  ரெண்டு யாருக்கு கவி.? எனக்கில்லைதானே..ஹி..ஹி..

  ReplyDelete
 27. hi vanathy,
  first time to your blog... like it..

  neenga sonnathu, unga vazhvil nadanthatha or a story?

  ReplyDelete
 28. ரொம்ப நல்லவர் அவர்.. அவரை மீண்டும் பார்த்தல் எங்கள் நன்றியை சொல்லுங்கள் சீக்கிரம் தொடருங்கள்..

  ReplyDelete
 29. // ஒரு தொடரின் பாதி இன்னும் இருக்கு, மீதியில உங்களை குளிர் காய வக்கிறேன் பொருங்க தல, அப்ப நம்பியார் சிரிப்பு என் சிரிப்புதான்.. //

  அடப் பாவி மக்கா. நம்ம மேலேயே ஒரு கண்ணாவே திரியுராங்கப்பா.. தல நீங்க நம்பியார் மாதிரி சிரிச்சாலும் குரல் எப்படி இருக்கும்னு இந்த உலகம் முழுக்க நான் சொல்ற மாதிரி இருக்கும். அதனால எழுத்த பாத்து பாத்து எழுதோணும். ஏன்னா இது நாளைய சரித்திரம். வான்ஸ் சாட்சியா...??? ஹி..ஹி.. ஹி..

  ReplyDelete
 30. மேடம் இந்த மாதிரி சீரியஸ் ஆனா பதிவுளைஎல்லாம் தொடரும் போடாதிங்க . மேலும் அந்த நல்ல உள்ளம் கொண்ட டிரைவருக்கு நானும் நன்றி சொல்லிகிறேன்

  ReplyDelete
 31. ஜெய், லேபிள் பாருங்கோ. விளங்கும்.
  ஆசியா அக்கா, விரைவில் அடுத்த பாகம் போடுறேன்.
  மிக்க நன்றி.
  நாடோடி, மிக்க நன்றி.
  அதீஸ், அது வந்து...யூ.ஏ.ஈ பக்கம் ஜெய் கோழி முட்டை அவிக்கிறாராம். அதனால் தான் ஒரே புகை மூட்டம்.
  எல்கே, மிக்க நன்றி.
  இம்ஸ், மிக்க நன்றி.
  ஸாதிகா அக்கா, உண்மைதான். மிக்க நன்றி.

  குமார், ம்ம்..தொடரும் தான். அடுத்த பாகம் விரைவில் வரும்.
  அப்துல் காதர், கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். என் கிறுக்கலை உங்க வீட்டிலும் படிப்பாங்களா?? மிக்க நன்றி.

  மேனகா, மிக்க நன்றி.
  சரவணன், என்னப்பா இப்படி ஆளாளுக்கு என்னை திட்டுறீங்க (தொடரும் போட்டதற்கு ). அடுத்த பாகம் இதோ வருகிறது.
  மிக்க நன்றி.
  கவிசிவா, தொடரும் போட்டதற்கு மக்கள் இப்பூடி டென்ஷன் ஆவாங்கன்னு தெரிந்திருந்தால் போட்டிருக்கவே மாட்டேன். நாளை சந்திப்போம்ன்னு போட்டிருப்பேன். நோ நோ...யாரும் முறைக்கப்படாது.
  மிக்க நன்றி.
  ஜெய், அதீஸ் சண்டை அது ஓயவே ஓயாது. அதுவும் தொட....ரும்.
  மகி, நீங்க வேறு அதீஸுக்கு சப்போர்ட் பண்ணிடு, உங்களையே கேள்வி கேட்கப் போறாங்க.
  மிக்க நன்றி.

  அகிலா, மிக்க நன்றி. தொடர்ந்து வாங்க.

  அப்துல் காதர், நம்பியார் கொள்ளை அழகாக இருப்பார். அதனால் அவர் சிரிச்சாலும் பார்க்க அழகா இருக்கும். சவுண்டை குறைச்சுட்டு பாருங்கோ.

  மங்குனி, இதில் டாக்ஸி ட்ரைவரை விட வேறு ஒரு நபர் வருகிறார். அவரை நினைத்தே போட்ட பதிவு.
  பிள்ளை குட்டிகாரி நான். எழுத நேரம் வருவது குறைவு. அதான் தொடரும் போட்டிருக்கிறேன்.
  மிக்க நன்றி.

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!